• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாட்சாயணி தேவி ..4

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..4


தாட்சாயணியை வீட்டில் விட்ட சக்திவேந்தனோ கம்பெனிக்குச் செல்லாமல் தன் வீட்டிற்குப் போகும்படி சேகரிடம் சொல்ல அவரும் அவனின் வீட்டிற்குச் சென்றார்.


தன் வீட்டின் போனதுமே அங்கிருந்த நிசப்தத்தைக் கண்டு மனம் மருகியபடியே தன் அப்பாவின் அறைக்குப் சென்றவன் அங்கே பெரிய படத்தில் குடும்பத்தோடும் ஒன்றும் தனிப் படமாக ஒன்று பெரியளவில் சுவரில் மாட்டிருந்தது.


அந்தப் போட்டாவின் அருகில் நின்றபடி அதை உற்று நோக்கிப் பார்த்தவனின் விழிகளில் கண்ணீர் படலம் ..


நேரம் கடந்தது அறியாமலே அவரின் போட்டோவை பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மனதிற்குள் ஒரு சூறாவளியே உருவாகியது..

அவனின் முகமோ கடுமையாகி இறுகிப் போனது.. அழகிய குருவிக் கூட்டைப் பிரித்துச் சின்னபண்ணாமாக்கி எறிந்தவர்களின் மீது அளவிட முடியாத அளவிற்கு சினம் அதிகரிக்க, தன் திண்மையான கரங்களால் ஓங்கி சுவற்றில் குத்தினான்… தன்னையே தன்னால் கன்ரோல் பண்ண முடியாமல் தவித்தபடி தனித்து நின்றவனுக்கு இதை எல்லாம் மறக்க முடியுமா .. மறந்து தன் வாழ்க்கையை வாழ முடியுமா என்ற எண்ணம் அதிகரித்தது சக்தி வேந்தனுக்கு ..


அதே யோசித்தபடி நின்று கொண்டே தன் அப்பாவின் படத்தைப் பார்த்தவன், அந்த அறையிலிருந்து வெளியேறி அங்கிருந்த சோபாவில் அமர்ந்த அடுத்த நொடி அவனின் அலைபேசி அழைக்க .. அதை எடுத்தவனிடம் உமாதேவி தன் மகளைப் பற்றி சொல்லவும்.. அவ்வளவு நேரம் கோபத்தில் கொந்தளித்த மனத்தை அடக்கி மூச்சை இழுத்து விட்டவன், உமாதேவிடம் பேசியபடி காரை எடுத்துக் கொண்டு அவர்களின் வீட்டில் போய் தான் நிறுத்தினான் சக்தி வேந்தன்..


அங்கே உமாதேவியோ, ''என்ன கண்ணா ஆச்சு, இங்கே தாட்சு பேசவே மாட்டேன் மௌன விரதத்தை கொண்டிருக்கிறா.. வாய் ஓயாமல் எதாவது வெளியே போய்யிட்டு வந்தால் பேசிக்கிட்டே இருப்பாள் இன்று என்னாச்சு… உனக்கும் அவளுக்கும் இடையே எதாவது பிரச்சினையா'', என்று அவனைப் பல கேள்விகளைக் கேட்டவரை..


சிரித்தபடி பார்த்தவனோ ''அத்தை போதும் போதும்.. உங்க பொண்ணுக்குப் பேச்சுத் திறமை எங்கிருந்து வந்திருக்கும் புரிஞ்சிருச்சு.. இப்ப அந்தக் கதை எல்லாம் உங்ககிட்ட பேசி என் எனர்ஜி வேஸ்டாகி.. அப்பறம் உங்க பொண்ணுகிட்டே பேசத் தெம்பு இல்லாமல் போய்விடும்'', என்று கிண்டலாகப் பேசியவனை முறைத்த உமா…


''உனக்குப் பிடிச்ச டீயும் முறுக்கும் ரெடியா இருக்கு.. சாப்பிட்டே போய் அவளிடம் மல்லுக் கட்டு'', என்றவள்.. ''என்ன விசயம் என்னிடம் சொன்னால் உனக்கு உதவலாமே தான்'', என்று இழுத்தவரை...


