• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 9

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 9 (ரசம் - கோபம்)


அசுரர்களின் தாக்குதல்களால் சிலகாலமாய் சோகமாய் காட்சியளித்த தேவலோகத்தின் அமரவாதி பட்டணம் அன்று தேவிகளின் கூச்சலும் குதுகளமுமாய் அமர்களபட்டு கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்திரலோகத்து இளவரசி தேவசேனா தேவிகளும் போர்களில் தேவர்களுடன் பங்கு கொள்ளலாம் என கூறியது தான்.

ஆனால் இம்முறை சூரபத்மனுடனான போர் முன்பே தொடங்கி நான்கு நாட்களை கடந்துவிட்டதால் அம்முடிவு இனி வரும் போர்களில் தான் அம்மளமாகும் என சொல்லபட்டிருந்தது.

அதனால் தேவிகள் அனைவரும் உற்சாகமாய் தங்களுக்குள் கலகலத்து பேசி கொண்டிருந்தனர். அவ்வேளையில்,"தேவிகளே! அப்சரஸ்களே! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? தாங்கள் விளையாடும் பரமபத விளையாட்டில் எவரேனும் இன்று அபாரமாய் வெற்றி கொண்டீர்களா என்ன?" தேவர்களில் ஒருவன் கேட்க,

"இதில் என்ன கேள்வி கந்தகா? இவர்கள் அதை தவிர வேறென்ன செய்ய போகிறார்கள்" என ஏளனம் செய்த இளம் கந்தர்வன் ஒருவன் கெக்கலித்து நகைத்தான்.
அவனை தொடர்ந்து மற்ற கந்தவர்களும், தேவர்களும் பெரிதாய் நகைத்தனர்.

அவர்களின் ஏளனத்தில் கோபம் கொண்ட பெண்கள் குழு மொத்தமும் அமைதியாக தேவன் ஒருவன், "என்னவாயிற்று? திடீரென அமைதியாகி விட்டீர்கள் ஒருவேளை எங்களை கண்டவுடன் வழக்கம் போல் தாங்கள் அனைவரும் எங்களிடம் மயங்கிவிட்டீர்களா என்ன?" என எகத்தளமாய் வினவ,

"என்ன உளறல் இது தேவரே! இது வெறும் தேவலோகம் அல்ல தேவர்களின் தலைவர் இந்திரதேவர் வசிக்கும் இந்திரபுரி. இங்கு தாங்கள் இப்படி பேசுவது அழகாகாது" என ஒரு பெண் கோபமாய் கூறினாள்.

"ஹாஹாஹா! தேவி சுலேகா! இந்திரபுரியின் பெருமையே கன்னிகள் தானே.. அதாவது கன்னிகளின் அழகும், ஆண்களுக்கு அவர்கள் செய்யும் பணிவிடைகளும்" முதலில் பேசிய தேவனே மீண்டும் இதை உரைத்து மற்றவர்களை கேள்வியாய் பார்க்க,

"ஆம் கந்தகா.. நீ கூறுவது சரிதான். இந்திரபுரியின் அந்த அழகிய பெண்களை காண தானே கந்தவர்களாகிய யாம் இங்கு வந்தது" என கந்தவர்கள் அதை ஆமோதிக்க அவர்களுடன் நின்றிருந்த தேவர்களும் அவர்கள் சொல்வதை கேட்டு மௌனமாய் சிரித்தனர்.

"முப்பது முக்கோடி தேவர்கள்" என பெருமையாய் அழைக்கபடும் தேவர்களின் இந்த கீழ் செயலில் தேவி லட்சுமிக்கு கோபம் பெருக்கெடுத்தது.

"நாராயணரே! இந்த தேவர்களின் கர்வம் எப்பொழுது தான் அடங்கும். எத்தனை முறை இவர்களின் ஆணவங்கள் நசுக்கபட்டாலும் ஏன் இவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. இவர்களை மனிதர்கள் கடவுளாய் எண்ணி தொழுகிறார்கள். ஆயினும் இவர்களுக்கு துளியும் நடுநிலை என்றவொன்று வரவில்லை"

மனைவியின் ஆதங்கத்தில் மகாவிஷ்ணு, "லட்சுமி! ஒரு தேவியாய் இருந்துகொண்டு தாங்களே இவ்வாறு தேவர்களை பழித்து பேசுவதென்பது ஆகலாது. நான் முன்பே சொன்னது தான் அனைத்து செயல்களுக்கும் காரண காரியங்கள் உண்டு" என்றார்.

