• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 58

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,340
556
113
Tirupur
தாமரை - 58

“எதுக்கு இன்னும் என்னை வச்சிருக்கீங்க.?” என்றான் செழியன் எதிரே தெரிந்த சுவற்றைப் பார்த்து..

எப்படி யாரிடம் பேசுவது என்று புரியாமல் சுவற்றைப் பார்த்து பேசினான்.

“நான் தற்கொலை செஞ்சிக்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு. நீங்களே எனக்கு வலிக்காத மாதிரி கொன்னுடுங்க.. இந்த பயத்துலயே என் உயிர் போயிடும் போல..” என்றவனின் குரல் கரகரத்து வந்தது.

அந்த ரூமில் இரண்டு முறை சூசைட் அட்டெம்ப்ட் செய்துவிட்டான். அவனின் பயத்தால் அதை செய்ய முடியவில்லை.

இனி அவர்கள் தன்னை வெளியே விடுவார்கள் என்ற நம்பிக்கையே போயிருந்தது செழியனுக்கு. அதனால் தான் இந்த கேள்வியை சுவற்றைப் பார்த்து கேட்டான்.

தன்னை எப்படியும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயம்.

மீண்டும் “என்னால இந்த பயத்தோட வாழவே முடியாது. ப்ளீஸ் ஏதாச்சும் செய்ங்க..” என மன்றாடினான்.

அப்போது “எங்களுக்கு நீ ஒரு வேலையை முடிச்சுக் கொடுத்தா, உன்னை நாங்க விட்டுடுறோம்..” என்ற குரல் அந்த அறைக்குள் ஒலித்தது.

“நான் என்ன செய்யனும்? என் அப்பா நிஜமாவே இறந்துட்டாரா?” என்றான் வேகமாக, பரிதவிப்பாக.

“ஆமா அதுக்கு காரணம் உங்க அத்தை தான். அவங்க பொண்ணை நீ மிரட்டினது தெரிஞ்சு, உன் அப்பா கூட போய் சண்டை போட்டுருக்காங்க. அவர் நீ அப்படி செஞ்சிருக்க மாட்டன்னு சொல்லி சண்டை கட்டிட்டு திரும்பி வந்துருக்கார். அந்த கோபத்துல உங்க அப்பாவை ஆக்சிடென்ட் பண்ணி கொன்னுட்டாங்க..” என்றது அந்த குரல்.

“அந்த பொம்பளைக்காக நானும் என் அப்பாவும் எவ்ளோ தப்பு செஞ்சிருக்கோம் தெரியுமா? நான் இப்படி பொறுக்கியா மாற அந்த பொம்பளை தான் காரணம். என் அம்மா இருந்திருந்தா என்னை இப்படி தப்பா வளர்த்திருக்க மாட்டாங்கல்ல..” என்றான் வேதனையாக.

“காலம் கடந்த யோசனை. இதனால யாருக்கும் எந்த மாறுதலும் நடக்க போறதில்ல..” என்றது அந்த குரல்.

“உண்மைதான்.. நான் செஞ்ச தப்புகளுக்கான தண்டனையை அனுபவிக்க நான் ரெடியாத்தான் இருக்கேன்..” என்றான் செழியன்.

“ஆனா மூனு கொலை செஞ்சிட்டு, இன்னும் ஒரு கொலை செய்ய ரெடியா இருக்குற உங்க அத்தைக்கு தண்டனை வேண்டாமா? அவங்களை அப்படியே விட்டுடலாமா?” என்றது அந்த குரல்.

“கண்டிப்பா கூடாது. அந்த பொம்பளையை என் கையால கொன்னாதான் என் மனசே ஆறும். ஆனா அதுக்கு முன்னாடி நாங்க செஞ்ச எல்லா தப்பையும் இளங்கோ கிட்ட சொல்லனும். அவனுக்கு நாங்க ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டோம். அதுக்கு பிராயச்சித்தம் தேடனும்..” என்றான் வேதனை படிந்த குரலில்.

