• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை -56

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
தாமரை- 56

சுமதியின் முன் மிகவும் கோபமாக அமர்ந்திருந்தாள் தாமரை. இளங்கோவின் விபத்தை உடனே யாரும் அவளிடம் சொல்லியிருக்கவில்லை. அதோடு திண்டுக்கல்லில் இருக்கும் மருத்துவமனையிலேயே பார்க்க சொல்லிவிட்டார் செல்வம்.

அதனால் எல்லாரையும் போட்டு படுத்தி எடுத்திருந்தாள் தாமரை. அதிலும் சுமதி அவளை பயணம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட, அவரைப் பார்க்கும் போதெல்லாம் கோபமாக சண்டை போட ஆரம்பித்தாள்.

இளங்கோவிற்கு சர்ஜரி முடிந்து சேஃபாக ஷிப்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்ன பிறகுதான் சுமதியின் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள்.

அதுவரை தாமரையைப் பிடித்து வைப்பதே பெரிய வேலையாகிப் போனது அனைவருக்கும்.

பெரிதாக அடியில்லை என்றாலும், சில வாரங்களுக்கு காலை ஊன்றவே முடியாத அளவிற்கு அடி.

தன் முன்னே அமர்ந்திருந்தவளைப் பார்த்து “இன்னும் என்ன அம்மு?” என சலிப்பாக சுமதி கேட்க,

“நீங்க ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லல..?” என ஆரம்பிக்க, வேகமாக டேபிளில் வைத்திருந்த பெல்லை படபடவென அடிக்க ஆரம்பித்தார்.

அந்த சத்தத்தில் வெளியே நின்றிருந்த நர்ஸ் அடித்து பிடித்து உள்ளே ஓடிவர, “ரூம் நம்பர் 302ல இளங்கோ பேசன்ட் இருப்பாங்க. அவங்க அட்டென்டரை உடனே கூப்பிட்டு வாங்க..” என கத்த, அந்த நர்சும் பயந்தபடியே வெளியே ஓடினாள்.

“அத்த..” என இழுக்க,

“வாயை மூடிட்டு அமைதியா உட்கார். ஏதாச்சும் பேசினா டென்சன் ஆகிடுவேன். ஆளாளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க உன்னை. சின்ன பொண்ணா நீ? சிச்சுவேசன் புரிஞ்சு நடந்துக்க வேண்டாமா?” என அவளைப் பார்த்து கண்டிப்புடன் பேச,

“நான் ஒன்னும் மெச்சூர்ட் இல்லாத பொண்ணு இல்ல. அது உங்களுக்கே தெரியும்..” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.

“இப்போ அதுதான் என்னோட டவுட். எவ்ளோ மெச்சூர்டா எல்லாத்தையும் ஹேன்டில் பண்ற தாமரை எங்க போனா? இப்படி சைல்டிஷா நடந்துக்குற பொண்ணு எங்க தாமரை இல்ல..” என்றதும்,

“அத்தான் விசயத்துல நான் எப்பவும் இப்படித்தான் அத்தை. அத்தானுக்கு எதாவது ஆச்சுன்னா நான் எப்படி? என்ன செய்வேன்? எதுவும் எனக்குத் தெரியாது. அவர்கிட்ட நான் இப்படித்தான். நீங்க என்னை இப்படி ட்ரீட் பண்ணாதீங்க..” என்று அழுகை ஆரம்பிக்கும் குரலில் பேச,

“முதல்ல இப்படி அழறதை நிறுத்து. எதுக்கு எடுத்தாலும் ஒன்னு அழற, இல்ல கத்துற.. நீ இப்படி இருந்தா உள்ள இருக்குற பேபிஸ்க்கு நல்லதா?” என நிறுத்த,

“ஹ்ம்ம் அவ்ளோ மோசமா எல்லாம் நான் நடந்துக்கல..” என முணுமுணுக்க..

“ஹான் இந்த ஹாஸ்பிடல் MDல இருந்து வாட்ச்மேன் வரைக்கும் எல்லாருக்கும் தெரியும். நீ என்ன கூத்து பண்ணன்றதை..” என்று முறைக்க,

“அதெல்லாம் லவ் அத்த.. அது கூட இல்லாம இருக்குமா? உங்களுக்கு எப்படி லவ் பத்தி தெரியும்..?” என அவரையே கிண்டலடிக்க, அந்த அறைக்கதவை திறந்து கொண்டு பதறிப்போய் வந்தார் மகேஸ்வரி.

