• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜெல்லி சாகோ ட்டிரிங்

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
ஜெல்லி சாகோ டெஷர்ட் (Jelly sago dessert)

சம்மர் ட்ரிங்க்

தேவையான பொருட்கள்:

அகர் அகர்(ஜெலாடின் பவுடர்) - தேவையான அளவு
ஜவ்வரிசி(சாகோ) - தேவையான அளவு
பால் - அரை லிட்டர்
சர்க்கரை- தேவையான அளவு
பால் பவுடர் அல்லது கஸ்டர்டு பவுடர்

செய்முறை:

1. முதலில் தண்ணீர் சேர்க்காத பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் கொதித்தவுடன் பால் பவுடர் அல்லது கஸ்டர்டு பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன் அதனுடன் சேர்த்து கட்டி சேராமல் நன்கு கலந்து விடவும். (பால் பவுடரோ கஸ்டர் பவுடரோ இல்லாவிடில் பிரச்சனை இல்லை. இது சேர்த்தால் க்ரிமியாக இருக்கும். இல்லாவிடில் பாலை சுண்டக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்). பின் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். அதை ஆற வைத்து பாலை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.

2. அது குளிராகும் முன் ஜெல்லியும் ஜவ்வரிசியும் வேகவைத்து விடலாம். மூன்று ஸ்பூன் ஜெலாடின் பவுடரை(ஐந்து பேருக்கு செய்வர் பண்ணலாம்) எடுத்து அதில் மூன்று டம்ளர் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதை பதினைந்து நிமிடம் ஆற வைத்தால் ஜெல்லி ரெடியாகி விடும். அல்லது பதினைந்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்தும் ரெண்டா பண்ணலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் ஜில்லென்று இருக்கும்.

3. பின் பத்து நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். ஜவ்வரிசி கொலகொலப்புத் தண்மையுடையது என்பதால் வேகவைத்து வடிகட்டிய ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு அலசிக் கொள்ளவும். அப்போது தான் உதிரி உதிரியாக இருக்கும்.

4. இப்போது டெஷர்ட் செய்ய அனைத்தும் தயார். முதலில் ஒரு டம்ளரை எடுத்து அதில் சிறிது ஜவ்வரிசி, சிறிது ஜெல்லி சேர்த்து விட்டு, பின் க்ரிமி பாலை அதில் ஊற்றி ஸ்புனால் கலக்கி விடவும். இப்போது ஜெல்லி சாகோ ட்டிரிங் தயார்..!

இந்த வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருக்கும். வீட்டிற்கு விருந்தினர் வந்தால் வெல்கம் ட்டிரிங் மாதரி குடுக்கலாம்.
 

Attachments

  • Jelly.jpg
    Jelly.jpg
    387.2 KB · Views: 25
  • Jelly sago drink.jpg
    Jelly sago drink.jpg
    169 KB · Views: 21
Top