சட்டென நினைவு வந்தவனாக ரெண்டு கொலை தான. மூனாவது யாரு? இப்ப யாரை கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்காங்க..” என்றான் யோசனையாக.

“மூனாவது கொலை உன் அம்மா.. இப்ப தாமரை..” என நிதானமாக கூற அதிர்ந்து போனான் செழியன்.

“அம்மாவை.. இவங்களா.. ஆனா உடம்பு முடியாம தான..” என பேசிக் கொண்டிருந்தவனுக்கு யோசனை எங்கெங்கோ செல்ல,

அதை தடுப்பது போல, “நாயகியை கொல்ல எங்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அவ உன் கையால சாகனும். அவங்களை நம்பின உன் அப்பாவை கொன்ன அந்த பொம்பளையை நீ தான் கொல்லனும்..” என்று வந்தது அந்த குரல் ஆவேசமாக.

“என் அம்மாவையும் அப்பாவையும் கொன்னு என்னை அநாதையாக்கின அவளை நான் சும்மா விடமாட்டேன். ஏண்டா என்னை பகைச்சிக்கிட்டோம்னு உயிர் போற வரைத் துடிக்க வைப்பேன். அவ உயிரோட இருக்கவே கூடாது. இருந்தா இன்னும் எத்தனை கொலை செய்வாளோ தெரியாது. அவளெல்லாம் பூமிக்கு பாரம்.” என்று அதே ஆக்ரோசமாக வந்தது செழியனின் குரல்.

“இன்னும் ரெண்டு நாள்ல நீ நாயகியை பார்க்கிறதுக்கு ஏற்பாடு பண்றேன். அவளைப் பார்த்ததும் நீ எங்களை ஏமாத்த நினைச்சா அடுத்த செகன்ட் உன் உயிர் உனக்கு இல்ல..” என்ற குரல், “இனி நல்லா சாப்பிடு..” என்று முடித்து விட்டது.

செழியனுக்கு கோபம்.. கோபம்.. கண்மண் தெரியாத அளவிற்கு பெருங்கோபம். தன் பெற்றோரைக் கொன்ற அந்த சுயநல பேயை கொல்லாமல் அவனால் நிம்மதியாக கண் மூட முடியாது. அவர்கள் சொன்னது போல, அந்த கொலைகாரிக்கு என் கையாலத்தான் அவளோட முடிவு இருக்கனும். துண்டு துண்டாக வெட்டி நாய் நரிக்கும் உணவாக போட வேண்டும். என்று கோபமாகவும், ஆத்திரமாகவும் அந்த அறையில் நடந்து கொண்டிருந்தான்.

அப்போது ஒரு சிறுவன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவன் கையில் உணவு தட்டு இருந்தது. செழியனைப் பார்த்தது புன்னகைத்தான் சிறுவன்.

செழியன் பதிலுக்கு புன்னகைக்கவில்லை. அந்த சிறுவனை ஆராய்ச்சியாக பார்த்தான்.

உணவை மேஜையில் வைத்துவிட்டு, தன் பாக்கெட்டில் இருந்த ஒரு போட்டோவை எடுத்து அவனிடம் காட்டினான். அதில் செழியனின் தந்தை வேறொரு பெண்ணுடன் இருந்தார். கூடவே இந்த சிறுவனும் இருந்தான்.

கண்ணை கசக்கி மீண்டும் பார்த்தான். தான் பார்ப்பது உண்மை என்று அவனுக்கு புரிந்தது.

‘இந்த போட்டோ.. யார் இது?” என காற்றான குரலில் கேட்க,

“இது அம்மா.. இது அப்பா.. இது நான்..?” என்றான் சிறுவன்.

எதிர்பார்த்தது என்பதால் பெரிதாக அதிர்ச்சி ஆகவில்லை. கண்ணை மூடி அதை ஏற்க முயற்சித்தான். தொண்டைக்குள் ஏதோ சிக்கித் தவித்தது.

