• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாட்சாயணி தேவி..3

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம்..3


சக்தியின் கோபத்தைப் பார்த்து 'அத்தை ஏதும் சொன்னாங்களோ', என்று பதறிய தாட்சாயணி நீலவேணி சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியுடன் சக்தியை பார்த்தாள்..


"ஏன் அத்த ?", என்றவள் அதற்கு மேலே என்ன கேட்பது என்று புரியாமல் சக்திவேந்தனை பார்க்க..


அவனோ இறுகிய முகத்தோடு தன் அம்மாவைப் பார்க்க.. அவரோ "இதை இனி என் தம்பிடம் பேசிக் கொள்கிறேன், .. என்று சொன்னவர்.. ''உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை என்று நாளைக்கு ஒரு பேச்சு வந்தரக் கூடாது என்று தான் முன்பே உன்னிடம் சொல்லிவிட்டேன்'' என்று சொல்லிவிட்டு தாட்சாயணிடம் திரும்பி "இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கு தாட்சு.. இது என்னிக்கோ முடிவானது தானே",… என்றவரை


"அது இல்ல அத்த .. இன்று தான் கட்சியில் பதவி ஏற்றேன் அதுக்குள்ள திருமணம் என்று சொன்னால்'' தடுமாறியபடி வார்த்தைகளை உதிர்த்தவளை நீலவேணி தன்னருகே இழுத்தவர்…


"அதற்கும் உன் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமில்லை.. உனக்கு அது புரியும் நினைக்கிறேன்.. பொது வாழ்க்கைக்குள் வந்துவிட்டால் அப்பறம் திருமண வாழ்க்கையைப் பற்றி நினைவு வராது.. அதிலே ஓட வேண்டிருக்கும்..


ஆனால் குடும்ப வாழ்க்கையில் நீயும் சக்தியும் இணைந்து வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசையும் நிம்மதியும் அதில் மட்டும் தான் இருக்கிறது .. .. சக்தியின் அப்பா இறந்ததும் எனக்கு என்ன பண்ணவது என்று புரியாத பித்து நிலையில் இருந்தேன்.. என் உலகமே ஸம்பித்தது போல ஆனது.. அதற்குப் பிறகு இங்கே இக்குழந்தைகளோடு இருக்கும் போதும் என்னால் ஏனோ மனதில் ஒரு அலைபாயுதல் இருந்து கொண்டே இருக்கிறது .. என் கடமையை நான் சரியாக செய்து முடிக்கவில்லை என்று என் மனம் படும்பாட்டை மற்றவர்களுக்கு உணர்த்த முடியாது ..


''அதுவுமில்லாமல் சக்தி எத்தனை நாளைக்குத் தான் தனிமரமாக அவ்வீட்டில் இருப்பான்.. அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அவன் வாழ வேண்டும் தானே .. நான் தான் தனிமைச் சிறையில் தவித்துக் கொண்டிருப்பதைப் போல என் மகனும் அந்தச் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறான் ..


''வேலை முடித்து வீட்டுக்குப் போகும் அவனுக்கு ஒரு வாய் தண்ணீர் எடுத்துத் தரக் கூட ஆளியில்லை.. அவனை அனாதையாக வீட்டிலேயே நிற்க வைத்து விட்டு, இங்கே நான் இந்தப் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னால் எனக்கே வெட்கமாக இருக்கிறது .. இப்படி பலதை யோசனை செய்து தான் இந்த முடிவை எடுத்தேன் தாட்சு.. இனி உங்கள் திருமணத்தைத் தள்ளி போட முடியாது.. அதனால் அடுத்த வாரம் சிம்பிளாக கோவிலில் கல்யாணத்தை முடித்துவிட்டு அப்பறம் உங்க விருப்பப்படி எது வேண்டுமானலும் செய்துக் கொள்ளுங்கள்'', என்றவர் ''இனி இதைப் பற்றி நான் மகேஷ்யிடமும் உமாவிடமும் நான் பேசிக் கொள்கிறேன்'', என்று சொல்லியவர்..


தன் மகனின் அருகில் போனவர் அவன் கன்னத்தை வருடிவிட்டு ''உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் தானே சக்தி'', என்று ஆதூரமாகக் கேட்டவரின் கரங்களை அழுத்தியவன், ''அப்படி எதுவுமில்லை மா'',.. என்று கரகரத்தக் குரலில் சொல்லியவன் சட்டென்று அறையிலிருந்து வெளியேறிவிட்டான்..


