தாமரை - 14
ராணியின் அலறலில் நாயகியைத் தள்ளிவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினான் ஷ்யாம்.
தன் உடலே பாரமானது போல, தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்திருந்தாள் தாமரை.
கண்னை மூடியிருந்தாலும் விழிகளில் நீர் வழிந்து கொண்டேதான் இருந்தது.
‘ஏன் இந்த வேதனை? ஏன் இந்த வாழ்க்கை?’ இந்த கேள்விகள் மட்டுமே அவள் மூளையை குடைந்து கொண்டே இருந்தது.
“அம்மு என்னாச்சுடா.? இங்க பாரு என்ன செய்யுது உனக்கு..?” என பரிதவிப்பாக கேட்க, பதில் சொல்லும் நிலையில் தாமரை இல்லை.
“எனக்கு அங்க போக வேண்டாம்.. போகவே வேண்டாம். நான் அங்க போக மாட்டேன்..” என வாய்க்குள் முனக, அது ராணிக்கும் ஷ்யாமிற்கும் நன்றாகவே கேட்டது.
“இனி உன்னை அங்க அனுப்பி எந்த முட்டாள்தனமும் செய்யமாட்டேன் அம்மு. யார் என்ன சொன்னாலும் உன்னை அங்க அனுப்பமாட்டேன் புரியுதா? அவங்களுக்கு தேவை குழந்தை தான. குழந்தை பிறந்ததும் கொடுத்துடலாம்..” என கோபமாக பேசியவன், அவளை கைத்தாங்கலாக தூக்கி நிற்க வைக்க, ராணி தாமரையின் முகத்தைக் கழுவி துடைத்துவிட, அழுங்காமல் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் விட்டான்.
அப்போதும் நாயகி தாமரையை முறைத்தபடியே நிற்க, அதைக்கண்டு ஷ்யாமின் ரத்தம் கொதித்தது. அவரைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தாலும், அவரைத் தொடுவது கூட பாவம் என்பது போல் முகத்தைச் சுருக்கியவன், தனக்கு நேராக பரிதாபமாக நின்றிருந்த ப்ரீத்தாவைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தான்.
அதில் ப்ரீத்தாவின் மனம் சுக்கு நூறாக உடைந்துவிட, விழிகள் கலங்கத் தொடங்கியது.
அதைப் பார்த்தும் பாராதது போல, “மிஸ் ப்ரீத்தா உங்க வீட்டு ஆளுங்களை அழைச்சிட்டு கிளம்புங்க. இனி அம்மு அங்க வரமாட்டா. அப்படி வரனும்னா உங்க மாமா வந்து கூப்பிடட்டும். இப்போ கிளம்புங்க ப்ளீஸ்..” என அடக்கப்பட்ட எரிச்சலில் கூற, முகத்தில் அறை விழுந்தது போல துடித்துப் போனாள் பெண்.
இதுவரை ஷ்யாமிடமிருந்து இப்படியொரு குரலில் பேச்சு வாங்கியதில்லை. இதற்கு முன்னும் அவன் முகத்தில் அறைந்தாற்போல பேசியிருக்கிறான்தான். அப்போதெல்லாம் அந்த பேச்சு தனக்கு நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறது. ஆனால் இப்போது அவள் மீதும், அவள் குடும்பத்தின் மீதும் இருந்த வெறுப்பை உணர்த்துகிறது.
தாயிடம் அடிவாங்கிய குழந்தையைப் போல பாவமாக அவனைப் பார்த்தவள், அவன் பார்வையில் இளக்கம் இல்லாததை உணர்ந்து, யாரையும் கண்டுகொள்ளாமல் வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
தாமரையையும் ஷ்யாமையும் முறைத்தபடியே “ராணி நீயும் கிளம்பு, உனக்கும் இங்க வேலை இல்ல..” என்ற நாயகியை
“நாயகி அதை நீ சொல்லக்கூடாது. என் பேரன் வந்து சொல்லட்டும். இப்போ நீ இடத்தைக் காலிபண்ணு..” என வசந்தி எரிச்சலாக கத்த,
“அவன்தான உங்க வீட்டு ஆளுங்க யாரும் இருக்க வேண்டாம்னு சொன்னான்..” என ஷ்யாமைப் பார்த்தபடியே கூற, நாயகியை ஆத்திரமாக பார்த்தான் ஷ்யாம்.