''ஸ்வீட் அத்தே… இதுவே போதும் போதும்.. அவளிடம் பேசுவதே நானே பார்த்துக்கிறேன் .... நீங்க டீயும் ஸ்னேக்ஸூம் இரண்டையும் மாடிக்கு இருவருக்கும் சேர்த்தே கொடுத்து அனுப்புங்க… நான் போய் என் செல்லக்கிளியை பார்க்கிறேன்'', என்றபடி நாலுபடியா ஏறி அவளின் அறைக்குள் நுழைந்தவன் அங்கே சோர்ந்து போய் முகமே வெளுத்துக் காண எங்கயோ வெறித்தபடி அமர்ந்திருவளைக் கண்டு தன்னையே சாடிக் கொண்டான் சக்தி..


'அறிவுக்கெட்ட முட்டாள் .. அவளே எல்லா விஷயத்தில் ஷார்ப்.. அவளுக்கு முன் கவனமாக இருக்கணுமா வேண்டாமா', என்று தன்னைத் திட்டிக் கொண்டவன்,


இனி இவள் பேச்சை வேறு சமாளிக்கணுமே என்று எண்ணியபடி அவள் அருகே போய் ''யட்சணி.. என்ன அத்தானோட கல்யாணம் சொன்னதும் கனவுல டூயட் பாடுகிறாயா?'', என்று கேட்டபடி அவளை நெருக்கிக் கொண்டு அமர்ந்தான்..


அதுவரை உணரவில்லாத கண்களோடு எங்கோ பார்த்திருந்தவள் அவன் தன்னருகில் நெருங்கி அமர்ந்தவனைக் கண்டு திரும்பிப் பார்த்தவளின் விழிகளோ அனலைக் கக்கியது…


''அய்யோ அம்மாடி வேண்டாமா… இந்தப் பார்வை… பயந்து வருதுல'' என்று பயந்தமாதிரி ஆக்ட் பண்ணி சிரித்தவனைக் காண்டாகிப் போனவள் வேகமாக எழுந்து நின்றாள்..


"என்னடா மாமனைக் கண்டதும் மரியாதையா.. அதுயெல்லாம் மனசில் இருந்தா போதா", என்று மீண்டும் கடுப்பேத்திப் பேசியவனைக் கூர்ந்து பார்த்தவளை,


"என்னடி மாமனைச் சைட் அடிக்கீறியா", என்று கேட்டு ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கிக் கண்ணைச் சிமிட்டி மேலும் அவளின் கோபத்தைக் கிளறிவிட..


"டேய்", என்று அழைத்தப்படி அவன் கழுத்தை நோக்கி தன் கைகளை கொண்டுச் சென்றாள் அவனுடைய யட்சணி..,


"ஏய், யட்சணி, மாமன் பாவம்டீ விட்ரு", என்று பயந்தவன் போல சொல்லியவனின் அருகிலே வேகமாக அமர்ந்தவளுக்கு, கோபத்தில் மூச்சு வாங்குவதைக் கண்டு …,


''விடுடா மயிலு.. நீயேன் இந்தளவுக்கு டென்ஷன் ஆகுற, நான் ஏன் சொன்னேன் …என்று உனக்குத் தெரியாதா?'', அவளின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பேசினான் சக்திவேந்தன்..


