• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 67

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
தாமரை - 67

“பாஸ் அவங்களை அப்படியே விட்டுட சொன்னார். அவங்களை பார்க்கணும்னா மட்டும் பார்த்துட்டு போக சொன்னார்..” என்ற நவீனிடம் ஏன் என்பது போல் பார்த்தான் செழியன்.

“எப்படியும் செத்துடுவாங்க. இதுல நீங்க கொன்னு, அந்த பாவம் எதுக்கு?” என்று முடிக்கும் முன்னே,

“அவளைக் கொன்னா எப்படி பாவம் வரும்.?” என்றான் வேகமாக.

“ம்ச் செழியன்.. உங்களுக்கு ஒரு புது வாழ்க்கை இருக்கு. அதை நீங்க எந்த உறுத்தலும் இல்லாம வாழனும்னு நினைக்கிறார். உங்களை நம்பி ரெண்டு பேர் இருக்காங்க.. அவங்களுக்காக இதெல்லாம் மறந்து, உங்க வாழ்க்கையை பாருங்க..” என்ற நவீன் அவன் கையில் சிறு பெட்டியைக் கொடுக்க, புருவ சுழிப்புடன் அதை வாங்கிக் கொண்டான் செழியன்.

“நீங்க கேட்ட மாதிரி உங்க வீட்டை தவிர மத்த எல்லா ப்ராப்பர்டிஸும் சேல் பண்ணியாச்சு. கேரளாவில் நீங்க சொன்ன ஃப்ரண்ட் மூலமா வீடு ரெடி பண்ணியாச்சு. அங்க உங்களுக்கு ஒரு கார் ஷோ ரூம் வாங்கிருக்கார். அதை டெவலப் பண்ணி உங்க பிசினசை ஸ்டார்ட் பண்ணுங்க. உங்க பழைய வாழ்க்கையை மொத்தமா இங்கேயே மறந்துட்டு போயிடுங்க..” என்றதும், செழியனால் தன் குற்றவுணர்ச்சியை மறைக்கவே முடியவில்லை.

“இதுக்கு நீங்க என்னை கொன்னுருக்கலாம். உயிரைக் கொடுத்து தினம் தினம் என்னை கொல்றீங்க..?” என்றான் வேதனை ததும்பும் குரலில்.

“செழியன் ப்ளீஸ்.. இது உங்களோட செகண்ட் இன்னிங்க்ஸ்.. இதுல கண்டிப்பா நீங்க ஜெயிச்சிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு. விஷால் க்கு நீங்கதான் ஹீரோவா இருப்பீங்க. ஐம் ஸ்யூர்.. நீங்க் பெஸ்ட் பிசினஸ் மேன் அன்ட் பெஸ்ட் கோச்.. ஆல் தெ வெரி பெஸ்ட் ஃபாஃப் யுவர் செகன்ட் இன்னிங்க்ஸ்..” என புன்னகைக்க.

“தேங்க்ஸ்..” என தானும் புன்னகைத்தவனின் மனம் நிர்மலமாக இருந்தது. தன் கடந்த காலத்தை மொத்தமாக தூக்கி எறிந்துவிட்டு புது உலகை கான இதோ கிளம்ப ஆயத்தமாகிவிட்டான்.

“நான்.. அவங்களை ஒரு தடவை பார்க்கணும் நவீன். நான் உயிரோட இருக்கேன்னு அவங்களுக்கு தெரியனும். எனக்கு எல்லா உண்மையும் தெரியும்னு அவங்களுக்கு தெரியனும். என்னைப் பார்த்ததும் அவங்க கண்ணுல தெரியிற பயத்தை நான் பார்க்கணும் நவீ..” என்றதும்,

“சரி..” என்ற நவீன் அவனை அழைத்துக்கொண்டு நாயகியின் அறைக்குச் சென்றான்.

சீனி சொன்னது போல பயத்தில் விழிகளை விரித்து அந்த அறையையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார் நாயகி.

எப்போது தன் உயிர் பிரியுமோ என பயந்து போய், அந்த பயத்தை விழிகளில் தேக்கி அவர் பார்த்த அந்த பார்வையைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் செழியன்.

