• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 47

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - 47

“ப்ரீத்தா.. ரிலாக்ஸ்.. இங்க பார்.. ஒன்னும் இல்ல. நான் உங்கூடத்தான் இருக்கேன். நீ எங்கிட்ட வந்துட்ட.. அழுகையை நிறுத்தி என்ன நடந்ததுனு பொறுமையா சொல்லு..” என்றான் ப்ரீத்தாவின் முதுகை வருடி சமாதானமாக.

“ஹான் ஷ்யாம்.. செழியன் வந்து.. நாங்க ஊருக்கு போயிருக்கும் போது… ஹான் ஷ்யாம். தாமரையோட போன்.. அது அங்க வீட்டுல இருக்கு.. யாரும்.. யாரும் பார்த்துடுவாங்க. நாம போய் முதல்ல அதை எடுக்கனும். யாரும் எடுக்குறதுக்குல்ல போகனும்..” என இப்போதுமே கோர்வையாக சொல்லவில்லை.

“ப்ரீத்தா.. நீ சொல்றது எனக்கு ஒன்னுமே புரியல.. அது என்ன? உன் போன் கொடு. அப்படி என்ன வீடியோ.. அதைப்பார்த்தா தான் என்ன பிரச்சினைன்னு நான் தெரிஞ்சிக்கிறேன்..” என அவளிடமிருந்து வேகமாக போனை எடுக்க, அதைவிட வேகமாக அவனிடமிருந்து போனை பறித்தாள் ப்ரீத்தா.

“அது.. அதுல இருக்கிறது இளங்கோ மாமாவும், தாமரையும்..” என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் ப்ரீத்தா..

“ஹேய் என்னடி சொல்ற? தெளிவா சொல்லித் தொலை. என்னதான் நடக்குது இங்க..? அம்முவோட வீடியோ எப்படி..? இது யார்? எப்படி?” என காட்டுக்கத்தலாக கத்தினான் ஷ்யாம்.

அவனுக்கும் பொறுமை பறந்திருந்தது.

ஷ்யாமின் திடீர் கத்தலில் அரண்ட ப்ரீத்தா ஒரு வழியாக தான் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டு, அவனைக் கட்டிக்கொண்டு அழ, அவள் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போய் நின்றான் ஷ்யாம்.

“ஷ்யாம்.. நாம தாமரையோட போனை எடுக்கனும். வீட்டுல வேற யாரும் எடுத்துட்டா கஷ்டம்..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே இளங்கோவிடமிருந்து போன் வந்தது.

“ப்ரீத்தா உங்கிட்ட தானே இருக்கா.?” என்றான் இறுகிய குரலில்.

“ஹான் இளா. இங்கதான்.. அது அது வந்து இளா..” என ஷ்யாம் சொல்லவே திணறினான்.

“தாராவோட போன் எங்கிட்டதான் இருக்கு..” என்று முடிக்க,

“இளா.. அவனை அந்த பொறுக்கியை சும்மா விடக்கூடாது.. ப்ரீத்தாவுக்கு விடியோவை அனுப்பி மிரட்டிருக்கான்..” என ஆத்திரத்தில் ஷ்யாம் கத்த,

“நீ அவக்கிட்ட போனை கொடு..”

“இளா.. அவ பயத்துல இருக்கா.?”

“போனை கொடு ஷ்யாம்..” என்றான் கர்ஜனையாக. அதில் போனை ப்ரீத்தாவிடம் கொடுக்க,

“மாமா..” என கதறியவள் தேம்பியபடியே அனைத்தையும் சொல்லி முடிக்க, “பாவம் மாமா தாமரை.. அந்த போட்டோஸ் பார்த்து அந்த டென்சன்லதான் அவங்களுக்கு முடியாம போயிருக்கு. அன்னைக்கு.. அன்னைக்கு நம்மள சேவ் பண்ணத்தான் வந்துருக்காங்க.. அது தெரியாம..? மாமா எனக்கு.. என்னால தாங்கிக்கவே முடில மாமா..” என கதறிக் கொண்டே கூற, இளங்கோவிற்கும் உடல் விரைத்துப் போனது.

