தாமரை - 68
அன்று குழந்தைகள் மூவருக்கும் பேர் வைக்கும் விழா பெரிய வீட்டில் ஏற்பாடாகியிருந்தது.
அந்த வீட்டில் இளங்கோவிற்கு பிடித்தமான, தாமரையின் விருப்பத்தோடு பல மாற்றங்களை செய்திருந்தார் செல்வம்.
முன்னமே தொட்டிக்கட்டு வீடு போல் தான் இருக்கும். வீட்டின் வெளிப்புறம் மாற்றாமல், உள் வேலைபாடுகள் மட்டும் செய்திருந்தனர்.
இரண்டு அறைகளை சேர்த்து ஒரே அறையாக அவர்களுக்கு மட்டும் மாற்றியிருந்தார் செல்வம்.
இன்று விழா முடிந்து அடுத்த நாள் குழந்தைகளுடன் குல தெய்வ கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. அதற்கான வேலைகளில் சீனியும் செல்வமும் ஈடுபட்டிருந்தனர்.
“புள்ளைங்க அழறது கூட தெரியாம எப்படி கல்லு மாதிரி உட்கார்த்திருக்கா பார்..?” என்று மகேஸ்வரி மகளைப் பார்த்து பல்லைக் கடிக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இளங்கோவையே பார்வையால் சுத்திக் கொண்டிருந்தாள் தாமரை.
விடு மகி. அதுதான் நம்ம மூனு பேர் இருக்கோமே. அப்புறம் என்ன?” என வசந்தி பேச,
“நமக்கு வேற வேலையே இல்லையா த்த.. இதோ சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க.. அவங்களை பார்க்க வேண்டாமா?” என்று மகேஸ்வரி பேரனுக்கு துணியை மாற்றியபடி கூற,
“ம்ச்.. சும்மா பாப்பாவை ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காத மகி. இளா தான் ஏதோ சொல்லி பாப்பாவை டென்சன் பண்ணிருக்கு. அதுதான் புள்ள முகமே வாடிப்போய் கிடக்கு. இல்லன்னா புள்ளைங்களை இப்படி விட்டுட்டு போற பொண்ணா தாமரை..” என ராணி தாமரைக்கு சப்போர்ட் செய்ய,
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத க்கா.. இவ என் சாமியைப் போட்டு டென்சன் பண்ணா பத்தல. பாத்தீங்கல்ல அன்னைக்கு அத்தனை பேர் இருக்கும் போதே ஆஸ்பத்திரில என்ன கூத்து பண்ணான்னு..” என மகேஸ்வரி மகளை நினைத்து சடைக்க, மற்ற இருவருமே அதை நினைத்து சிரித்துவிட்டனர்.
அன்று மூன்று பேரா என்று கேட்டு தாமரை மயங்கியதும் எல்லோரும் சிரித்து விட, மயக்கம் தெளிந்த பிறகு ஒருவரை விடாமல் அனைவரையும் போட்டு தாளித்து விட்டாள் தாமரை.
அதிலும் முக்கியமாக ஷ்யாமை. “என் கோபம் குறையுற வரை என் கூட பேசாத.” என முத்தாய்ப்பாக தன் கோபத்தை அவனிடம் கொட்டி முடித்துவிட்டாள்.
அதில் கடுப்பான ஷ்யாம் “ஏய் உன் புருசன் தாண்டி இதுக்கெல்லாம் காரணம். அவனை எதுவும் சொல்லாம, எதுக்கு இப்போ எங்களை ரவுன்ட் கட்டி கத்திட்டு இருக்க…” என அவனும் கத்த,
“ஹான்.. அத்தான் எனக்காக யோசிச்சிருப்பார். நான் பயந்துப்பேன்னு சொல்லக்கூடாதுனு சொல்லிருப்பார். அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும். அவர் மேல ஒன்னும் தப்பு இல்ல.” என்றவளைப் பார்த்து அனைவரும் வாயைப் பிளக்க, இளங்கோ மனைவியின் பேச்சில் வாய்விட்டு சிரித்து விட்டான்.
