தாமரை - 51
“டேய் யார்ரா நீங்க எல்லாம்? எதுக்குடா என்னை அடைச்சு வச்சிருக்கீங்க? நான் யார் தெரியுமா? என் பேக் கிரவுன்ட் தெரிஞ்சா நீ என்னை இப்படி அடச்சி வச்சிருக்க மாட்ட? என்னைத் தொட்டு நீ பெரிய தப்பு பண்ணிட்ட? உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா..?” என போதை தெளிந்ததில் இருந்து அந்த அறைக்குள் இருந்து கத்திக் கொண்டிருக்கிறான் செழியன்.
ஆனால் அவனுக்கு பதில் சொல்லத்தான் அங்கு யாரும் இல்லை.
“டேய்.. யார்டா நீங்க.. டேய்… டேய்..” என கத்தி கத்தியே சோர்ந்து போய் அந்த கட்டிலில் விழுந்தான்.
அந்த அறை நிச்சயம் லக்சரி சூட்தான். பார்க்கவே அத்தனை அழகு. ஆனால் வெளியுலகமே தெரியாதளவிற்கு மொத்தமும் மூடியிருந்தது.
எந்தப் பக்கம் கதவு இருக்கிறது என்றேத் தெரியவில்லை. ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டிய உணர்வு.
எந்த வகையிலும் வெளியில் உள்ளவர்களிடம் அவனால் தொடர்பு கொள்ளவே முடியாது.
எப்போது இங்கு கொண்டு வந்தார்கள்.? இன்று என்ன நாள்? இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது. இன்று என்ன கிழமை? என எதுவும் தெரியாமல் பைத்தியம் போல் புலம்பிக் கொண்டிருந்தான்.
வயிறு வேறு பசிக்கு கூப்பாடு போட்டது. கடைசியாக எப்போது சாப்பிட்டான் என்று நியாபகம் இல்லை. ப்ரீத்தாவை மிரட்டி அவளை வரச் சொன்ன பிறகு, சரக்கு மட்டுமே அடித்தான்.
நேரங்கள் கடந்தும் ப்ரீத்தா வரவில்லை என்ற கோபத்தில், அவளுக்கு அழைத்துப் பேசிவிட்டு, மீண்டும் குடித்தான்.
அப்போது திடீரென முகமூடி அணிந்த நான்கு ஆண்கள், போதையின் பிடியில் இருந்தவனை வீட்டிற்குள் வந்து காரணமே சொல்லாமல் அள்ளிக் கொண்டு போனார்கள். அதுவரை தான் ஞாபகம் இருக்கிறது.
அதன் பிறகு இன்றுதான் விழிக்கிறான். உண்மையில் விழிக்கத்தான் செய்கிறான். இது எந்த இடம்? சென்னைதானா? இல்லை சென்னை தாண்டி வேறு எங்காவதா? என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
பசி வேறு அவனை ஒருவழி செய்ய, அந்த அறையை நோட்டம் விட்டான். சற்றுத் தள்ளி ஒரு டேபிளும் சேரும் இருக்க, அதில் இரண்டு காட் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.
வேகமாக அங்கு சென்று அதை திறந்து பார்த்தான். மட்டன் பிரியாணி வாசம் அவன் மூக்கைத் துளைத்தது. பசியில் இருந்தவனை அந்த பிரியாணி வாசம் மேலும் தூண்டியது.
அடுத்த பாக்ஸை திறக்க, சிக்கன் லெக் பீஸ் பொறித்தது இருந்தது. பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறியது செழியனுக்கு.
தட்டிற்காக சுற்றி பார்த்தான். இல்லையென்றால் அப்படியே அள்ளிச் சாப்பிடும் வேகம். ஆனால் அதே டேபிளில் சற்றுத்தள்ளி ஒரு ஸ்டேண்டில் பீங்கான் தட்டுக்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, அதில் ஒரு தட்டை எடுத்து பிரியாணியைப் போட்டு அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் பசிக்கு அந்த பிரியாணி சொர்க்கம்தான். முழுவதும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பிறகுதான், கவனித்தான் அந்த ஹாட் பாக்ஸ்க்கு அருகில் ஒரு சின்ன பேப்பர் கட்டிங்க் இருப்பதை.
