தாமரை - 64
“உங்களை அங்க கூப்பிட்டு போக முடியாது. நான் ரெண்டு நாள்ல இங்க வந்துடுவேன். நமக்கு இங்க இனி வேலை இல்ல, எல்லாம் ரெடியா இருக்கு. ஒரு வாரத்துல நாம கேரளா போறோம். என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் அங்க இருக்காங்க. வீடு எல்லாம் ரெடி. முதல்ல அங்க போகலாம். அப்புறம் வேற யோசிப்போம்..” என்ற செழியனை கவலையாக பார்த்தார்.
“எனக்கு ஒன்னும் ஆகாது. நான் வந்துடுவேன்.” என்றவனுக்கு, திரும்பி வரும் வரை எந்த நம்பிக்கையும் இல்லை.
திடீரென முதல் நாள் இரவு செழியனை அழைத்து, நாயகியை பார்க்க வர சொல்லி விட்டார்கள்.
எதிர்பார்த்த வேலைதான். ஆனால் இவர்களை தனியாக விட்டு போவது பயமாக இருந்தது. நேற்று இரவு வரை இளங்கோதான் இவையனைத்தையும் செய்கிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.
தெரிந்த பிறகு கோபமும் வரவில்லை. தனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்திருப்பதாகவே தான் நினைத்தான். அதோடு அவனுக்குமே மன்னிப்பு கேட்க வேண்டும்.
செய்த தவறுகளின் வீரியம் அவனைத் தூங்க விடவில்லை. அதனால் இளங்கோவிடமும் முடிந்தால் தாமரை ம்டரும் ப்ரீத்தாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
ப்ரீத்தா என்று நினைக்கவுமே தன் காதல் கானலாய் போனதை எண்ணி இதயம் ரணமாய் வலித்தது.
எத்தனையோ தவறுகளை செய்திருக்கிறான். ஆனால் ப்ரீத்தாவை உண்மையாக நேசித்தான். இனி அவன் வாழ்க்கையில் ப்ரீத்தா இல்லை என்ற உண்மை விசமாக இறங்கியது அவனுள்..
அந்த நொடியை கடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது செழியனுக்கு..
ஆனாலும் கடக்கத்தானே வேண்டும்.. இனி அவனுக்கான உலகம் இவர்கள்தானே.. இவர்களுக்காக அனைத்தையும் மறந்து, மறைத்து வாழ வேண்டுமே..
“விசு கண்ணா.. அன்னைக்கு அம்மா வர வரை என்னை பார்த்துக்கிட்ட மாதிரி நான் வரும் வரை அம்மாவை பத்திரமா பார்த்துக்கனும் சரியா..” என்றான் தன் குட்டித் தம்பியைத் தூக்கிப் போட்டு..
“ம்ம்.. நான் பிக் பாய் ஆகிட்டேன்..” என்று சிரிக்க, மற்றவர்களும் அந்த சிரிப்பில் இனைந்து கொண்டார்கள்.
அவர்களிடம் சொல்லிக் கொண்டு வர, செழியனின் காரே அந்த வீட்டின் முன் நின்றது. பல நாட்களுக்குப் பிறகு, சொல்லப் போனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளி உலகைப் பார்க்கிறான்.
கண்கள் கூச வைத்தாலும் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். அனைத்தும் புதிதாக இருந்தது.
“ஸார்.. தேனி போனதும் இளங்கோ சாருக்கு கால் பண்ண சொன்னாங்க. இது நீங்க தங்க வேண்டிய ஹோடல் டீடைல்ஸ்.. வேற எந்த் பிரச்சினை என்றாலும், நீங்க உடனே நவீன் சாருக்கு கால் பண்ணிடுங்க.. இவங்க பத்திரமா இருப்பாங்க..” என்று ஒருவன் வந்து கார் சாவியைக் கொடுக்க, வாங்கிக் கொண்ட செழியன் சிறு புன்னகையுடன் கிளம்பிவிட்டான்.
இங்கு நாயகியை அவசரப் பிரிவில் வைத்திருந்தனர். தலையில் அடிபட்டு ரத்தம் அதிகம் போய்விட்டது, அதனால் மயக்கத்தில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டான் ஷ்யாம்.