“என்ன அண்ணி..?” என மூச்சு வாங்க கேட்க,

‘இவ தான்..’ என தாமரையை கண்ணைக் காட்டி, “இவளைத்தான் இங்க கூப்பிட்டு வராதீங்கன்னு சொன்னேன்ல.. ஏன் கூப்பிட்டு வந்தீங்க. ரிஸ்க் ஃபேக்டர் எல்லாம் சொல்லிட்டேன். தெரிஞ்சும் கவனக் குறைவா இருந்தா என்ன செய்ய.?” என மகேஸ்வரியை வகை தொகையில்லாமல் திட்ட ஆரம்பிக்க, மகேஸ்வரியோ மகளை முறைக்க, தாமரையோ தலையை தொங்க் போட்டு பாவமாக அமர்ந்திருந்தாள்.

“அண்ணி.. எப்படியும் இவ இங்க இருந்து கிளம்ப மாட்டா. இளாவும் டிஸ்சார்ஜ் ஆக ஒரு வாரம் ஆகும். அதுவரை இவளையும் இளா பக்கத்துலயே ஒரு பெட்டை போட்டு சேர்த்து விடுங்க.. என்னால இவளை மேய்க்க முடியல அண்ணி. அசந்த நேரத்துல இங்க வந்து உக்காந்திருக்கா..?” என மகேஸ்வரியும் மகளைத் திட்ட,

“சும்மா என்னைத் திட்டாதீங்க..” என இருவரையும் பார்த்து கத்தியவள், சுமதியிடம் “அம்மா சொல்ற மாதிரி செய்யலாம்ல அத்த.” என இளிக்க..

“அம்மு..” என பல்லைக் கடித்தார் சுமதி.

“அவனுக்கு சர்ஜரி பண்ணிருக்கு.. அப்பப்போ டாக்டர்ஸ் சிஸ்டர்ஸ் வருவாங்க. அட்டெண்டர்ஸ் வருவாங்க. முக்கியமா ட்ரெஸ்ஸிங்க் பண்ணுவாங்க. அதெல்லாம் இன்ஃபெக்ஷன் ஆகும். தேவையில்லாம ரிஸ்க் எடுக்க நான் விரும்பல. மகி நீ இவளைக் கூப்பிட்டு கிளம்பு. இங்க ராணிம்மாவும், அண்ணனும் இருக்கட்டும்..” என்றார் முடிவாக.

“நீங்க தான் இப்போ என்னை குழந்தையாட்டம் ட்ரீட் பண்றீங்க..” என முனங்கினாலும், அமைதியாகிவிட்டாள் தாமரை..

“சரி.. நீ இங்க இரு.. நான் போய் இளாக்கிட்ட சொல்லிட்டு வரேன்..” என மகேஸ்வரி கிளம்ப, தாமரையும் அவரை வால் பிடித்து செல்ல, ‘இது திருந்தாது’ என தலையில் அடித்துக் கொண்ட சுமதிக்கு இளங்கோவை இங்கு கொண்டு வந்த நாள் மனதில் ஓடியது.

அன்று ஆக்சிடென்ட் ஆனதுமே, அவன் காரை இடித்த டெம்போ நிற்காமல் சென்றுவிட, அந்த கட்டிடத்தில் வேலைக்கென தங்கியிருந்த ஆட்கள், சத்தம் கேட்டு ஓடி வந்து குப்புற கிடந்த காரிலிருந்து ஒரு வழியாக இளங்கோவை வெளியே கொண்டு வந்திருந்தனர்.

அதற்குள் ஆம்புலன்சுக்கும் சொல்லியிருக்க, உடனுக்குடனே முதலுதவி கொடுக்கப்பட்டது. இடது காலில் மட்டும் தான் அடி. மத்தபடி வேறெந்த காயங்களும் இருக்கவில்லை.

தண்ணீர் கொடுத்து அவனை சமன் செய்து கொண்டிருந்த நேரம் ஆம்புலன்ஸ் வந்துவிட, அவனே போன் செய்து செல்வத்திற்கு பேசி வைத்தான்.