“அதை நான் பார்த்துக்கிறேன்.. நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு..” என்று கண்டிப்பாக கூற, பல்லைக் கடித்தபடியே வெளியில் சென்றாள் நாயகி.
நாயகி சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்த அந்த அறையில், யார் அடுத்து பேசுவது எனத் தெரியாமல் தடுமாற, வயதில் மூத்தவரான, அனுபவசாலியான வசந்தியே ஆரம்பித்தார்.
“தம்பி உங்க கோபம் நியாயமானதுதான். அதை தப்புன்னு சொல்லமுடியாது. நாயகி பேசினதுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க தாமரையை உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போங்க, இளங்கோ வந்து அழைச்சிட்டு வரட்டும். அதுவரை அந்த பொண்ணு அங்கேயே இருக்கட்டும்..” என்றவர்,
தாமரையின் அருகில் வந்து “நாயகி பேசினதையெல்லாம் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. இந்த மாதிரி நேரத்துல மனசு ரொம்ப அமைதியா இருக்கனும். நீ நினைச்சு பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது.. என்னை நம்பு.. இளங்கொ சீக்கிரம் வந்துடுவான். அவன் வந்தபிறகு மீதியை பேசிக்கலாம்.. சரியா.?” என்று அவளை சமாதானம் செய்தவர்,
ராணியிடம் “நான் கிளம்புறேன் ராணி. நீ தாமரையை பத்திரமா பார்த்துக்கோ. அப்பப்ப எனக்கு போன் போட்டு சொல்லு..” என்றவர், மூவருக்கும் தலையசைத்து கிளம்பிவிட்டார்.
மூவரும் கிளம்பிய பிறகும் கூட ஷ்யாமின் முகத்தில் கோபம் குறைந்ததிற்கான அறிகுறியே இல்லை. தாமரைக்கு அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவளுக்கு பேசமுடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அமைதியாகவே படுத்திருக்க, ராணிதான் “விடுங்க தம்பி.. அதுதான் எல்லாரும் போய்ட்டாங்களே. அவங்க தொல்லை இல்லாம இருந்தாலே பாப்பா சரியாகிடும். நீங்க போய் வேலையை பாருங்க. நான் பாப்பாவை பார்த்துக்குறேன்..” என்றதும், வேறுவழியில்லாமல் தாமரையை பார்த்தபடியே, அவளுக்கு பல பத்திரங்களைக் கூறிவிட்டு கிளம்பினான்.
அவனுக்கும் இன்று ஓபி அதிகமாக இருந்தது. நோயாளிகளும் நீண்ட நேரமாக காத்திருப்பதாக நர்ஸ் வந்து தகவல் சொல்லிக்கொண்டே தான் இருந்தார். அதனாலே உடனே கிளம்பி விட்டான்.
இங்கு வீட்டுக்கு வந்த வசந்தி இளங்கோவிற்கு அழைத்துக்கொண்டே இருந்தார். அழைப்பே போகவில்லை. ‘என்ன ஆச்சோ? அங்கு வேறு எதுவும் பிரச்சினையோ?’ என பதட்டத்துடன் இருந்தவருக்கு, நாயகியின் பேச்சு எதுவும் காதில் விழவில்லை.
நாயகியும் விடாமல் தாமரையையும் அவள் குடும்பத்தையும் பேசிக்கொண்டேதான் இருந்தார். ஒரு கட்டத்தில் சலிப்பான ப்ரீத்தா “ம்மா நீ இப்படியெல்லாம் பேசுறதைப் பார்க்கும் போது எனக்கு இந்த கல்யாணத்துல இருக்குற ஆசை கொஞ்சம் கொஞ்சமா போகுது. அது மொத்தமா போகுறதும், இருக்குறதும் உன் கைலதான் இருக்கு.” என பட்டென சொல்லிவிட, கப்பென வாயை மூடிக்கொண்டார் நாயகி.
