தாமரை - 66
நாயகியின் கையைப் பிடித்தபடி அருகில் அமர்நிருந்தார் சீனி. “நான் பேசுறது உனக்கு கேட்குதா நாயகி..” என்ற கணவனை நிமிர்ந்து பார்த்தார் நாயகி.
“ம்ம்..” என்றவன், “என்னை கல்யாணம் செஞ்ச பிறகு நீ ரொம்ப கஷ்டப்பட்டியா?” என்றார் அமைதியாக.
“இல்லை” என்று நாயகியின் தலை வேகமாக மறுத்தது.
“ஜெயந்தியை கல்யாணம் செய்துக்க முன்னாடியே கதிர் என்னோட நண்பன். ஜெயந்தியை அவன் விரும்பும் போது எனக்கு வேண்டாம்னு சொல்ல தோனல. காரணம் கதிரோட வசதி வாய்ப்பு. இன்னொன்னு அவனோட தொழில் ஆர்வம். பணம் காசு இல்லைன்னாலும் கண்டிப்பா தொழில்ல ஜெயிச்சு, ஜெயந்தியை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கை இருந்தது. ஏன்னா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். ஜெயந்திக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு வைக்க கூட எங்களுக்கு அப்போ முடியாது சூழல். கதிர் கேட்டு வரவும் யோசிக்காமலே சரின்னு சொல்லிட்டோம்..” என நிறுத்தி மனைவியைப் பார்த்தார்.
‘எனக்குத்தான் இதெல்லாம் தெரியுமே? எதுக்கு இப்போ சொல்லிட்டு இருக்கீங்க?’ என்பது போல் தான் பார்த்தார் நாயகி.
“எவ்வளவோ பிரச்சினை வந்த போதும், கதிர் ஜெயந்தியை விடனும்னு நினைக்கவே இல்ல. அவன் காதல் மேல எனக்கு சில சமயம் பிரமிப்பே வந்துருக்கு. அவனை மாதிரி இல்லைன்னாலும், நீ கஷ்டப்படாத அளவுக்கு உன்னை பார்த்துக்கனும் நினைச்சேன். அப்படித்தான் பார்த்துக்கிட்டதா நான் நம்பினேன்.” என்றதும், நாயகிக்கு இப்போ ஏன் இந்த பேச்சு என்றுதான் தோன்றியது.
“உன்னை பெண் பார்த்துட்டு வந்த ஜெயந்தி, அவங்க வசதியெல்லாம் இல்ல. அதுக்காக எப்பவும் வருத்தப்படுற மாதிரி நீ நடந்துக்காத.. நல்லா பார்த்துக்கனும்னு சொன்னா, அந்த வார்த்தைக்கு இப்போ வரை மதிப்பு கொடுக்குறேன். கதிர்கிட்ட பேசி உன் அண்ணனை பிசினஸ்ல சேர்த்தேன். அவனுக்கும் இந்த சொசைட்டில மரியாதை கிடைக்கிற மாதிரி எல்லாம் செஞ்சேன். இன்னைக்கு அவனும் வெளிய சொல்ற அளவுக்கு வசதி வாய்ப்புல நல்லா இருக்கான். இது எல்லாத்துக்கும் காரணம் ஜெயந்தியும் கதிரும் தான், நான் இல்ல..” என்றார்.
ஆனாலும் நாயகியின் பார்வை மாறவில்லை. குழப்பமாகவே கணவரைப் பார்த்தார்.
“இன்னைக்கு நாம இப்படி இருக்க காரணம் அவங்கதான். அதை இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்றார்.
குழப்பத்துடனே ‘இல்லை’ என்று தலையசைத்தார் நாயகி.
“நம்மளை இந்தளவுக்கு வாழ்க்கையில முன்னேற வச்ச அவங்களை ஏன் நாயகி கொன்ன?” என்றார் வெறித்த பார்வையோடு.
