• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

டீஸர்...

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
17
14
3
Coimbatore
"கண்ணுல கெத்து...
அவ கண்ணுல கெத்து...
வாய்ப்பில்லாம வச்சுடுவா வாயில குத்து...
வாயில குத்து" என ஸ்பீக்கரில் பாடலை போட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள் அவள்.

"என்னடி பாட்டு இது" என்றபடி அவளின் அறைக்குள் நுழைந்தார் செண்பகம் அவளின் அன்னை.

"இறுதிச்சுற்று மா" என கத்தியபடி இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு அவள் குதித்த குதியில், அவர்கள் இருந்த வீடு, இடிந்து விழுவது போல அதிர்ந்தது.

"அய்யோ... நிறுத்து டி" என செண்பகமும் கத்த,

"ஏம்மா... காலையிலேயே ஆரம்பிக்கிற, இன்னைக்கு சண்டே... இடியே விழுந்தாலும் பாட்டு நிக்காது" என அவள் ஆட,

"அடிக் கழுதை... உங்க அத்தையும் அத்தை மகனும் வந்திருக்காங்க, அந்தம்மா சும்மாவே சீன் போடும், இதுல இப்படி நீ ஆடிறது பார்த்தா, பொண்ணை வளர்த்து வச்சு இருக்க லட்சணம் பாருனு, உங்க அப்பாவை பேசும்" என செண்பகம் சொல்லவும்,

"இந்த அத்தைக்கு சண்டே ஆனா போதும் வந்து உட்காந்துக்குது" என சலித்தபடியே பாட்டை நிறுத்தி விட்டு, கடுப்பாக மெத்தையில் அமர்ந்து விட்டாள்.

"சரி குளிச்சுட்டு வா" என அவர் சென்றிட,

"க்கும்" என சிலுப்பிக் கொண்டு தலையணையை எடுத்து வீசி எறிந்து குளியலறை புகுந்தாள் அவள்.



###

"அம்மா எனக்கு நேரம் ஆகுது" என சொல்லியபடி அமர்ந்து இருந்தான் அவன்.

"கொஞ்ச நேரம் இரு டா. பாப்பா வந்ததும் பாத்துட்டு போலாம்" என அவர் சொல்ல,

' நீ எப்போ கிலம்புவனு அவ இருப்பா. அவ எப்போ வரது, நான் எப்போ போறது ' என மனதில் நினைத்துக் கொண்டு சேட்டில் மூழ்கினான் அவன்.