"யட்சணி ,இங்கே பாரு'' என்று அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன் ''இப்பதான் நீ அரசியலில் முக்கியமான இடத்திற்கு வந்திருக்க, அந்த நேரத்தில் கல்யாணம் காட்சி வாழ்க்கை பந்தத்தில் நுழைந்தால் இரண்டையும் உன்னால் மேனேஜ் பண்ணக் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்துத் தான் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்", என்று சொல்லியவனின் பாதி உண்மை பாதி பொய்யும் கலந்து இருப்பதைக் கண்டு அவனைப் பார்த்தவள்,


"உன்னால் மாமாவின் இறப்பிலிருந்து இன்னும் மீள முடியல தானே அத்தான்.. அதுக்காகத் தானே என்னை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் சுற்றி வளைச்சுப் பேசுகிற", என்று சொல்லியவளின் அழுத்தமான பார்வையைக் கண்டவனோ,


அவள் முக வடிவை மெதுவாக வருடியபடி தன் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் ரகசியங்களை இவளால் மட்டுமே தோன்றி எடுக்க முடியும் போல என்று எண்ணியவனுக்கு அவள் கேட்ட கேள்விக்கானப் பதிலை அவன் சொல்லவில்லை …


அவன் பேசாமல் இருப்பதைக் கண்டு தன் முகத்தை வருடிய அவன் விரல்களைப் பற்றியவள், ''பழசு எதுவும் இனி பேசல, ஆனால் உன்னளவுக்கு நான் உன் மேலே அன்பா இல்லையா என்று தோன்றுகிறது அத்தான்.. இத்தனை வருசமா தனியா இருக்கே தெரிந்தாலும் உன் மனசு தனிமையில் எவ்வளவு தவிச்சிருக்கும் என்று நினைக்கும் போது, நான் எவ்வளவு சுயநலமாக இருந்து இருக்கிறேன் என்று எனக்குக் குற்றயுணர்ச்சி தோன்றுது… எனக்காக நீ ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்க, ஆனால் நான்'', என்றவளின் தன்னையே வருத்திக் கொள்கிறவளை உற்று நோக்கிய சக்தி வேந்தன்,


''என்னை விட உனக்குத் தான்டீ என் மேலே அன்பு பாசம் காதல் அதைவிட எல்லாமே… நான் தான் உனக்கு இருக்கிற நம்பிக்கை .. அதை கடைசிவரை நான் காப்பாற்றுவேனா என்று என் மேலேயே தான் எனக்கு நம்பிக்கை இல்லடீ'', என்றவன், "உங்க அத்த சொல்லகிற மாதிரி அடுத்த வாரமே கல்யாணம் பண்ணிக்கலாம் சரிதானே",… என்று சொல்லியவனின் வார்த்தைகளிலிருக்கும் வலியை உணர்ந்தவள் இவனுடைய வலியை எப்படி போக்கப் போகிறேன் என்ற மலைப்பு அதிகமாக உண்டானது..


தன்னை விட என்னை மட்டுமே நினைச்சு அவன் உலகம் சுழன்று கொண்டிருப்பதும், கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திலும் அவன் உள்ளம் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு இவனின் வலிகளைத் தாங்க கூடிய சக்தியை எனக்குக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொண்டவள், அவனின் கரங்களில் கரத்தை சேர்த்துக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள் தாட்சாயணி …,


சக்திவேந்தனோ, அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு ''நடந்தை மாற்ற முடியாது யட்சணி, ஆனால் இனி வரும் காலங்களில் நம் வாழ்க்கையை எவ்விதம் அமைச்சுக் கொள்வது நம் கையில் தானே இருக்கு'',.... என்று சொல்லிவிட்டு அவள் மடியில் தஞ்சமடைந்தான் சக்தி ..


தன் மடியில் படுத்திருந்தவனின் தலையை தோள்களை முகத்தை என்று வருடிக் கொடுக்க.. அந்த இதத்திலே அவனும் சற்று நேரம் கண்ணயர்ந்தான் சக்திவேந்தன்.