அதைப் பார்த்து புருவம் சுருக்கியவன் எடுத்துப் பார்த்து அதில் இருந்த ‘இந்த பிரியாணியில் விசம் கலக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வாழும் ஆசை இருந்தால், பசியை அடக்கிக்கொண்டு இருங்கள். முடியாதென்றால் இந்த பிரியாணியை சாப்பிட்டு சொர்க்க லோகம் செல்லுங்கள்..’ என்ற வாசகத்தைப் படித்து அலறியடித்து வாஷ் பேஷன் நோக்கி நோடினான்.
மருத்துவமைனையில் கண் விழித்த ப்ரீத்தாவை நெருங்கி அமர்ந்த ஷ்யாம் “ஸாரி குட்டிம்மா..” என்றான் உடைந்த குரலோடு.
“தாமரை சேஃபா.. மாமாகிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா?” என்றாள் தடுமாறி..
“ம்ம்.. உனக்கு ஒன்னும் இல்ல. ஜஸ்ட் தலையில சின்ன காயம். கார் இடிச்ச வேகத்துல ஏர் பலூன் ரிலீசாகிடுச்சு. சோ பயப்படுற மாதிரி காயங்கள் இல்ல. இவ்ளோ நேரம் அதிர்ச்சியில வந்த மயக்கத்தாலதான் தூங்கிட்டு இருந்த. நானும் யாரும் வந்து டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என அவளுக்கு வேறு பதில் சொல்ல,
“நான் வேற கேட்டேன்..” என்றாள் பொறுமையாக.
“ம்ம் புரியுது.. அந்த பேச்சு வேண்டாம்னுதான் நான் அவாய்ட் பண்ணேன். பட் நீ இதையும் பைத்தியம் மாதிரி யோசிச்சிட்டு இருப்ப, அதனால சொல்றேன். நான் இதை சொல்ல முன்னமே இளங்கோவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. செழியனையும் தூக்கிட்டான். அம்முவையும் சேஃபா ஊருக்கு அனுப்பிட்டான். நீயும் ஓக்கே ஆகிட்டா, உன்னையும் பாட்டியையும் கூப்பிட்டு என்னையும் ஊருக்கு வரச் சொல்லிட்டான்..” என்றான் நீண்ட விளக்கமாக.
“ஏன்.. ஏன் திடீர்னு ஊருக்கு போகனும்.? இங்க செழியனால பிரச்சினையா?” என பயந்து போய் கேட்க,
“ம்ச்.. பைத்தியம்.. இப்போதானே சொன்னேன். கண்டதையும் யோசிக்காதன்னு.. ஊர்ல கோவில் ஃபங்க்சன் நடக்குது. இளங்கோ தான் உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வர சொன்னான். உனக்காகத்தான் பாட்டியை விட்டுட்டு போயிருக்கான்..” என்று கடிந்தான்.
“ம்ம் நான் கொஞ்சம் பயந்துட்டேன்.. நீங்க ஓக்கேதான..” என்றாள் மெல்லியக் குரலில்.
“ம்ம் ஓக்கேன்னு தான் நினைக்கிறேன். நான் உங்கிட்ட ஒன்னு கேட்கனும்..” என்றான் அவளைப் போலவே.
‘என்ன?’ என்பது போல் பார்க்க,
“நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் அவள் கண்களைப் பார்த்து,
“ஆனா ஏன்? நீங்கதான் என்னை வேண்டாம் சொன்னீங்க.?” என்று சொல்லி முடிக்கும் முன்னே விழிகளில் நீர் வழிய ஆரம்பித்தது.