‘என்னைச் சுற்றி நடக்கும் எதையுமே தெரிந்து கொள்ளாமல், தாந்தோன்றித் தனமாக சுத்தியிருக்கிறோம்.’ என்று தன்னை நினைத்தே அருவருத்துப் போனான்.

தந்தையின் இந்த செயலுக்கு அவன் வருந்தவில்லை. அவனின் தாய் இறந்து பல வருடங்கள் கழித்து தான் வேறு திருமணம் செய்திருக்கிறார். அவரையும் அவர் உணர்வுகளையும் புரிந்து கொண்டான்.

இந்த இருபது நாட்களில் அவனுக்கு பல உண்மைகள் புரிந்தது. எதார்த்தம் தெரிந்தது. எது நல்லது எது கெட்டது புரிந்தது. மனிதர்களை தெரிந்து கொண்டான்.

அதனால் இதையும் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான்.

சிறுவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, அவனுக்கு சமமாக மண்டியிட்டு அமர்ந்து “உன் பேர் என்ன?” என்றான். வரண்டு போன அந்த உதட்டில் சிறு புன்னகை கூட தோன்றியது.

“விஷால்..” என்றான் நெளிந்து கொண்டே..

“உங்க அப்பா, அம்மா பேர்..” என்றான் சிரித்துக் கொண்டே..

“அம்மா பேர் விமலா, அப்பா பேர் நடராஜ்..” என்று சிரித்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டான்.

விஷாலின் செயலில் செழியனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“உங்க அப்பா தான் எனக்கும் அப்பா தெரியுமா?” என்றான் புன்னகையோடு.

“எனக்குத் தெரியும் அப்பா சொல்லிருக்கார்..” என்றான் விஷால்.

“உங்க அம்மா எங்க? நீ எப்படி இங்க வந்த? யார் கூப்பிட்டு வந்தா?” என திடீரென்று பதட்டமாக கேட்டான்.

ஒருவேளை நாயகிக்கு இவர்களை தெரியுமா? அவர்தான் என்னை போல் அவர்களையும் அடைத்து வைத்திருக்கிறாரோ என்று பயந்து போனான்.

“அப்பா சாமிக்கிட்ட போனது எங்களுக்கு தெரியாது. அம்மா அழுதுட்டே அங்க வீட்டுக்கு வந்தாங்க. அங்க யாரும் இல்ல. திடீர்னு ஒரு மாமா எங்க வீட்டுக்கு வந்து எங்களை இங்க கூப்பிட்டு வந்தாங்க. ரொம்ப நல்ல மாமா.. நாங்களும் இங்க வந்து ஃபைவ் டேய்ஸ் ஆச்சு..” என்றது தன் விரல்களையும் காட்டி.

“ஸாரி.. எனக்கு உங்களைப் பத்தி தெரியாது.. நான் உங்க அம்மாவை பார்க்கலாமா?” என்றான் வேதனையோடு.

“அம்மா உங்க கூட இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டாங்க. அங்க இருக்குற எங்க பொருள் எல்லாம் எடுத்துட்டு வருவாங்க. அதுவரைக்கும் நான் உங்களை பார்த்துக்குறேன்..” என்றான் பெரிய மனிதனாக.

விஷாலின் ஒவ்வொரு செயலும், செழியனின் வரண்டு போன இதயத்தில் மழைத்துளிகளாக வந்து விழுந்தது.

“ம்ம்.. சரி நான் இருக்குற வரை நீயே என்னை பார்த்துக்கோ.. எனக்கு இங்க தனியா இருக்க பயம்.. இப்போ நீ வரவும் தான் அந்த பயமே போச்சு..” என பேசிக் கொண்டே அவனைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான்.

இனி இவர்கள் தான் தன் உறவு என்று எண்ணி விட்டானோ?

“பாஸ்.. என்ன இவன் திருந்திட்டானா?” என இலங்கோவின் காதை கடித்தான் அவனின் பிஏ நவீன்.

“ம்ச்.. நவீன்..” என அதட்ட,

“இப்போ எதுக்கு சாகப் போறவனுக்கு ஃபீலிங்க்ஸை ஆஎத்தி விடுறீங்க..” என்றான் குழப்பமாக.

