தாமரை - 50
அடுத்த நாள் காலையில் “என்ன தம்பி இப்படி ஆகிடுச்சு.?” என்று வசந்தி இளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழ,
“அவ கைல காரை கொடுக்காதீங்கன்னு எத்தனை தடவ சொல்லிருப்பேன். யாரும் கேட்கல.. இப்போ இப்படி வந்து படுத்துருக்கா.” என நடந்த உண்மையை மறைத்து, இதுதான் காரணம் என்பது போல் இளங்கோ பேச,
“எல்லாம் இவளோட திமிர்னால வந்தது. புது கார் எடுத்து கொடுத்தே ஆகனும்னு சொல்லி, இப்போ என் பொண்ணை படுக்க வச்சிட்டா?” என சீனியும் மனைவியைத் திட்டினார்.
“சரி விடுங்க.. நடந்ததை இனி பேச வேண்டாம். பாட்டி இங்க இருந்து பார்த்துக்கட்டும்.. நாம அங்க போயிடலாம். பாடியை வீட்டுக்கு கொண்டு வரனுமா? இல்ல மின் மயானமே கொண்டு போயிடலாமா?” என்றான் இளங்கோ.
“இன்னும் அந்த செழியன் வரலயே இளா. அவனுக்குத் தெரியாம நாம செஞ்சா சரியில்லையே..” என சீனி கூற,
“செழியன் இப்படியெல்லாம் பொறுப்பில்லாம இருக்குற ஆளே இல்ல. ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கிட்டானோ என்னமோ? அதை கொஞ்சம் பார்க்கனும் இளா. அவன் ப்ரண்ட்ஸ் யாருமே போன் எடுக்கலயா.?” என்றார் நாயகி அழுதுகொண்டே.
“இல்ல.. அவன் ப்ரண்ட்ஸ் யாருக்கிட்டயும் அவன் பேசல போல. எல்லாருமே அவனை பார்க்கவே இல்லன்னு தான் சொல்றாங்க. அவனோட மத்த ரிலேடிவ்ஸ் உங்களுக்குத் தெரியும்ல, அவங்ககிட்ட கேட்டு பாருங்க..” என்றான் இளங்கோ.. அத்தை மாமா என்ற அழைப்புகளை மொத்தமாக தவிர்த்திருந்தான்.
“ஹ்ம்ம்.. நேத்து இருந்து கேட்டுட்டே தான் இருக்கேன். யாருக்குமே தெரியல..” என்றார் வருத்தத்தோடு.
“சரி.. அடுத்து என்ன செய்யலாம்னு நீங்கதான் முடிவு பண்ணனும். பத்து மணிக்கு பாடியை வாங்கிக்க சொல்லிருக்காங்க..” என்றான்.
“ம்ம் வேற என்ன பண்றது. ஆக்சிடென்ட் பாடி, எரிஞ்சும் போய்டுச்சு.. இப்போ வீட்டுக்கும் கொண்டு போக முடியாது. செழியனும் இல்ல. இவரை வச்சு எல்லாமே பண்ணிக்கலாம். அங்க இருந்து மின்மயானமே கொண்டு போயிடலாம்..” என்றார் நாயகி கனத்த மனதுடன்.
நாயகி சொன்ன மாதிரியே அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் அண்ணனின் இறுதிக் காரியங்களை முடிந்திருந்தான் இளங்கோ.
எந்த பணத்திற்காக, எந்த சொத்திற்காக அண்ணன் தங்கை இருவரும் ஆசைப்பட்டார்களோ, அதை அனுபவிக்கவே முடியாமல், தன் மகன் ஈமை காரியங்கள் செய்யாமல், கிட்டத்தட்ட அநாதை பிணமாகவே அவர் வாழ்க்கையை முடித்திருந்தான் இளங்கோ.
இளங்கோ அவ்வளவு பொறுமையானவன் எல்லாம் இல்லை. அது தாமரையின் விசயத்திலேயே தெரிந்திருக்கும்..
நிதானமில்லாமல் வார்த்தைகளை விட்டதால் தான் இன்று அவளிடம் ஒரு சாதாரண கணவன் போல் பேசவோ நடந்து கொள்ளவோ அவனால் முடியவில்லை.
அதே தப்பை மீண்டும் செய்ய அவன் நினைக்கவில்லை. மிகவும் நிதானமாக, யோசித்து ஒவ்வொரு செயலையும் செய்தான்.