“சரி இது நம்ம மூனு பேரைத் தாண்டி எங்கேயும் போயிடக்கூடாது. நான் இதை பார்த்துக்கிறேன்.. ஷ்யாம்கிட்ட கொடு..” என்றவன்,

போனை வாங்கிய ஷ்யாம் “இளா.. நாம லேட் பண்ண வேண்டாம். உடனே சைபர்க்ரைம்ல கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணலாம். உனக்கு தெரிஞ்சவங்க மூலமா SP ஆஃபிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணு..” என கோபத்தில் கத்த,

“அதை நான் பார்த்துக்கிறேன் ஷ்யாம். எனக்கு வேற டவுட்ஸும் இருக்கு. அதை நான் மாமாக்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கிறேன். நீ ப்ரீத்தாவை அங்க அனுப்பி வச்சிட்டு, அவளை ஃபாலோவ் பண்ணு. நான் அங்க வந்துடுவேன்.. நீ அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பு..” என வைத்துவிட்டவனால் கோபத்திலும், ஆத்திரத்திலும் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.

ஷ்யாம் சென்ற சில நிமிடங்களிலேயே வீட்டிலிருந்து வசந்தி அழைப்பதாக சீனி கூற, அவனுமே ராணியிடம் சென்று “ராணிம்மா.. தாரா விழிக்க நேரமாகும். நான் வீட்டுக்கு போய்ட்டு பாட்டியையும் அழைச்சிட்டு, எங்க போனையும் எடுத்துட்டு வந்துடுறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

வசந்தியிடம் பயப்பட ஒன்றுமில்லை என சொல்லி, தன் அறைக்கு வந்த நேரம் இருவரின் போனுமே அடித்துக் கொண்டிருந்தது.

தாமரைக்கு மகேசும், தனக்கு செல்வமும் அழைக்க இளங்கோவின் புருவம் சுருங்கியது.

இத்தனை நாட்களில் செல்வம் அவனுக்கு அழைத்ததே இல்லை. இருவருக்குமான பேச்சுக்கள் மகேஸ்வையின் மூலமாகத்தான் நடக்கும். இப்போது அவர் அழைப்பது புதிதாக பட, யோசித்தபடியே தான் எடுத்து காதில் வைத்தான்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..” என எந்த முகாந்திரமும் இல்லாமல் பேச,

“என்ன என்னனு சொல்லுங்க.. தாரா ஓகேதான் பயந்துக்காதீங்க..” என்றான் இளங்கோவும்.

அவனுக்கும் எப்படி பேசி, எங்கே முடிக்க என தெரியவில்லை.

“அம்மு உங்ககிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாதுனு சொன்னா, ஆனா சூழ்நிலை நம்ம கையை மீறி போய்டுச்சு. இதுக்கு மேலையும் உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியாது..”

“என்ன சொல்லனுமோ அதை சொல்லுங்க.. எனக்கு பயமா இருக்கு..”

“அது அம்மு ஒரு பிரச்சினையில இருக்கா..” என ஆரம்பித்து அனைத்தையும் கூற, இளங்கோவின் உடல் இறும்பாக இறுகிப் போனது.

“எனக்கு தெரிஞ்ச நண்பர் மூலமா அவனை தேடிட்டு தான் இருக்கோம். அவனை பிடிச்சிடலாம். அவனை நினைச்சு பயந்துதான் அம்மு உடம்பை கெடுத்துக்கிறாளோன்னு எனக்கு தோனுது. நீங்க அம்முக்கிட்ட பொறுமையா கேட்டு பாருங்க. அவ சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு..”

“ஹான்.. இது எப்போ இருந்து உங்களுக்கு தெரியும்..”

“நீங்க அம்முவை இங்க இருந்து அழைச்சிட்டு போகும் போதே தெரியும். அவன் அதுக்கு பிறகு எந்த பிரச்சினையும் பண்ணல. அதனால அதை அப்படியே விட்டுட்டோம்.. ஆனா கொஞ்ச நாள் முன்னாடி புது நம்பர்ல இருந்து மெசேஜ் வருதுன்னு சொல்லிட்டு இருந்தா..”

“ஹோ… ம்ம் சரி நான் பார்த்துக்கிறேன்.. அத்தைக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம்..” என நிறுத்தியவன் “இப்போவாவது உங்களுக்கு எங்கிட்ட சொல்லனும்னு தோனுச்சே..” என்றான் விரக்தியாக.

