தாமரை - 60
“இன்னும் என்ன தான் டி பிரச்சினை..?” என ப்ரீத்தாவைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவன் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது.
சீனியிடம் சொல்லிவிட்டு கிளம்பிய அடுத்த இரண்டு ஒரு நேரத்தில் சின்னமனூரைத் தாண்டி மேகமலையை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது அவர்களின் கார்.
இவர்கள் போய் திரும்ப எப்படியும் மாலை ஆகிவிடும் தான். ஆனாலும் அவனுக்கு இங்கே போயே ஆக வேண்டும் என்று தோன்ற அவளையும் இழுத்து வந்துவிட்டான்.
மலை ஏறும் முன்னே தென்பழனி ஸ்ரீ வழி விடும் முருகன் கோவிலில் வண்டியை நிறுத்தினான். கோவிலுக்குள் செல்லும் போது இந்த மனஸ்தாபங்களுடன் செல்லக்கூடாது என்பதால் தான் அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்த ஒரு மணி நேர பயணத்தில் அவள் வாயையேத் திறக்கவில்லை. அந்த கடுப்பில் தான் கத்திக் கொண்டிருந்தான்.
“ப்ரீத்தா எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.. என்னை நீ ரொம்ப சோதிக்கிற..?” என்றதும் தான் சற்று அசைந்தாள் பெண்.
“எனக்கு இப்போ எந்த கோபமும், வருத்தமும் இல்ல. ஆனா இது வேற..” என்று நிறுத்தினாள்.
ஷ்யாமும் ‘இன்னு என்ன புதுசா?’ என திடுக்கிட்டுத் தான் பார்த்தான்.
“அம்மா தான்.. அம்மா இவ்ளோ அமைதியா இருக்கிற ஆளே இல்ல. நடராஜ் மாமா இறந்தது, செழியன் மிஸ்ஸிங்க் இந்த விசயங்கள் எதையுமே அவங்க சீரியசா எடுத்துக்கிட்ட போல தெரியல. ஒருவேளை மாமாவை அவங்கதான் ஆக்சிடென்ட் பண்ணாங்களோன்னு டவுட்டா இருக்கு. ஆனா அப்படி இருக்காதுன்னும் தோனுது. மாமா இறந்த ரெண்டு நாள் தான் செழியனைப் பத்தி கேட்டாங்க. அடுத்து அதை அவங்க யோசிச்ச மாதிரி கூட தெரியல. எனக்கு இதெல்லாம் யோசிக்காம இருக்க முடியல. இவங்க அமைதியா இருந்தாலே, பெருசா ஏதோ ப்ளான் பண்றாங்களோன்னு பயமா இருக்கு..” என்று தன் மனதை குடைந்து கொண்டிருந்ததை சொல்லி விட்டாள்.
“ம்ச்.. நான் தான் சொன்னேன்ல்ல.. நீ இவ்ளோ யோசிக்காத. எல்லாம் இளா பார்த்துப்பான். அவனைத் தாண்டிதான் உன்கிட்ட வரும். அவனை நீங்க எல்லாம் ரொம்ப சாதாரணமா நினைக்கிறீங்க. ஆனா அவன் அப்படி கிடையாது. இந்த வயசுல இவ்ளோ அச்சிவ் பண்றது ஈசி கிடையாது.” என்றதும் ப்ரீத்தாவின் பார்வை அவனை யோசனையாக விழுந்தது.
“அப்படி பார்க்காத. என்னோட ப்ரஃபஷனே வேற, அதோட என் ஃபேமிலி பேக் கிரவுண்ட் வேற. எங்க ஃபேமிலில எல்லாரும் டாக்டர். அவங்க பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா போட்டு வச்சிருக்காங்க. நான் அதை ஈசியா ஹேன்டில் பண்ணிட்டு போய்டுவேன்.