அதை துடைத்தபடியே “இளங்கோ மாமா மேல இருந்தது காதல்னு நானே நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன். ஐம் சாரி. உங்களையும் தாமரையும் ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன். அதுவும் அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. ரியல்லி வெரி சாரி..” என்றாள் குற்றவுணர்வோடு.
“தாமரைக்கு முன்னாடியே தெரியும். நீ இளங்கோவை லவ் பண்ணலன்னு. அதாவது நீங்க ஊருக்கு போன அடுத்த நாளே. அவளைக் கடுப்பாக்க இளங்கோ உன்னை யூஸ் பண்றான்னும் தெரிஞ்சிக்கிட்டா. அப்புறம் அந்த சம்பவம் நடந்த அன்னைக்கு உன்னை எப்படியாவது சேஃப் பண்ணனும்னு தான் அங்க வந்தா.. ஆனா அதுல அவளே மாட்டிப்பான்னு நினைக்கல. ஏன் அவளே நினைச்சிருக்க மாட்டா.. பைத்தியக்காரி..! ம்ம் நிஜமாவே பைத்தியக்காரிதான். உங்க இளங்கோ மாமா மேல பைத்தியமா இருக்குற பைத்தியக்காரி..” என்றான் சலிப்பாக.
“ஹான்.. அவ்ளோ பிடிக்குமா? எங்களுக்குத் தெரியாதே.. ஆனா அவங்களுமே அதைக் காட்டிக்கலதானே..” என்றாள் வியப்பாக.
“ம்ம்.. அம்மு ஃபேமிலி நடந்த பிரச்சினை எல்லாம் உனக்குத் தெரியும்ல. அப்படி இருக்கும் போது செல்வம் மாமா எப்படி இளங்கோவுக்கு தாமரையைக் கொடுப்பார். அவ கன்சீவா இருக்கான்னு தெரிஞ்ச பிறகும் கூட என்னைத்தான் கேட்டார். ஏதோ மகி அத்தை பேசி இளங்கோவை வர வச்சதுனால, அவன் தாமரையைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டான். இல்லைன்னா அவ இப்போ வரை அப்படியேதான் இருந்திருப்பா..” என்றான் பெருமூச்சோடு.
“ஓ.. இதெல்லாம் தெரியாம நானும் ரொம்ப பேசிட்டேன்.. உங்க வாழ்க்கைக்குள்ளயும் வந்துட்டேன்.” என்றாள் ப்ரீத்தா குற்றவுண்ர்ச்சியோடு.
“ம்ச்.. உங்கிட்ட இதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு எனக்குத் தெரியல குட்டிம்மா..” என பெருமூச்சு விட்டவன், எழுந்து அவளின் கட்டிலுக்கு அருகில் சென்று மெல்ல அவளைத் தூக்கினான்.
ப்ரீத்தா அதிர்ந்து பார்க்கும் போதே, அமர வைத்து தானும் அமர்ந்து தன் மேல் அவளை வாகாக சாய்த்துக் கொண்டான்.
‘என்ன பண்றீங்க.?” என அவள் பதறி விலகப் பார்க்க, அதைத் தடுத்து மேலும் தன்னோடு இழுத்து அனைத்துக்கொண்டு அமைதியாகவே இருந்தான்.
சிலபல நொடிகள் கடந்த பிறகு “நேத்து நீ பயந்து அழுது என்னை வந்து கட்டிப்பிடிக்கிற வரை, எனக்குமே உன் மேல கோபம் அதிகமா இருந்தது. அடுத்து அந்த ஆக்சிடெண்ட்.. அதை இப்போ நினச்சாலும் உயிரெல்லாம் நடுங்குது.”
