தாமரை - 54
ஊரிலிருந்து வந்த அன்று தாமரையை செக்கப் செய்த சுமதி எல்லோரிடமும் பேசியிருந்தார். மூன்று குழந்தைகள் என்ற உண்மையையும் சொல்லியிருந்தார்.
ஏழு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இது தாமரைக்கு தெரிய வேண்டாம்ம, குழந்தைகள் பிறந்த பிறகு தெரிந்து கொள்ளட்டும் என்றும் கூறியிருந்தார்.
தாமரைக்கு ஏழாவது மாதம் பிறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சீமந்த வேலைகளை நிறுத்தியிருந்தனர். காரணம் தெரிந்து வசந்தியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இளங்கோவுக்குமே இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையில் சீமந்தம் செய்ய வேண்டாம் என்றுதான் தோன்றியது.
செழியனைப் பற்றி எங்கேயும் யாரும் பேசவில்லை. அவனை கேட்கவும் இல்லை. அப்படியிரு சூழ்நிலையை உண்டாக்கவும் இல்லை.
வசந்தியிடம் ஏற்கனவே ஷ்யாம் பற்றி பேசியிருக்க, அவருக்கு பேத்தியின் விருப்பம்தான் முக்கியமாக பட்டது. முன்னமே அவருக்கும் செழியனுக்கு கொடுக்க விருப்பமில்லை தான். நாயகிக்காகத்தான் அமைதியாக இருந்தார்.
இப்போது பேத்தியின் விருப்பம் தெரிய, “நாயகி என்ன சொல்லுவாளோ.. தெரியலையே இளா.?” என்றார் இளங்கோவிடம்.
“அதெல்லாம் மாமா பார்த்துக்குவார் பாட்டி.. நீங்க ப்ரீத்தாக்கிட்ட பேசி அவளை சமாதானம் செய்ங்க போதும்..” என்றிருந்தான்.
அன்று ஷ்யாம் சென்னை கிளம்புவதாக இருக்க, தாமரையிடமும், ப்ரீத்தாவிடமும் சொல்லிக்கொள்ள அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.
என்னதான் மகள் முன் தைரியமாக, எதுவுமே நடக்காதது போல் காட்டிக் கொண்டாலும் மகேஸ்வரியின் முகத்தில் அவ்வப்போது வந்து போகும் பயத்தை ஷ்யாம் கவனித்திருக்கிறான்.
அதனால் கிளம்பும் நேரம் “என்ன அத்த? ஏன் ஒருமாதிரியே இருக்கீங்க? இது அம்முவுக்காகன்னு தோணல. வேற ஏதோ பிரச்சினை இருக்கு. என்னனு சொல்லுங்க. இளாவை நினைச்சு பயப்படுறீங்களா?” என்றான் பொறுமையாக.
“அது எப்படி சொல்ல ஷ்யாம்…” என தயங்கியவர் பின் ஒரு வழியாக அன்று வள்ளுவரிடம் சென்று வந்ததையும், அவர் கூறியதையும் சொல்ல, “என்ன அத்த நீங்க? இன்னுமா நீங்க இதெல்லாம் நம்புறீங்க..?” என சலிப்பாக கேட்டான் ஷ்யாம்.
“இல்ல ஷ்யாம்.. அப்படி அலட்சியம் பண்ணாதே.. அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கு. அதோட அவரை பார்த்துட்டு வந்த அன்னைக்குதான் ப்ரீத்தாவோட மாமா இறந்தார். அப்போ யோசிச்சு பாரு.. ஏதோ இருக்குதானே. என்னனு சொல்லத் தெரியல. ஆனா மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருக்கு. அம்முவுக்கு நல்லபடியா பிரசவம் ஆனா போதும். இன்னும் ரெண்டு பேரும் வாழவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள அவங்க வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு ஷ்யாம். உங்க மாமாவுக்கும் பயம்தான். ஆனா வெளியே காட்டிக்காம இருக்கார். இப்போவும் பார் இளங்கோவுக்கு பாதுகாப்பா அவனுக்கே தெரியாம ஆள் வச்சிருக்கார். “ என்றார் வருத்தமாக.