மறுநாள் தாட்சாயணி கிளம்பிக் கீழே இறங்கி வரும்போதே அவளுடைய அப்பாவும் அம்மாவும் மும்மரமாக எதையோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள்,


அவர்களை நெருங்கியதும்..'' வாம்மா கண்ணு'',.. என்று மகளை மகேஷ்வரன் அழைத்து, தன்னருகில் அமர வைத்து அவளின் கல்யாணத்தைப் பற்றிப் பேசவும்…,


அவளோ ''எதுவாகிலும் அத்தான் சொல்வதைக் கேட்டு செய்யுங்கபா'', என்று சொல்லிவிட்டாள்..


உமாதேவிடம் திரும்பிய மகேஷ்வரன் ''பார்த்தியாடீ என் மகளை இப்பவே மாப்பிள்ளையை கேட்டு செய்யுணுமா'',.. என்று சொல்லிச் சிரிக்க..


உமாவோ, ''இவளை விட உங்க மாப்பிள்ளையோ இதை நேற்றே சொல்லிவிட்டாப்படி.. எல்லாமே உங்க அருமை பெருமை மகளைக் கேட்டு தான் செய்யுனுமா.. அவளுக்கு இக்கல்யாணத்தில் எந்தக் குறையும் வந்திரக்கூடாதாம்… ம்ஹூம்.. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குத் தான் அந்தக் கொடுப்பினை இல்லை .. என் மகளுக்காகவது கிடைச்சிருக்கே'', என்று தாயும் தந்தையும் ஒருவர்க்கு ஒருவர் வார்த்தையால் வாரிக் கொள்வதைப் பார்த்துச் சிரித்த தாட்சாயணி…


''ம்..மா ..எல்லாரையும் சகட்டுமேனிக்குக் கலாய்க்க உங்களை தவிர யாராலும் முடியாது'', என்றவள், அப்பா நான் வெளியே போகிறேன் என்று சொல்லிய மகளைப் பார்த்த மகேஷ்வரன், ''நீ கிளம்புடா, நான் அப்பறம் வருகிறேன் .. இன்று சக்திக்கு முக்கியமான ஆபீஸில் வேலை இருக்காம் அதனாலே மாலை தான் வருகிறேன் என்று சொல்லச் சொன்னான் உன்னிடம்'', என்று சொல்லியவருக்குத் தலையை மட்டும் ஆட்டியவள் தாயிடம் ஒரு தலையசைப்போடு கட்சி அலுவலகத்திற்குச் சென்றாள் தாட்சாயணி…


அங்கே போனதும் மயில்வாகனமும் இன்னும் பலர் காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்க..


அவர்கள் அருகில் போனவள், எல்லாருக்கும் ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு, அங்கே அமர்ந்தபடியே அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்..


அதில் மக்களுக்கான நிதியுதவியை விட அவர்களுக்கான பர்சன்டேஜ் வருவதைப் பற்றிய பேச்சே அதிகமாக இருப்பதைக் கண்டு அசூயை அடைந்தவள், இதையே தான் இத்தனை காலம் செய்தார்கள் போல..


எல்லாரும் அனுபவசாலிகளாக இருக்கிறார்கள் நினைத்தால் அவரவர் பெயரும் சொத்தின் மதிப்பை அதிகரிப்பைப் பற்றி பேச்சுமா இருக்க, அதற்கு மேலே தான் பேசாமல் இருக்க முடியாமல் பேச எழும் போது அங்கே சக்திவேந்தன் மிக வேகமாக அவளருகே வந்து, அவளின் செவியின் அருகே கிசுகிசுத்தான்..


''முதலில் அவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்துவிட்டு அதன் பிறகு பேசு'', என்று சொல்ல.... அதன்பின் அமைதியானவள், சிறிது நேரம் மற்றவர்களைக் கூர்மையான பார்வையோடு நோட்டமிட்டுவிட்டு, ''இனி நான் பேசலாமா'', என்ற கேள்வியை அவர்களின் முன்னிலையில் வைக்க,


சக்தியோ அங்கிருந்த மற்றொரு பக்கம் உள்ளே இருக்கையில் அமர்ந்தபடி அவளைக் கவனித்தான்.. காலையில் அவளைப் பார்க்காமல் வெளியே வேலையாகச் சென்றிருந்தவன் வேலை விரைவில் முடியவும் தன்னவளைக் காண அங்கே வரும்போது அவள் பேச எந்திருக்கும் வேகத்தைக் கண்டு அவளிடம் விரைந்து சொல்ல வந்ததை சொல்லி முடித்தான் ..