“இங்க பாரு அம்மு.. முன்னாடி இவன் தான் என்னை கடுப்பாக்குவான். இப்போ அவன்கூட சேர்ந்து நீயும் என்னை கடுப்பாக்குற.. இதெல்லாம் சரியில்ல.. நான் என் பொண்டாட்டிய கூப்பிட்டு கிளம்பறேன். எப்போ உனக்கு கோபம் குறையுதோ அப்போ சொல்லு. வந்து உங்கிட்ட பேசுறேன்..” என ப்ரீத்தாவின் கையைப் பிடித்து வெளியில் செல்ல,
“மவனே.. நீ எங்கிட்ட மாட்டுவ இல்ல.. அன்னைக்கு வச்சி செய்றேன்டா..” என்றவள், மகேஸ்வரியைப் பார்த்து முறைக்க,
“ஆத்தி அடுத்து நானா?” என அரண்டு போய் மருமகனைப் பார்க்க, அதை புரிந்து கொண்ட இளங்கோ “தாரா..” என அதட்ட,
“உங்க அத்தம்மாவை நான் ஒன்னும் சொல்லல..” என முகத்தைத் திருப்பியவளின் கையைப் பிடித்துக் கொண்டார் செல்வம்.
அவரின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து மலர்ந்து புன்னகைத்து “ப்பா…” என்றாள் மகள். தந்தையின் விழிகள் கலங்கித்தான் போனது. அதற்கு மாறாக முகம் மலர்ந்து இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“ம்ம்.. ரொம்ப ரொம்ப சந்தோசம் அம்மு.. லட்சுமியே வந்து பொறந்துட்டா அம்மு.. என் லட்சுமியே வந்து பொறந்துட்டா…” என்றார் மளைத் தன் மேல் சாய்த்து.. நொடியில் உணர்ச்சிமயமாகிப் போனது அந்த இடம்.
“ம்ம் ப்பா..” என்றவளுக்கும் மகிழ்வில் விழிகள் கசிந்தது.
“ரெண்டு பேரும் இப்படித்தான் என்னை கடுப்பாக்குவாங்க..” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சிரித்த மகேஸ்வரியை, தன்னோடு அனைத்துக் கொண்டான் இளங்கோ..
“சரி.. சரி.. எல்லாரும் கிளம்புங்க. அவ ரெஸ்ட் எடுக்கட்டும்..” என்ற சுமதி, தாமரையிடம் “எதுக்கு இப்படி கத்துற? மூனு புள்ளைங்கள பெத்த மாதிரியா இருக்க. வெளிய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. இப்படி கத்துறது இதுதான் கடைசியா இருக்கனும். ஸ்டிச்சர்ஸ் பிரிஞ்சிட்டா என்ன செய்றது..” என அதட்ட, ‘உம்மென்று’ ஆகிவிட்டாள் பெண்.
“சுமி ம்மா..” என்று மனைவிக்கு ஆதரவாக பேச வந்த இளங்கோவை “இங்க நான் டாக்டர். என்னோட பேசன்ட் ஹெல்த் எனக்கு ரொம்ப முக்கியம்..’ என சுமதி பட்டென சொல்ல, தாமரை அவரை முறைத்துப் பார்த்தாள்.
“இப்போ எதுக்கு முறைக்கிற? உன் புருசனை என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிற..” என மீண்டும் அதட்டியவர், ‘அவனை ரெஸ்ட் எடுக்க விடு.. அவன் கால் பார் எப்படி வீங்கிருக்குன்னு. நீ சொல்லு அவன்கிட்ட. நேத்து இருந்து ரெஸ்டே இல்ல..” என்றதும் தான் தாமரை அவனின் காலை பார்த்தாள்.
நன்றாக வீங்கியிருந்தது. பார்க்கவே தெரிந்தது. “என்ன த்தான் இது.?” என்றவள் இப்போது மகேஸ்வரியைப் பார்த்து “இதுதான் உன் சாமியை பார்த்துக்கிற லட்சனமா? எப்படி வீங்கிருக்கு பார்? என்னதான் பார்த்துக்குற?” என கத்த ஆரம்பிக்க, “தாரா..” என்ற இளங்கோவின் அதட்டல் அவள் வாயை மூடியிருந்தது.
“போதும்.. நீ ரெஸ்ட் எடு…” என அதே குரலில் கூறியவன், “நான் ரெஸ்ட் எடுக்காததுக்கு நான்தான் காரணம். அது தெரிஞ்சும் எல்லாரையும் கத்தக்கூடாது. முக்கியமா அத்தம்மாவை என் முன்னாடி இப்படி பேசக்கூடாது…” என கண்டிப்புடன் கூற, செல்வத்தை பாவமாக பார்த்தாள் பெண்..
“விடு இளா.. அம்மு உன் மேல இருக்குற அக்கறையில தான பேசினா?” என்ற செல்வத்தைப் பார்த்து புன்னகைத்த இளங்கோ “சரி மாமா நான் பேசல.. உங்க பொண்ணும் என் அத்தம்மாவை பேசக்கூடாது..” என முடித்துவிட்டான்.