அத்தை சொன்னதைக் கேட்டு திக்பிரமை பிடித்து நின்றவள், 'தான் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவோ நினைக்கவோ இல்லையே.. சக்தி எப்போதும் ஒவ்வொன்றும் தனக்காகப் பார்த்துச் செய்பவனைப் பற்றி யோசனையின்றி இருந்த தன் மடத்தனத்தை எண்ணி தன் மேலே அதீத கோபம் கொண்டவள்.. அவன் ஏன்? மறுப்பது போல அத்தையிடம் பேசினான் என்ற கேள்வியும் அவளுக்கு எழுந்தது.


தனக்குள்ளே சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளின் அருகே வந்தவர் ''தாட்சு''.. என்று நீலவேணி அழைக்க "ம்..ம்ம் அத்த சொல்லுங்க",.. என்றவள் "நீங்க சொன்னபடி எல்லாம் நடக்கட்டும் அத்தை", என்று சொல்லிவிட்டு .."நான் கிளம்பிறேன் அத்தை", என்று அவளும் கிளம்பி வெளியே வந்தாள்..


அங்கே மரத்தடியில் நின்று கொண்டிருந்த சக்தியின் உள்ளமோ அனல்கலனாகக் கொதித்துக் கொண்டிருக்க.. இனி அம்மாவின் செயலை தடுக்க முடியாமல் போனதை எண்ணி தன் மேலே கோபமும் வந்தது.



அப்போது அவன் அருகிலே வந்த தாட்சாயணி சக்தியின் மனநிலையை உணர முடியவில்லை.. அவனின் முகம் ஏன் இவ்வளவு சஞ்சலமாக இருக்கிறது? என்று நினைத்தவள் அதை அவனிடமே கேட்டு விட்டாள்…..


"என்ன அத்தான் என்னை கல்யாணம் பண்ணவது அவ்வளவு கடினமான காரியமா'', … என்று கேட்டவளின் குரலிலிருந்த தவிப்பை உணர்ந்தவன், அவளைத் திரும்பிப் பார்க்க அவன் முகத்திலோ சொல்லில் வடிக்க முடியாத துயரத்தைக் கொண்டிருக்க.. அதைப் பார்த்தவள் திகைத்துப் போனாள்..


அவனருகில் வேகமாகச் சென்றவள் அவனின் கரங்களைப் பற்றிக் கொண்டு ''என்னாச்சு அத்தான்,.. உங்களுக்கு இதில் விருப்பமில்லையா.. எதும் கட்டாயத்தின் பேரில் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லிறீக்கிங்களா ",என்றவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது… பிடிக்காமல் இணையும் பந்தமா கல்யாணம்…. அவனுக்கு என்னைப் பிடிக்கு தானே ..இல்லை பிடிக்காதா .. என்று பலதை நினைத்துக் குழப்பிக் கொண்டாள்.. எதிலும் தீர்க்கமான முடிவை எடுப்பவள் தன்னவனின் மனதில் என்ன இருக்கு என்பதை அறியாமலே இருந்ததை எண்ணி வருத்தியும் கொண்டாள் தாட்சாயணி.


இனி அதற்கு மேலே அவனிடம் என்ன கேட்க என்று புரியாமல் திகைத்தவளைக் கண்டு பார்த்தவளிம் ''ஒண்ணுமில்லே தாட்சாயணி'' என்று அவளின் பெயரைச் சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்..


அவளுக்குத் தெரிந்து அவள் பெயரை அவன் கூப்பிட்டதே இல்லை .. இன்று முதல் முறையாகக் கூப்பிடவும் தன்னை விட்டு அவன் வெகுதொலைவு சென்ற உணர்வு தோன்ற.. இவன் அவனில்லையா வேறு யாரோவா என்ற எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்க..


அவனோ "கிளம்பலாம் நேரமாச்சு", என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று காரை நோக்கி நடந்தான் சக்தி..


அவன் போவதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தவளுக்கு அவள் வாழ்க்கைக்குள் அவளுக்கே தெரியாத மர்மம் ஏதோ இருப்பது போல தோற்றம் உருவாக அதை அவளின் மனம் ஆராய்ந்தபடியே காரின் அருகே போனவள் அங்கே நின்ற சக்தி ''ஏறு போகலாம்.. உன்னை வீட்டில் விட்டுவிட்டு நான் ஆபீஸ் போகணும்.. முக்கியமான மீட்டிங் இப்ப அரேன்ஜ் பண்ணிருக்காங்க.. நான் போயே ஆகணும்'', என்று சொல்லிவிட்டு முன்பக்கம் அமர்ந்தான்..


