• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 53

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur

தாமரை - 53


‘இது எந்த இடம்? யார் என்னை அடைச்சு வச்சிருக்கிறது? என்னை பத்தி என்ன தெரியும் இவங்களுக்கு? அந்த இளங்கோதான் இதை செய்றானா? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லயே, கண்டிப்பா தாமரையும் சரி ப்ரீத்தாவும் சரி இதை சொல்லியிருக்க வாய்ப்பில்லை. வேற யார்..? ஏன்? எதுக்கு?’ என மூளை மொத்தமும் கேள்விகளால் குடைய பதில் மட்டும் தான் கிடைக்கவில்லை செழியனுக்கு.

பகலா? இரவா? என தெரியாமல் நாட்களை கடத்துவது வேறு பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்தது.

மூன்று வேளையும் நல்ல சாப்பாடு. காலையும் மாலையும் டீ, காஃபி. இரவும் சரியாக சரக்கு என அவன் தேவைகள் சரியாக கிடைத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் உள்ளுக்குள் பயம் பேயாட்டம் போட்டது. இந்த உணவு வகைகள் எல்லாம் எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் சற்று அசந்த நேரத்தில் அறைக்குள் இருக்கிறது.

இப்படியே மூன்று நாட்கள் கழிந்த நிலையில், மூன்றாம் நாள் மாலை அந்த அறையின் கதவு திறக்கப்பட, அந்த அறைக்குள் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

அந்த பெண்ணை பார்த்த நொடி சற்றும் யோசிக்காமல் “ஏய் யாரு டி நீ? எதுக்கு என்னை அடைச்சி வச்சிருக்க? உனக்கு என்னை எப்படி தெரியும். யார் உன்னை இப்படி செய்ய சொன்னது. ஒழுங்கா சொன்னா உனக்கு உயிர் மிச்சமாகும். இல்லை இந்த இடத்துலயே உன்னை நாசம் பண்ணிடுவேன்..” என அவளின் கழுத்தை நெறித்து ஆவேசமாக பேச, ஆனால் அவளோ செழியனின் இறுக்கமான பிடியை மிகவும் சாதாரணமாக தட்டிவிட்டு, கையை வளைத்து மடக்கி தட்டிவிட ‘அம்மா’ என்ற அலறலுடன் தலை குப்புற விழுந்தான் செழியன்.

“மேடம்… நீங்க யாரு மேடம்.. எதுக்காக இப்படி..?” என தன் அடிபட்ட கையைக் காட்டி கேட்க,

“ம்ம்… பொம்பளைங்கன்னா உன் வீரத்தைக் காட்டலாம்னு நினைச்ச போல. ஆனா நான்..” என சிரிக்க, “நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே ரக்கடான பொண்ணு..” என மேலும் சிரிக்க, அவளை அரண்டு போய் பார்த்தான் செழியன்.

அவனின் அரண்ட முகத்தைப் பார்த்து, புருவத்தை உயர்த்தியவள் “சாரி.. இனி எங்கிட்ட நீ இப்படி பிகேவ் பண்ணாத. இன்னைக்கு எனக்கு கோபம் வரல, அதனால தப்பிச்ச.. கோபம் வந்துருந்தா நீ காலி… மொத்தமா காலி..” என கிண்டலடிக்க, செழியன் மேலும் மேலும் அரண்டு தான் போனான்.

அதை உணர்ந்த அந்த பெண் “ஸாரி உன்னை ரொம்பவே பயமுறுத்திட்டேன் போல.. பை த வே ஐம் வர்ஷினி.. சென்னைல ஒரு எக்ஸ்கிளூசிவ் ஸ்பா வச்சிருக்கேன். உனக்கு இன்னைக்கு மசாஜ் பண்ணனும்னு அப்பாய்மென்ட் வாங்கிருந்தாங்க.. சோ..” என நிறுத்த,

“ஸ்பாவா.. மசாஜா.. எனக்கா? இதெல்லாம் எதுக்கு? நான் சொல்லவே இல்லையே .. யார் சொன்னா?” என்றவனின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

“என்னோட பாஸ் எனக்கு கொடுத்த அசைன்மென்ட் இது.. உன்கிட்ட வேணுமா? வேண்டாமான்னு எல்லாம் யாரும் சஜசன் கேட்கல். உனக்கு பண்ண சொல்லி ஆர்டர். உனக்கு முடிச்சிட்டு நான் கிளம்பனும். கம் லெட்ஸ் கோ..” என அந்த அறையில் இருந்த சுவற்றை தட்டி, அவளின் ஐந்து விரல்களும் படும்படி அழுத்த, அவளின் கைரேகைகள் ஸ்கேனாகி அந்த சுவர் அப்படியே ஸ்லைட் டோராக ஒரு பக்கம் திறக்க, அதை கவனித்த செழியனுக்கு மயக்கம் வராத குறைதான்.