சுமதியை இங்கு விடவே இல்லை ஷ்யாம். சீனிக்கும் மனைவியின் நிலை பார்க்க கஷ்டமாக இருந்தது. ப்ரீத்தா வேறு அழுது கொண்டே இருக்க, வசந்தியும் ராணியும் தான் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
இளங்கோவும், தாமரையும் வீட்டில் இருக்க, அவர்களுக்குத் துணையாக மகேஸ்வரி இருந்தார்.
அவரிடம் உண்மையை சொல்லி விடலாம் என தாமரை கூற, வேண்டவே வேண்டாம் என இளங்கோ மறுக்க என சிறு சண்டை அவர்களுக்குள்..
“இனிமேலாச்சும் அவங்க நிம்மதியா இருக்கட்டும். சில உண்மைகள் தெரியாமல் இருக்குறது தான் நல்லது..” என மனைவியை அடக்கியிருந்தான்.
“இங்கு யாரும் இருக்க வேண்டாம்..” என அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டான் ஷ்யாம்.
தயங்கி நின்ற சீனியிடம் “அங்கிள் அவங்க கண் முழிக்கவே நாளைக்கு ஆகும். இங்க இருந்து என்ன செய்ய போறீங்க. நர்ஸ் இருக்காங்க, நான் இருக்கேன் பார்த்துக்கிறேன்..” என்று விட, அனைவரும் கிளம்பிவிட்டனர்.
தனியாக ப்ரீத்தாவிடம் “அங்கிள பார் ரீத்து.. இப்போ நீ தான் அவருக்கு ஆறுதல் சொல்லனும்.. நீயே உடைஞ்சிட்டா, அவரை யார் தேத்துவா.. அவங்களுக்கு ஒன்னும் இல்ல. வந்துடுவாங்க..” என்று அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.
அனைவரும் சென்ற பிறகு நாயகியின் அறைக்குள் வந்தான் ஷ்யாம். தன் பேக்கட்டில் இருந்த இஞ்செக்ஷனை எடுத்து பார்த்தவனுக்கு விழிகளில் ரௌத்திரம் பொங்கியது.
தாமரையின் அழுகை கண் முன் வந்து போனது. ஒரு மருத்துவனாக தன் தொழிலுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது. ஆனால் பணத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு செல்லும் இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு செய்தால் தப்பில்லை என்றுதான் தோண்றியது.
மருந்தை ஊசியில் ஏற்றிவிட்டு, நாயகியின் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான். சில நிமிடங்களிலேயே நாயகி கண் விழிக்க, அவரைப் பார்த்து புன்னகைத்தவாறே ‘இப்போ எப்படி இருக்கு ஆன்டி?’ என்றான்.
“ம்ம்.. வலி இருக்கு..” என்றார் முனங்கலாக.
“கண்டிப்பா இருக்கும் ஆன்டி. இஞ்செக்சன் போடுறேன். அரை மணி நேரத்துல கொஞ்சம் பெட்டரா ஃபீலாகும்..” என்றவன் அங்கிருந்த ஊசியை எடுக்க, அதைப் பார்த்த நாயகியின் விழிகள் பயத்தில் விரிந்தது.
“இது என்ன?” என அவர் திக்க,
“கையை ஆட்ட்டாதீங்க ஆன்டி..” என வென்ஃப்லான் மாட்டியிருந்த ஊசியிலேயே அந்த மருந்தை செலுத்தினான் ஷ்யாம்.
“ஊசின்னா பயமா ஆன்டி..” என சிரிக்க,
‘இல்ல’ என்பது போல் தலையாட்டியவர், “அந்த ஊசி ஏன் இந்த கலர்ல இருக்கு?’ என்றார் திக்கியபடியே.
“ஏன் ஆன்டி..” என்று பதில் சொல்லாமல், பதில் கேள்வி கேட்டவனைப் பார்த்து முறைத்தார் நாயகி.
“ஹ்ம்ம்.. எவ்ளோ பட்டாலும் இந்த திமிர் மட்டும் குறையாது என்ன.?” என காலை அகட்டி நின்று கையைக் கட்டி அவரை கூர்மையாக பார்த்தான்.
செழியனோட அம்மாவுக்கு என்ன ஊசி போட்டன்னு ஞாபகம் வந்துடுச்சோ.?” என்றான் திமிறாக.
அதில் நாயகி அதிர்ந்து பார்க்க, “என்ன உண்மையை சொல்லிட்டேனா.?” என்றான் கிண்டலாக.
