தாமரை - 57
நாயகிக்கு இந்த ஊருக்கு வந்ததில் இருந்து அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அந்த பெரிய வீட்டையும், சுத்தி இருக்கும் தோட்டம் தோப்புகளை பார்த்து அவருக்கு வயிறெல்லாம் எரிந்தது.
அதிலும் தாமரையை பார்க்க பார்க்க ‘தன் மகள் இருக்க வேண்டிய இடம்’ என்பது மட்டும் தான் மனதில் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது.
தாய்மை பெருக்கோடு அவள் நடந்து வரும் அழகை அவரால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
ப்ரீத்தாவும் அவளோடே ஒட்டிக்கொண்டு அலைவதை கண்டு பல்லைக் கடித்தார்.
அப்படித்தான் அன்று வீட்டில் அனைவரிடமும் தாமரை கோபமாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டார்.
என்ன என்று விசாரித்தால் ‘இளங்கோ பேசியதை சொல்ல, ஏனோ அந்த வார்த்தை நாயகிக்குள் ஒரு பொறித் தட்ட வைத்தது.
‘இது கேட்க நல்லா இருக்கே’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டே என்ன செய்யலாம் என யோசிக்கும் போதுதான், இளங்கோவை கண்காணிக்க என வைத்த ஆளிடமிருந்து அவன் ஊருக்கு வருவது தெரிந்தது.
நொடியில் அந்த திட்டத்தை தீட்டி ஆட்களை ஏற்பாடு செய்தார். ஆனால் உயிர் தப்பி விட்டான்.
இனி அவன் மேல் கை வைப்பது வீண். குழந்தையோடு இருக்கும் தாமரையிடம் தன் வேலையை காட்ட வேண்டியது தான் என்று நினைத்தபடியே அமர்ந்திருக்க, அப்போதுதான் புது எண்ணில் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
‘யார்?’ என யோசித்தபடியே “ஹலோ..” என்றார்.
“என்ன மாமியாரே? எப்படி இருக்கீங்க? சௌக்கியமா?” என்று நக்கல் குரலில் கேட்டது செழியன் தான்.
“செழியா? டேய் செழியா? எங்கடா இருக்க? எங்க போன? இங்க என்னவெல்லாம் நடந்துச்சு தெரியுமா? இப்போ நீ எங்க இருக்க.. சென்னை வந்துட்டியா?” என பரபரப்பாக கேட்க,
“எனக்குத் தெரியாம என்ன இருக்கும்? என் அப்பன் செத்துட்டான் அதான?” என கிண்டலாக கேட்க,
“செழியா நீ என்ன பேசுற? அண்ணா இறந்தது உனக்கு தெரியுமா? எப்படி?” என இப்போது பதட்டமாக கேட்க.
“எப்படி தெரியாம போகும். கொன்னவனுக்கு தெரியாதா?” என சிரித்துக் கொண்டே கேட்க,
“அடப்பாவி… என்னடா சொல்ற? நீயாடா கொன்ன? ஏண்டா கொன்ன? பாவி பாவி நீ நல்லா இருப்பிய.?” என கத்த ஆரம்பிக்க.
“ஷ்ஷ்.. எதுக்கு இந்த கத்துற, பொம்பளன்னா அடக்கம் ஒடுக்கம் வேணும். இப்படி பஜாரி மாதிரி கத்தக் கூடாது, அப்புறம் என்ன கேட்ட நல்லாருப்பியான்னு தான.. ரொம்ப நல்லா இருப்பேன். ஏன் தெரியுமா? ரெண்டு கொலை பண்ண நீயே தும்சு கட்ட மாதிரி இருக்கும் போது, ஒரே ஒரு கொலை செஞ்ச நான் நல்லா இருக்க மாட்டேனா?” என கிண்டல் குரலில் பேச,
“போதும்.. இத்தோட நிறுத்துக்கோ.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது. என்னை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியல. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நக்கல் கிண்டலா பேச மாட்ட..” என நாயகியும் பேச,
“ஷப்பா.. இந்த குண்டு கிழவியோட முடியல..” என சலிப்பாக பேசியவன் “நீ என் அப்பன்கிட்ட கொடுத்து வச்சிருந்த எல்லா டாகுமென்ட்சும் எங்கிட்ட தான் இருக்கு. அதை உங்கிட்ட கொடுக்கனுமா வேண்டாமான்னு நீ எனக்கு செய்யப்போற விசயத்துலதான் இருக்கு..” என நிறுத்த,
“இங்க பார் செழியா? ஒழுங்கா அந்த டாகுமென்ட்ஸ எங்கிட்ட கொடுத்துடு. உன்னை மன்னிச்சு விட்டுடுறேன். தேவையில்லாம என்னை பகைச்சிக்காத..” என்றார் ஆத்திரமாக.
