தாமரை - 65
“பாஸ்.. எனக்கு ஒரு டவுட்?” என இளங்கோவின் காதைக் கடித்தான் நவீன்.
‘என்னடா?’ என்பது போல் இளங்கோ பார்க்க,
“இல்ல ஃபேமிலி டாக்டர் கேள்விப்பட்டுருக்கேன். இப்படி ஃபேமிலி ஹாஸ்பிடல் கேள்விப்பட்டது இல்ல.” என்றதும் இளங்கோ முறைக்க
“இல்ல இந்த ஹாஸ்பிடல்ல உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான் இருக்காங்க.. அதனால கேட்டேன்..” என்று சிரிக்க, அதற்கும் சேர்த்து முறைத்தான் இளங்கோ..
“பாஸ் எனக்கு இன்னொரு டவுட்..”
“மறுபடியும் என்ன டா.?”
“ஏன் நீங்க அந்த குண்டம்மா பத்தின உண்மைகளை வீட்ல யார்கிட்டயும் சொல்லல, சொன்னா தானே அவங்களுடைய சுயரூபம் தெரியும். உங்க மாமாவும், அவர் பொன்னும் அவங்களுக்காக அழுகிறதையும் வருத்தப்படுறதையும் பார்க்கும்போது எனக்கு கோபம் கோபமா வருது. ஒரு பணத்தாசை பிடிச்ச கொலைகாரிக்காக இவங்க இவ்ளோ வருத்தப்படுறாங்கன்னு எனக்கு எரிச்சலா இருக்கு.” என்றான் மனதை மறையாமல்.
“ம்ச்.. அத விடு..” என்றான் இளங்கோ எரிச்சலாக.
“ஏன் விட சொல்றீங்க? அவங்க செஞ்சதை நினைச்சு கொஞ்சம் கூட வருத்தப்படல, தப்பு பண்ணிட்டோம்னு அந்த குற்றவுணர்ச்சி கூட அவங்களுக்கு இல்ல. எதைப் பத்தியும் யாரைப்பத்தியும் யோசிக்கல. அவங்களுக்காக நீங்க செய்றதை என்னால ஏத்துக்கவே முடியல. தாமரை மேடம் பேசுறதுல என்ன தப்பு.. நீங்க இதை வீட்டுல சொல்லுங்க..” என்றவனுக்கு உண்மையிலேயே கோபம் தான்.
கூட இருந்து பார்க்கும் தனக்கே இத்தனை கோபம் என்றால், பாதிக்கப்பட்டவனுக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும். ஆனால் இளங்கோவோ அந்த கோபத்தை எங்கேயும் யாரிடமும் காட்டாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறான். அதைத் தான் நவீனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“பேசி முடிச்சிட்டியா?” என்ற இளங்கோ “உனக்கே கோபம் வரும் போது எனக்கு வராதா..” என்றவன் “என் கையால அவங்களை கொல்ற அளவுக்கு கோபம் இப்பவும் இருக்கு.. ஆனா செய்ய முடியல” என்றான்.
‘ஏன்.?’ என்பது போல் நவீன் பார்க்க,
“அத்தம்மாவையும் மாமாவையும் நினைச்சுத்தான் இதை யாருக்கிட்டயும் சொல்லல..” என்று நிறுத்தியவன், “அப்பாவை வச்சு நிறைய பிரச்சினையை அவங்க சந்திச்சிருக்காங்க. அவரால பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆனா எப்பவும் என் அப்பாதான் அதுக்கு காரணம்னு சொன்னதே இல்ல. அவங்களுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும். அம்மாவை கல்யாணம் செஞ்சதை கூட ஏன் முன்னாடியே சொல்லலனு தான் எல்லோருக்கும் கோபமே தவிர, கல்யாணம் பண்ணது கோபம் இல்லை. அவரால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்பட்டது, அவங்க குடும்பம் பாதிக்கப்பட்டது. எல்லாத்தையும் ஒரு இடத்துல சமாதானம் செஞ்சாங்க. எங்க அப்பா நல்லா இருக்கட்டும்னு. திடீர்னு அவர் இறக்கவும், அவர் செஞ்ச பாவம் தான் இப்படி அல்ப ஆயுசுல போயிட்டார்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அவங்களோட சாபமும், அழுகையும் தான் காரணம்னு நினைச்சாங்க. அதோட அப்பாவுக்கும் அந்த குற்றவுணர்ச்சி. அதுதான் அவரை கொன்னுடுச்சுன்னு நினைச்சு ஓரளவுக்கு அந்த வேதனையில் இருந்து வெளிய வந்துட்டாங்க.