இத்தனை நாட்கள் இந்த அறைக்குள் தானே இருந்தான், இங்கு இப்படி ஒரு அறை இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லையே.

எதற்காக இதெல்லாம் என நினைக்கும் போதே.. மரண பயம் வந்துவிட்டது.

அவனுக்கு கண்டிப்பாக இங்கிருந்து உயிரோடு திரும்ப முடியாது என்று மட்டும் புரிந்தது. அதுவே அவனை நிலைகுலைய வைக்க போதுமாக இருந்தது.

வர்ஷினி அந்த அறைக்குள் சென்று தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு செழியனை தேட, அவனோ அவள் எப்படி விட்டுப் போனாளோ அப்படியே நின்றிருந்தான்.

அதைப் பார்த்தவள் “ஹேய் கமான் மேன்.. ஜஸ்ட் ஒன் அவர்தான். ஃபீல் பண்ணு.. எஞ்சாய் பண்ணு.. மஜா பண்ணு.. அதை விட்டுட்டு இப்படி பேயடிச்ச மாதிரி இருக்க..” என அவனைப் பார்த்து கண்ணைச் சிமிட்ட,

“மஜா பண்ணவா.?” என திகைத்து போய் கேட்டான். இதே மற்ற நாளாக இருந்திருக்க, வர்ஷினிக்கு முன்னே அவன்தான் அந்த அறைக்குள் நுழைந்திருப்பான்.

செழியனுக்கு இதெல்லாம் புதிது இல்லை. சொல்லப் போனால் பெண்கள் இல்லாத இரவை அவன் வாழ் நாளில் விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால் இப்போது நடப்பதை பார்க்க பார்க்க செழியனுக்குள் பயம் பயம் மட்டுமே, அது அவன் மூளையை செயலிழக்க வைத்துக் கொண்டிருந்தது.

“பின்ன நான் எதுக்கு வந்துருக்கேன். இன்னுமா புரியல.. அட தத்தி.. ஒரு ஆம்பளைக்கு லேடி மசாஜர் வராங்கன்னா எதுக்குனு கூட உனக்கு தெரியாதா.? இது கூட புரியாத மட சாம்பிராணி, நீ என்னை நாசம் பண்ணுவியா?” என நக்கலடித்தபடியே “கம்… கம்… எனக்கு இன்னொரு அப்பாய்ன்மென்ட் இருக்கு.. நான் போகனும்..” என்றதும்,

“நான்… நான் உன்னை.. உன்னை எங்கையோ பார்த்துருக்கேன்.. எங்கன்னு தெரியல. யார் நீ..? உண்மையை சொல்லு…” என அவள் பேச்சில் உண்டான பதட்டத்தில் பயமும் குழப்பமுமாக கேட்க,

“என்ன மேன் நீ.. இன்னும் என்னை கண்டுபிடிக்கலயா? ஒவ்வொருத்தர் என்னை பார்த்ததுமே கண்டுபிடிச்சிடுவாங்க.. நீ இன்னுமே யோசிக்கத்தான் செய்ற..” என தான் அணிந்திருந்த டாப்பை கழட்ட,

“ஹேய்.. ஹேய் நீ என்ன பண்ற.. முதல்ல நீ யாருன்னு சொல்லு..?” என கோபமாக செழியன் கத்த,