அதோடு நாயகி செய்த எதுவும் அவன் வீட்டாருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். அவனோடு அனைத்தும் முடிந்துவிட வேண்டும். அவர்களை முடித்துவிட வேண்டும் என்றும் தெளிவாக இருந்தான்.
இப்போது அவன் தாமரையை பத்திரமாக கூட்டி போய் மகேஸ்வரியிடம் விட வேண்டும். அதன்பிறகே செழியன் மேல் கை வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அதன்படியே வசந்தியிடம் “பாட்டி நான் தாராவை அழைச்சிட்டு போய் அத்தைக்கிட்ட விட்டுட்டு வரேன். ராணிம்மாவும் எங்ககூட வரட்டும். உங்களையும் கூட்டிட்டு போலாம்னு தான் நினைச்சேன். ஆனா இங்க சூழல் சரியில்ல. ப்ரீத்தா கூட நீங்கதான் இருக்கனும். பார்த்துக்கோங்க. நான் உடனே அங்கிருந்து கிளம்பிடுவேன். அவளை இந்த மாதிரி நேரத்துல தனியா அனுப்ப முடியாது இல்லையா.” என்றான் பொறுமையாக.
“கண்டிப்பா இளா.. நீ போய்ட்டு வா.. நானும் மாமாவும் இருக்கோம்ல பார்த்துக்குறோம்..” என்றார் வசந்தியும்.
முதல் நாள் கோபமாக பேசிவிட்டு சென்ற ஷ்யாமும் சரி, இளங்கோவும் சரி இருவருமே அடுத்து தாமரையிடம் பேசவில்லை.
அதுவே அவளுக்கு சற்று பயத்தைக் கொடுத்தது. ஷ்யாம் சொல்வதைப் போல தேவையில்லாமல் இளங்கோவிடம் வீம்பு செய்கிறோமோ என்று கூட நினைத்தாள்.
பின் அவன் பேசிய பேச்சுக்கு எப்படி பழிவாங்குவது. இதை வைத்துதான் என அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஷ்யாமின் பேச்சுக்கு பிறகு அந்த பழிவாங்கல் எண்ணமும் காணாமல் போயிருந்தது.
ஊருக்குப் போனதும் நேரம் பார்த்து சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள்.
இங்கு ஷ்யாம் ப்ரீத்தாவின் அருகிலேயே அமர்ந்திருந்தான். அவனுக்கு அவளது காயத்தைப் பார்த்து பார்த்து செழியனின் மேல் ஆத்திரம் பொங்கியது.
அவனைக் கொன்று விடும் அளவிற்கு கோபமும் வந்தது.
தாமரை மட்டும் இதை முன்னமே சொல்லியிருந்தால், இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கலாமோ என்றுதான் யோசித்தான்.
ப்ரீத்தாவிடம் அவன் சண்டையிட்டு பேசாமல் இருந்தது எல்லாம் இப்போது எங்கோ ஒரு மூலைக்கு சென்றிருந்தது. அவளது அழுகையும், பயமும் அவனை ஒரு நிலையில் இருக்கவிடவில்லை.
முதல் நாள் இரவே ‘அவனை என்ன பண்ண? எங்க வச்சிருக்க?’ என இளங்கோவிடம் கேட்டான்.
‘அத தெரிஞ்சி நீ என்ன செய்ய போற? டாக்டர் டாக்டர் வேலையை மட்டும் பாரு.. இதுல எல்லாம் தலையிடாத.’ என இளங்கோ கோபமாக கத்த,
“ம்ச் இளா.. நான் எதுக்கு கேட்குறேன்னு உனக்கே தெரியும். அவனை நான் பார்க்கனும், என் கையால அவனை எதாச்சும் செய்யனும்டா..” என்றான் ஷ்யாமும் ஆத்திரமாக.
“அதெல்லாம் நீ ஒரு டேஷும் பண்ண வேண்டாம். ப்ரீத்தாவை நல்லா பார்த்துக்கோ. அந்த பொறுக்கியை நான் பார்த்துக்குறேன்..” என்று வெளியில் வந்துவிட்டான்.
அதை இப்போது யோசித்துப் பார்த்தான் ஷ்யாம். அப்போ செழியன் இளங்கோ கஸ்டடில தான் இருக்கான். இளங்கோ கோபத்தைப் பார்த்தா இது மட்டும் காரணம் இல்லை போலவே.. வேறு ஏதொவும் இருக்கும் போல.. என்னவா இருக்கும்..” என நினைத்துக் கொண்டிருக்கும் போதே மெல்ல கண் விழித்தாள் ப்ரீத்தா.