செல்வமோ உடனே சுமதியிடம் விசாரித்து அவர்க்குத் தெரிந்த மருத்துவமனையில் சேர்க்க வைத்தார்.

வீட்டில் இது பற்றி சொல்லாமல் சுமதியை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் வந்துவிட்டார். அடுத்த மூன்று மணி நேரம் நரகம்தான்.

சர்ஜரி முடிந்து, அடுத்த நாள் காலையில் மிகவும் பாதுகாப்பாகத்தான் தேனிக்கு அழைத்து வந்தார்கள்

அதற்குள் செல்வம் மனைவியிடம் மிகவும் பக்குவமாக எடுத்துச் சொல்லி வர வைத்திருந்தார். முக்கியமாக தாமரைக்கு தெரியக்கூடாது என்றும் சொல்லியிருந்தார்.

கேட்டதில் இருந்து அழுது கொண்டே இருந்த தாயை விசித்திரமாக பார்த்தாள் தாமரை.

“நம்ம சொந்தத்துல ஒருத்தவங்க முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்.” என மகள் கேள்வி கேட்டு குடையும் முன்னே கிளம்பிவிட்டார்.

இளங்கோவை கண்ணால் பார்க்கும் வரை அவர் உயிர் அவரிடம் இல்லை.

“எனக்கு ஒன்னும் இல்ல அத்தம்மா..” என இளங்கோ எவ்வளவோ சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

இங்கு ஷ்யாம் ப்ரீத்தாவிடம் பேச்சு வாக்கில் உளறியிருக்க, அவளோ பதட்டமாக ‘இளா மாமாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்..’ என்று மட்டும் சொல்ல, அந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்திருந்தாள்.

நல்ல வேலையாக அமர்ந்திருந்த கட்டிலிலேயே சாய்ந்திருக்க, அடி எதுவும் படவில்லை.

அவள் மயக்கத்தை தெளிய வைத்து ஹாஸ்பிடல் அழைத்து வருவதற்குள் அனைவரையும் ஒரு வழி செய்துவிட்டாள்.

தன் பெரிய வயிற்றைத் தள்ளிக் கொண்டு, கலைந்த தலையும், அழுத முகமுமாக மருத்துவமனைக்குள் வந்தவளை அனைவரும் பரிதாபமாக பார்த்தனர்.

இளாவின் அறைக்குள் செல்வதற்குள் சுமதி, செல்வம், மகேஸ்வரி, ஷ்யாம் என ஒருத்தரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் திட்டித் தீர்த்திருந்தாள்.

நிச்சயம் இப்படித்தான் ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று தெரிந்துதான் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தான் இளங்கோ.

காலில் தான் அடி என்றாலும் வலி அதிகம் இருப்பது அவன் சுழித்த முகத்திலேயே தெரிந்தது.

அதுவரை ஆர்ப்பாட்டம் செய்தவள், அந்த அறைக்குள் வந்ததும் அமைதியாக அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.

அமைதியாக அழுதவள் ஒரு கட்டத்தில் வெடித்து அழ ஆரம்பிக்க, அந்த சத்தத்தில் தான் கண்ணை திறந்தான் இளங்கோ.

மனைவியின் கோலத்தைப் பார்த்து, அங்கு நின்ற அனைவரையும் முறைத்தவன் “எனக்கு ஒன்னும் இல்ல தாரா.. முதல்ல இப்படி அழறதை நிறுத்து.. மூச்சுப் பிடிச்சிக்கும். பேபிஸ்க்கு கஷ்டம்..” என சமாதானம் செய்ய,

ஆனால் அவளோ நிதானமாக அவனிடம் வந்து, யாரும் என்ன என யோசிக்கும் போதே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“ஏய் என்னடி..” என மகேஸ்வரியும், “அம்மு என்ன பண்ற..?” என செல்வமும் மகளை அதட்ட, அது எதையும் காதில் வாங்கவில்லை தாமரை.