“என்னடா இவன்..?” என சலித்தவள் “மார்கெட்ல பொண்ணுங்களுக்கு மட்டும்தான் வேல்யூ இருக்குன்னு நினைச்சியா..?” என்றபடியே செழியனை நெருங்கி, அவன் முக வடிவை தன் விரல் கொண்டு வருடியபடியே “நீ ******** இந்த வெப்சைட் பக்கமெல்லாம் போக மாட்டியா? ஹ்ம்ம்?” என புருவம் உயர்த்தி “உன்னை மாதிரி கட்டு மஸ்தான ஆம்பளைங்களுக்கு இருக்குற டிமாண்டே வேற.. ஒரே வீடியோ உன்னை வச்சு அப்லோட் பண்ணா போதும். இன்டெர்னேசனல் லெவல்ல ரேட் பிச்சிக்கும். உன்னை மாதிரி ஆளுங்கள பேரம் பேசாம கொத்திட்டு போயிடுவாங்க தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டுக்காரங்கன்னா வெள்ளைக்காரிகளுக்கு பைத்தியம்..” என வர்ஷினி பேசிக் கொண்டிருக்கும் போதே, பயத்திலும், அதிர்ச்சியிலும் வர்ஷினி மீதே மயங்கி விழுந்திருந்தான் செழியன்.

இங்கு இளங்கோவின் வீட்டில் “நாயகி உனக்கு என்ன பைத்தியமா? அவன் காணாம போய் ஒரு வாரம் ஆச்சு. இப்போ வரை கண்டுபிடிக்க முடியல. போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. இளாவும் அவனுக்கு தெரிஞ்ச ஆள் வச்சு தேடிட்டுதான் இருக்கான். இப்போ நீயும் தேடுறன்னு கிளம்பினா என்ன அர்த்தம். அவனை எங்கன்னு தேடுவ..” என சீனி மனைவியிடம் கத்திக் கொண்டு இருந்தார்.

ஆனால் அவர் பேச்சைக் கேட்கும் நிலையில் தான் நாயகி இல்லை. நாயகிக்கு இப்போது அவர் அண்ணன் இறந்தது, செழியன் காணமல் போனது வருத்தமாக இருந்தாலும், அவர் பெரிதாக கவலைப்பட வில்லை.

அவரது கவலையும், பயமும் அவர்களின் பொறுப்பில் கொடுத்து வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரமும், நகையும், பணமும் எங்கு இருக்கிறதோ என்றுதான்.

தன் அண்ணன் இறந்த அன்றே அந்த வீட்டைப் போய் சல்லடையாக தேடி சலித்து விட்டார். அவர் தேடியது எதுவும் கிடைக்கவில்லை. இப்போது அவருக்கு வேறு வழியே இல்லை. செழியனைத்தான் பிடிக்க வேண்டும்.

தன் அண்ணன் இறந்துவிட்டார் அவர் மூலம் தெரிந்து கொள்ள முடியாது. அடுத்து செழியனிடம்தான் கேட்க வேண்டும். அதை கேட்க அவன் இருக்க வேண்டுமே. எங்கே போய் தொலைந்தான் என்றுதான் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

நாயகியையே பார்த்துக் கொண்டிருந்த இள்ங்கோ “என்ன அத்தை ரொம்ப கவலையா?” என்றான் ஒரு மாதிரி குரலில்.

“ஹான் என்ன இளா..?” என புரியாமல் அவனை பார்க்க,

“இல்ல அத்த.. செழியனை பார்க்காம ரொம்ப கவலையா இருக்கீங்களாண்னு கேட்டேன்..?” என்றான் நிதானமாக.

“பின்ன இருக்காதா இளா.? அண்ணி போன பிறகு அவனை நான்தானே வளர்த்தேன். எனக்கு நீயும் அவனும் வேற வேற இல்லையே இளா..?” என்று தன் நீலிக் கண்ணீரை வழிய விட்டார்.

“ம்ம் புரியுது அத்த.. இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க. அதுக்குள்ள எப்படியாவது அவனை உங்க கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன். இல்லை அவன் இருக்குற இடத்துக்காவது உங்களை கூட்டிட்டு போறேன்.. அதுவரைக்கும் நீங்க மாமா கூட ஊருக்கு போங்க..” என்றான் சமாதானமாக.

“உன்னை நம்புறேன் இளா. நீ எப்படியும் செழியனை கண்டுபிடிச்சிடுவன்னு எனக்குத் தெரியும். ஆனா அந்த ஊருக்கு வேண்டாம் இளா. நாங்க இங்கேயே இருக்கோம். அவ்வளவு பிரச்சினை நடந்த பிறகு, எப்படி அங்க போய் அவங்க வீட்டுல இருக்க முடியும்..” என ஊருக்கு போகாமல் இருப்பதற்காக ஒரு காரணத்தை கூற,

“அத்தை… ப்ரீத்தா அங்க இருக்கா… அவளுக்கும் ஹெல்த் சரியில்ல. இப்போ நீங்க அவ கூடத்தான் இருக்கனும். பாட்டியும் அங்கதான் இருக்காங்க.. ரெண்டு பேரையும் பார்க்கனும்ல..’” என்றதும், நாயகிக்கு மறுக்கவே முடியவில்லை.