என்னதான் இப்பவும் அந்த வருத்தம் இருந்தாலும், என்னை பார்த்து மனசை தேத்திப்பாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டு இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சா, அத்தையால தாங்கிக்கவே முடியாது. ஏற்கனவே அவரை யாரும் கவனிக்காம விட்டுத்தான் சீக்கிரம் இறந்துட்டார்னு நினைச்சிட்டு இருக்காங்க. இதுல கொலை செஞ்சிட்டாங்கன்னு தெரிஞ்சா அவங்க மொத்த நிம்மதியும் போய்டும். அதுக்குப் பிறகு அவங்களை சமாதானம் செய்ய முடியும்னு எனக்குத் தோணல நவீ.. இது கோழைத்தனமா தெரியலாம். ஆனா அப்படி இல்ல… இத்தனை வருசத்துல இந்த குடும்பத்துல யாரும் நிம்மதியாவோ, சந்தோசமாவோ இருந்தது இல்ல. இனியும் அப்படி இருக்கக்கூடாது. அப்படி விட என்னால முடியாது. என் அப்பாவால போன அவங்க நிம்மதி, என்னாலையும் தான் போச்சு. நானும் அவங்கள கஷ்டப்படுத்திருக்கேன். ஆனா அந்த நிம்மதி என் குழந்தைங்களால திரும்ப கிடைக்கும்னு நினைக்கிறேன். இனியாவது அவங்களை நல்லா பார்த்துக்கனும்னு நினைக்கிறேன். போனது எல்லாம் போகட்டுமே.. என்ன அந்த பொம்பளையை என் கையால கொல்லல. ஆனா கொன்னுடுவேன்ல. அதுவே இப்போ எனக்கு திருப்தி தான்.
இந்த குடும்பத்துக்காக, நிம்மதிக்காக நான் எதையும் செஞ்சது இல்ல. எதிர்பார்ப்பில்லாத அன்பை நான் அத்தைக்கிட்ட தான் பார்த்தேன்.. எதிர்பார்ப்பில்லாத கோபத்தை மாமாக்கிட்டத்தான் பார்த்தேன். எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கையையும், காதலையும் தாராக்கிட்ட பார்த்தேன். எனக்காக எனக்காகன்னு மட்டும் அவங்க இருக்கும் போது, அவங்களுக்காக நான் இருக்கக்கூடாதா?” என்றான் இளங்கோ.
“சாரி பாஸ்.. நான் இப்படியெல்லாம் யோசிக்கல..” என்ற நவீனிடம்
“ம்ம் இதெல்லாம் சொல்லாமலே தாராவால் புரிஞ்சிக்க முடியும். இப்போ இந்த ப்ரெக்னென்சி ஸ்ட்ரெஸ்ல சரியா யோசிக்க முடியாம குழப்பிக்கிறா? பேபிஸ் பிறந்ததும் அவளே இதைத்தான் சொல்லுவா..” என இளங்கோ கூற,
“ஹ்ம்ம் சரி பாஸ்.. செழியன் கிளம்பிட்டார் பாஸ். அவரை என்ன செய்யப் போறீங்க?” என்றான்.
“அவனை என்ன டா செய்ய? காரியம் முடியவும் அவனோட சொத்து எல்லாத்தையும் கொடுத்து அவனை அனுப்பிடு. இனி அவன் இங்க யார் கண்ணுலயும் பட்டுடக்கூடாது. அவனை வாட்ச் பண்ண ஆள் செட் பண்ணிடு… கொஞ்ச நாள் நம்ம கண்காணிப்புல இருக்கட்டும். இனி தப்பு செய்ய மாட்டான், பட் நாம வாட்ச் பண்றோம்னு அவனுக்கு ஒரு பயம் இருக்கனும்.”
“ம்ம் செழியனும் அந்த முடிவுல தான் இருக்கான் போல. ப்ராப்பர்டிஸை நம்மளையே வாங்கிக்க சொல்லுவான்னு நினைக்கிறேன்.” என்ற நவீன் “பாஸ் மேடம் அப்பவே உங்களை உள்ள கூப்பிட்டாங்க. நான் சொல்ல மறந்துட்டேன்.” என பேய் முழி முழிக்க,
“டேய் உன்னை எனக்குத் தெரியும்டா. வேணும்னு தான நீ சொல்லல. அவக்கிட்ட நான் திட்டு வாங்கனும், அடி வாங்கனும்.. அதுதான உன் ப்ளான. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு, அவளை வச்சு ரிவெஞ்ச் எடுத்துட்டு இருக்க.. அப்படித்தான..” என இளங்கோ சிரிக்க,
“பாஸ் ஆல்வேய்ஸ் நீங்க ஸ்மார்ட் தான்.” என அவனும் சிரித்தபடியே இளங்கோவை அழைத்து வந்து தாமரையின் அறையில் விட்டான்.