“அத்தை நீங்க இளாவை சாதாரணமா நினைக்காதீங்க. அவன் எதுக்கு எல்லாரையும் இங்க கொண்டு வந்து விட்டுருக்கானு தெரியுமா? உங்க எல்லாரையும் பாதுகாப்பா இங்க வச்சிருக்கான். அங்க அவனுக்கு முடிக்க வேண்டிய வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு இங்க வருவான்..” என்றதும்,
“என்ன சொல்ற.. முடிக்க வேண்டிய வேலையா? அது என்ன வேலை. நாங்க பயந்த மாதிரி எதுவும் பிரச்சினையா?” என்றார் பதட்டமாக.
“அத்த எனக்குமே சரியா தெரியல.. ஆனா அங்க இருக்குற பிசினஸ் பாதியை சேல் பண்றதா கேள்விப்பட்டேன். மீதியை அவனோட ஃப்ரன்ட்ஸை வச்சு மேனேஜ் பண்ணப் போறதா சொல்லிக்கிட்டாங்க. எதுவும் இளங்கோ எனக்கு சொல்லல. எல்லாம் நான் கேள்விப்பட்டது மட்டும் தான்.” என்றான் ஷ்யாமும்.
“அதெல்லாம் வித்துட்டு என்ன செய்யப் போறான். ஒருவேளை ஜெர்மனிக்கே போறானா? அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே..” என்றார் மகேஸ்வரி குழப்பமாக.
“அத்த.. அவன் மொத்தமா இங்கேயே வரப் போற ப்ளான்ல இருக்கான்னு தான் எனக்குத் தெரியுது.” என்றதும் அவர் குழப்பமாக பார்க்க,
“ஆமா அத்த.. நான் ப்ரீத்தாக்கிட்ட இங்கேயே வந்துடுவேன்னு சொன்னேன். அதை அவ இளாக்கிட்ட பேசியிருக்கா. அவனும் அதுதான் சரி. நானும் இங்கேயேதான் வரப் போறேன். சோ நீ இதெல்லாம் நினைச்சு குழப்பாம ஷ்யாம்க்கு ஓகே சொல்லுன்னு சொன்னானாம். அதை வச்சுத்தான் நான் சொல்றேன். எனக்கும் கிளியரா தெரியல..” என்றுவிட, மகேஸ்வரியின் முகத்தில் சிறு வெளிச்சம் உண்டானது.
“இது மட்டும் நடந்துட்டா என்னை விட யாரும் சந்தோசமா இருக்க முடியாது ஷ்யாம். அந்த வள்ளுவர் கூட சீக்கிரமே ரெண்டு பேரையும் ஊருக்கு கூப்பிட்டுக்கோங்கன்னுதான் சொன்னார்..” என்றதும்,
“ம்ம்.. அம்முவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம் அத்த.. அவ இப்போ இருக்குற சிச்சுவேஷன்ல எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருப்பா. அது அவ ஹெல்த்க்கு நல்லதில்ல.. அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க..” என்றவன், “நான் அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பறேன் அத்த..” என தாமரையைத் தேடி சென்றான்.
தாமரையும் ப்ரீத்தாவும் நெட்ஃபிலிக்ஸில் ஒரு கேட்ராமா சீரியலில் மூழ்கியிருந்தனர்.
“அப்படி என்னதாண்டி இந்த சப்ப மூக்கு காரனுங்ககிட்ட இருக்கு. ‘ஆ”ன்னு வாய பொளந்துக்கிட்டு பார்க்குறீங்க..” என்றவாறே வந்து அவர்களுக்கு அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.