“சரி இளா.. நாளைக்கு கிளம்பறோம். இன்னைக்கு அங்க அண்ணன் வீட்டுக்கு போய், எல்லாத்தையும் ஒதுங்க வச்சிட்டு வந்துடுறேன்.” என்றதும் இளங்கோ சரி என்று விட, நாயகி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

ப்ரீத்தாவும், பாட்டியும் ஷ்யாமுடன் வந்த அடுத்த நாளே சென்னை வந்துவிட்டான் இளங்கோ.

ஷ்யாம் கூட வருகிறேன் என்றதற்கு, “இல்ல தாரா கூட நீ இருக்கனும். நான் சொல்லும் போது நீ வந்தா போதும்.. நடக்குற எதையும் யாருக்கிட்டயும் சொல்லாத..” என்றிருந்தான்.

அவனுக்கு இப்போது அனைத்து உண்மைகளும் தெரியும். அவர்களை கொன்று போட்டால் கூட யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்காமல் கொல்ல அவனுக்கு மனமில்லை..

‘தன்னுடைய பெற்றோரை கொன்ற ஒருவரிடம் மிகவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்பதே அவனுக்கு மிகப்பெரிய வலிதானே. இதயத்தைக் கிழித்து அதில் நெருப்பைக் கொட்டியது போல அத்தனை வலிக்கிறது. ஆனால் இன்னும் அவர்களுக்கான நேரம் வரவில்லை என கொக்கை போல காத்திருக்கிறான்.

அன்று செழியனை தூக்கும் போதே வீட்டில் இருந்த அனைத்து பத்திரம், நகை, பணம் என எல்லாவற்றையும் சேர்த்துதான் தூக்கியிருந்தான்.

நாயகி ஒவ்வொரு முறையும் அந்த வீட்டில் போய் தேடி தேடிக் கலைத்துப் போய் திரும்புவதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்து நக்கலாக சிரித்துக் கொள்வான்.

அப்போதெல்லாம் ‘சீக்கிரம் உங்க அண்ணன்கிட்டயே உங்களையும் அனுப்பறேன்..’ என மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

இப்போதும் தன்னை தாண்டி செல்லும் நாயகியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனித்த சீனியோ குழப்பமாக “என்னாச்சு இளங்கோ.? ஏன் நாயகியை அப்படி பார்க்குற.?” என்றார்.

“ஒன்னும் இல்லையே மாமா.. நான் வேற ஏதோ யோசனையில் இருந்தேன்..” என்றவன், ஷ்யாம் பற்றி சொல்லி, “ப்ரீத்தாவுக்கும் விருப்பம் தான் போல மாமா. இப்போ ஊருக்கு போனதும், ரெண்டு பேருக்கும் சின்னதா எங்கேஜ்மென்ட் வச்சிக்கலாம்.” என்றான் இளங்கோ.

“ஷ்யாம் நல்ல பையன் தான் இளா.. ஆனா ப்ரீத்தாவுக்கு இன்னும் படிப்பு முடியல. உன் அத்தையும் என்ன சொல்வாளோ தெரியலயே..?” என்றார் குழப்பமாக.

“அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா. அவங்களை அங்க வச்சு சமாளிச்சிக்கலாம். இப்பவே சொல்லாதீங்க. ஊருக்கே கிளம்ப மாட்டாங்க..” என நாயகியைப் பற்றித் தெரிந்து எச்சரித்தான் இளங்கோ.

“சரிப்பா.. நீ என்ன செஞ்சாலும் சரிதான்..” என்றவர் வெளியேற, இளங்கோவும் கிளம்பினான்.

இங்கு அறைக்குள் வந்த நாயகிக்கோ இளங்கோவின் பேச்சு மீண்டும் மீண்டுமாக காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அவன் ஏதோ பொடி வைத்து பேசியது போலவே அவருக்கு தோன்றியது. ஏன்..? என்று யோசித்தபடியே அமர்ந்திருந்தவர் ‘ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ?’ என்று யோசனை வரவுமே பட்டென அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார்.