“நீ கண் முழிக்கிற வரை என் உயிர் எங்கிட்ட இல்ல. கைகாலெல்லாம் நடுக்கம் எடுத்துடுச்சு.. அந்த நொடி கடவுள்கிட்ட கேட்டேன். மறுபடியும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவளை எங்கிட்ட கொடுத்துடுங்க. இனி நான் பத்திரமா பார்த்துக்குவேன்னு கேட்டேன். எனக்காக, என்னோட வேண்டுதலுக்காகத் தான் அவர் உன்னை திருப்பி கொடுத்துருக்கார். நீ என்னோட, என் வாழ்க்கையில வந்த பொக்கிசம். உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு நான் பார்த்துக்கனும்..” என்று பேச பேசவே ப்ரீத்தாவின் அழுகை கூட, ஷ்யாமின் அனைப்பின் இறுக்கமும் கூடியது.
மீண்டும் சில நிமிட அமைதி இருவருக்குள்ளும். முதலில் நிகழ்வுக்கு வந்தது ஷ்யாம்தான்.
“நான் இங்க வந்தது தாமரைக்காகத்தான். அவளைப் பார்த்துக்கனும், அவ படிச்சு முடிக்கிற வரை நான் இங்க இருக்கலாம்னு ஜஸ்ட் லைக் தட் ஒரு கிளினிக் போட்டேன். அது பிக்கப் ஆகிடுச்சு. அம்மா தான் நான் வீக்லி ஒன்ஸ் விசிட்டிங்க் வரேன். சோ கொஞ்சம் பெருசா பண்ணுன்னு சொன்னாங்க. என் ப்ரன்ட்ஸும் கன்சல்டிங்க் வரேன்னு சொல்ல, நானும் இந்த ஹாஸ்பிடலை ஓபன் பண்ணேன். இதுல என் பேரன்ஸோட பணம் எதுவும் இல்ல. என்னோட சம்பாத்தியம், அம்முவோட சம்பாத்தியம் அப்புறம் லோன் எல்லாம் சேர்த்துதான் இந்த ஹாஸ்பிடல்.”
“நாங்க இப்படி ஆரம்பிக்கவும் ரெண்டு வீட்டுலயும் அவங்களா பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. ஆனா எனக்கும் மகி அத்தைக்கும் தெரியும் இந்த பேச்சு வார்த்தை கல்யாணத்துல முடியாதுன்னு. ஏன்னா அம்முவோட லவ் எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சது. அப்படியே ரெண்டு வருசம் போயிடுச்சு.
கோவில் திருவிழான்னு அம்மு ஊருக்கு வந்தா, அப்போதான் நீங்களும் ஊருக்கு வந்தீங்க. அடுத்து நடந்தது தான் உனக்குத் தெரியுமே. இப்போ எதுக்கு நான் இவ்ளோ சொல்றேன்னா எனக்கு இனி இங்க வேலை இல்லை. ப்ரண்ட்ஸ்கிட்ட இதை டேக் ஓவர் பண்ணிட்டு ஊருக்கே போகலாம்னு நினைக்கிறேன். அங்க நம்ம ஹாஸ்பிடல்லே பெருசு. அம்மா மேனேஜ்மென்ட் எல்லாம் பார்க்கமாட்டாங்க. அப்பாவுக்கு வயசாகுது. சோ இப்போ நான் அவங்க கூட இருக்கனும். அதனால் அங்க மொத்தமா போலாம்னு இருக்கேன்..” என முடித்து அவளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு அங்க இருக்க முடியுமா? சென்னை மாதிரி சிட்டி இல்லதான். ஆனா தேனியும் சிட்டிதான். உனக்கு மேல படிக்கனுமா, MBA Hospital management படிச்சா ஃபியூச்சர்ல நமக்கு யூஸாகும். என்ன சொல்ற..?” என கண்ணைச் சிமிட்ட,
“எனக்கு எல்லாம் ஓக்கேதான். ஆனா இதுக்கு எல்லம் என் பேரன்ட்ஸ் ஒத்துப்பாங்களா? நானும் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணுதானே, உங்களுக்கு இருக்குற அதே பொறுப்புகள் எனக்கும் இருக்கே. இதுக்கு என்ன செய்யலாம்..” என்றதும், ஷ்யாமின் உடல் விரைத்துப் போனது.