கணவனின் வார்த்தைகளில் அதிர்ந்து ‘என்ன சொல்றீங்க? எப்படி.?’ என பார்க்க,
‘இளாவை பார்த்துட்டு வரலாம்னு அவன் ரூமுக்கு போனேன். அப்போ அவனும் அவன் பிஏவும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன்..” என்றான் மரத்து போன குரலில்.
“பணத்து மேல உனக்கு ஆசை இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா பணத்துக்காக கொலை செய்ற அளவுக்கு வெறி பிடிச்சிருக்கும்னு நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல. அப்படி என்னடி உனக்கு பணம், சொத்து வேணும். அதுக்கு நீ என்னைத்தான கொன்னுருக்கனும். நான் தான சம்பாதிக்க வக்கில்லாம இருக்கேன். நீ என்னைத் தானடி கொன்னுருக்கனும், வாழ வேண்டிய வயசுல அவங்களை கொன்னுட்டியே.. இளா.. இளா அவனை யோசிச்சியா? அந்த பிஞ்சு குழந்தை என்னடி பாவம் பண்ணுச்சு. அதுக்கு ஏன் நீ அவ்ளோ பெரிய தண்டனை கொடுத்த.. நீ இளாவுக்கு செஞ்சது தான் நாளைக்கு நம்ம பொண்ணுக்கும் நடக்கப் போகுது. அப்போ நீ என்னடி செய்வ.. செத்த பிறகு உன்னால என்னடி செய்ய முடியும்.. பாவி.. பாவி.. கொலைகாரி.. என் குடும்பத்தையே சிதைச்சிட்டியே, அதையெல்லாம் தாண்டி இப்போ இளா மேலையே கை வச்சிட்ட, அதுதான் பொறுக்க முடியாம உன்னை முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டான்..” என்றார் ஆக்ரோசமாக.
“இன்னைக்கோ நாளைக்கோ ன்னு இழுத்துக்கிட்டு இருக்குற உன்கிட்ட என் வீரத்தைக் காட்டமாட்டேன். என் பொண்ணுக்காக நான் இருக்கனும், உன்னை கொன்னுட்டு ஜெயில்ல போஈ உட்கார்ந்துட்டா அவளுக்கு யார் இருக்கா.. நீ இனி இருக்க போற ஒவ்வொரு நொடியும், சாகப் போறோம்னு பயந்து பயந்தே தான் கழிக்கனும். அந்த சாவோட பயத்தை உன் கண்ணுல பார்க்கனும். நீ செத்தா கூட உன் மூஞ்சில முழிக்கக்கூடாதுனு தோனுது. ஆனா நான் ஒதுங்கினா உன்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அது பிரச்சினையில்லை. தப்பு செஞ்சா எல்லாருக்கும் தெரியனும்ல.. ஆனா அதுக்குப் பிறகு என் பொண்ணு நிம்மதியா இருக்கமாட்டா. அவளுக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சிக்க மாட்டா. எல்லாரையும் விட்டுட்டு எங்கேயாவது போயிடுவா. அதுக்குப் பிறகு அப்பான்னு நான் எதுக்கு இருக்கனும். உனக்கு தாலி கட்டின பாவத்துக்கு உனக்கு கொல்லி வச்சி என் கடமையை முடிச்சிக்கிறேன். இதுதான் உன்னை நான் பார்க்கிறது கடைசி..” என்றவர், திகைத்துப் போய் கிடந்த நாயகியைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டார்.
அவரால் இப்போதும் கேட்ட செய்தியின் அதிர்விலிருந்து மீள முடியவில்லை.
நாயகியா, தன் மனைவியா? இப்படியொரு கொடூரத்தை செய்தாள் . நமபவே முடியவில்லை. ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இளங்கோவிடம் கேட்கலாம் என்று நினைத்தார், பின் ‘வேண்டாம் இப்போ வேண்டாம்..’ என முடிவு செய்து நவீனிடம் கேட்க, அவன் அனைத்தையும் சொல்லிவிட்டான்.
சீனிக்கு இந்த உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. ‘என்ன சொல்ற.. என்ன சொல்ற..?’ இரண்டு முறை தவிப்புடன் கேட்டார்.