இருவரும் ஒரு சேர “டாங்கிக்கு தெரியுமா?..” என ஆரம்பிக்க,
“போதும்..” என்ற ஷ்யாம், “நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன். பார்த்து கவனமா இருங்க..” என்றவன் “முதல்ல கீழ இருக்க ரூமுக்கு ஷிஃப்ட் ஆகுற வழியப் பாரு..” என தாமரையை அதட்டினான்.
“சரிடா.. ரொம்ப கத்தாத.. அம்மா ரெடி பண்ணிட்டாங்க. இன்னைக்கு நைட் அங்கேயே படுத்துக்கிறேன்..” என்றாள் தாமரையும்..
“ம்ம் சரி..” என்றவன் ப்ரீத்தாவிடம் “உங்க அம்மா என்னதான் சொல்றாங்க..” என்றான் கடுப்பாக.
“ம்ம் என்ன சொல்லுவாங்க.. அவங்க மருமகனை கண்டுபிடிக்காம என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக்கூடமாட்டாங்களாம். அவங்க மருமகன் எங்க எப்படி இருக்கான்னு தெரியாம அவங்களுக்கு நிம்மதியே இல்லையாம்..” என ப்ரீத்தாவும் கடுப்பாகித்தான் கூறினாள்.
“ஆமா.. அவன் அப்படி எங்கதான் போனான்..” என்ற தாமரை சட்டென யோசனை வர, “அத்தான்.. அத்தான் தான் அவனை எதுவும் பண்ணிட்டாரா..?” என்றாள் பயமாக.
“அடச்சீ வாயை மூடு.. இது இளாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான். அவனுக்கு என்ன பைத்தியமா? அந்த செழியன் பின்னாடி ஓட..” என தாமரையை அதட்டி “அந்த நாய் எங்க போய், யார் பின்னாடி சுத்திட்டு இருக்கோ யாருக்குத் தெரியும்..” என்றான் கோபமாக.
ஷ்யாமின் கோபத்தில் இருவருமே அமைதியாகிவிட, ஷ்யாமுமே இவளிடமிருந்து ‘தப்பிச்சோமடா சாமி’ என்பது போல அமைதியாகிவிட்டான்.
பின் ப்ரீத்தாவிடம் “உன் அம்மா பேசினதையெல்லாம் யோசிக்காத. அவங்களை உன் அப்பா சமாளிச்சிப்பார். உன் இளங்கோ மாமா எல்லாத்தையும் சரி பண்ணிடுவான். காலேஜ் போறதைப் பத்தி அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். இது எதையும் மண்டையில் ஏத்தாம, முக்கியமா இவ கூட சேர்ந்து சுத்தமா நிம்மதியா இரு..” என்றதும், ப்ரீத்தாவிற்கு சிரிப்பு வர, தாமரையின் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஷ்யாம்..” என பல்லைக் கடிக்க,
“சரி ரெண்டு பேரும் கவனமா இருங்க.. பை..” என ஓடிவிட்டான்.
“திமிர்.. திமிர்.. ஒரு நாளைக்கு என்கிட்ட வசமா மாட்டுவடா எரும.. அன்னைக்கு உன்னை வச்சு செய்றேன்..” என பல்லைக் கடித்து கருவியவளை சிரிப்புடன் பார்த்தாள் ப்ரீத்தா.
இங்கு “பாஸ் அவனை இன்னும் எத்தனை நாள் இப்படியே வச்சிருக்கிறது..” என்றபடியே வந்தான் இளங்கோவின் பிஏ..
‘ஏன்.?’ என்பது போல் ஒரு பார்வை பார்க்க,
“எத்தனையோ பேரை இப்படி வச்சு செஞ்சிருக்கோம். யாரும் ரெண்டு நாளைக்கு மேல தாண்டல. ஆனா இந்த செழியனுக்கு பத்து நாளைக்கு மேல ஆகிடுச்சு. இன்னுமா இவனுக்கு ப்ளான் பண்ணாம இருக்கீங்க..” என்றான்.