"தேவர்களுக்கு ஒன்றென்றால் சரிதவறென்று பாராமல் முதல் ஆளாய் அவர்களின் பாதுகாப்பு நிற்கும் தமையனிடம் உங்களின் நியாயங்கள் எடுபடாது லட்சுமி தேவியாரே" என குரல் கொடுத்தபடி பார்வதி தேவி தன் பதி மாகாதேவருடன் அங்கு தோன்றினார்.

"ஆம் பார்வதி தேவியாரே! மகாதேவராவது சிறிது கோபத்தை காட்டுவார் ஆனால் எம்மவர் தேவர்கள் நலம் கொண்டால் தான் பூலோகம் செழிப்புறும் என்பார்" என தேவி லட்சுமி தன் கணவரை பற்றி பொறுமினார்.

"நாம் படைத்த பூலோகவாசிகளின் நல்வாழ்விற்காய் நான் செய்யும் செயல்கள் அதர்மமானாலும் அதன் விடை தர்மம் எனில் எனது செயல்களும் தர்மமே ஆகும் தேவி" என்ற மாயவனின் மாயப்பேச்சில் தேவிகள் இருவரும் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

மகாவிஷ்ணு மகாதேவரை கண்களால் உதவிக்கு அழைத்தார். அதில் புன்னகைத்த மகாதேவர்,

"தேவி லட்சுமி! மனிதர்கள் தேவர்களை வணங்கினாலும் தேவர்கள் என்பவர்கள் கடவுள்கள் அல்ல, அவர்கள் மும்மூர்த்திகளால் படைக்கபட்ட உயர்நிலை உயிர்கள். அதாவது மனிதர்களுக்கு உரிய ஆறு உணர்வுகளுடன் அருவமாய் மாறும் நிலையும் தேவர்களிடம் இடம்பெற்றுள்ளது.

ஆனால் பசி, விதி, மரணம், முதுமை என்ற நான்கும் தேவர்களிடம் கிடையாது. இதுதான் ஆறாவது பிறவிகளுக்கும் (மனிதர்கள்) ஏழாம் பிறவிகளுக்கும் (தேவர்கள்) உள்ள வித்தியாசம். மனிதர்களை காத்து அவர்களின் வாழ்வு செம்மையாய் செயல்பட உதவுவது தான் தேவர்களின் தலையாய பணி.

ஆனால் அவர்கள் தங்களை வேண்டும் மனிதர்கள் மூலம் தாங்களே பெரியவர்கள் என்னும் எண்ணங்களை இயல்பாய் மனதினுள் தரித்து கொள்கிறார்கள் அதுதான் அனைத்து விளைவுகளுக்கும் காரணம்"

என தேவர்களின் கர்வத்திற்கான காரணத்தை விளக்கினார் மகாதேவர்.

"தேவர்கள் மனிதர்களை விட ஒரு படி மேல் என்றாலும் அவர்கள் தவறு இழைத்தாலும் தவறு தவறு தானே மகாதேவா"

"நிச்சயம் பார்வதி! அதனால் தான் அவர்கள் தங்கள் தவறுகளுக்கான தண்டனைகளை முனிவர்களின் சாபங்கள் மற்றும் அசுரர்களின் கொடுரங்கள் மூலம் அடைகிறார்கள். அசுரர்களின் பிறப்பென்பதே தேவர்களின் தவறுகளின் அளவுகள் தான்" என நிதர்சனத்தை புன்னகையுடன் செப்பினார் எம்பெருமான்.