இங்கு தேனியை நோக்கி இளங்கோவின் கார் சென்று கொண்டிருந்தது. தாமரை இருப்பதால் மிகவும் பொறுமையாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இடை இடையே நிறுத்தி அவளை நடகக வைத்து, சாப்பிட வைத்து, ரெஸ்ட் ரூம் செல்ல வைத்து என அவளை பாதுகாப்பாகவே பார்த்து அழைத்து வந்தான்.
ராணிக்கு கூட அவன் செயலில் அதுவரை அவன் மேல் இருந்த கோபமெல்லாம் குறைந்து போயிருந்தது.
மென் புன்னகையுடன் இருவரையும் பார்த்தபடியே வந்தார். ஆனால் இருவரும் தேவைக்கு அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.
தாமரைக்கு ப்ரீத்தா பற்றியும், செழியன் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதை கேட்டால் சரியான பதில் கொடுப்பானா என்று தெரியாது.
அதோடு ‘நீ மறைப்படதை என்னிடம் சொல் என மீண்டும் கேட்டால் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாகவே வந்தாள்.
இளங்கோவோ மனைவியின் அவஸ்தையை ரசித்துக் கொண்டே ‘எனக்குத் தெரியாம உங்கிட்ட ஒரு ரகசியம் இருக்கா? ஹான்.. அது எப்படி முடியும்.. ஆனா அதை நீயே எங்கிட்ட சொல்லனும். நீ சொல்ற வரை நானும் எனக்குத் தெரியும்னு நான் காமிச்சிக்க மாட்டேன். என் பொண்டாட்டிக்கிட்ட ஒரு ரகசியம் இருக்கு, அதை தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் முட்டாளா.? எப்போதான் இந்த குள்ள கத்திரிக்கா வளருமோ தெரில..’ என மனதுக்குள் சிரித்துக் கொண்டே வெளியே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு காரை ஓட்டினான்.
அன்று நாயகியின் ‘என்ன உன் வயிறு இவ்ளோ பெருசா இருக்கு?’ என கேட்ட கேள்வியில்தான் இளங்கோவிற்கு சந்தேகம் வந்தது.
ஆம் நான்கு மாத வயிறே ஆறு மாதம் போல் இருந்தால் யாருக்குமே சந்தேகம் வரத்தானே செய்யும். நாயகி கேட்டதும் இளங்கோவிற்கும் அந்த சந்தேகம் வந்துவிட்டது.
ஷ்யாமிற்கு தெரியும், ஆனால் அவன் கண்டிப்பாக சொல்லமாட்டான். அடுத்து மகேஸ்வரி அவருமே நிச்சயம் சொல்லமாட்டார். ஏனென்றால் அவரை தாமரை மிரட்டி வைத்திருக்கலாம். இல்லையென்றால் அவர் இப்போது வரை அவனிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்.
அதனால் இதை யாரிடம் கேட்பது என யோசித்த நேரம் அவர் மூளையில் வந்து விழுந்தவர் சுமதி. ஷ்யாமின் அம்மா..!
அவரிடம் போன் செய்து கேட்க, முதலில் அவருமே மழுப்பத்தான் செய்தார். பின் இளங்கோ நாயகியின் பேச்சைக் கூறி, ‘அத்தை மாதிரி மத்தவங்களும் பேசுவாங்க. அப்படி நடக்கக்கூடாதுனு நினைக்கிறேன். அண்ட் அந்த குழந்தையோட அப்பாவா, தாமரையோட கணவனா எனக்கு தெரிஞ்சிக்க வேண்டிய உரிமையும் இருக்கு. ப்ளீஸ் சொல்லுங்க..’ என மிகவும் வருந்தி கேட்க, அவரும் உண்மையை சொல்லி விட்டார்.
‘தாமரை வயித்துல இருக்குறது ஒரு குழந்தை இல்ல.. மூனு குழந்தைங்க. ஆனா நான் தாமரைக்கிட்டயும், மத்தவங்ககிட்டயும் ரெண்டுன்னு தான் சொல்லிருக்கேன். எனக்கும் ஷ்யாமுக்கும் மட்டும்தான் மூனுன்னு தெரியும். தாமரைக்கு தெரிஞ்சா ரொம்ப பயந்துப்பா. தேவையில்லாம ஸ்ட்ரெஸை இழுத்துப்பா.. அதனால நீயும் சொல்லிக்க வேண்டாம். ஆனா தாமரை அங்க இருக்குறது சேஃப் கிடையாது. உங்க அத்தைக்கிட்ட கொண்டு வந்து விட்டுடு. இந்த மாதிரி நேரத்துல அவளோட மனசும் உடலும் நல்ல முறையில் இருக்கனும். அது அங்க கிடைக்காது. மகிகிட்ட இருந்தா அவளுக்கு அது கிடைக்கும்..” என்றார் நீண்ட விளக்கமாக.