வரும்போது அவன் தோள் சாய்ந்து அமர்ந்து வந்துவிட்டு இப்ப பின்பக்கம் தனியே அமர்ந்தவளுக்குச் சுருக்கென்று கோபம் ஒன்று அலையாய் உள்ளத்தில் எழும்ப .. அதை வெளிகாட்டாமல் மறைத்தவள் நிமிர்ந்து அவனை தீட்சண்யம் நிறைந்த பார்வையுடன் உற்று நோக்கியவளைக் கண்ட சக்திக்கு அந்தப் பார்வைக்குப் பதிலின்றி தன் அலைபேசியை எடுத்து மெயில்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்..


காலையில் கிளம்பும்போது இருந்த மகிழ்ச்சி எல்லாம் வடிந்தது போல ஆனது அவளுக்கு.. தான் நினைத்தைப் போல சக்தி அவ்வளவு இலகுவானவன் இல்லையா.. மனதில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு இருக்கிறானா என்று அறியாமல் தன்னையே குழப்பிக் கொண்டாள் தாட்சாயணி.


அவன் தானே தன்னை ஒரு துரும்பு தூசி கூட அண்டவிடாமல் பார்த்துக் கொண்டவனைத் தான் அந்தளவுக்குக் கவனிக்கவில்லை என்ற குற்றயுணர்ச்சியும் அளவுக்கு அதீதமாக இருந்தது அவளிடம் ..


ஆசிரமத்தில் நடந்ததைப் பற்றிய சிந்தித்து வந்தவளுக்கு சக்தி காரில் ஏறியது இருந்து மௌனமாக வருவது அவள் மனதில் உரைக்கவில்லை.


தன் வீட்டின் முன் கார் நின்றதைக் கூட அறியாமல் இருப்பவளைத் திரும்பிப் பார்த்தவன், ''யட்சணி வீடு வந்திருச்சு இறங்கு '',என்று சொல்லி சேகரிடம் கண் காமிக்க அவரோ இறங்கி அவளின் பக்கம் கதவைத் திறந்து வைக்க பொம்மை போல இறங்கியவள் சுற்றியிருக்கும் கூட்டத்தைக் கூடக் கண்டுக் கொள்ளாமல் சக்தியிடமும் சொல்லவோ பேசவோ இல்லாமல் ஒய்ந்து போனவளோ பதுமைப் போல நடந்து விட்டிற்குள் சென்றவளைப் பார்த்தவன் அவள் உள்ளே செல்லும் வரைக்கும் காரை எடுக்காமல் இருந்தவன், இனி அத்தை அவளைக் கவனித்துக் கொள்வார்கள் என்று தோன்றிய உடன் காரை எடுக்கச் சைகை செய்து விட்டு அப்படியே சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்..


வீட்டினுள் சென்றவளோ உமாதேவி பேச வந்ததையோ ஏதோ சொல்ல வந்ததையோ கவனிக்காமல் தன்னயறைக்குச் சென்றவள் அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்தவளின் உள்ளமோ அலை மோதியது.


ஆசிரமம் போகும்வரை இருந்த சக்திக்கும் அங்கே போனதும் அவனின் ஒதுக்கம் அவள் மனத்தை ரொம்ப பாதித்தது. விவரம் தெரிந்த நாள் முதலா தன்னை விட்டு அனுதினமும் விலகாதவன் இன்று பேச்சிலும் செயலிலும் ஒரு ஒதுக்கமும் அவனை நெருங்கி முடியாத அளவிற்கு அவனைச் சுற்றி அனல் வலையை போட்டு இருக்க .. தான் நெருங்கினாலே பஸ்பம் ஆகிவிடுவோம் அதில் ..என்று மனதிற்குள் சிறு நடுக்கம் உண்டாக .. அவளின் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது …


கீழே உமாதேவியோ தன் மகளின் முகமும் அதில் எதையோ இழந்து விட்டு தவிப்பை உள்ளடக்கிக் களையிழந்து இருப்பதைக் கண்டவர் பதைபதைத்துப் போனவர் சக்திவேந்தனுக்குப் போன் பண்ணினார்..