ஆனா இளாவுக்கு அப்படி இல்ல. பிசினஸ்ல எப்பவும் அப்டேட்டா இருக்கனும். அவங்க அப்பா இறந்த பிறகு முழு பிசினசையும் உங்க அப்பா பார்த்தார். நஸ்டம் கொடுக்கல. ஆனா லாபத்துலயும் கொண்டு போகல. பெருசா பிரச்சினையில மாட்டிற கூடாதுனு, உங்க அப்பா எந்த ரிஸ்கும் எடுக்காம பிசினஸ் பண்ணார். ஆனா இளா அதை டேக் ஓவர் பண்ண பிறகு, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். அவனுக்கு என்னதான் எல்லாம் இருந்தாலும், எல்லாமே புதுசு இல்லையா? ஆரம்பத்துல எதுவும் புரியாம, தவிச்சு நிறைய கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு கொண்டு வந்திருக்கான். ஃபேமிலி பிசினஸ் இல்லாம அவன் தனியாவும் பண்றான்.”
“அவங்க அப்பா சிங்கப்பூர் மட்டும் தான் பண்ணார். ஆனா அதை க்ளோஸ் பண்ணிட்டார் உங்க அப்பா. உங்க பாட்டியும் அதுக்கு பெருசா எந்த ஆட்சேபனையும் கொடுக்கல. ஒரு பிசினஸை, அதுவும் தமிழ்நாட்டுல இருந்து வெளிநாட்டுக்கு ஒரு பிசினசை லாஞ்ச் பண்றது சாதாரண விசயம் இல்ல. அதை கதிர் அப்பா ரொம்ப ஈசியா பண்ணார். அவரோட தொழில் ஆர்வம் அப்படி. ஆனா அதை உங்க அப்பா ரொம்ப ஈசியா மூடிட்டார். அந்த வேதனை இளாவுக்கு இப்போவும் இருக்கு. என்ன வெளிய காமிச்சிக்க மாட்டான். உங்க அப்பாவுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அது சரியாவும் இருக்கலாம். ஆனா கதிர் அப்பாவை யோசிச்சிருந்தா கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டார்.”
“இந்த ஜெர்மனி ப்ராஜெக்டுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டான்னு உனக்கே தெரியும்ல. அந்த ப்ராஜக்ட் மட்டும் சக்ஸஸ் ஆகிடுச்சுன்னா கண்டிப்பா வேற லெவல்ல அச்சிவ் பண்ணுவான். அதெல்லாம் அவனுக்கு தெரியாம இருக்குமா? ஆனா அதையெல்லாம் மொத்தமா விட்டுட்டு இங்க வர்ரேன்னு முடிவெடுக்குறான்னா யோசிக்காம செய்ய மாட்டான்..” என நிறுத்த, ப்ரீத்தாவுக்கு என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை.
“நீ இப்படி எப்பவும் யோசிக்காத. கண்டிப்பா இளா எல்லாத்தையும் கவனிச்சிட்டுத் தான் இருப்பான். எப்போ என்ன செய்யனுமோ அதை செய்வான். இப்போ நமக்கு இதெல்லாம் முக்கியம் கிடையாது. தாமரையோட டெலிவரிதான் முக்கியம். அவ நல்லபடியா குழந்தை பெத்து வரனும். அது மட்டும் தான் நமக்கு முக்கியம்..” என நிறுத்த, காரணம் இல்லாமல் ஷ்யாம் இதை சொல்ல மாட்டான் என தோன்ற ‘சரி ‘ என்பது போல் மட்டும் தலையை ஆட்டிக் கொண்டாள்.
அப்போதுதான் சுற்றியும் பார்த்தாள். ஒரு கோவிலின் அருகில் அவர்களின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் பச்சை பசேல் என்று இயற்கை கொடுத்த அதிசயத்தின் மத்தியில் அமர்ந்திருந்தது அந்த சிறிய முருகன் கோவில்.
அதைப் பார்த்ததும் ப்ரீத்தாவின் விழிகள் விரிய, வேகமாய் கதவைத் திறந்து இறங்கினாள்.
அவளது வியப்பை கண்டு ரசித்தபடியே இறங்கினான் ஷ்யாம். இது ‘வழி விடும் முருகன் கோவில்’ இந்த கோவில் தாண்டி தான் மேகமலைக்கு போகனும். மேகமலைக்கு போற எல்லாரும் தங்களோட பயணங்கள் எந்த பிரச்சினையும் இல்லாம, எல்லாத்துக்கும் நல்ல வழியை அமைச்சுக் கொடுன்னு வேண்டிட்டுத்தான் போவாங்க. அது இங்க எல்லாருக்கும் அப்படி ஒரு நம்பிக்கை இருக்கு. பயணத்துக்கு மட்டுமில்ல நம்ம வாழ்க்கையிலயும் எந்தவிதமான தடைகள் இருந்தாலும், அதை தகர்த்து வழி கொடுன்னு வேண்டிக்கலாம். கண்டிப்பா வழி கொடுப்பார் முருகன்..’ என்றான் ஷ்யாம்.