அவரின் உணர்வுகள் புரிந்த நவீன் “எல்லாமே நிஜம் தான் சார்..” என அழுத்தி சொல்லிவிட்டான்.
அதன் பிறகு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நாயகியை கொன்றால் தான் அனைவருக்கும் நல்லது என கிளம்ப, நவீன் தான் ப்ரீத்தாவைப் பற்றியும், மகேஸ்வரிப் பற்றியும் சொல்லி அவரைத் தடுத்தான்.
“சார் தப்பா எடுத்துக்காதீங்க. எப்படியும் நாளைக்கு வரைதான் இருப்பாங்க. அதுக்குள்ள நீங்க கொன்னு எதுக்கு பாவத்தை சம்பாதிக்கிறீங்க.. விடுங்க..” என சமாதானம் செய்ய, ஆனாலும் சீனியால் அப்படியே விட முடியவில்லை.
அதனால் தான் நாயகியை வந்து பார்த்து பேசிச் சென்றார்.
இங்கு முகத்தை மூடி அழுது கொண்டிருந்த ப்ரீத்தாவையே எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யான்.
அவளை சமாதானம் செய்து அவனுக்கு பொறுமையே போய்விட்டது. என்ன சொன்னாலும் கேட்காமல் அழுது கொண்டே இருப்பவளை என்ன செய்வது என்று பார்த்தான்.
“ஹேய் இங்க பார்.. அப்படி ஒன்னும் என்னை சகிச்சிக்கிட்டு இந்த தாலியை நீ போட்டுக்க வேணாம். அதை கழட்டி வச்சிட்டு கிளம்பு..” என கத்த, அழுகை நின்று திகைத்து போய் பார்த்தாள் ஷ்யாமை.
“என்ன? என்ன பார்க்கிற? எவ்ளோ நேரம் உசுரு போக கத்திட்டு இருக்கேன். பெரிய இவ மாதிரி அழுதுட்டு இருந்தா கோபம் வராம இருக்குமா?” என மேலும் கத்த, இப்போது மேலும் அழுகை கூடியது ப்ரீத்தாவிற்கு.
ஷ்யாமின் பொறுமை மொத்தமாக பறக்க, அம்ர்ந்திருந்தவளை எழுப்பி “எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்ட என்ன?” என கர்ஜித்தவன், அவள் அரண்டு போய் பார்க்கும் போதே அவள் இதழை தன்னிதழால் அனைத்து, தன் கோபத்தை வன்மையான முத்தத்தில் காட்டினான்.
எங்கே தாலியைத் தான் கழட்ட போகிறானோ என பயந்தவள், அவனின் முத்தத்தில் அதிர்ந்து, பயந்து, திணறி பின் அதிலேயே மூழ்கிப் போனாள்.
இங்கு தாமரை வலி என்று சொன்னதுமே மகேஸ்வரியையும், ராணியையும் உள்ளே அழைத்து விட்டான் இளங்கோ.
உடனே சுமதி வந்து செக் செய்து, ‘இப்போதான் பெயின் ஸ்டார்ட் ஆகிருக்கு.. இன்னும் டைம் ஆகும்.. வெய்ட் பண்ணலாம்..” என்று விட்டார்.
அடுத்து சில மணி நேரங்கள் வலியே இல்லை. பின் மெதுவாக வலி கூட ஆரம்பிக்க, தாமரையால் வலியைத் தாங்க முடியவில்லை. இத்தனைக்கும் ஆரம்ப கட்ட வலிதான். நேரம் ஆக ஆக வலி கூடும். அதை அவளால் நிச்சயம் தாங்க முடியாது.
மகேஸ்வரி இளங்கோவிடம் வந்து “சாமி.. அம்முவால வலி தாங்க முடியும்னு தோனல. ஒரு புள்ளைக்கு உசுரு போய் உசுரு வந்துடும். இவளுக்கு மூனு புள்ள.. நாம காத்திருக்காம ஆபரேஷன் பண்ணி எடுத்துடலாம். அதான் நாம இத்தனை பேர் இருக்கோமே பார்த்துக்கலாம். நமக்கு தாமரை தான் முக்கியம்..” என்றார் அழுகையோடு.