ஒரே ரிங்கில் எடுத்தவன் ''என்ன அத்த உங்க பொண்ணு அப்படியே உறைஞ்சு போய் உட்கார்ந்து இருக்காளா'', என்று நேரடியாகவே கேட்டவனை…


''எப்படிடா.. அவளைப் பற்றி தான் பேசப்போறேன் தெரிந்து அதே மாதிரி கேட்கிற'', என்று சொல்லியவர்… ''ஆமாம் சக்தி… நான் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் அவள் மாடிக்குப் போய்யிட்டாள்.. அறைக்குள் போய் கதவைத் சாத்தியவள் இன்னும் திறக்கல … நான் டீ ஸ்னெகஸ் கொடுத்து விட்டாலும் அதற்கும் பதில் இல்லாமல் இருக்கா சக்தி.. யார் மேலே இத்தனை கோபமும் குழப்பமும் ஒண்ணும் புரியல'',..


''ஆசிரமத்தில் என்ன நடந்தது .. அண்ணி எதாவது சொன்னாங்களா'', என்று கேட்க..


''அவளுக்கு என் மேலே கோபம் அத்த.. அங்கே என்ன பேச்சு வார்த்தை நடந்திருக்கும் என்பது உங்களுக்கு இண்னுமா தெரியுதா…என்கிட்டே போட்டு வாங்குகிறீங்களே'', என்று சிறு சிரிப்புடன் சொல்ல…


''உன் மேலே அவளுக்கு என்ன கோபம் சான்ஸ்ஸே இல்லை'', .. என்று சொல்லிவிட்டு … ''ஆசிரமம்த்தில் நடந்ததை மாமா வந்தும் பேசி முடிவு எடுத்துக்கலாம் ஆனால் இங்கே இவளை வந்து சமாளி… என்னால் அது முடியாது.. கிட்டப் போனனேன் கடிச்சிக் குதறியவிடுவா'',… என்று சொல்லி அவரும் சிரிக்க…


''அப்ப உங்க பொண்ணை நாய்னு சொல்லறீங்க அப்படி தானே .. இருங்க இருங்க அவள் கிட்டே போட்டுக் கொடுக்கிறேன்'',…


''டேய் கண்ணா ..நானே பாவம்'', என்றவர், ''நீ போய் சொன்னாலும் உனக்கும் அதே நிலை தான் .. அப்பறம் கவுர்மென்ட் ஹாஸ்ப்பிட்டலே போய் ஊசி தான் போடணும் பார்த்துக்கோ'', என்று சொல்லி அவரும் சிரித்தார்..


சக்தியின் மனம் சிறிது லேசாக ''இன்னும் கொஞ்சம் நேரம் உங்க மகளை சமாளிங்க.. நான் வேலை முடிச்சிட்டு வரேன்'',.. என்று சொல்லியவனை…


''இரு இரு போனை வச்சிடாதே'' என்று கத்திய குரலுக்கு.. காதை தேய்த்தபடி '' ''பேசாமல் நீங்க போனை ஆப் பண்ணிட்டு நான் இருக்கும் இடத்திற்கு நேராக நின்னு பேசுங்க.. எனக்குக் கேட்கும் ... . என்று கேலிச் செய்தவனை ..


''போனில் ஒண்ணும் செய்ய முடியாதே ஆடுகிறாயே கண்ணா.. இங்கே வந்துத் தான் ஆகணும்.. இந்த அத்தைக் கையால் கஞ்சி வாங்கிக் குடிக்கணும் ஞாபகம் வச்சுக்கோ.. உன் பொண்டாட்டிக்குச் சூடுதண்ணீ கூட வைக்கத் தெரியாது என்று பல்லைக் கடித்தபடி சொன்ன உமாதேவி.. ஏன்டா இப்படி ஆள் ஆளுக்குக் கடிக்கீறிங்க'',.. என்று சொல்லியவர்..'' கல்யாணம் பேச்சு அங்கே அண்ணி பேசியதும் உன் ரியாக்ஷன் என்னவா இருந்தது'', என்று பாயிண்டைப் பிடித்தார் உமா…


சக்தியிடம் பதில் இல்லாமல் அமைதியாக இருக்க , ''ஏன் ?கண்ணு உனக்கு தாட்சுவை பிடிக்கும் தானே .. எங்களுக்காக அவளை வலுகட்டயமாகக் கட்டணும் என்று கட்டுகிறாயா'',.. என்று சிறு வருத்தமும் ஆற்றமையும் தோன்ற …