அவனைப் பார்த்ததும், மகேஸ்வரியும் ராணியும் வெளியில் செல்ல, மனைவியை ஒட்டி அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.
‘நீ ஹேப்பியா?” என்றான் மெல்ல,
“ம்ம் கொஞ்சம்..” என தாமரை சிரிக்க,
“ஹ்ம்ம் சாரி.. நான் அவங்களை..” என ஆரம்பிக்க,
“ம்ச் அத்தான் எனக்கு புரியும். அம்மாவுக்காகத்தான் இதை நீங்க செய்யாம இருக்கீங்கன்னு எனக்கு புரியுது. ஆனா ஜீரணிக்க முடியல..” என்றதும், பிடித்திருந்த கையில் அழுத்தம் கொடுத்தான்.
“இது எப்பவும் யாருக்கும் தெரியக்கூடாது. இந்த உண்மைகள் தெரிஞ்சா ப்ரீத்தா இங்க இருக்கவே மாட்டா. கண்டிப்பா ஷ்யாமை விட்டு போயிருவா.. அப்புறம் மாமா.. அவர் என்ன முடிவு எடுப்பார்னே தெரியல. அதையெல்லாம் தாண்டி பாட்டிக்கு இந்த உண்மைகள் தெரிஞ்சா, அந்த அதிர்ச்சியிலேயே அவங்களுக்கு முடியாம போயிடும். சில உண்மைகள் பலருக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்னா, அந்த உண்மைகளை மறைக்கலாம் தப்பில்ல.” என்றான் மென்மையாக.
“ம்ம் நான் உங்ககிட்ட மறைசிட்டேன்னு கோபமா?” என்றாள் திடீரென..
“எதை மறைச்ச..?”
“ரெண்டு பாப்பா இருக்குனு உங்ககிட்ட சொல்லல இல்ல அதுதான். அப்போ ரொம்ப கோபம். குழந்தை பிறந்ததும் தூக்கிட்டு எங்கையாவது போயிடனும்னு நினைச்சேன்.. உங்ககிட்ட காமிக்கவே கூடாதுனு நினைச்சேன். ஆனா நீங்கனு வரும் போது என் கோபமெல்லாம் எந்தப் பக்கம் போகும்னு எனக்கே தெரியாது.”
“ஏன் அப்படி இருக்குறது பிடிக்கலயா? உன்னோட காதல் என்னை எந்தளவுக்கு பிரமிக்க வைக்குதுனு உனக்குத் தெரியாது. உன்னை பார்த்த நாள்ல இருந்து விரட்டிக்கிட்டே இருப்பேன். உன்னைப் பார்த்தாலே எங்க அம்மா இறந்தது உங்க குடும்பத்தாலதான்னு நினைப்பு வந்துடும். அந்த கோபத்தை உன்மேல காட்டுவேன். ஆனா நீ என்னை திரும்பி ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல. சண்டை போட்டதும் இல்ல. அப்போ கூட நீ நடிக்கிறன்னு தான் நினச்சேன்..” என்றான் மெல்லிய குரலில்.
“அது கதிர் மாமா அம்மாக்கிட்ட பேசும் போதெல்லாம் தாமரைதான் என் வீட்டுக்கு மருமகளா வரனும்னு சொல்லிட்டே இருப்பாராம். அம்மாவுக்கும் அந்த ஆசை ரொம்ப. நான் வேற யாரையும் லவ் பண்ணிருவேனோன்னு பயந்து, எப்பவும் இதை எங்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. அப்படி சொல்லி சொல்லியே எனக்கு உங்க மேல பைத்தியம் பிடிச்சிடுச்சி. அப்புறம் டாக்டர் சீட் கிடைச்சும் வேண்டம்னு, நீங்க படிச்ச காலேஜ்ல தான் படிப்பேன்னு அடம் பிடிச்சேன். அதுல அப்பாவுக்கு ரொம்ப கோபம். அம்மாவாலையும் பேச முடியல. ஷ்யாம் தான் அப்போ ரொம்ப சப்போர்ட்டா இருந்தான். நீங்க அந்த காலேஜ்ல இருக்கும் போது தினமும் உங்களை பார்ப்பேன்.. ப்ரண்டா பேச கூட பயம். அதனால உங்க முன்னாடி வரவே மாட்டேன். அப்புறம் நீங்க ஜெர்மனி போய்ட்டீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டேன்.
படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சி வச்சிடுவாங்களோன்னு ஒரு பயம். ஆனா அப்பா அந்த பேச்சே எடுக்கல. மறுபடியும் நீங்க ஊருக்கு வந்தீங்க. நான் உங்க பின்னாடியே சுத்தினேண். அப்போதான் அப்பாவுக்கு டவுட் வந்துடுச்சு. ஷ்யாம்கிட்ட மேரேஜ் வைக்கலாம்னு கேட்க, அவன் என்னைப் போட்டு மொத்தி எடுத்துட்டான். அப்புறம் அவனை சமாளிச்சிட்டு ஊருக்கு வரும் போதுதான் அந்த அண்ணா என்கிட்ட இதை சொன்னார்.
அப்போ எனக்கு ப்ரீத்தாவை இதுல இருந்து சேஃப் பண்ணனும்னு மட்டும் தான் தோனுச்சு. அதுதான் நீங்க என்ன பேசினாலும் பரவாயில்லைன்னு அவளை அங்க இருந்து அனுப்பி வச்சேன். ஆனா நானே மாட்டிப்பேன்னு நினைக்கல..” என்றதும் இளங்கோ முறைக்க,
“ம்ம் அன்னைக்கு மட்டும் அந்த சம்பவம் நடக்கலன்னா நீங்களும் நானும் இப்படி உட்கார்ந்திருக்க மாட்டோம்..” என்றவளுக்கு குரல் உடைந்து போனது.
என் காதல் மேல எனக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை. அது எப்படி என்னோட காதல் பொய்யா போகும். கண்டிப்பா நீங்க எங்கிட்ட வந்துடுவீங்கன்னு அவ்ளொ நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்யாகல. ஆனா நான் பொய்யாயிட்டேன். சூழ்நிலையை பயன்படுத்தி, என் காதலை வாழ வச்சிட்டேன். அது எனக்கு இப்போ வரை அசிங்கமா இருக்கு..” என்றவளின் அழுகைக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமர்ந்திருந்தான் இளங்கோ.
அப்படி என்ன காதல் கன்ட்ராவி.. உன்னை கொடுத்து அப்படி ஏன் அந்த காதலை காப்பாத்திக்கனும். மானத்தை விட காதல் ஒன்னும் உயர்வானது இல்ல.. இப்போ மானம் போயிடுச்சே என்ன பண்ணுவன்னு என் மனசாட்சி கேட்குற கேள்விக்கு எங்கிட்ட பதிலே இல்ல..
எனக்கு விபரம் தெரிஞ்சு என் வாழ்க்கையில நீங்க மட்டும் தான் எல்லா இடத்துலயும் நீங்கதான் இருக்கீங்க. நீங்க கிடைக்க மாட்டீங்கன்னு தெரிஞ்ச சமயம், அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது விட மனசு இல்ல. ஒரு நாளாச்சும் உங்க கூட வாழ்ந்த திருப்தி கிடைக்கும்னு நினைச்சிட்டேன். அந்த நேரம் நான் யாரையும் யோசிக்கல. அம்மா அப்பா இந்த ஊர், சமூகம்னு எதைப்பத்தியும் யோசிக்காம உங்ககிட்ட வந்துட்டேன். அப்படி யோசிச்சிருந்தா..?” என்று அவள் பேசிக் கொண்டே செல்ல, அவளின் வாயைத் தன் வாய் கொண்டு மூடியிருந்தான்.
இருவரின் உடலிலும் நடுக்கம் இருக்க, அதை இருவருமே உணர்ந்தனர்.
“இப்போ எதுவுமே பேச வேண்டாம்.. டைம் நிறைய இருக்கு. பேபீஸ் வரட்டும் பொறுமையா உட்கார்ந்து பேசலாம்..” என அவளை சமாதானம் செய்யும் நேரம், அவள் முகத்தில் சிறு மாற்றம்.
“வலிக்குது போல த்தான்..” என்றவளின் முனங்களில் பதட்டமாகிவிட்டான் இளங்கோ.