மகளை, அவளுக்கு இளங்கோ மீதான ஆசையை வைத்துதானே இப்படியொரு திட்டத்தையே போட்டார். இப்போது அவளுக்கு விருப்பம் இல்லையென்றால் யாருமே கட்டாயப்படுத்த மாட்டார்களே. ஏன் இளங்கோவே ப்ரீத்தாவிற்கு விருப்பம் என்றுதானே சரியென்றான். இப்போது அவள் பின்வாங்கினால் தன் திட்டம் மொத்தமும் தவிடு பொடியாகிவிடும் என்று அவருக்குத் தெரியாதா.?
மகளை முறைத்தபடியே தன்னறைக்குச் செல்ல, கண்ணை மூடி தன் கோபத்தை அடக்கினாள் ப்ரீத்தா.
ஒரு பெருமூச்சுடன் வசந்தியைப் பார்க்க, அவர் முகம் பதட்டத்தில் இருந்தது. அதோடு இங்கு நடந்த எதையும் கவனிக்கவில்லை என்று கண்டுகொண்டாள்.
“என்ன பாட்டிம்மா? ஏன் இவ்ளோ பதட்டம். தாமரைக்கும் ஒன்னும் ஆகாது. அதான் ஷ்யாம் அங்க இருக்காங்களே..” என சமாதானம் செய்ய
“அதில்ல ப்ரீக்குட்டி.. உங்க மாமாவுக்கு போன் பண்ணிட்டே இருக்கேன். போகவே இல்ல. காலையில் பேசும்போதே ஒருமாதிரி வருத்தமா, பயமாதான் பேசினான். இப்போ போனும் போகல. பயமா இருக்கு..” என்றவரின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.
“பாட்டிம்மா.. மாமாவுக்கு ஒன்னும் இருக்காது. ஒருவேளை மாமா இங்க வந்துருக்காங்களோ என்னவோ? இன்னைக்கு பார்ப்போம். அவரே கூப்பிடுவாரா என்னனு? இல்லைன்னா வேற என்ன பன்றதுனு யோசிக்கலாம். எதுக்கும் நான் ஆஃபிஸ்க்கு கால் பண்ணி கேட்கறேன். நீங்க டென்சன் ஆகாதீங்க..” என அவரை ஒருவழியாக சமாளித்து அறைக்குள் அழைத்து வந்தாள்.
அன்றைய நாளின் இரவில்தான் சுமதியும், செல்வம் தம்பதியனரும் வந்து சேர்ந்தனர். வந்ததுமே சுமதி தாமரையை செக்கப் செய்துவிட்டுத்தான் உட்கார்ந்தார்.
செல்வத்திற்கு மகளை அப்படி பார்க்கவே முடியவில்லை. மனைவியின் பேச்சைக் கேட்டு, மகளை அவனுடன் அனுப்பியிருக்கக்கூடாதோ என்று அப்போதும் யோசித்து மருகினார்.
ராணி மற்றும் ஷ்யாமின் கவனிப்பில் தாமரை இப்போது சற்று தெளிவாக இருந்தாள். அதுவே மகேஸ்வரிக்கு போதுமானாதாக இருந்தது.
மகளைப் பற்றி கேட்டதில் இருந்து இப்போது வரைக்கும் செல்வம் மனைவியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ‘அன்னைக்கு உன் பேச்சைக் கேட்டுருக்கக்கூடாது’ என்ற வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
அதுவே மகேஷுக்கு மிக வருத்தமாக இருந்தது. அவர் சொல்வதும் உண்மைதானே. அன்றைக்கு அவர் அமைதியாக இருந்திருந்தால் இன்று தாமரை தங்கள் வீட்டில் நிம்மதியாக இருந்திருப்பாளே என்றுதான் அந்த தாயுள்ளம் நினைத்தது.
வந்ததில் இருந்து தன் கையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்த தந்ததையைப் பார்த்த தாமரைக்கு மீண்டும் மீண்டும் குற்றவுணர்ச்சி கொன்று தின்றது.