“உனக்கெல்லாம் யாரோட ஃபீலிங்க்சும் புரியாது. எங்க எல்லாரையும் எப்பவும் பயத்துலயே மிரட்டி வச்சிருக்கனும்.. அதுதானே உன்னோட நோக்கம். உனக்காக நாங்க எல்லாம் பைத்தியம் மாதிரி இருந்தா, எங்களை கொஞ்சமும் மதிக்காம உன் விருப்பப்படிதான் இருக்க.. இதுதான் நீ அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சிக்கிறதா? அங்க வீட்டுல அந்த வயசான மனுஷி பயந்து போய் இருக்காங்க. ஆனா உனக்கு ஏன் அந்த கவலை. நீ என்ன செய்யனுமோ செய்.. இனி உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன். என்னோட காதல் உனக்கு எப்பவும் இல்ல..” என பெருங்குரலெடுத்து வாய்க்கு வந்ததை கத்திவிட்டு, வெளியில் சென்றுவிட, இளங்கோதான் எல்லோரையும் பாவமாக பார்த்திருந்தான்.

“அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு.. எல்லாம் உன் இஷ்டம்தான..” என ஷ்யாமும் கத்த,

“ஷ்யாம் சும்மா இரு..” என சுமதி அதட்ட,

“எல்லாரும் சேர்ந்து தான் அவனை கெடுக்குறீங்க..” என அவனும் வெளியில் செல்ல,

“இதுங்களை எல்லாம் திருத்த முடியாது..” என இருவரையும் பார்த்து புலம்பிய சுமதி, தாமரையை வலுக்கட்டாயமாக இழுத்து பிபி செக் செய்தார். அவர் நினைத்தது போலவே அதிகமாக இருக்க, “என்ன செஞ்சிட்டு இருக்க அம்மு? பார் பிபி எவ்ளோ ஹைன்னு.. இது உன் ஹெல்துக்கு நல்லதில்ல. நான் எப்படியும் எய்த் மந்த் வரைக்காச்சும் கொண்டு போயிடலாம்னு நினைக்கிறேன். நீ பண்ற சேட்டைல அது நடக்காது போல..” என கடுமையாக பேச, அமைதியாகவே கேட்டுக் கொண்டாள்.

“இங்க பார் அம்மு.. அவன் பேசினதுனால நீ கஷ்டப்பட்டுட்டு இருப்பன்னு தான் உடனே கிளம்பி வந்துருக்கான். உன்னை சமாதானம் செய்யத்தான் அந்த ராத்திரில வந்துருக்கான். அது புரியாம எதுக்கு இவ்ளோ கோபம்.. அமைதியா அவன்கிட்ட பேசு..” என பொறுமையாக எடுத்து சொல்ல அதையும் அமைதியாகவே கேட்டுக் கொண்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் அவன் அருகில் அமர்ந்திருந்தாள். அங்கிருந்த அனைவரும் ‘இதுவும் இது கோபமும்’ என காரித்துப்பாத குறையாக பார்க்க, அதையெல்லாம் கண்டு கொண்டால்தானே.

இளங்கோவை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவனும் ஏதேதோ பேசி சமாதானம் செய்தாலும், அவள் வாய் திறந்து அவனிடம் பேசவே இல்லை.

இதில் ஷ்யாமையும் விட்டு வைக்கவில்லை. அவனிடம் சண்டையிட்டு பேசுவதில்லை.

அன்றிலிருந்து இப்போது வரை இதே கதைதான். ஆனால் தினமும் வந்து சுமதியிடம் ‘ஏன் முன்னமே சொல்லவில்லை’ என கேட்டு சண்டையிடாமல் சென்றதில்லை.

அதையெல்லாம் நினைத்து பார்த்த சுமதிக்கு தாமரையின் காதலின் ஆழம் புரிந்தது. அவனுக்காக.. அவனுக்காக மட்டுமே அவள் பிறந்தது போல எப்படி நடந்து கொள்கிறாள். தன்னையே அவனுக்கு கொடுத்திருக்கிறாள் என்றால் அந்த காதலின் வலிமை அவருக்கு புரியாமல் இல்லை.

‘என்ன காதலோ..?” என சலித்தபடி அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தார் சுமதி.

இங்கு “டேய் ***** பசங்களா? பணத்தை மட்டும் எண்ணி வாங்க தெரிஞ்சதே, ஒரு ஆக்சிடென்ட் ஒழுங்கா பண்ண தெரிஞ்சதா?” என யாரிடமோ போனில் கத்திக் கொண்டிருந்தார் நாயகி.
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
389
8
28
Hosur
Ha ha rowdy
Natagi sothapita hoom