இவற்றை சொல்லும் போது அவன் குரலே உணர்ச்சி வசப்பட்டிருந்தது. நிச்சயம் அவன் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அதிசயத்தை நடத்திருப்பார். அதனால் தான் இத்தனை உனர்ச்சி வசப்படுகிறான் என்று அவளுக்கு புரிந்தது.
அது உண்மை தான் என்பது போல, “அம்முவுக்கு இந்த முருகன் ரொம்ப ஸ்பெஷல். நானும் அம்முவும் ஒருநாள் ஜஸ்ட் இங்க ட்ரெக்கிங்க் போலாம்னு வந்தோம். அப்போ இந்த கோவிலைப் பார்த்து கும்பிட்டோம். அப்போ ஒரு பாட்டி எங்களை லவர்ஸ் ன்னு நினைச்சு ‘இங்க வந்துட்டு வேண்டிட்டு போறீங்கள்ள, சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு’ சொன்னாங்க. எனக்கு சிரிப்பு வந்தது. சிரிச்சிட்டே நாங்க அண்ணா தங்கச்சின்னு சொன்னேன். அதனால என்ன தம்பி ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும். உனக்கு நீ விரும்பின பொண்ணு கூட, உன் தங்கச்சிக்கு அவ விரும்பின பையனோடன்னு அவங்களும் சிரிச்சிட்டே சொன்னாங்க.
ஆனா அதை இந்த பைத்தியக்காரி சீரியசா எடுத்துட்டு ‘நிஜமாவா பாட்டின்னு’ கேட்க, அவங்களும் கண்டிப்பா தாயி, மனசார வேண்டி சஷ்டிக்கு விரதம் இரு. நிச்சயமா நடக்கும் சொன்னாங்க.
அதுல இருந்து மாசம் மாசம் ஷஸ்டிக்கு இங்க வந்துடுவா. ஏழு நாள் ஷஸ்டிக்கும் அப்படித்தான். அத்தைக்கு அப்போதான் அம்முவோட தீவிரமே தெரிஞ்சது.
நடக்கவே நடக்காதுன்னு இருந்த அவ கல்யாணம் நடந்தது. இந்த முருகனோட அதிசயத்தால தான்னு நம்பிக்கை அவளுக்கு. அவளுக்கு மட்டும் இல்ல, எனக்குமே அப்படித்தான் தோனுச்சு..
ஷ்யாம் சொல்ல சொல்ல ப்ரீத்தாவின் முகம் கதை கேட்கும் பாவனையில் இருந்து அதிசயத்தை கேட்கும் பாவனைக்கு வந்திருந்தது.
அதை உணர்ந்தவன் “ஹேய் இப்போ ஏன் இப்படி பார்க்கிற?” என சிரிக்க,
“ஹான்.. உங்க ரெண்டு பேருக்குள்ள நிறைய ரகசியம் இருக்கு..” என அவளும் சிரிக்க,
“ம்ம் இதெல்லாம் ஒருநாள் இளாக்கிட்ட சொன்னேன். சொல்லிருக்கக்கூடாதுனு அப்போதான் தோனுச்சு. ஏற்கனவே குற்றவுணர்ச்சியில இருந்தவனை இதை சொல்லி இன்னும் அந்த குற்றவுணர்ச்சியை அதிகமாக்கிட்டேன் நான்..” என்றான் கவலையாக.
“அதுக்கு என்ன செய்ய முடியும். இதெல்லாம் அவருக்கு தெரியத்தானே வேணும்.” என்றவள், பேச்சை மாற்றும் பொருட்டு “இப்போ என்ன வேண்டுதல் உங்களுக்கு?” என்றாள் சிரிப்புடன்.
“ம்ம்ம் இப்போ ரெண்டு வேண்டுதல்.. ஒன்னு என் பொண்டாட்டிக்கு சீக்கிரம் நல்ல புத்தியைக் கொடுக்கனும். ரெண்டு என் அம்முவுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனும்னு வேண்டிக்க போறேன்..” என அவனும் சிரிக்க..