“ப்பா ப்பா..” என்றவள், திணறியபடியே “ஸாரிப்பா.. வெரி ஸாரி..” என கண் கலங்க,
“ம்ச் அம்மு… அப்பாவுக்கு உன்மேல கோபமே இல்ல தங்கம். எனக்கு என் பொண்ணைத் தெரியும். நான் உன்னைத் தப்பாவே நினைக்கல. இதெல்லாம் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காத. முதல்ல குழந்தை நல்லபடியா பிறக்கட்டும். அப்புறமா இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கலாம்..” என மகளைத் தேற்ற, சரியென்றபடி தலையை ஆட்டியவள் மகேஸைப் பார்க்க,
அதற்காகவே காத்திருந்ததைப் போல மகளின் அருகில் வந்த மகேஸ்வரி “நீ நம்ம வீட்டுக்கே வந்துடுறீயா அம்மு.. இங்க இருக்க வேண்டாம்..” என பரிதவிப்பாக கேட்க, ‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்ட,
“இல்ல அம்மு, உனக்கு இங்க ரொம்ப கஷ்டமா இருக்கும். நீ அங்க வந்துடு நான் உன்னை பார்த்துக்கிறேன். இங்க வேண்டாம்..” இன்று மகேஸ்வரி கெஞ்ச,
‘முடியாது’ என்பது போல அழுத்தமாக பார்த்தாள் தாமரை.
“ஏன் அம்மு? ஏன் பயப்படுற? இளங்கோ உன்னை தப்பா பேசுவான்னு பயப்படுறியா? அவன்கிட்ட நான் பேசுறேன், நான் பேசுனா அமைதியா இருப்பான்..” என மகேஸ்வரி சொல்லி முடிக்கும் முன், தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தார் செல்வம்.
அவரது கோபத்தை கண்ட மகேஸ்வரி வாயை மூடிக்கொள்ள,
“இன்னொரு தடவை அவனபத்தி நீ பேசுறதை கேட்டா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். இத்தோட அவனை தலை முழுகிடு. என் பொண்ணுக்கு அம்மாவா வர முடிஞ்சா வா. இல்ல இன்னும் உனக்கு அவன் தான் வேணும்னா, அப்படியே போயிடு.” என கோபமாக கத்த, எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விட்டார் மகேஸ்வரி.
கணவரின் இந்த பேச்சிலேயே தெரிந்தது, அவருக்கு இளங்கோவின் மீதான கோபம். இனியும் இளங்கோவை தூக்கிப்பிடித்து பேசினால், கோபத்தில் அடிக்கவே செய்து விடுவார் என்று புரிந்து கொண்டு அடுத்து வாயைத் திறக்கவே இல்லை மகேஸ்வரி.
இப்போது மகளின் உடல்நிலையும், வயிற்றில் இருக்கும் குழந்தையும், அவளது மனநிலையும் மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து கொண்ட பெற்றோர், அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் இறங்கினர்.
மகேஸ்வரி வந்ததுமே தாமரையை அவர்களிடம் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார் ராணி.
அவர் வந்ததுமே மீண்டும் நாயகி ஆரம்பிக்க, பிரீத்தா பார்த்த பார்வையில் அமைதியாகிவிட்டார்.
இங்கு சுமதியும் செல்வத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் ஷ்யாம். அவன் முகம் மிகவும் யோசனையில் இருக்க, சுமதி தான் என்னவென்று விசாரித்தார்.
“வாட் ஹப்பெண்ட் ஷியாம்.?” என மகனிடம் விசாரிக்க,
“நத்திங் மாம். அம்மு இனி நம்ம வீட்டுல தான் இருப்பா. இந்த இளங்கோ, அவனா வந்து கூப்பிட்ட பிறகு தான் அனுப்புவேன். அதுவரைக்கும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது.” என இறுக்கமாக கூற,
செல்வம் “நான் அம்முவை ஊருக்கு கூட்டிட்டு போறேன் ஷியாம், இனி அவன் எது பேசினாலும் ஊர்ல வந்து பேசட்டும்.” என அவரும் இறுக்கமாகவே பேச,
“வேண்டாம் மாமா. அவளுக்கு டிராவல் பண்ண முடியாது. இப்போதைக்கு அம்மு என்கூட இருக்கட்டும், அத்தையை மட்டும் விட்டுட்டு போங்க. நான் பாத்துக்குறேன்..” என்று முடித்துவிட, செல்வம் என்ன செய்வது என்பது போல் சுமதியை பார்த்தார்.