அவனைப் பார்த்ததும் நாயகியின் விழிகளில் அப்பட்டமாய் அதிர்வு தெரிந்தது. தன்னை நோக்கி நடந்து வரும் அவனை கலக்கமும் பயமுமாக பார்த்தவர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்பது போல தலையை ஆட்டினார்.

தன்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறான் என்று பயந்து தான் தலையை ஆட்டினார்.

நாயகியின் அருகில் சென்றவன் தலையனையை எடுத்து அவரின் முகத்திற்கு நேராக வைக்க, ‘வேண்டாம்..’ என அசைக்க முடியாத உடலை விட்டு, தலையை மட்டும் ஆட்டி காட்டினார்.

“உன்னை கொல்ல எனக்கு ஆசையா இருக்கு. ஆனா உன்னை கொன்னுட்டா உடனே செத்துடுவ, இந்த பயத்தை பார்க்க முடியாதே.. அதனால ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோம்னு நினைச்சு நினைச்சு கதறனும், அதை பார்த்து நாங்க ரசிக்கனும்..” என்றதும், நாயகியின் உடல் பயத்தில் நடுங்கியது.

அதை உள்வாங்கியவன் “உன்னை யாரும் கொல்ல மாட்டாங்க.. அதனால நீயே செத்துடு..” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டான்.

செழியன் சென்று விட்டான் அங்கிருந்தும்.. அவர்களிடமிருந்தும்.. தூரமாக… ரொம்ப தூரமாக..

செழியன் சென்ற பிறகும் நாயகியின் நடுக்கம் குறையவில்லை. ஒரே நாளில் தன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட இளங்கோவின் மேல் ஆத்திரமும் கோபமும் பொங்கியது.

ஆனால் இப்போது அவரால் என்ன செய்திட முடியும். தன் இறப்பிற்காக காத்திருப்பதைத் தவிர..

ஷ்யாம் சொன்னதை போல பார்வை மங்கியது.. வயிறு வலித்தது.. சுவாசம் சீரற்று போனது… இன்னும் சற்று நேரத்தில் தன் உயிர் பிரிந்து விடும் என புரிந்து போனது.

தான் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு, மங்கிய பார்வையுடன் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

துணைக்கு யாருமற்று, தன் வலியை உணர்ந்து, தனக்காக சொட்டு கண்ணீர் விட கூட ஆளில்லாமல், அவரின் உயிர் அநாதையாய் பிரிந்து போக போவதை அவரே உணருவார். அதைவிட மிகப்பெரிய தண்டனையை யாராலும் கொடுக்க முடியாது நாயகிக்கு..

ப்ரீத்தாவை தன் அருகில் அமர வைத்திருந்தான் இளங்கோ. தனியாக இருந்தால் தேவையில்லாமல் கண்டதையும் யோசிப்பாள் என்ற பயம்.

“பாஸ்.. டீ..?” என அவன் கையில் க்ளாஸை நீட்ட, அவனோ அதை வாங்கிக் கொண்டே சுற்றி எல்லாரையும் பார்த்தான்.

சீனி அங்கில்லை. செல்வத்தை தவிர யார் முகத்திலும் பதட்டமும் இல்லை, பயமும் இல்லை.

சிசேரியன் தானே.. அதோடு உள்ளே இருப்பது ஷ்யாமும், சுமதியும். பிறகேன் அவர்கள் கவலைப்பட போகிறார்கள். அனைவர் கையிலும் டீ க்ளாஸ் இருந்தது.

இதை மட்டும் அவள் மனைவி பார்க்க வேண்டும் ஆடித் தீர்த்து விடுவாள் என்று நினைக்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“என்னடா இது? கொஞ்சம் கூட பதறாம இருக்காங்க. ஏதோ ஃபங்க்ஷனுக்கு வந்த மாதிரி ஜாலியா அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்காங்க..” என்று சிரித்தபடியே டீயை உறிஞ்ச, ப்ரீத்தாவும் நவீனும் சிரித்துக் கொண்டனர்.