“ஓ.. அப்போ நான் புத்தி கெட்டவன்னு சொல்றியா?” என்றவளுக்கு கோபமே இல்லை.
“அதை இல்லைன்னு வேற சொல்லுவியா?” என்றவன், அவள் கைகளைப் பிடித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றான்.
மிகவும் சிறிய கோவில்தான். ஆனால் கூட்டம் அதிகாமாக இருந்தது. “இன்னைக்கு கிருத்திகை. அதோட டூரிஸ்ட் எல்லாம் இங்க கும்பிடாம போக மாட்டாங்க. அதனால தான் கூட்டம்..” என்றபடியே கூட்டத்தில் இடிபடாமல் பாதுகாப்பாக அவளை அழைத்துச் சென்றான்.
அவன் இழுத்த இ்ழுப்பிற்கு சென்றவளுக்கு, இங்கு வரும் வரை இருந்த மனப் போராட்டங்கள் எதுவும் இப்போது பெண்ணவளின் மனதில் இல்லை. மிகவும் நிர்மலமாக இருந்தது.
இருக்கும் இந்த நொடியை அவனோடு ரசித்து அனுபவித்து வாழும் ஆசை சட்டென மரம் போல் வளர்ந்து நின்றது.
எந்த வேண்டுதலும் இல்லாமல் மனதார முருகனை தரிசித்து வெளியில் வந்தார்கள்.
மணியை பார்க்க, "இப்பவே ஒன் தர்டி.. இனி போய் ரிட்டர்ன் வரது கஷ்டம். யானை நடமாட்டம் இருக்கும். இங்க பக்கத்துல ரெண்டு ஃபால்ஸ் இருக்கு. அங்க மட்டும் போய்ட்டு கிளம்பலாம். இன்னொரு நாள் ஏர்லியா வரலாம்..” என்றான் அவளிடம்.
“ம்ம் ஓக்கே..” என்றவளுக்கு அவன் என்ன சொன்னாலும் சரியென்று சொல்லும் மனநிலை தான். அதை அவனும் உணர்ந்து கொள்ள, மனம் உல்லாசமாய் விரிய, அதே மனநிலையில் காரை எடுத்தான் ஷ்யாம்.
இங்கு பத்து நிமிடத்தில் திருப்பி அழைக்கிறேன் என்று கூறிய செழியன் இரண்டு நாட்களாகியும் அழைக்கவில்லை என்ற பயத்திலேயே சுத்திக் கொண்டிருந்தார் நாயகி.
இங்கிருக்கவே எரிச்சல் வந்தது. இதே சென்னை என்றால் அவர் இந்த பிரச்சினையை எப்போதோ முடித்திருப்பார்.
‘இந்த இளங்கோ இப்படி ஒரு பட்டிக்காட்டுல கொண்டு வந்து அடைச்சி வச்ச மாதிரி வச்சிருக்கானே’ என புலம்பிக் கொண்டே செழியனின் போனுக்காக காத்திருந்தார்.
அப்போது தாமரை தனியாக பின் கட்டுப் பக்கம் செல்வதை கவனித்தார்.
தன் பெரிய வயிற்றைத் தள்ளிக் கொண்டு மெதுவாக சுவற்றைப் பிடித்தபடி நடந்து செல்பவளைப் பார்க்கும் போதே நாயகியின் கண்களில் குரோதம் மின்னி மறைந்தது.
ஒரு முறை வீட்டைச் சுற்றி பார்த்தார். யாரும் வீட்டிற்குள் இருப்பது போல் தெரியவில்லை. கண்களில் குரோதம் மின்ன, இதழ்களோ ஏளனமாக வளைய, ‘இன்னைக்கு இந்த மூனு டிக்கெட்டும் காலி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவளுக்கு பின்னால் மெதுவாக நடந்தார்.
நாயகி அந்த ஹாலை கடந்து பின் பக்கம் செல்லும் போது, அந்த ஹாலில் மாட்டியிருந்த லட்சுமியின் புகைப்படம் காற்றில் ஆடி அதில் மாட்டப்பட்டிருந்த சந்தண மாலை கீழே விழுந்தது.
இது ஏதோ அபசகுணமா? தெரியவில்லையே!