ஒரு வழியாக அனைவரும் அறையை விட்டு கிளம்ப, இளங்கோவும் மகேஸ்வரி மட்டுமே இருந்தனர்.
“சாமி.. நீ வீட்டுக்கு போறியா? இங்க ரூம்க்கு போறியா..?” என்ற மகேஸ்வரியிடம்,
“வீட்டுக்குத்தான் அத்தம்மா.. அவங்களுக்கு எல்லாம் செய்யனும் இல்ல.. மாமாக்கிட்ட பேசனும். ஊர்ல என்ன சொல்றாங்கன்னு தெரியனும் இல்லையா? திருவிழா வேற வருது.. ஊர்க்காரங்க இன்னைக்கு வரேன்னு சொன்னதா, மாமா சொன்னார். அதையும் பேசனும். நான் போய்ட்டு மார்னிங்க் வரேன்..” என்றதும் தாமரையின் முகம் கவலையைக் காட்டியது.
“ம்ச்.. ட்ரெஸ்ஸிங்க் பண்ணிட்டு போய் படுக்கத்தான் போறேன். நாளைக்குத்தான் எல்லா வேலையும். அதுவும் நவீன் தான் செய்யப் போறான். நான் ஓக்கே ஆகிடுவேன். நீ முதல்ல உன்னை பார். இப்படி இருக்காத.. நீ ஓக்கே ஆனாதான் பேபிஸை கைல கொடுப்பாங்க..” என்றதும் தாமரையின் விழிகள் நிறைய, இருவரையும் பார்த்த மகேஸ்வரி ஒரு சிரிப்புடன், அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியில் சென்றுவிட, கணவனின் மேல் சாய்ந்து கொண்டாள் தாமரை.
“கோபமா குட்டிம்மா..?” என்றான் மனைவியின் தலையை வருடியபடி..
“ஹ்ம்ம் இல்ல.. ஆனா மூனு பேபின்னு தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமோன்னு தோனுது. நல்லா சாப்பிட்டுருக்கலாம்னு தோனுது. குழந்தங்களும் வெய்ட் போட்டுருப்பாங்கல்லனு தோனுது..” என்றாள் முணுமுணுப்பாக.
“அடியே செந்தாமரை நீ மட்டும் எப்படி இப்படி டிபரன்டா யோசிக்கிற..” என்றவனின் உடல் சிரிப்பில் குலுங்கியது. அதை உணர்ந்தவள் “ம்ச் போங்க த்தான்.” என வருத்தமாக கூற,
“இந்த குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ தேவையில்லாதது அம்மு.. இது நார்மல் வெய்ட்னு தான் சுமி ம்மா சொன்னாங்க. இதுக்கு மேல எப்படி வெய்ட் போட முடியும்… பேபின்னு தெரிஞ்ச பிறகு, நடந்த அவ்ளோ பிரச்சினையிலயும் கூட, சாப்பாட்டுல கூட உன் கோபத்தை நீ காமிச்சதே இல்ல. நான் கவனிச்சிருக்கேன். இதுக்கு மேல நீ எப்படி கவனமா இருக்க முடியும். யூ ஆர் பெர்ஃபக்ட் மாம்.. அதை முதலில் உன் மண்டையில பதிய வச்சிக்கோ..” என்று அள் நெற்றி முட்டி முத்தம் பதிக்க, தாமரையின் முகம் தாமரை போலவே மலர்ந்து போனது.
“ம்ம்ம்” என்றவள் இன்னும் வாகாக அவன் மேல் ஒட்டிக்கொண்டு “இப்போ நீங்க என் முழுப்பேர் சொன்னீங்க த்தான்..” என முணுமுணுக்க
“ஹ்ம்ம் இந்த பேர் தான் இப்போ எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு. தாராவை விட்டுட்டு செந்தாமரைன்னே கூப்பிட போறேன்.. செந்தாமரை இனி என் தாமரை.. எனக்கு மட்டும் தாரா..” என ரசித்து மனைவியை நெருக்கிக் கொண்டான்.
‘வெளியூர் சவம்..’ என ஊர்க்காரர்கள் நாயகியின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வர யோசிக்க, செல்வமும் இளங்கோவும் தான் “நம்ம ஊர்ல வந்து தான் அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு. சொந்தக்காரங்க எல்லாம் இங்கன இருக்கும் போது, சவத்தை அவ்ளோ தூரம் ஏன் கொண்டு போகனும். அதோட ஆஸ்பத்திரில வச்சிருந்த உடம்பு.. ரொம்ப நேரம் வைக்காம, காரியத்தை முடிக்கிறது தான் நல்லது..” என்றார் செல்வம்.