“அது அப்படி இல்ல இளா.. அம்மு ரொம்ப பயந்துட்டு இருந்தா. இதையும் நீ அவளோட திட்டம்னு நினைச்சிப்பன்னு சொன்னா.. நான் வேற என்ன சொல்லட்டும். நீயும் அவ பயந்த மாதிரிதானே நடந்துக்கிட்ட..”

“ஹான்.. அப்போ என் கோபம் தப்புன்னு சொல்றீங்களா?”

“இல்ல தப்பில்ல.. ஆனா அதுக்கு பிறகும் கூட என்ன நடந்ததுனு கேட்டு தெரிஞ்சிக்காம அவளை வார்த்தையால வதைச்சது தப்புனு சொல்றேன்.”

“இன்னும் ஒரு உண்மை கூட அம்முக்கிட்ட இருக்கு. அது அவளே உங்கிட்ட சொல்லனும். நான் சொல்லமாடேன்..”

“சரி நான் தாராக்கிட்ட கேட்டுக்கிறேன்..” என்றவன், பின் ஒரு நொடி தயங்கி “தாராவை அங்க அனுப்பி வைக்கட்டுமா? குழந்தை பிறக்கிற வரை அத்தைக்கூட இருக்கட்டும். என் வீடுதான், ஆனா அது சேஃப் இல்லையோன்னு தோனுது..” என்றான் இயலாமையில்.

“இளா.. நீ மனசு விட்டுடாத.. உங்க பாட்டியையும், ராணியையும் சேர்த்தே இங்க அனுப்பிடு. அவங்களுக்கும் அங்க பாதுகாப்பு இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரச்சினையை முடிச்சிட்டு நீ இங்க வந்துடு..” என்றார் செல்வம் ஆதரவான குரலில்.

“ம்ம் சரி.. என்னால கொண்டு வந்து விட முடியாது. தாரா ட்ராவல் பண்ணலாம்னு ஷ்யாம்கிட்ட கேட்டுட்டு, சீனி மாமா கூட அனுப்பி வைக்கிறேன்.. நீங்க இது எதையும் அத்தைக்கிட்ட சொல்லாதீங்க. ரொம்ப பயந்துக்க போறாங்க. நீங்களும் இதை நினைச்சு டென்சன் ஆகாதீங்க. நான் எல்லாம் சரி பண்ணிடுவேன்..” என்று வைக்க, இளாவின் பேச்சில் செல்வத்திற்கு சற்று மனம் சமாதானமானது உண்மை.

போனை வைத்த இளங்கோவிற்கு யோசிக்கவெல்லாம் நேரமில்லை. தாமரையின் போனை எடுத்து உடனே ஆராய்ந்தான். அப்போதுதான் அவளது வாட்சாபில் புது எண்ணிலிருந்து ஒரு இமேஜ் வந்திருந்தது. அதை பார்த்ததுமே எப்போது, எங்கு எடுத்தது என இளங்கோவிற்கு புரிந்து போனது.

இது எப்படி? யார்.? என யோசிக்க, இப்போது அதே எண்ணிலிருந்து ஒரு வாய்ஸ் கிளிப்பிங்க் வந்து விழுந்தது.

“அட என்னம்மா தாமரை.. செந்தாமரை.. எப்படி இருக்க..? ஹாஹா ஒரு போட்டோவுக்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட.. அப்போ முழு வீடியோவும் பார்த்தா என்ன செய்வ.. போய் சேர்ந்துடுவியா? ஒரிஜினல் வீடியோ.. ஆடியோ எஃபெக்ட்ஸ் ஹான் வாவ்தான். ஒன் அவர் ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் வீடியோ.. ஹ்ம்ம் சும்மா சொல்லக்கூடாதுமா.. செம்ம வீடியோ.. ரெண்டு பேரும் செம்மையா கம்பெனி கொடுக்குறீங்க.. ஷப்பா… ஷ்ஷ்… இந்த வீடியோ மட்டும் ரிலீஸ் பண்ணா நல்லா கல்லா கட்டலாம். ஹ்ம்ம் அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கனுமே. அது உன் கையிலதான் இருக்கு.. என் பொண்டாட்டி இருக்கா இல்ல… ப்ரீத்தா.. அவ இன்னும் அரை மணி நேரத்துல எங்கிட்ட வரனும். வந்தே ஆகனும். அப்படி வரலன்னா இந்த வீடியோவை முதல்ல உன் அப்பனுக்கு அனுப்புவேன், அடுத்து உன் புருசனுக்கு.. அடுத்து இந்த உலகமே பார்க்கும். என்ன செய்யலாம்னு நீயே முடிவு பண்ணு. சீக்கிரம் அனுப்பி வைமா.. உங்க வீடியோ பார்த்து உடம்பெல்லாம் சூடாகிடுச்சு..” என்று நக்கல் சிரிப்புடன் அந்த ஆடியொ முடிந்திருக்க.. அவனை கொன்று குவித்து விடும் அளவிற்கு கோபம் கொழுந்து விட்டெறிந்தது.