"அப்படி என்றால் சூரபத்மன் மற்றும் அவன் சகோதரர்களின் அரக்கதனங்களால் தேவர்களின் நிலையே கவலைகிடமாய் இருக்கும் இவ்வேளையில் இங்கு அமராவதி பட்டிணத்தில் இந்த இளம் தேவர்கள் செய்யும் குற்றங்களால் அங்கு போரில் நிலை மேலும் மோசமடையுமா?" என மகாலட்சுமி பதட்டம் கொள்ள,

இதற்கு மகாதேவர் பதிலளிக்கும் முன், "நான் இருக்கும் வரை தேவர்களின் நிலை கீழ் செல்வதென்பது நடக்காது லட்சுமி. சூரபத்மனின் அழிவின் சமயம் நெருங்கிவிட்டது. இப்பொழுது போரில் தலைமை தாங்கி கொண்டிருப்பது சிவசக்தி அம்சம் ஆறுமுகன் என்பதை தாங்கள் மறந்து விட்டீர்களோ" என அக்கணம் மகாவிஷ்ணு கோபத்தை கூட சாந்தமாய் வெளிகாட்டும் வித்தை கற்றவராய் மாறியிருந்தார்.

"எதற்காக தாங்கள் இப்பொழுது கோபம் கொள்கிறீர்கள் அண்ணா? லட்சுமி தேவியார் சொல்லியதில் தவறில்லை. சூரபத்மனை வெல்லமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் வேலையில் தேவர்கள் இப்படி தேவ கன்னிகைகளை கீழாய் பேசி சிரிப்பது என்பது இழிவான செயல் அண்ணா"

தேவி பார்வதியும், தேவி லட்சுமியுடன் இணை சேர்ந்து மாகாவிஷ்ணுவிடம் கோபத்தை வெளிபடுத்தினார்.

"பொறுங்கள் தேவிகளே! எதற்காக இருவரும் நாராயணரிடம் இத்தனை கோபம் கொள்கிறீர்கள். தேவகன்னிகள் என்றில்லை எவரையுமே பழிப்பது நற்செயல் அல்ல அதை மேலான தேவர்கள் செய்தாலும் பெருங்குற்றம் தான்"

"அப்படி என்றால் தாங்கள் உடனே அங்கு சென்று அப்பெண்களுக்கு நியாயம் வழங்குங்கள் மகாதேவா! தாங்கள் அந்த கன்னிகைகளுக்கு உதவ வேண்டும்" தேவி பார்வதியின் கூற்றுக்கு,

"தேவர்கள், மனிதர்கள் எவற்றிலும் பாலினம் வைத்து பலத்தை பெரியதாய் சொல்லகூடாது தேவி! அவர்களுக்கு எம்துணை இந்நொடி அவசியமன்று" மகாதேவர் அளித்த சாந்தமான பதில் கோப மூட்டியது.

"அப்படி என்றால் ஆகட்டும் லட்சுமி தேவியாரே.. தாங்கள் தயார் என்றால் நாம் அங்கு செல்வோம்" என உடனே அங்கு சென்று அந்த தேவர்களுக்கு தண்டனை கொடுக்க தயரானார்.

ஆனால் அவரின் வேகத்தில் தென்பட்ட கோபத்திற்கு மாறாய் தேவி மகாலட்சுயின் தேகம் மகிழ்ச்சியில் விம்மியது. அதனால் "அதற்கு அவசியமில்லை என்று எண்ணுகிறேன் பார்வதி தேவியாரே.. அங்கு பாருங்கள் நம் சார்பாய் க்ரியா அங்கு வந்துவிட்டாள்" என்றார்

அவர் சொன்னது போல், "கந்தகா! ஒரு தேவனாய் இருந்து கொணடு பெண்களை கீழாய் பேசுவது தவறென்று அறிய மாட்டீரா என்ன?" என கணீர் என்ற குரலில் தன் கோபத்தை அமராவதி பட்டிணம் தோறும் தெறிக்க விட்டார் தேவி தேவசேனா என்னும் தெய்வானை.

