• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை- 07

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
தாமரை - 07

சொன்னது போலவே அடுத்தநாள் தாமரையை அழைத்துப்போக காலையிலேயே வந்திருந்தான் ஷ்யாம்.

“வாங்க தம்பி.. டீ எடுத்துட்டு வரவா.?” என்ற ராணியிடம்.

“அதெல்லாம் வேண்டாம் க்கா, அம்மு கிளம்பிட்டா கூட்டிட்டு வாங்க, எனக்கு டைம் ஆகுது” என ஷ்யாம் அவசரப்படுத்தினான்.

“பாப்பா எழுந்துக்கவே நேரம் ஆயிடுச்சு தம்பி, இப்பதான் குளிச்சிட்டு வந்தது, இருங்க ரெடி ஆயிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்” என்ற கோதையிடம்

“என்னாச்சு க்கா? ஏன் இவ்வளவு நேரம், நைட் தூங்கலையா? அம்மு மாத்திரை போடலையா? மார்னிங் சிக்னஸ் வேற இருக்குமே..” என எழுந்தவன் அவள் அறையை நோக்கி நடக்க ஆரம்பிக்க,

“தம்பி.. தம்பி.. இருங்க நீங்க போகாதீங்க. நான் பாத்துட்டு வரேன். நீங்க மேல போனா அதுக்கும், ஏதாச்சும் சொல்லுவாங்க..” என்றார் ராணி பதட்டத்துடன்.

“அக்கா ஒரு கர்ப்பமான பொண்ண, கொஞ்சமும் நாகரீகமே இல்லாம அடாவடி பண்ணி, இங்கவரை கூட்டிட்டு வந்துட்டு, இப்படி அம்போன்னு விட்டுட்டு போனா என்ன நியாயம். அவளைப் பார்த்துக்கணும்னு அக்கறையே இல்லையா? அவன்தான் பொறுப்பில்லாம விட்டுட்டு போயிட்டான்னா இந்த வீட்ல இருக்கிற பெரிய மனுஷங்க என்ன ஆனாங்க..” என ஷ்யாம் கோபமாக கத்த,

அந்த சத்தத்தில் நாயகியும் பிரீத்தாவும் வேகமாக ஹாலிற்கு வர, இருவரையும் முறைத்துப் பார்த்தான் ஷியாம்.

பதிலுக்கு அவனை முறைத்த நாயகி “என்ன ராணி? இது வீடா இல்ல சத்திரமா? ஹால்ல ஏன் இவ்வளவு சத்தம்?” என ஒன்றுமே நடக்காதது போல கேட்க, ஷ்யாமிற்கு கடுப்பாகிவிட்டது.

அந்தக் கடுப்பில் ப்ரீத்தாவை பார்த்தவன் “வயிற்றில் குழந்தையோட இருக்குறவளையே உன்னால பாத்துக்க முடியல, இதுல அவ பெத்து கொடுத்த குழந்தையை வேற நீ பார்க்க போறியா..?” என முகத்தில் அடித்தார் போல பேச, பிரீத்தாவின் விழிகள் சட்டென்று கலங்கிவிட்டது.

“ஏய் எங்க வந்து யார பேசுற? என் பொண்ண பேசுறதுக்கு நீ யாரு? குழந்தையைத்தான் பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்கு, இவளை இல்ல. அதுவும் இளாவுக்காக மட்டும்தான், இவளுக்காக இல்ல. நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இவளைப் பார்த்துக்கனும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா? அதுவும் குழந்தை நல்லபடியா பிறந்து வந்தால்தான் நிஜம். பிறக்காத குழந்தைக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றீங்க..” என நாக்கில் விஷத்தை தடவி பேசிய நாயகியின் பேச்சில் ஷியாம் தன் கட்டுப்பாட்டை இழந்தான்.

“என்ன பேசுறீங்க நீங்க?” என நாயகியிடம் கத்த, ராணிக்கும் கூட அந்த பேச்சில் கோபம் வந்துவிட்டது. என்ன இது வயிற்றில் பிள்ளை இருக்கும் போது கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் பேசுவது என ஏகத்திற்கும் கோபம் வந்துவிட்டது.

இந்த சத்தத்தை கேட்டு வெளியில் வந்த வசந்தி, ஷ்யாமை பார்த்து புன்னகைக்க, அதைக் கண்டுகொள்ளாமல் நேராக அவரிடம் சென்றவன், “பாட்டி இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சி நடக்குதா? இல்லையான்னு எனக்குத் தெரியல. என்ன மன்னிச்சிடுங்க. நான் அம்முவை கூட்டிட்டு போறேன். உங்க பேரன் வந்து அழைச்சிட்டு வரட்டும். அதுவரைக்கும் அவ என் வீட்டில் இருக்கட்டும்..” என ஷியாம் தீர்மானமாக கூற, என்ன நடந்தது என்று தெரியாமல் வசந்தி ராணியை பார்த்தார்.