அந்த நேரம் மகேஷ்வரனும் வந்துவிட, அங்கே பெரிய பேச்சு வார்த்தைகள் நடைப் பெற்றது .. அதில் தாட்சாயணி பேச்சிற்குப் பலர் எதிர்ப்பை தெரிவிக்க அவளோ விடாமல் தன் கூற்றை முன் நிறுத்தினாள் தாட்சாயணி தேவி ..


''எப்பவும் கட்சியின் முன்னேற்றம் பற்றி பேசாமல் நம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாமே.. அப்ப ஆட்டோமேட்டிக்கா மக்களுக்கு நம் மேலே நம்பிக்கையை வரும் .. அதைவிட்டு தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாக இருக்காமல் இப்போதைக்குத் தேவையானதை நாமே முன்னிருந்து செய்தால் அவர்களே அடுத்த முறை அதிகமாக ஓட்டும் போடுவார்கள்'', என்று சொல்லியவளைப் பார்த்த மற்றவர்கள் கேலியும் கிண்டலுமாகப் பார்த்தனர்..


மகேஷ்வரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மயில்வாகனமோ.. அவளின் பதவிக்கு மரியாதை கொடுத்து, ''நீங்கள் சொல்வது மேடை பேச்சுக்குச் சரி தான் மா.. ஆனால் நடப்பை புரிந்து கொள்ளுங்கள் … இங்கே ஒவ்வொருவரும் தான் நின்ற தொகுதியில் ஜெயிக்க பல ஆயிரம் கோடிகளை கொட்டிருக்கிறார்கள்.. அது தான் உண்மையும் கூட.. செலவு பண்ணின பணத்தை சம்பாதிக்கணும் முதலில்'',…. என்று சொல்லியவரை உறுத்து நோக்கிய தாட்சாயணி…


''சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கிறது .. அதுக்கு எதுக்கு நீங்க மக்களுக்குச் சேவை செய்வதாகவும் கட்சியின் பெயரை காப்பாற்ற போறதாகவும் பொய் சொல்லிவிட்டு மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளை அடிக்கவா'',.. என்று நேரடியாக ஆக்ரோஷமாகக் கேட்டவளைக் கண்ட மகேஷ்வரன், சக்தியை நோக்கியவர் 'இவளை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு', என்று விழிகளாலே கட்டளை இட்டார்..


தன் மாமா சொன்னதைக் கவனித்தாலும், தாட்சாயணி கோபத்தில் இருக்கும் நியாயம் நேர்மை எல்லாம் இங்கே உதவாதே.. கட்சிக்குள் நீக்குப் போக்காக நடந்து கொள்ளவில்லை என்றால் ஆளை அடித்து ஒதுக்கி காணாமல் பண்ணி விடுவார்கள் என்று அவள் உணருவாளா.. இதனால் கட்சிக்குள் பிளவு உண்டாகுமே… என்று யோசனையோடு தாட்சாயணி பேசுவதைக் கவனித்தான்.


தன் மாமா கண் ஜாடை காமித்தும் அசையாமல் தன்னவளின் ஆவேசமான பேச்சைக் கேட்டபடி அமர்ந்திருந்தான்..