அவனோ ''உங்க பொண்ணுக்கு மேலே நீங்கள் கற்பனை உலகத்திற்குப் போய்யிருங்கீங்க… எங்கள் கல்யாணம் என் சம்மதமில்லாமல் அம்மா பேசுவாங்களா… இன்று தான் உங்க வீட்டு தேவி பதவி ஏற்று இருக்காங்க.. அதில மனுஷி அலன்று போய்விட்டாள்… அடுத்தது கல்யாணம் சொல்லி இன்னும் அவமேலே சுமையை கூட்ட வேண்டாம் என்று தான்'', என்று மேலோட்டமாகச் சொல்லியவனிடம் முழு உண்மை வரவில்லை என்பதை உணர்ந்த உமாதேவி…


''சரி விடு நீ வந்து அவளைச் சமாதானம் படுத்து'',.. என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் உமாதேவி.


தன் நெற்றியில் விழுந்த கூந்தலை பின்னால் ஒதுக்கியவன்.. பிடறியை பிடித்துக் கொண்டு அன்னார்ந்து ஒரு பெருமூச்சை விட்டவன்.. என் வாழ்க்கை இப்படியே ஒவ்வொரையும் சமாளித்தே போய்விடும்போல..


இன்று அம்மணிக்குக் காட்டு காட்டிக் குழப்பிவிட்டுட்டேன்.. இனி அவளை மலையிறக்கணும்.. அவள் எளிதாக இறங்கி வருவாளா கடவுளே! என்று மனதிற்குள் புலம்பியவன்…


அவனுக்கும் இப்போது திருமணத்திற்கு அவசரமில்லை அதுக்காகத் தான் அம்மாவிடமும் இவளிடம் முகத்தைச் சுருக்க வேண்டிதாகப் போச்சு.. இதில் என் முகம் மாற்றம் அவளுள் பல கேள்வியை எழுப்பிருக்கும்.. ஒவ்வொன்றுக்குகாக பதிலைச் சொல்லுவதற்குள் நாக்குத் தள்ளிருமே என்று தனக்குள்ளே சொல்லியவன்..


உடனே ஒரு யோசனை தோன்ற அவள் பர்சனல் நம்பர்க்கு ஒரு மெசஸ்ஜ் தட்டி விட்டான்… "ஹேய் யட்சணி என் மாமன் பெத்த ரத்தினமே… அத்தான் மாலையில் வருகிறேன்.. நீ குளுகுளு பனியாய் குளிர்ந்து இருக்கணும்.. அப்பதான் நான் சொல்லப் போகும் சம்மத்திற்கு நீ ஹாட்டாகி ஓடி வந்து அத்தானைக் கட்டிக்குவே",என்று கட்டிப் பிடிக்கும் சிம்பிளையும் அனுப்பியவன்..


''இந்தப் பிரச்சினையால் அவள் உழன்று கொள்ளாமல் சந்தோஷமாக கல்யாணத்துக்கு ரெடியாகனும்.. சக்தி இனி எதும் சொதுப்பி விட்டு விடாதே.. ஆமாம்'', என்று தன்னைப் பார்த்தே முக்கின் முன் கையை நீட்டிச் சொல்லிக் கொண்டான் சக்தி வேந்தன்.


இனி அவள் முன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் .. என்றவனின் மனதிற்குள் சுனாமியா சுழற்றி அடிக்கும் கடந்த கால விஷயங்களுக்கு பதிலளித்திட இயலாத தன் கோழை தனத்தை எண்ணி அவன் மேலே அவனுக்கும் சினம் பெருகியது … பாசத்திற்கும் பாவத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டு சீர்ழிவது இருவருமே அதை உணர்ந்தால்தானே அவனுக்குள் இத்தகைய தவிப்பு.. என்று எண்ணியபடி தன்னவளைப் பார்க்க காரை செலுத்தினான்…


அங்கே அவள் ருத்ர மூர்த்தியாக அவதாரம் எடுக்க அவனோ வளைந்து கொடுத்து கைகால்களை பிடித்து அவளை அமைதிப்படுத்துவதுக்குள் ஓய்ந்து போனவன் அவள் மடியே தஞ்சம் என்று எண்ணி துயில் கொண்டான் சக்திவேந்தன்.

தொடரும்..

ஹாய் மக்கா அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் .. உங்கள் கருத்துக்களை கூறுங்கள் எதாவது நிறை குறை இருந்தால் அன்பாக எடுத்துச் சொல்லுங்கள் தங்கமாய்..😍 😍 😍
IMG-20230202-WA0018.jpg

































.
 
Top