அவளின் வரவில் அத்தனை நேரம் தேவிகளை வம்பிழுத்த கந்தவர்கள் அமைதியாக, "தேவி தேவசேனா அவர்களே! நான் கூறியதில் தவறென்ன உள்ளது இந்திரலோகத்து பெண்களின் அழகில் வஞ்சமில்லையே" புகழ்வது போல் இகழ்வாய் உதடுகளை வளைத்தவனின் செயலில் தெய்வசேனாவிற்கு கோபம் அதிகரித்தது.

"தேவ கன்னிகைகளிடம் அழகு மட்டுமல்ல தேவரே! வீரமும் வஞ்சமில்லாமல் இருக்கிறது அதோடு பெருங்கோபமும். எங்களின் அழகிலே வசியபடும் பாவமான தேவர்கள் நீங்கள் அப்படி இருக்க எங்களின் கோபத்தை தங்களால் தாங்க இயலுமா என்ன?" கண்கள் சிவக்க உரைத்தவள் சட்டென தன் கைகளில் வாளை கொண்டுவந்து கந்தகனின் கழுத்தில் கீறினாள்.

பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவளிடம் இருந்து இத்தகைய செயலை எதிர்பாரா தேவர்களும், கந்தவர்களும் பெரும் கோபம் கொண்டனர்.

"என்ன செய்கிறீர்கள் தேவி! எத்தனை திண்ணக்கம் இருந்தால் கந்தகனுக்கு காயம் உண்டாக்குவீர்கள்" மற்ற தேவர்கள் அவளை தாக்க முற்பட, கோபத்தில் மூக்கு விடைத்தாலும் தேவலோகத்தில் போரை விரும்பாத தேவசேனா,

"அவன் செய்த தவறுக்கான தண்டனையை தான் நான் அளித்தேன். ஆனால் காரணமின்றி பெண்களை தாக்குவது முறையானது அல்ல என்பதை தாங்கள் அறியமாட்டீர்களா தேவர்களே! இதை பற்றி மும்மூர்த்திகள் அறிந்தால் தங்களின் நிலை என்னவாகும்? இந்த தேவலோகமே அவர்களின் கோபத்திற்கு ஆளாகும்"

வரும் விளைவுகளை யோசித்து தேவசேனா பேச அதை ஏற்றுக்கொள்ள தேவர்கள் தயாராய் இல்லை.

"தாங்கள் என்னை தாக்கும் முன் அதை சிந்தித்திருக்க வேண்டும் தேவி. கேவலம் ஒரு பெண்ணிடம் காயம் கொண்டு அமைதியாக சென்றால் அசுரர்கள் எம்மை கண்டு நகைக்க மாட்டார்களா?" என காயம் கொண்ட கந்தகன் கர்ஜிக்க,.

"அது தானே! முன்பே அசுரர்கள் நம்மை எவ்வாறு தாக்குவது எவ்வாறு கீழ் தள்ளுவது என்றல்லவா இருக்கிறார்கள்" என மற்ற தேவர்களும் உடன் சேர்ந்து தேவசேனாவை தாக்க ஆரம்பித்தனர்.

"பெண்களை இழிவாய் பார்ப்பவர்கள் அசுரர்களை பற்றி பேசும் தகுதியற்றவர்கள்.. தங்களின் செயல்களால் தாங்களும் தற்பொழுது என் கண்களுக்கு அசுரர்களை போல் தான் தோன்றுகிறீர்கள் ஆகட்டும்.. அசுரர்களை தாக்க என்றுமே அஞ்சமாட்டாள் இந்த தேவசேனா"

பேச்சுகளை சுருக்கியவள் அவர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை தொடர்ந்தாள். உடன் வர முற்பட்ட தேவிகளை தவிர்த்து அத்தனை தேவர்களுக்கு எதிரே ஒற்றை பெண்ணாய் சினத்தில் காளியாய் மாறி யுத்தம் செய்தவளின் ருத்ரத்தில் ஒட்டுமொத்த தேவலோகமும் அச்சம் கொண்டது. அவளின் கோபத்தில் தேவ மாளிகைகளின் சுவர்கள் விரிசலிட, அவள் விடும் கோப மூச்சுகளில் தேவலோகத்தில் இருக்கும் தேவ மரங்கள் பொசுங்கியது.