ஆனால் இப்போது நிதானம்தான் பிரதானம் என புரிந்தது. அவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான் என புரிந்துதான் ஷ்யாமிற்கு அழைத்து பேசி உடனே தன் நண்பர்கள் இருவரை ஒரு இடத்திற்கு வர வைத்தான். கூடவே அவனுக்கு மிகவும் நெருங்கிய காவலதிகாரியிடமும் இந்த செய்தியை பகிர்ந்து உடனே அதே இடத்திற்கு வர சொல்லிவிட்டு இவனும் கிளம்பினான்.

இங்கு முடியவே முடியாது என அழுது கரைந்த ப்ரீத்தாவை பலவாறு சமாதானம் செய்து செழியன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அவளுக்கு பின்னே ஷ்யாமும் கிளம்பினான்.

ஷ்யாமும் தனக்கு தெரிந்த போலிஸ் நண்பனை அழைத்திருந்தான்.

பயத்தில் நடுங்கியபடியே செழியனுக்கு அழைத்தாள் ப்ரீத்தா.

இவளின் அழைப்பிற்காகவே காத்திருந்ததை போலவே “ஓய் பொண்டாட்டி.. என்ன இவ்ளோ நேரம் கழிச்சு கூப்பிடுற.. ஓ.. வீடியோ பார்த்துட்டு கால் பண்ண லேட்டாகிடுச்சா.. இட்ஸ் ஓக்கே பேபி.. சீக்கிரம் வந்து சேரு.. மாமா மூடா இருக்கேன்..” என கெக்கரித்து சிரிக்க,

“ஏன் ஏன் இப்படி பண்ண.?” என்ற வார்த்தைகள் கதறலாக வர,

“அச்சச்சோ.. என்ன பேபி இப்படி அழற.. அதுதான் நீ தப்பிச்சிட்டியே அப்புறம் என்ன? அது ஒரு கோபம். நீ கிடைக்க மாட்டேன்ற பயத்துல பண்ணது. அவன் கூட மட்டும் உன் கல்யாணம் நடந்திருந்தா, அன்னைக்கே உன்னையும் கொன்னுருப்பேன், அவனையும் கொன்னுருப்பேன். நல்லவேலை என்ன கொலைகாரனா ஆக்காம அந்த கிறுக்கச்சி வந்து காப்பாத்திட்டா…” என்றான் ஆத்திரம் குறையாமல்.

“இது.. ரொம்ப தப்பு… தாமரை பாவம்..” என அழுதவளை

“அடச்சீ நிறுத்து.. இப்போ தான் அந்த வீடியோல நீ இல்லையே அப்புறம் என்ன?” என கத்தியவன் இப்போ என்ன உன் வீடியோ வேணுமோ பண்ணிடலாம். அவ இடத்துல நீயும், உன் இளங்கோ மாம இடத்துல நானும் இருக்குற மாதிரி மார்ஃபிங்க் பண்ணிடலாம்.. ஹாஹா பண்ணிடலாமா? இந்த ஐடியா எனக்கு இவ்ளோ நாள் தோணாமல் போச்சே..” என அவன் சிரித்துக் கொண்டிருக்க,

செழியன் கூறிய செய்தியில் அதிர்ந்து, கைகள் நடுங்க, அது கார் சாலை ஓரமிருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடிக்க ஆரம்பித்தது.