“அவங்க எல்லாம் நம்ம பிசினஸ்க்கு ஆப்போஸிட்டானவங்க.. நமக்கு குடைச்சல் கொடுக்குறவங்க.. பட் இவன் வேற ரகம். எனக்கு ரொம்ப வேண்டிய ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையிலயே விளையாடிட்டான். அதனால பார்த்து பதமா தான் செய்யனும்..”
“பாஸ்.. வர்ஷினி வந்துட்டு போனதுல இருந்தே அவன் ஏதோ பேயடிச்ச மாதிரி தான் இருக்கான்.. வக்கிற சாப்படெல்லாம் அப்படியே இருக்கு..”
“ம்ம்.. அடுத்து என்ன நடக்குமோ, நம்மளை என்ன செய்வாங்களோன்னு பயத்துலயே இருக்குறான் போல.. அதுதான வேணும். அந்த பயத்துலயே கொஞ்சநால் இருக்கட்டும். எல்லாம் இருந்தும், எதையும் அனுபவிக்க முடியாம அவன் அல்லாடனும். அதை நான் பார்க்கனும். அப்புறம் கடைசியாதான் அவனை செய்யனும். அதுக்கு முன்னாடி வேற வேலை இருக்கு..”
“ஹான் பாஸ். இவனை நீங்க எதுக்கு இவ்ளோ நாள் உயிரோட வச்சிருக்க்கீங்க..?”
“ஒரு காரணம் இருக்கு.. என் தாரா எனக்கு கிடைக்க முக்கியமான காரணமே இவன்தான். இவன் மட்டும் அன்னைக்கு அந்த இளநியை கொடுக்கலன்னா, இப்போ தாரா என் கூட இருந்திருக்க மாட்டா..” என்றான் கனவுகள் நிறைந்த புன்னகையோடு.
“பாஸ்.. இது ரிவெஞ்ச் மாதிரியே தெரியல..”
“ஹா.. ஹா கொஞ்சம் டைம் எடுத்து பண்ணுவோம்டா.. என்ன அவசரம் உனக்கு.. அவனை வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க..” என்றவன் ஏதோ யோசனை தோன்ற “அந்த விண்டோ டோரை ஒபன் பண்ணி விடுங்கடா.. தலைவர் என்ன பண்றார்னு பார்ப்போம்..” என்றான் சிரிப்புடன்.
“பாஸ் உங்களை புரிஞ்சிக்கவே முடில..”
“அது புரிஞ்சா நீ இங்க உக்காந்திருக்கனும்டா..” என கிண்டலடித்துவிட்டு, “சரி அந்த வாய்ஸ் மாடுளேஷன் பண்ற ஆப் இன்ஸ்டால் பண்ணிட்டியா..” என்றான்.
“எஸ்.. பாஸ்..” என்றதும், அதை வாங்கி ஆன் செய்து நாயகியின் குரல் மற்றும் செழியனின் குரலை அப்லோட் செய்து, செட்டிங்கை மாற்றினான்.
“ம்ம். வாய்ஸ் பக்காவா செட் ஆகிடுச்சு. ஓக்கே நீ அந்த விண்டோவை ஒபன் பண்ணிட்டு எனக்கு மெசெஜ் பண்ணு..” என்றதும், அவனும் சரியென்று கிளம்பிவிட்டான்.
தன் கையிலிருந்த மொபலை சுற்றிக்கொண்டே பெரும் யோசனையில் இருந்தான் இளங்கோ.
தாமரைக்கு குழந்தை பிறக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் செழியனையும், நாயகியையும் விட்டு வைத்திருக்கிறான்.
அனைத்தும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருப்பதே ஒருவித கோபத்தைக் கொடுத்தது.
இருவரையும் உயிரோடு கொழுத்திவிடும் அளவிற்கு அந்த கோபம் கொழுந்து விட்டெரிந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் அவனை அவனே சமாதானம் செய்து காத்திருக்கிறான்.