“ஹான்.. அய்யோ கிழவிக்கு கோபமெல்லாம் வருதே..” என கிண்டலடித்தவன் “எனக்கு நீ ஒரு வேலை செய்யனும், அதுக்கு பிறகு இந்த டாகுமென்ட் உனக்குத்தான்..” என பேரம் பேசினான்.
“என்ன வேலை செய்யனும்..” என பட்டென வழிக்கு வந்தார்.
“ஹான்.. சொத்து மேல அவ்ளோ ஆசை…” என்று நக்கலாக கேட்டவன் “ஒரு கொலை பண்ணனும்..” என்றான் தீவிரமாக.
“என்ன கொலையா? பைத்தியமா உனக்கு? அதெல்லாம் பண்ண முடியாது..” என பட்டென்று சொல்ல,
“ஆஹான்.. என்னமோ கொலையே பண்ணாத மாதிரி பேசிட்டு இருக்க குண்டம்மா.. ரெண்டு கொலை பண்ண கொலைகாரிதான நீ.. புதுசா கொலை பண்ண சொன்ன மாதிரி மிரள்ற.. இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேண்டாம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரான்னு நினைப்பு.. நடிக்க வந்துட்டா குந்தானி கிழவி..” என வகையில்லாமல் திட்ட, நாயகிக்கு உண்மையிலேயே தலை சுற்றி மயக்கமே வந்துவிட்டது.
‘இது நிஜமாவே செழியன்தான? இப்படி குண்டம்மா, குந்தாணி கிழவின்னு எல்லாம் திட்டுறான்’ என சந்தேகமும் வந்துவிட்டது.
“ஏய் நயனு இருக்கியா இல்லியா?” என செழியன் கேட்க,
“ஏய் யாருடா நீ? நீ உண்மையிலேயே செழியனா? இல்ல எங்களை ஏமாத்துறியா?” என்றார் கொபமாக.
“அடி குண்டம்மா.. யாரைப் பார்த்து ஏமாத்துறியான்னு கேட்குற, இரு உன் அண்ணன அனுப்பின இடத்துக்கே உன்னையும் அனுப்பறேன். அந்த இளங்கோ வீட்டுலதான இருக்க. அந்த ஊர்லயே வந்து உன்னை கொல்றேன். உன்னோட ரூம்ல பாம்பை விட்டு கொத்த விடுறேன்..” என்னை பார்த்தா எப்படி இருக்கு?” என செழியன் பாட்டுக்கு நிறுத்தாமல் பேச, நாயகிக்கு பயம் வந்துவிட்டது.
“அய்யோ செழியா நான் அப்படி சொல்லல. இப்போ எல்லாம் நிறைய டெக்னாலஜி வந்துடுச்சு. அதை வச்சு யாரும் ஏமாத்துறாங்களோன்னு நினைச்சேன். தப்பா நினைச்சுக்காத. இங்க என்ன நடக்குது தெரியுமா? அந்த ஷ்யாமுக்கும் ப்ரீ குட்டிக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குது. நான் சொல்றதையெல்லாம் யாரும் கேட்குறதே இல்ல. என்னையெல்லாம் ஒரு ஆளா கூட மதிக்க மாட்டேங்கிறாங்க. என்னோட சம்மதம் இங்க யாருக்கும் தேவையில்ல. நீ வந்தா தான் இந்த ஏற்பாட்டை நிறுத்த முடியும்.. உனக்கு ப்ரீ குட்டி வேண்டாமா?” என்று நயமாக பேச, ஒரு நொடி அந்தப் பக்கம் சத்தமே இல்லை.