இருந்த கோபத்தில் ராணி எதையும் மறைக்காமல் நடந்ததை அப்படியே கூறிவிட, நாயகியை முறைத்த வசந்தி, “தப்பா எடுத்துக்காத தம்பி. அவங்க பொண்ணோட வாழ்க்கைய நெனச்சு கவலைல பேசிட்டா. இனி இந்த மாதிரி தவறு நடக்காது. இதை உனக்காக சொல்லல, என் பேரனுக்காக சொல்றேன். இளா என்னை நம்பித்தான் அந்த பொண்ண விட்டுட்டு போயிருக்கான். அவன் வர வரைக்கும் அந்த பொண்ணு என்னோட பொறுப்பு. நான் இனி பத்திரமா பார்த்துக்கிறேன். இப்போ ஹாஸ்பிடல் கிளம்புங்க..” என வசந்தி மிகவும் தன்மையாகவே பேச, ஷியாமும் அமைதியாகி விட்டான்.

“ராணி, போ போய் அந்த பொண்ண கூப்பிட்டு வா, ஹாஸ்பிடல் கிளம்பட்டும். மறக்காம சாப்பிட வச்சு அனுப்பு.” என ராணியிடம் கூற,

“பாப்பா நைட்டெல்லாம் தூங்கவே இல்லம்மா, மாத்திரை போட்டும் கூட தூங்கல. காலையில் எழுந்ததில் இருந்தே வாந்தி. ரொம்பவும் சிரமப்படுது. இந்த மாதிரி நேரத்துல அவங்க அம்மாகூட இருக்கறதுதான் நல்லது. பெரியவங்க உங்களுக்கு தெரியாதது இல்ல. நீங்க இளா தம்பிகிட்ட பேசி பாருங்கம்மா, பாப்பாவை இப்படியே வச்சிருந்தா பாப்பாவுக்கும் சரி குழந்தைக்கும் சரி உடம்பு மனசு ரெண்டும் கெட்டுப்போகும்..” என தயங்கி தயங்கியே என்றாலும் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி விட்டார்.

வயதில் பெரியவர், வீட்டில் மூத்தவர். அவருக்கும் இதெல்லாம் தெரியாமல் இல்லை.. ஆனால் முரண்டு பிடித்து திரியும் பேரனிடம் இதை எப்படி விளக்குவது என்றுதான் அவருக்கு தெரியவில்லை.

“சரி ராணி கொஞ்ச நாள் போகட்டும், இளங்கோகிட்ட பேசுறேன். அவனுக்கும் நாம டைம் கொடுக்கணும். இன்னைக்குதான் ஜெர்மனி போய் சேந்திருப்பான். அங்க இருக்கிற வேலையெல்லாம் முடிச்சு கொஞ்சம் ரிலாக்ஸாகி அவனே கால் பண்ணட்டும் நான் பேசுறேன்.” என்று சமாதானமாக பேச, ராணிக்கும் சரி ஷியாமிற்கும் சரி அதில் நம்பிக்கையே இல்லை.

ஆனால் பெரியவரின் பேச்சை தட்ட வேண்டாம் என்பதால் அமைதியாகிவிட்டனர்.

“அக்கா அம்மு கிளம்பிட்டாளான்னு பாருங்க. எனக்கு பேஷன்ட் வெயிட் பண்றாங்க..” என்றவன், தன் போனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.

அவன் தலை மறையும் வரை அமைதியாக இருந்த வசந்தி “என்ன நாயகி? உனக்கு அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம பிரச்சனை பண்ணா என்ன அர்த்தம். உன் பொண்ணு வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு எனக்கும் முக்கியம். கொஞ்சம் பொறுமையா இரு. நீ பேசுறது இளங்கோவுக்கு தெரிஞ்சா, அவன் என்ன முடிவு எடுப்பான்னு எனக்கு தெரியாது.. அவன்தான் உனக்கு மாப்பிள்ளையா வேணும்னு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் அமைதியா இரு நாயகி.”

“ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல இருந்தாலாவது நீ பயப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு. அவன் ஒரு பக்கம் அந்த பொண்ணு ஒரு பக்கம் இருக்கும்போது எதுக்கு நீ இவ்வளவு பயப்படுற. அதோட அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிற மாப்பிள்ளைதான் இந்த டாக்டர் பையன். அவன் இருக்கும் போது நீ இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததை பேசாதே, உனக்கு காரியம் ஆகணும்னா, நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமாதான் இருக்கணும்.”

“சொல்றத சொல்லிட்டேன் இதுக்குபிறகு உன்னோட விருப்பம். இனியும் நீ அந்த பொண்ண டார்ச்சர் பண்ணா, உன் பொண்ணோட வாழ்க்கையை நீ மறந்திடு..” என நாயகியை எச்சரித்துவிட்டு, அழுதபடியே நின்றிருந்த பிரீத்தாவை ஒரு பார்வை பார்த்து சென்றார்.

“ச்சே இந்த இளாவை நம்பி ஊருக்கு போயிருக்கவே கூடாது. இப்படி கடைசி நிமிசத்துல எல்லாம் மாறிடுச்சே..” என எரிச்சலாக கத்தியவர், “இன்னும் ஏண்டி இங்க நின்னுட்டு இருக்க, போ போய் வேலை இருந்தா பாரு..?” என மகளிடம் கத்த, ப்ரீத்தாவின் மனமோ குழம்பிய குட்டையாகிப்போனது.

“பாப்பா.. நானும் கூட வரட்டுமா? தம்பிதான் உன்கூட போக சொல்லிருக்கே..?” என பலமுறை கேட்டுவிட்டார் ராணி.

அவரின் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்த தாமரை “ராணிம்மா உங்களுக்கு இங்கேயே வேலை அதிகம். இதுல தேவையில்லாம எதுக்கு அலைச்சல். அதுதான் என்கூட ஷ்யாம் இருக்கானே. அவன்கூடவே போய்ட்டு அவன்கூடவே வந்துடுவேன். அவன் பார்த்துப்பான். நீங்க கவலைப்படாதீங்க..” என சமாதானம் சொல்லி வெளியே வர, காரை திறந்தபடி காத்திருந்தான் ஷ்யாம்.

அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே அருகில் வந்தவளின் தலையை வருடி, வசதியாக அமர வைத்துவிட்டு காரை எடுத்தவன் தன்னைப்போல் மேலே பார்க்க, பால்கனியில் இருந்து ஏக்கமாய் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா.

ஷ்யாம் இப்படி சட்டென பார்ப்பான் என நினைத்திடாத ப்ரீத்தாவிற்கு அவமானமாக இருந்தது. கார் கேட்டைத் தாண்டி வெளியில் செல்லும் வரைக்குமே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தாவிற்கு பெருமழையாய் ஒரு ஏக்கம் சடசடவென அவள் மனதில் பொழிய ஆரம்பித்தது.

‘ஏன் இளா மாமா எங்கிட்ட இவ்வளவு அக்கறையா இல்ல. அவருக்கு நான் முக்கியமா இல்லையா? அவர் என்னை விரும்புறாரா? இல்லை பெரியவர்களின் கட்டாயத்தில் சரியென்றாரா? என யோசித்து யோசித்து மேலும் தன்னை குழப்பிக் கொண்டாள்.

“என்ன செய்யுது அம்மு?” என்ற ஷ்யாமின் பரிவான கேள்விக்கு,

“ம்ச் என்ன சொல்லனும் நான்?” என்றாள் தாமரை.

“இருக்குற கோபத்துக்கு செவுல சேர்ந்து நாலு அப்பு அப்பனும் போல இருக்கு. ஏதோ முடியாம இருக்கியே போனா போகுதுன்னு விடுறேன். யார் எப்படி போனா உனக்கு என்ன? எதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையை இழுத்து வச்சிருக்க.?” என்றான் உச்சக்கட்ட கோபத்தில்.

ஷ்யாமின் கோபத்தில் கப்பென வாய் மூடிக்கொண்டாள் தாமரை.