இந்த யோசனையில் இருந்தவனின் போன் அப்போது அலற, தாமரைதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
‘என்னடா உலக அதிசயமா இருக்கு.. நானே கால் பண்ணாலும் எடுக்க மாட்டா.. இன்னைக்கு அவளே கூப்பிடுறா..’ என யோசித்தபடியே அட்டெண்ட் செய்து ‘ஹலோ’ என்று சொல்லி முடிக்க கூட இல்லை.
“ஹலோ.. என்னதான் உங்க மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க..” என்று கோபமாக கத்த,
“உன்னைதான்னு சொன்னா நம்பவா போற?” என்று அவளைக் கிண்டலடித்துவிட்டு “என்னாச்சு..? என்ன பிரச்சினை.?” என்றான் .
“ஹான் எதுக்கு எனக்கு பேப்பர் போட்டீங்க. உங்க ஃப்ரண்ட் கம்பெனின்னா இப்படித்தான் செய்வீங்களா? என்னை கேட்காம எப்படி பேப்பர் போட்டீங்க. அதோட த்ரீ மந்த்ஸ் சாலரி பே பண்ணிருக்கீங்க. உங்களுக்கு எவ்ளோ திமிர்..” என கத்திக் கொண்டிருக்க, இங்கு போனை எடுத்து தள்ளி வைத்து காதை குடைந்தான் இளங்கோ..
“ஹலோ.. ஹலோ..” என அவள் கத்த,
“எதுக்குடி இப்போ இந்த கத்துற, பேப்பர் போடலாம்னு சொன்னது நான்தான். ஆனா போட்டது ஷ்யாம். பே பண்ணது உன் அப்பா. அவங்களை கேட்காம எதுக்கு எங்கிட்ட கத்துற. இந்த இளாதான் உனக்கு இளிச்சவாயனா.?” என அவனும் கத்த,
“ஆமா ரொம்ப பேர் சொல்லிக்கிட்டாங்க.. இளா இளிச்சவாயன்னு.. இவர் மத்தவங்களை இளிச்சவாயனா ஆக்கினா பத்தாது..” என புலம்பியபடியே “சரி வைக்கிறேன்..” என வைக்கப் போக,
“ஏய் இருடி.. வச்சிடாத.. இன்னைக்குதான் நீயே கால் பண்ணிருக்க. கொஞ்ச நேரம் பேசேன்..” என்றான் குரலில் கனிவைத் தேக்கி,
“ஹான் என்ன பேச? பேச என்ன இருக்கு.?” என வெடுக்கென பேச,
“ஹ்ம்ம் அத்தான்னு சொல்லுடி.. நீ அத்தான் சொல்லி எவ்ளோ நாளாச்சு..” என்றான் வருத்தமாக.
“க்கும்.. இப்போ அது ஒன்னுதான் குறைச்சல். நான் சொல்லமாட்டேன்..” என பட்டென சொல்ல,
“நீ சொல்லுவ.. கண்டிப்பா சொல்லுவடி.. ஆனா அதை கேட்க நான் இருக்கனும் பார்த்துக்க.” என சிரித்தபடியே கூற,
“ஏய் பைத்தியமா நீ.. என்ன பேசுற நீ.. வயித்துல புள்ள இருக்கும் போது இப்படித்தான் அபசகுணமா பேசுவாங்களா? இதுக்குத்தான் நான் உனக்கு பேசாமலே இருந்தேன். இரு நீ பேசினதை உங்க அத்தைக்கிட்ட சொல்றேன்..” என கத்திவிட்டு இவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட, அதன்பிறகுதான் என்ன பேசினோம் என்பதே இளங்கோவிற்கு புரிந்தது.
‘டேய் இளா என்னடா பண்ணி வச்சிருக்க? அவளை முதல்ல சமாதானம் பண்ணு. இல்ல இதையே யோசிச்சு மண்டையை சூடாக்கிட்டு இருப்பா..’ என மனசாட்சி சாட, உடனே அவளுக்கு அழைக்க, அவளோ போனை ஆஃப் செய்து போட்டிருந்தாள்.