அடுத்த பத்து நிமிடத்தில் நர்ஸ் வெளியே வந்து ரெண்டு பொண்ணு ஒரு பையன் என சொல்லி விட்டு செல்ல, வசந்திக்கும் மகேஸ்வரிக்கும் மகிழ்ச்சியில் கண்களே கலங்கிவிட்டது.

ராணிதான் “மூனு பேரோட டைம் கேட்டு வச்சிக்கனும் மகி. அப்போதான் யார் முதல்லன்னு கேட்டா, நாமளும் சமாளிக்க சரியா இருக்கும்..” என சொல்ல, அந்த இடமே சிரிப்பில் மூழ்கி விட்டது. அனைவரும் சிரித்து விட்டனர்.

செல்வம் வேகமாக வந்து இளங்கோவைக் கட்டிக் கொண்டார். வார்த்தைகள் இல்லாத அந்த அனைப்பில் இளங்கோ நெகிழ்ந்து போனான். தானும் அவரை அனைத்து புன்னகைக்க, செல்வத்தின் விழிகள் கனிவில் கசிந்தது.

“பாஸ் கலக்கிட்டீங்க…” என்ற நவீனைப் பார்த்து முறைத்தாலும், அவனுக்கும் லேசாக கண்கள் கலங்கிவிட்டது.

அரை மணி நேரம் கழித்து சுமதியும், ஷ்யாமும், நர்சும் என மூவரும் ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கி வந்து காமித்தனர்.

இப்போதைக்கு கையில வாங்க வேண்டாம், அப்படியே பாருங்க. வெய்ட் இல்ல. இங்குபேட் பண்ணுவோம். ஒன் வீக் ஆனதும்.. தூக்கிக் கொஞ்சுவீங்களாம்..” என்று முன்னெச்செரிக்கையோடே காண்பித்தார் சுமதி.

வசந்தியிடம் தான் முதலில் காண்பித்தார் சுமதி.. அள்ளி அனைக்க பரபரத்த கைகளை அடக்கி, கண்களால் அனைத்துக் கொண்டார் பெரியவர்.

அந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் தன் மகள்தான் என்ற எண்ணம் அவருக்கு. கலங்கும் விழிகளோடு பேரனைப் பார்த்து சிரித்தார் அந்த பெரியவர்.

அடுத்து மகேஸ்வரி அவரோ அந்த ஆண் குழந்தையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரைப் போலவே இருக்க, “என் அண்ணா..” என்றார் புன்னகையுடன்..

மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த செல்வம் மூன்று பேரையும் பார்த்து நின்றார். லட்சுமியின் ஜாடை யாரிடமாவது இருக்கிறதா என தேடினார் போல.

ஆம் இருந்தது.. லட்சுமியின் வலது கன்னத்தில் மூக்கை ஒட்டி சிறு மச்சம் இருந்தது. அதைப் பார்த்ததும் சட்டென கண்கள் கலங்கி விட்டது.

தூக்க வேண்டாம் என்று சொன்னதையும் மறந்து அந்த குழந்தையை ஷ்யாமிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

அவரின் உணர்வுகளை புரிந்து கொண்ட அனைவரும் விழிகள் கலங்க அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இளங்கோ அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் எல்லாவற்றையும் சரி செய்து விட்டேன் என்ற மமதை மெல்ல முளை விட்டது.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்துதான் தாமரையைப் பார்க்க அனுமத்தித்தனர். எப்படியும் இன்னைக்கு முழுக்க விழிப்பும் மயக்கமுமா தான் இருப்பா.. சாப்பாடு எதுவும் கொடுக்ககூடாது.” என்ற ஷ்யாம் இளங்கோவைப் பார்த்துவிட்டு வெளியில் செல்ல, அவன் பார்வையில் ஏதோ செய்தி இருப்பதை உணர்ந்து கொண்டான் இளங்கோ.