“ஆமா அண்ணா, ஷ்யாம் சொல்றது சரிதான். கொஞ்ச நாள் தாமரை டிராவல் பண்ணாம இருக்கிறதே நல்லது. விடுங்க இங்கேயே இருக்கட்டும். அதுதான் ஷ்யாம் இருக்கானே பாத்துக்குவான்.” என சுமதியும் கூறி விட, செல்வமும் சரியென்று அமைதியாகிவிட்டார்.
இப்படி அனைவரையும் ஒவ்வொரு யோசனையில் வைத்துவிட்டு அன்று இரவு சென்னை வந்திறங்கினான் இளங்கோ.
ராணியிடம் கேட்டு எந்த மருத்துவமனை என்று விசாரித்து நேராக தாமரையைப் பார்க்க சென்றுவிட்டான்.
ராணியிடம் கேட்டதை தன்னிடம் கேட்கவில்லை என்று வசந்திக்கு வருத்தமாக இருக்க, “ம்மா நான் ஆசுபத்திரில இருக்கிறதா நினைச்சுதான் போன் பண்ணிருக்கு.” என விளக்கம் கொடுத்தாலும், அவருக்கு மனது சரியாகவில்லை.
பேரன் தங்களை விட்டு ஒதுங்குகிறானோ என்று தேவையில்லாமல் யோசிக்க ஆரம்பிக்க, அந்த நேரம் சரியாக உள்ளே வந்தாள் ப்ரீத்தா.
பேத்தியின் முகத்தில் தெரிந்த யோசனையில் “என்ன தங்கம்..?” என ஆதரவாக கேட்க,
“பாட்டிம்மா எனக்கு ஒரு உண்மை தெரியனும். அதை உங்ககிட்ட மட்டும் தான் தெரிஞ்சிக்கனும். அம்மாக்கிட்டயோ இல்ல வேற யாருக்கிட்டயோ கேட்டா சரியா சொல்லுவாங்களா தெரியாது.” என ஆரம்பிக்க,
“உனக்கு என்ன தெரியனும்..?” என்றார், அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்து.
“பாட்டிம்மா.. எனக்கு அந்த தாமரையைப் பார்த்தாலோ, அந்த வீட்டு ஆளுங்களைப் பார்த்தாலோ தப்பானவங்க மாதிரி தெரியல. தாமரையையும் தப்பான பொண்ணா பார்க்க முடியல..” என முடிக்கும் முன்னே, வேகமாக வந்த ராணி, ப்ரீத்தாவை நெட்டி முறித்தார்.
அவரின் செய்கையை வித்தியாசமாக பார்த்த ப்ரீத்தாவிடம், “உன்னை சின்ன பொண்ணு, உங்க அம்மா மாதிரிதான் இருப்ப. அவங்க சொல்றதைக் கேட்குற பொம்மைன்னு நினைச்சேன். ஆனா நீ அப்படி இல்ல பாப்பா. இப்படி யோசிக்கிற உன்னோட குணத்துக்கு, நீ ரொம்ப நல்லா இருப்ப..” என கசிந்த விழிகளுடன் கூறியவர், வசந்தியிடம் திரும்பி, “நடந்த எல்லாத்தையும் உங்க பேத்திக்கிட்ட சொல்லுங்க அத்தை. அடுத்து அவ யோசிச்சு நல்ல முடிவா எடுக்கட்டும்..” என அந்த வீட்டிற்கு வந்த இத்தனை வருடங்களில் முதல் முறையாக, வசந்தியை முறை சொல்லி கூப்பிட்டார் ராணி.
இருவரையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தாவிடம், “இவங்க இளங்கோவுக்கு அத்தை. தாமரையோட அம்மா மாதிரி இவங்களும் உங்க பெரிய மாமாவுக்கு தங்கச்சி..” என அறிமுகப்படுத்த, அதிர்ச்சியில் ப்ரீத்தாவின் விழிகள் விரிந்து கொண்டது.