“உனக்கு எப்படி தெரியும்? அப்போ செழியனை நீதான் வச்சிருக்கியா? இல்ல இல்ல இளா.. அவன்தான. அப்போ அவனுக்கு எல்லாம் தெரியும் அப்படித்தான..” என்றவரின் புத்திசாலித்தனத்தை மெச்சுதலாக பார்த்தான் ஷ்யாம்.
“இந்த ஊசி போட்ட கொஞ்ச நேரத்துல மயக்கம் வரும். வலது கையும், இடது காலும் செயல் இழந்து போய்டும். அப்புறம் பார்வை மங்கும். காது கேட்காம போயிடும். மூச்சு விட கஷ்டமா இருக்கும். வயிறு வலிக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மூளை இறந்து போயிடும்..” என்று ரசனையாக சொல்ல, நாயகியின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
அவருக்குத்தான் இது தெரியுமே.. இந்த ஊசியை போடும் போது இதே வார்த்தைகளைத்தானே தன் அண்ணியைப் பார்த்து ஏளனமாக சொன்னார் நாயகி.
“இதை நீ ஏன் செய்ற? என் பொண்ணை உனக்கு கொடுக்கலன்னா என்னை கொல்லுவியா? செழியனுக்கே ஏன் என் அண்ணனுக்கே தெரியாது. உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று கத்த ஆரம்பித்தார்.
“ஷ்ஷ்.. இப்பவே எனக்கு சங்கு சத்தம் கேட்குது.. உனக்கு கேட்குதா?” என்றான் நக்கலாக.
“வேண்டாம் எங்கிட்ட வச்சுக்காத.. என்னைப்பத்தி உங்க யாருக்கும் தெரியல.?” என ஆங்காரமாக கத்த,
“ச்சே.. நீ தான் உண்மையான வில்லி.. பாரு எப்படியாவது என்னை காப்பாத்துன்னு கெஞ்சாம, எங்களையே மிரட்டுறியே.. ஹ்ம்ம் உன்னை பாராட்டியே ஆகனும். ஆனா இப்போ அதுக்கு நேரமில்ல..” என அவன் திரும்ப,
“ப்ளீஸ் டாக்டர் என்னை எப்படியாவது காப்பாத்தி விடுங்க.. என் பொண்ணை உங்களுக்கே கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்..” என்ற போதே அவர் வாய் ஒருபக்கம் கோணி விட்டது..
அதைப் பார்த்தபடியே இளங்கோவிற்கு அழைத்து “மச்சான்.. என் மாமியாருக்கு அவங்க உயிர் போறதுக்குள்ள எங்க கல்யாணத்தை பார்த்தே ஆகனுமாம் டா.. நீ என்ன பண்ற, வீட்டுல என்ன பேசுவியோ தெரியாது. எல்லாரையும் சம்மதிக்க வச்சு கூப்பிட்டு வர, இன்னைக்கு எங்க கல்யாணம் நடந்தே ஆகனும்..” என்றுவிட, நாயகிக்கு பேச்சு வரவில்லை. கண்களில் தன் கோபத்தையும் மறுப்பையும் காட்ட,
“இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த கண்ணும் தெரியாது மாமியாரே.. அப்ப என்ன செய்வ..” என்றவன் கிளம்பிவிட, நாயகிக்கு அனைத்தும் புரிந்தது.
அவன் ஜெர்மனியில் இருந்து வந்ததிலிருந்து அனைத்தையும் யோசித்தார். அங்கிருக்கும் போதே அவனுக்கு உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும் என நினைத்தார்.
அதன் பிறகுதான் அவன் அனைத்தையும் திட்டம் போட்டு செய்திருக்கிறான். இந்த ஊருக்கு அவர்களை அழைத்து வந்ததுதான் அவர்களின் கடைசித் திட்டம் என புரிந்தது.
இத்தனை ஆண்டுகளாக இந்த சொத்திற்காக அவர் என்னவெல்லாம் செய்தார். இப்போது அந்த சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை.
இவர்களை இப்படியே விட்டு சாக அவரால் முடியாது. ஆனால் வேறு என்ன செய்ய முடியும். ஒரு சின்ன வழி கிடைத்தால் கூட இவர்களை மொத்தமாக கொன்று குவிக்கும் ஆத்திரம் இருந்தது.
அதே ஆத்திரத்தில் அனைத்தையும் உடைத்து தகர்க்க எழ முயற்சிக்க, முடியவில்லை. இடுப்பு பகுதி செயல்படவில்ல.