அதனால் தன் வாக்கரை எடுத்துக் கொண்டு மெதுவாக வெளியில் வர, அவனுக்காகவே காத்திருந்ததைப் போல, நவீன் தலையாட்ட, “ம்ம் எல்லாருக்கும் சொல்லிடு.. பாடியை வீட்டுக்கு கொண்டு போக வேண்டாம். நேரா சுடுகாட்டுக்கே எடுத்துட்டு போற மாதிரி ப்ளான் பண்ணிக்க.. ப்ரீத்தாவோ, மத்தவங்களோ கேட்டா ஷ்யாமை பேச சொல்லு..” என்றுவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டான்.

எதிர்பார்த்தது தான்.. ஆனால் வலித்தது. அவர் கையால் உண்டிருக்கிறானே.. கனத்த மனதை அடக்கி, இரும்பை போல் அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்களில் ப்ரீத்தாவின் அழுகையும், வசந்தியின் கதறலும் அந்த இடத்தை நிறைத்தது, கண்ணை மூடிக் கொண்டான். ப்ரீத்தாவின் அழுகை அவனை பெரிதும் பாதித்தது.

எந்த தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறாளே..

செய்தி கேட்டு சீனி வந்தார்.. ஷ்யாம் தான் “வீட்டுக்கு கொண்டு போக வேண்டாம்.. குட்டீஸ் வர போற வீடு.. இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பிருக்கு. தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம்..” என்று விட, வசந்தியும் மகேஸ்வரியும் யோசிக்க, சீனி யோசிக்கவே இல்லை.

“வேண்டாம்.. நேரா மயானத்துக்கே கொண்டு போயிடலாம். இறந்தவங்களை பார்க்காதீங்க. இருக்கப் போறவங்களை பாருங்க. குழந்தைகளை பாருங்க..” என்று முடித்துவிட்டார்.

நாயகி இருந்த அறையிலேயே ஃப்ரீசர் பாக்ஸில் அந்த உடலை மாற்றி வைத்தனர்.

ப்ரீத்தாவும், வசந்தியும் சீனியும் அங்கேயே இருக்க, ராணிதான் ரெண்டு பக்கமும் ஓடிக் கொண்டிருந்தார்.

இரவு பத்து மணிக்குத்தான் நன்றாக விழித்து பார்த்தாள் தாமரை. அருகில் குழந்தைகள் இல்லையென்ற யோசனையோடு சுற்றிப் பார்க்க, அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்த கணவன் கண்ணில் பட்டான்.

‘என்ன..?’ என்பது போல புருவம் உயர்த்த,

‘இங்க வா’ என்பது போல் அவள் சைகை செய்தாள்.
சிரித்தபடி அவளிடம் வந்தவனிடம் வரண்ட உதட்டை தன் நாவால் ஈரம் செய்து “பொண்டாட்டி கண்ணு முழிச்சா, எப்படி இருக்க? வலி இருக்கானு எல்லாம் டிபிகல் ஹஸ்பன்டா கேட்க மாட்டீங்களா.” என நெற்றியில் முட்ட,

“ம்ம்..” என சிரித்தவன் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..” என மேலும் சிரிக்க,

“என்ன அந்த அம்மா செத்துடுச்சா?” என்றாள் மெதுவாக..

“ம்ம்.. அதுவும் தான்… ஆனா அது உனக்கு சர்ப்ரைஸ் இல்ல.. இது வேற..” என்றவன் ஷ்யாமிற்கு அழைத்து “டேய் பேபிஸை எடுத்துட்டு வா..?” என்றுவிட்டு அடுத்து மனைவி முகத்தில் வரப் போகும் ஆச்சரியத்திற்காக காத்திருந்தான்.

தாமரையும் கணவனின் கையைப் பிடித்தபடி குழந்தைகளுக்காக காத்திருக்க, முதலில் ஷ்யாம் ஒரு குழந்தையுடன் வர, பின்னாடியே ஒரு நர்ஸ் இன்னொரு குழந்தையுடன் வந்தார்.

இரண்டையும் ஆவல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தவள் மூன்றாவதாக உள்ளே வந்த சுமதியின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்து விழி விரிக்க, ‘மூனா..’ என்றபடியே மயங்கிவிட்டாள்.

அவளின் செய்கையில் அங்கிருந்த அத்தனை பேரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்.
 
  • Like
Reactions: Lakshmi murugan