அந்த ஒரு நொடி மௌனத்தை வைத்து, ப்ரீத்தாவை வைத்து தான் செழியனை மடக்க வேண்டும் என்று நினைத்தார் நாயகி.
“என்ன செழியா உனக்கு கோபம் வருதா? எனக்கும் கோபம் வந்துச்சு. ஆனா என் கோபமோ, மறுப்போ இங்க யாருக்கும் ஒரு பொருட்டாவே தெரியல..?” என நீல் கண்ணீர் வடிக்க,
“இப்போதான சொன்னேன் இப்படி ஓவர் ஆக்டிங்க் பண்ணாதன்னு.. உன் பொண்ணு யார கட்டினா எனக்கென்ன வந்துச்சு. நான் கேட்டதை செய்ய முடியுமா? முடியாதா குந்தாணி..” என செழியன் கோபமாக பேச,
“செழியா நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுற.. கொஞ்சம் நீ நல்லா யோசிச்சுப் பாரு. நீ ப்ரீத்தாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டா, நாம எல்லாம் இந்த சொத்தை வித்துட்டு ஃபாரின் போய் செட்டிலாகிடலாம். என்ன சொல்ற.?” என ஆசை காட்ட,
“அடிங்க் குண்டம்மா.. என்ன விட்டா பேசிட்டே போற. உன்னை கொன்னாத்தான் என் பிரச்சினை சரியாகும் போல. போனா போகட்டும் கொஞ்சம் சொத்த கொடுத்து, உசுரோட விட்டுட்டு போலாம்னு பார்த்தா, அதுக்கு நீ செட்டாக மாட்ட போல..” என அந்தப் பக்கம் கோபமாக கத்த,
“இல்ல.. வேண்டாம் செழியா.. கொலையெல்லாம் வேண்டாம். நீ என்ன செய்ய சொல்றியோ அதை செய்றேன். சொல்லு நான் என்ன செய்யனும்..” என பயந்து போய் கேட்க,
“ஹான் அந்த பயம் இருக்கனும்.. ஆமா அந்த கதிரவனையும், அவன் பொண்டாட்டியையும் எப்படி கொன்ன?” என கேட்க,
“அது.. அதுதான் உனக்கு முன்னாடியே தெரியுமே.. அப்புறம் ஏன் கேட்குற..?” என்றார் குழப்பமாக.
தெரியும் தான் ஆனா அது நீ சொல்லலயில்ல. என் அப்பந்தான சொன்னான். இப்போ உன் வாயால கேட்க ஆசை..” என்றதும்
“அது அதெல்லாம் எதுக்கு செழியா.?” என பயந்தபடியே கேட்க,
“ம்ம் ரொம்ப பயந்த மாதிரி நடிக்காத.. ஒழுங்கா சொல்றியா இல்ல..” என இழுக்க..
“சொல்றேன்.. சொல்றேன்..” என பயந்து, அனைத்தையும் சொல்ல சொல்ல அது ரெகார்டிங்க் ஆகி கொண்டிருந்தது.
“அவ்ளோதான இன்னும் இருக்கா?” என்றான் செழியன்.
“அவ்ளோதான் வேற ஒன்னுமில்ல” என்றதும்,
“எனக்கு உன் மேல நம்பிக்கையே இல்ல.. இதுவே சாதாரணம் போலத்தான் சொல்ற, எனக்கு ஒரு சந்தேகம். என் அம்மா ரொம்ப நல்லவ. இதெல்லாம் தெரிஞ்சு அவ உன் கூடவும், என் அப்பன் கூடவும் சண்டை போட்டாளா? உங்களை மிரட்டினாளா? அதனால அவளையும் கொன்னுட்டியா? நீ செய்யக்கூடிய ஆள்தான். அப்படியா?” என கேட்டு நிறுத்த,
“அய்யோ அப்படியெல்லாம் இல்ல செழியா? அண்ணியை போய் நான் எப்படி? நான் இல்ல..” என பதட்டமாக கூறினாலும், ‘பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி பேசுறானே’ என முகமெல்லாம் வியர்த்து போனது நாயகிக்கு.