“என்ன சொல்றான்? எப்போ வரானாம் உன் அத்தான்..?” என்றான் கடுப்பில். அப்போதும் தாமரை அமைதியாக வர,

“ம்ச் வாயைத் திறந்து பேசித்தொல அம்மு.. அந்த பொம்பளைக்கிட்ட எல்லாம் நீ பேச்சு வாங்கனும்னு தலையெழுத்தா என்ன?” என விடாமல் கோபமாகவே ஷ்யாம் பேச,

“அத்தானைப்பத்தி கேட்டா நான் பதில் சொல்லமாட்டேன்னு உனக்கேத் தெரியும். திரும்ப திரும்ப ஏன் அதையே கேட்குற. நீ அவரைப் பேசுறது என்னை பேசுற மாதிரி. ப்ளீஸ் இந்த பேச்சைவிடு. எனக்கே சலிப்பா இருக்கு..” என குரலிலும் சலிப்பைக் காட்டி தாமரை பேச,

தன் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “சரிவிடு இனி நான் பேசல, ஆனா நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். முடியாதுன்னு மட்டும் சொல்லாத காண்டாகிடுவேன்..” என எரிச்சல் குரலில் பேச,

“ம்ம்ம் இது இல்லாம வேற என்ன கேட்டாலும் பண்றேன். என்ன செய்யனும்..” என்றவளிடம்

“அத்தை சொன்னாங்க. உன்னை மறுபடியும் ஆஃபிஸ்க்கு வர சொல்றாங்களாமே.. நீ ஏன் போகக்கூடாது. இந்த மைண்ட்செட்லயே நீ இருக்கக்கூடாது. உனக்கு கண்டிப்பா ஒரு சேஞ்ச் வேணும். ஆஃபிஸ் அட்மோஸ்பியர் உன்னையும் உன் மூடையும் மாத்தும்னு எனக்கு தோணுது. இப்படியே அந்த வீட்டுல இருந்தா உனக்கு பைத்தியம்தான் பிடிக்கும்..” என்றான் ஷ்யாம்.

தாமரைக்குமே இரவெல்லாம் இதே யோசனைதான். போகலாம் என்ற எண்ணம்தான். ஆனால் இளங்கோவிற்குத் தெரிந்தால் என்ன சொல்வானோ என்று யோசனையாக இருந்தது.

தாமரையின் யோசனையான முகத்தைப் பார்த்து காரை ஓரமாக நிறுத்தியவன் “என்ன அம்மு?” என்றான் பரிவாக.

“எனக்கே என்னை பிடிக்கல ஷ்யாமா. என்னாலயே என்னை மன்னிக்க முடியலையே.. அப்பா அப்பா எப்படி என்னை மன்னிப்பார். அவர் முகத்துல முழிக்கவே அசிங்கமா இருக்கு ஷ்யாம். அவர் பொண்ணா இருந்துட்டு எப்படி ஒரு தப்பை செஞ்சிட்டு வந்துருக்கேன். எனக்கே என்னைப் பிடிக்கல.. இந்த வாழ்க்கையே பிடிக்கல..” என முகத்தை மூடி அழுதவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ஷ்யாம்.

“ம்ச்சு ஒன்னுமில்லடி தங்கம். மாமா அப்படியெல்லாம் யோசிக்கக்கூட மாட்டாங்க. அழாதேடி தங்கபுள்ள.. ப்ளீஸ் அம்மு.. இப்படி நீ எல்லாத்துக்கும் அழறது உனக்கும் பேபிஸ்க்கும் நல்லதில்ல..” என்றான் பொறுமையாகவே.

ஒருவழியாக அவளை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு வந்துவிட, அங்கு இவர்களுக்காக காத்திருந்தவர்களைப் பார்த்து, மீண்டும் அழுகை பொங்கியது தாமரைக்கு.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
134
43
Dindugal
ஏதோ ஒரு குழப்பத்துல இருக்கா தாமரை
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 7)


இந்த ஷ்யாம் யாருன்னு சொல்லவேயில்லையே..?
இத்தனை அக்கறையானவனை விட்டு குரங்காட்டம் அந்த இளங்கோவை போய் ஏன் பிடிச்சா இந்த அம்மு....? அதான் அவளை பூமாலையா நினைச்சு
பிச்சு, பிச்சு எறிஞ்சிட்டான் தானே...?


ஒரு படிச்ச, கம்பெனியில பொறுப்பா வேலை செஞ்ச பொண்ணு, அதுவும் தன்னோட சொந்த தகப்பனோட கம்பெனியிலேயே வேலை செஞ்ச புத்திசாலியான பொண்ணு இந்த இளங்கோ விஷயத்துல மட்டும் எப்படி கிணத்து தவளையா இருந்தான்னு தெரியலையே..?
கொஞ்சம் ப்ளாஷ் பேக்குக்கு வாறிங்களா...? இல்லைன்னா, அந்த இளங்கோவோட சேர்த்து இந்த தாமரையையும் கண்ட மேனிக்கா திட்ட வேண்டியிருக்கும் வொல்லிப்பூட்டேன்.


😀😀😀
CRVS (or) CRVS 2797