ஆம்.. தாமரை அழுவதை, வலியில் துடிப்பதை பார்க்க முடியாமல் மருமகனிடம் வந்து நின்றார் அழுகையோடு.
இளங்கோவிற்கும் அந்த முடிவு தான் சரி என்று பட்டது. அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் மனைவி வலியால் துடிப்பதை.
“சரி அத்தம்மா.. நீங்க சுமிம்மாக்கிட்ட பேசுங்க.. நான் ஷ்யாம்கிட்ட சொல்றேன்..” என அனுப்பி வைக்க, அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தது.
பிரசவ அறையில் இருந்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் நேரம், கண்கள் நிறைய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
அவனைப் பார்த்ததும் கண்ணால் அழைத்தாள் தாமரை. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, “சிசேரியன் எல்லாம் இப்போ ஒன்னுமே இல்ல. பயப்படாம இருக்கனும், நீன் பயந்து எங்களையும் பயமுறுத்தக்கூடாது..” என திடமாக சொல்ல நினைத்தாலும், இளங்கோவின் குரல் உடைந்து விட்டது.
கணவனின் விழிகளையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் “எனக்கு கிஸ் வேணும்..” என்றாள் பெண்.
“ஹான்.” என அவன் திகைத்துப் பின் சிரிக்க
“கிஸ் மீ அத்தான்..” என்றாள் முனுமுனுப்பாக,
சுற்றி இருக்கும் அனைவைரையும் பார்த்தவன், பின் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட, என்ன மறைத்தும் அவன் விழிகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிந்தே விட்டது.
“எனக்கு உங்க கூட வாழ ரொம்ப ஆசை த்தான். ரொம்ப ரொம்ப நாள் வாழனும் த்தான். அதனால கண்டிப்பா திரும்பி உங்ககிட்ட வந்துடுவேன். நான், நீங்க, நம்ம குழந்தைங்க எல்லாம் சந்தோசமா இருக்கப் போறோம்.” என்று புன்னகைக்க, அவள் முகத்தின் மேலே தன் புதைத்துக் கொண்டவனுக்கு எப்படி உணர்கிறோம் என்றேத் தெரியவில்லை.
நிச்சயம் அவளின் காதலுக்கு அவன் தகுதியில்லை என்று மட்டும் உணர முடிந்தது.
“ஹேய் எல்லாரும் இங்கதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..” என ஷ்யாம் அப்போதுதான் தியேட்டரில் இருந்து எட்டிப் பார்த்து கத்த, அனைவவ்ரும் சிரிக்க, இளங்கோவும் தாமரையும் அவனைப் பார்த்து முறைத்தனர்.
“இங்க பார்.. சிசேரியனுக்கு எல்லாம் இது ஓவர் சீன் சரியா? சும்மா டென்சன் பண்ணாம கிளம்பு..” என இளங்கோவை நகர்த்தி, ஸ்ட்ரெச்சரை அவனேத் தள்ளிக் கொண்டு தியேட்டருக்குள் சென்றான்.
இளங்கோ அங்கிருந்த சேரில் அமர, அவனுக்கு அருகில் வந்த நவீன் “பாஸ்..செழியன் வந்துட்டார். கீழ தான் இருக்கார்..” என்றான் மெல்ல..
“ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டு சில நொடிகள் அப்படியே கண் மூடி கொண்டான். ‘என் பிள்ளைங்க இந்த உலக்த்துக்கு வரும் போது, அந்த பொம்பளை உயிரோட இருக்கக்கூடாது’ என்ற மனைவியின் பேச்சு காதில் கேட்க,
“ம்ம் அந்த ரூமை காட்டிட்டு, எல்லாம் சொல்லிடு..” என்றான் அயர்ச்சியாக.