“அது மட்டும் உண்மையா இருந்தா யோசிக்கவே மாட்டேன், பெட்ரோல் ஊத்தி கொழுத்திடுவேன்..” என்றவன், “பத்து நிமிசத்துல திருப்பி கூப்பிடுறேன். அதுவரைக்கும் நீ இருக்குற ரூம் விட்டு வெளிய வரக்கூடாது..” என்று மிரட்டி அவள் ‘சரி’ என்று சொன்ன பிறகே போனை வைத்தான் செழியன்.
இந்த உரையாடலை தன் ப்ளூடூத் மூலம் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோவிற்கு ரத்தம் கொதித்தது. முகமெல்லாம் கருத்து உடல் இரும்பென இறுகிப் போனது.
ஹெட் போனில் தான் அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் இளங்கோ. அவனின் பிஏ தான் செழியனின் குரலை வைத்து, நாயகியிடம் பேசியது.
நாயகி கூறிய உண்மைகள் முன்னமே தெரியும் என்றாலும், இப்போது அவரின் வாய் வழியாக கேட்கும் போது, அந்த நொடியே அவரைத் துண்டு துண்டாக வெட்டிப் போடும் அளவிற்கு ரௌத்திரம் பொங்கியது.
ஆனால் தனக்கு எதிரே, தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியை மனதில் வைத்து, முகத்தை சாதாரணமாக வைக்க முயற்சித்தான்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்த தாமரை “என்ன அத்தான்..” என பதட்டமாக கேட்க,
“ம்ச் ஒன்னுமில்ல” என்றான் எரிச்சலாக.
தாமரை கூர்மையாக பார்க்கவும் “வலிக்குது..” என்றான் பொய்யாக.
“வலிக்குதா? எப்போ இருந்து? ஏன் முன்னாடியே சொல்லல..” என பதறியவள், “இருங்க ஷ்யாமை கூப்பிடுறேன்..” என எழுந்திருக்க போக, அவள் கையைப் பிடித்து எழ விடாமல் அமர வைத்தான்.
பின் “பயப்படுற அளவுக்கு பெரிய வலி எல்லாம். பொறுத்துக்குற அளவுக்குத்தான். ஆனா நீ இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணாத. உன்னோட இந்த அன்புக்கும் அக்கறைக்கும் நான் தகுதியில்லாதவன். அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு. நீ என்னை நாலு வார்த்தை திட்டி, அடிச்சு சண்டை போட்டா கூட இந்த குற்றவுணர்ச்சி போகுமோ என்னமோ.. ஆனா நீ இப்படி எனக்காக துடிக்கிறதை, அழறதைப் பார்க்கும் போதுதான் ‘நான் உனக்கு சரியானவன் இல்லன்னு தோனுது. உன் வாழ்க்கையை கெடுத்த என்னை, என்னாலயே மன்னிக்க முடியல.” என்றான் பெரும் துக்கத்தோடு.
தாமரை சற்றும் யோசிக்கவில்லை. “சரி அதுக்கு என்ன செய்யலாம்.? உங்களுக்கு உங்க குற்றவுணர்ச்சி போக நான் ஒரு ஐடியா கொடுக்குறேன். நீங்க ஆரம்பத்துலயே சொன்ன மாதிரி குழந்தைங்க பிறந்ததும் உங்ககிட்ட கொடுத்துடுறேன். நீங்க என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க. உங்களுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இருங்க. அப்போ இந்த குற்றவுணர்ச்சி எல்லாம் இருக்காது..” என அவனைப் பார்த்து நேருக்கு நேராக சொல்லியவள், அந்த அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டாள்.
தாமரையிடமிருந்து கண்டிப்பாக்ட இப்படியொரு பேச்சை எதிர்பார்க்கவில்லை என்று இளங்கோவின் திகைத்த தோற்றமே சொன்னது.
அவன் கூறிய வார்த்தைகள் தான். ஆனால் அது அவளிடமிருந்து வெளிப்படும் போது இதயத்தில் பழுத்த இரும்புக் கம்பியை சொருகியது போல வலித்தது.