தாட்சாயணியோ விடாமல் தன் கருத்துக்களைக் கூற அங்கிருந்தவர் அத்தனை பேருக்கும் ஒரு அதிருப்தி உண்டானது அவள் மீது…


"இங்கே கடமை கண்ணியம் கட்டுபாடு எல்லாம் கதைக்கு உதவலாம் வாழ்க்கைக்கு உதவாது", என்று எள்ளலோடு மயில்வாகனம் பதிலளிக்க…


அவரைத் திரும்பிப் பார்த்தவளோ, "எங்கே இருந்தாலும் நாம் செயவதிலும் பேசுவதிலும் நேர்மையும் உண்மையும் இருந்தாலே போதும்",.. என்று அழுத்தமாக உரைத்தாள் தாட்சாயணி தேவி …


மகேஷ்வரன் இதற்கு மேலே தன் மகள் பேசினால் மீண்டும் ஒரு சலசலப்பு கட்சிக்குள் உண்டாகும்.. என்று நினைத்தவர், "இதைப் பற்றிய விவாதத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம்.. இப்ப முக்கியமான மகிழ்ச்சியான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளணும்.. ஏன்னென்றால் நாம் எல்லாரும் ஒரே குடும்பம்.. நம்முடைய பொது செயலாளர்க்கு அடுத்தவாரம் கல்யாணம் கோவிலில் வைத்து செய்து விடலாம் முடிவு பண்ணிருக்கோம்.. ஆடம்பரமாக எதுவும் இல்லாமல் சிம்பிளாகச் செய்ய வேண்டும் என்பது தான் பொண்ணு மாப்பிள்ளைக்கு விருப்பம்.. உங்களுக்கு மாப்பிள்ளை யாரு தெரியும் தானே.. என் அக்கா மகன் சக்திவேந்தன் தான்'', என்று அவனை அருகில் அழைத்தவர் தன் மகளின் அருகே நிற்க வைத்தார் மகேஷ்வரன் சக்ரவர்த்தி ..


அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென்று அந்தச் சூழ்நிலை மாறவும், தான் சொல்ல வந்ததைத் தடுக்கத் தான் அப்பா இவ்விதம் நடந்து கொள்ளுகிறார் என்பதை ஜீரணிக்க முடியாமல் தன்னருகே நின்றவனின் கரங்களை அழுத்தினாள்..


அவளின் அழுத்தத்தில் அவள் மனத்தை உணர்ந்தவனோ, அந்நொடியை தனக்கானதாக மாற்றியவன், ''எல்லாரும் இதை ஒரு அழைப்பாக ஏற்று கல்யாணத்திற்கு வந்து விடுங்கள்'',.. என்று சொல்லிவிட்டு தன்னவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் சக்திவேந்தன்.


தாட்சாயணியோடு வெளியே வந்தவன் மனமோ தன்னை மீறி அவளைக் கண்டு ஒரு அச்சம் உருவானது .. உண்மைக்குப் புறம்பாக எது நடந்தாலும் இவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே ஒரு நாள் ஒதுக்கி விடுவாளோ என்று எண்ணமோ பேரலையாக உள்ளத்தை ஆர்ப்பரிக்க காரை எடுத்தவன் வீட்டை நோக்கிச் சென்றான் ..


கட்சி ஆபீஸில் பேசியதை பாதியிலே தடைப் பண்ணி அப்பாவும் சக்தியும் நடந்து கொண்டதை கண்டு காண்டாகி அமர்ந்திருவளோ நிதானத்தை இழந்து எங்கே தன்னவனைக் காயப்படுத்தி விடுவமோ என்ற தோன்றவும் அங்கே மௌனத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டாள் தாட்சாயணி தேவி ..


தொடரும் ..

ஹாய் மக்கா, மன்னிச்சுக்கோங்க.. எபி போட ரொம்ப லேட் பண்ணி விட்டேன்.. இனி தினமும் மாலை ஆறு மணிக்கு போட்டு விட முயற்சி பண்ணுகிறான.. கதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் .. 😍 😍 😍 😍
IMG-20230202-WA0018.jpg




















































.
 
Top