இளங்கோ எங்கே அவர் சொன்ன முழுவதையும் கேட்டான். மூன்று குழந்தைகள் என்றதிலேயே அவனது நொடி உறைந்து போயிருந்தது.
“மூனு.. மூனா.. அச்சோ மூனு பேபீஸ். எப்படி மூனு பேரையும் என் தாராவால மேனேஜ் பண்ணிக்க முடியும். அய்யோ இளா என்னடா பண்ணி வச்சிருக்க. மூனு பேபிஸ்… ஓ மை காட். இதுல மேடம் ரெண்டுன்னு நினைச்சு, அதை வேற எங்கிட்ட சொல்லாம, என்னை பழிவாங்குறதா நினச்சு என்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க.. ஹாஹா அழகிடி நீ..” என மனதுக்குள் கொஞ்சிக் கொண்டவன், அந்த பக்கம் சுமதி பேசியதை கேட்கவே இல்லை.
சுமதியிடம் “ஆனால் மேடம் எனக்குத் தெரியும்னு யாருக்கும் சொல்ல வேண்டாம். அவளா எப்போ சொல்றாளோ அப்ப சொல்லட்டும்.. தேங்க் யூ சோ மச் மேடம்..” என்றான் ஆத்மார்த்தமாக.
“தாமரைக்கு அத்தைன்னா, நான் உனக்கு அம்மா முறைதான். அதோட உன் அப்பா எனக்கு மாமாதான். எப்படி பார்த்தாலும் நான் உனக்கு அம்மா முறைதான் வரும். அதனால நீயும் ஷ்யாம் மாதிரி அம்மான்னே கூப்பிடு..” என்றும் சொல்லியிருக்க,
இளங்கோ இப்படியான பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவன் மனம் நிறைந்து போனது. உள்ளுக்குள் சொல்ல முடியாத ஒரு இன்பம் பெருகியது. அதனால் “தேங்க்ஸ் மேடம்..” என்று போனை வைத்துவிட்டான்.
இளங்கோவின் அந்த குரலில் இருந்த நெகிழ்ச்சியும், உணர்ச்சியும் சுமதிக்கும் புரிய, “மகி சொன்ன மாதிரி நல்ல பையன்தான் போல, இந்த ஷ்யாம் தான் ஏதோ தப்பா நினச்சு வச்சிருக்கான்.” என் நினைத்துக் கொண்டார்.
இப்படியாக அவர்களின் தேனி பயணம் முடிவுக்கு வர மாலையாகியிருந்தது.
வீட்டிற்கு வராமல் நேரே சுமதியின் ஹாஸ்பிடலுக்குத்தான் முதலில் வண்டியை விட்டான் இளங்கோ.
அங்கு ஏற்கனவே செல்வமும், மகேஸ்வரியும் வந்து காத்திருக்க, அவர்களைப் பார்த்ததும் குழப்பமாக ‘இங்க ஏன்.?’ என்ற கேள்வியோடுதான் இறங்கினாள் தாமரை.
“லாங்க் ட்ரைவ் இல்லையா? அதான் ஒரு செக்கப் முடிச்சிட்டு வீட்டுக்கு போலாம்னு இளா சொன்னான்..” என மகளின் கேள்விக்கு பதில் சொன்னது மகேஸ்வரி இல்லை செல்வம்.
அதிலேயே பெண் அதிர்ந்தாள் என்றால் “ரொம்ப நேரம் வெய்ட் பண்றீங்களா ம்மா..” என இளங்கோ கேட்ட கேள்விக்கு , “அதனால் என்ன இளா? நீ கேட்டு நான் முடியாதுன்னு சொல்லிடுவேனா? நீ ஓக்கேதான..” என பதில் சொன்ன சுமதியைப் பார்த்து மேலும் அதிர்ந்தாள்.
‘என்னடா நடக்குது இங்க.?’ என்ற கேள்வியோடு, திருதிருவென முழித்துக்கொண்டு உள்ளே வந்தவளைப் பார்த்து இளங்கோவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.