“வாழற ஆசையை ஏத்திவிட்டு, போட்டதான்டா கிக்கா இருக்கும்..” என்றான் இளங்கோ.

“இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு..” என்றவன் “அந்த குண்டம்மாவை என்ன செய்ய?” என்றான் நவீன்.

“ஆமா கேட்கனும் நினைச்சேன்.. ஏண்டா அந்த பொம்பளையை மிரட்ட சொன்னா உன் வன்மத்தையெல்லாம் கக்கி வச்சிருக்க, குண்டாத்தி, குண்டம்மா, நயனு எத்தன பேர் வச்சி திட்டுற..” என்றான் சிரிப்போடு.

“பின்ன அந்த குண்டாத்தி எப்படி இருக்கு.. நல்லா ஊட்டி உருளக்கிழங்கு மாதிரி இருக்கு. உருட்டிவிட்டா நிக்காம உருளும். அதை சொல்லாம எப்படி விட..” என்றான் நவீன்.

“நீ பேசினதை கேட்டு சிரிக்காம இருக்க எவ்ளோ ட்ரை பண்ண வேண்டியதா போச்சு. எதிர்ல உர்ருனு என் பொண்டாட்டி வேற. இன்னொரு தடவை இப்படி பேசாத. சீரியசா ஹேன்டில் பண்ணு..” என ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக கூற,

“ம்ம் சரிங்க பாஸ்.. அந்த விமலாவை என்ன செய்ய?”

“ஒரு ரெண்டு நாள் மூனு பேரும் குடும்பமா இருக்கட்டும். அப்புறம் முடிச்சிடலாம்..” என்ற நேரம் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது.

“பாஸ்.. ஆனாலும் உங்க மேடத்துக்கு உங்க மேல இவ்ளோ லவ் இருக்கக்கூடாது..” என்று புலம்ப,

“மூடிட்டு போய் யாருன்னு பாருடா? அவக்கிட்ட எவ்ளோ வாங்கினாலும் அடங்கமாட்ட..” என திட்ட, அதையெல்லாம் தூசு என்பது போல் தோளை குலுக்கிக் கொண்டு கதவைத் திறக்க, மகேஸ்வரி நின்றிருந்தார்.

இருவருக்கும் காஃபி இருக்க, “கொடுங்க மேடம் நான் எடுத்துக்குறேன். எங்க தாமரை மேடம் தான் கட்டையோட நிக்கிறாங்களோன்னு பயந்துட்டே திறந்தேன்..” என்றதும், மகேஸ்வரியும் இளங்கோவும் சிரித்து விட்டார்கள்.

பின்னே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போகலாம் என்றதும், இவனையும் சென்னையில் இருந்து தேனிக்கு வர வைத்து விட்டான் இளங்கோ..

காலையிலேயே பெட்டியோடு வந்து நின்ற நவீனை அடிக்காத குறையாக அத்தனை கேள்விகள் கேட்டுத்தான் வீட்டுக்குள்ளே விட்டாள் தாமரை.

அதோடு இல்லாமல் இளாவிடமும் “ரெஸ்ட் எடுத்துட்டுத்தான் வேலை செய்யனும்.. இவரை செய்ய சொல்லுங்க. இவர் சும்மாத்தான இருப்பார்.” என மிரட்டிவிட்டு கண்டிஷன் போட்டு சென்றிருந்தாள்.

‘சிரிங்க சிரிங்க.. என் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குது, என்ன செய்ய?” என புலம்பியபடியே காஃபியைக் குடிக்க, மகேஸ்வரி சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

இளங்கோவிற்குத்தான் தாமரையை நினைத்து கலக்கமாகவே இருந்தது. அன்று மருத்துவமனையில் பேசிய பிறகு, அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் தன்னியல்பாய் சுற்றுபவளைப் பார்க்க பார்க்க பயம் வந்தது.

ஒருவேளை சொன்னதை செய்து விடுவாளோ? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது இளங்கோவிற்கு..