தேவர்கள் அனைவரும் அவளின் கோபத்தின் முன் துவம்சமாகி கொண்டிருக்க தேவராணி இந்திராணி நடப்பதை உணர்ந்து விரைந்து வந்தவர் என்ன செய்து தேவசேனாவின் கோபத்தை தணிப்பது என்றறியாமல் தவித்தார்.

"தேவசேனா! தேவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது நன்றல்ல மகளே! அன்னை கூறுவதை கேள் கோபத்தை விட்டொழி" என உரைக்க,

"அன்னையே! தேவர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவது தவறென்றால் அவர்களுக்குள் பெரியவர் தாழ்வர் என வகை பிரிப்பது மட்டும் அத்தனை அழகானதோ? ஆகட்டும் அவர்களின் அழகை நான் அலங்கோலமாய் மாற்றாமல் விடமாட்டேன்" என உச்ச கோபத்தில் கர்ஜித்த தேவசேனாவின் ருத்ரத்தில் அனைவரும் ஆடிபோக ஒருவர் மற்றும் ரசித்து பார்த்தார்.

இளம் தேவர்கள் அனைவரும் தோற்று கீழே விழ தேவசேனாவின் அழகை ரசித்து வீரத்தில் வியந்தவாறு,

"இத்தனை வீரமான பெண் ஏன் சூரபத்மனை அழிக்கபோகும் போரில் பங்குபெற்றிருக்க கூடாது? பெரியவர்கள் அறியாமல் சொல்லவில்லை பெண்களின் கோபம் பெரும் சேனையை அழிக்கும் என்று. அத்தனை தேவர்களையும் ஒற்றை ஆளாய் தோற்கடித்துவிட்டதே இந்த தேவியின் ருத்ரம்" என்றவாறு அங்கு பிரசன்னமானார் ஆறுமுகனான முருகபெருமான்.

சூரபத்மனுடனான போரில் இருந்த ஆறுமுகனுக்கு தேவலோகத்தில் எதுவோ தவறாக நடப்பதாய் திடிரென மனம் சஞ்சலம் அடைந்திருந்தது. பெருந்தேவர்கள் அனைவரும் அசுரர்களுடனான யுத்தத்தில் இருக்க தேவலோகத்தை காக்க தான் மட்டும் விரைந்தோடி வந்தவர் கண்டது தேவசேனாவின் ருத்ர செயல் ரூபத்தை தான்.

'அழகென்ற சொல்லுக்கு முருகா" என்னும் வாக்குக்கு ஏற்ப போர் கோலத்திலும் அழகாய் மிளிர்ந்தவரின் அருளில் அங்கிருந்தோர் மயங்க, அவரின் முகம் நோக்கிய தேவசேனாவின் வதனம் அவரிடம் தென்பட்ட வியப்பு, ஆர்வம், குறும்பு என்ற பல வர்ணஜாலங்களில் தன் ருத்ரம் கலைந்தது.

தேவசேனாவின் கோபத்தை தன் அருள் முகத்தாலே குறைத்த முருகபெருமான் பெண்களை தரைகுறைவாய் பேசிய இளம் தேவர்களை வெகுவாய் கண்டித்தார்.

அவரின் வரவில் அங்கு சூழல் சுமுகமாக அனைவரும் விடைப்பெற தனித்து நின்ற தேவசேனாவிடம், "இனி தங்களின் ருத்ரரூபம் கலைந்து வீரத்துடனான நாணம் கொண்டு நீலாம்பலை கைகளில் ஏந்தி காத்திருங்கள் தேவி" மென்குரலில் மொழிந்தவர் திரும்ப,

அவரின் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து தேகம் சிவக்க விளையாட்டாய், "எதற்காக ஐயனே" என அறியாபேதை போல் வினவினார் தேவசேனா.

அதில் கன்னங்குழிய அழகாய் புன்னகைத்த ஆறுமுகன், "தங்களின் ஐயனுக்கா தான்" என்றுரைத்து அங்கிருந்து மீண்டும் போர்களம் சென்றார்.


-தொடரும்..
 
  • Love
Reactions: Kameswari