‘அய்யோ’ என கத்தக் கூட முடியாமலும், உடலை அசைக்க முடியாமலும் அழுகையிலும், அவஸ்தையிலும் உருளுவதை, தன் மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ. அவனுக்கு அருகில் கண்ணை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை.
ஷ்யாம் சொன்னது போல எதையும் செய்யவில்லை இளங்கோ. ஆனால் அனைவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டான்.
சுமதி வேறு முன்னமே சொல்லிவிட்டார். இனி தாமரை என் பார்வையில் இருக்கட்டும். இன்று நல்ல நாள்.. அட்மிட் செய்து விடலாம் என்று.
மகேஸ்வரியும் வசந்தியுமே அதுதான் சரியென்று விட, வீட்டில் சாமி கும்பிட்டு தாமரையை அட்மிட் செய்யத்தான் அழைத்து வந்தார்கள் அனைவரும்.
அவளை அட்மிட் செய்துவிட்டு, அப்படியே அனைவரும் நாயகியைப் பார்க்க வர, அவர் நிலையைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டனர்.
சடனா மூச்சுத் திணறல் வந்துடுச்சு. பிபி ரைஸ் ஆகி, ஸ்ட்ரோக் போல வந்திடுச்சு.. என்றான் ஷ்யாம் மருத்துவனின் குரலில்.
“ம்மா…” என ப்ரீத்தா நாயகியின் கையைப் பிடித்து அழ, நாயகியின் விழிகளில் பயமும் அழுகையும் முட்டி மோதியது.
அத்தனை பேரிடமும் ஷ்யாம் செய்ததை சொல்லலாம் என்றால் அவரால் பேசவும் முடியவில்லை.
சீனியும் மற்றொரு பக்கம் கையைப் பிடித்தபடி நிற்க, “மாமா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..” என்ற இளங்கோவை யோசனையாக பார்த்தனர் அனைவரும்.
“அதுவந்து மாமா.. இப்போ ஷ்யாம்க்கும் ரீத்துவுக்கும் இங்க வச்சு கல்யாணம் செஞ்சிடலாம். ஏன் எதுக்குன்னு காரணம் கேட்காதீங்க. காரணம் இல்லாம சொல்லமாட்டேன்..” என்றான் நிதானமாக.
வசந்திக்கு பேரனின் கூற்று புரிய, பதட்டத்தில் மகனைப் பார்த்தார்.
ப்ரீத்தாவோ அதிர்ந்து நின்றார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை ஷ்யாம். தன் வெள்ளைக் கோட்டின் பாக்கெட்டில் இருந்த தாலிச்செயினை எடுத்து மிகவும் நிதானமாக ப்ரீத்தாவின் கழுத்தில் அணிவித்தான்.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் மயங்கி விட்டாள் ப்ரீத்தா. அவளை கைகளில் ஏந்திக் கொண்ட ஷ்யாம், இளங்கோவைப் பார்த்து ‘சொல்லிடு’ என்பது போல் தலையசைத்து கிளம்பிவிட, ஏதோ பெரிதாக ஒன்றை இளங்கோ சொல்லப் போகிறான் என்ற பயம் வந்துவிட்டது எல்லோரிடமும்.
“இளா..?” என பயந்து போய் கேட்ட சீனியிடம்,
“மாமா மனசை தைரியமா வச்சிக்கோங்க. ப்ளீஸ் மாமா. அவங்க தலையில் அடிபட்டதுல மூளைக்குள்ள ரத்தம் உறைஞ்சி போயிடுச்சாம். இஞ்செக்ஷன் போட்டுருக்காங்க, சர்ஜரி பண்ண வாய்ப்பில்லன்னு சொல்லிட்டாங்க. இப்போ மூளைக்கு போற ஒவ்வொரு நரம்பும் செயலிழக்கும் போது, அவங்க உடலில் இருக்குற ஒவ்வொரு பகுதியும் செயலிழந்து போகுமாம். இப்போ ஒரு கை, ஒரு கால் வரல.. பேச்சும் நின்னுடுச்சு..” என்று நிறுத்த,
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி?” என்ற சீனிக்கு உயிரெல்லாம் வலித்தது.
“நைட் கூட தாண்டாதுனு சொல்றான் ஷ்யாம்..” என்றான் இளங்கோ..
“கடவுளே..” என வசந்தி தலையில் அடித்துக் கொண்டு அழ, இடிந்து போய் அமர்ந்து விட்டார் சீனி.