என்ன தான் கதிரவன் மேல் ஊர்க்காரர்களுக்கு நல்ல எண்ணம் இல்லையென்றாலும், செல்வத்தின் மேல் இருந்த நம்பிக்கையிலும், மரியாதையிலும் சரியென்று விட்டனர்.
யாருக்கும் சந்தேகம் வராதபடி நாயகியின் இறுதி காரியங்களை முடித்தான் இளங்கோ. அவரின் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை சீனி.
மகளுக்கு தாயின் செயல்கள் தெரிந்து விடக்கூடாது என்று அவளுக்கு சந்தேகம் வராத அளவிற்கு நடந்து கொண்டார். அவரின் செய்கையிலேயே இளங்கோவிற்கு அனைத்தும் புரிந்து விட்டது.
“மாமா..” என்றவன் பெரியவரின் கையைப் பிடித்துக்கொள்ள, “என்னோட பேராசை தான் இது எல்லாத்துக்கும் காரணம் இளா. கதிரை நான் எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போகாம இருந்திருந்தா, அவன் ஜெயந்தியை பார்க்காம இருந்திருந்தா, ரெண்டு பேருக்கும் காதல் வராம போயிருந்தா..?” என்றவர் மருமகனின் கையைப் பிடித்துக்கொண்டு கதறி தீர்த்துவிட்டார்.
“மாமா.. இந்த இருந்திருந்தா, நடந்திருந்தா இது எல்லாம் முடிஞ்ச பிறகுதான் நாம யோசிப்போம். அப்படி யோசிச்சு என்ன பிரயோஜனம் சொல்லுங்க. நடந்தது எதுவும் இல்லன்னு ஆகிடுமா? இல்ல மாத்த தான் முடியுமா? இனி அதை எப்பவும் பேச வேண்டாம். ப்ரீத்தாவுக்கோ, பாட்டிக்கோ அவங்களைப் பத்தி எதுவும் தெரியாது. தெரியவும் வேண்டாம். நான் இருக்கேன் உங்களுக்கு.. அந்த நம்பிக்கையை எப்பவும் விட்டுடாதீங்க..” என்று சமாதானம் செய்தான்.
ஊர்க்காரர்களின் பேச்சுதான் இளங்கோவை வெகுவாக தாக்கியது. ‘வெளியூர் சவம்..’ என்று நாயகியின் சடலத்தை சொன்னது ஒரு வருத்தம் என்றால், தன் தந்தையின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின்மை பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.
அவர் செய்த செயல் அப்படித்தான் என்று மூளை அறிவுறுத்திய பின்னும் கூட அவனால் அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை.
இந்த இடத்தில் இளங்கோ பெரிதாக அடி வாங்கினான். தன் தந்தையின் மேல் அவர்களுக்கு இருக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அதற்கான வேலைகளில் அடுத்தடுத்த நாட்களிலேயே இறங்கியும் விட்டான்.
அதற்காக ஊர் பெரியவர்களிடம் பேசுவது, ஊர் வேலைகளில் தன்னை பெருமளவு புகுத்திக் கொள்வது என கொஞ்சம் பிசியாகவே தான் அடுத்தடுத்த நாட்களை நகர்த்தினான் இளங்கோ.
இளங்கோவின் இந்த புதிய பரிணாமம் செல்வத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கதிரவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ, அதை இளங்கோ செய்வதை கண்டு மனம் மகிழ்ந்தார்.
மறக்காமல் மனைவியிடமும் சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டார்.
குழந்தைகளை பதினைந்து நாள் கழித்து தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என சுமதி கூறிவிட, அதனால் தாமரையும் மருத்துவமனையிலேயெ இருக்கட்டும் என்று விட்டான் இளங்கோ.
இடைப்பட்ட நாளில் இளங்கோவின் கால் சற்று சரியானது. சென்னையில் இருக்கும் வேலையை முழுக்க முழுக்க நவீன் பார்க்கும் படி பார்த்துக் கொண்டான்.
ப்ரீத்தாவின் படிப்பு முடியும் வரை ஷ்யாம் சென்னையிலேயே இருக்கட்டும் என்று சுமதி சொல்லிவிட, அதில் ஷ்யாம்க்கு சற்று வருத்தம் தான். ஆனால் தாய் இறந்த சோகத்தில் இருக்கும் மனைவியிடம் அதை காட்ட விரும்பவில்லை ஷ்யாம்.
இன்னும் ஆறு மாதங்கள் தானே.. பார்த்துக் கொள்ளலாம் என்று சுமதி சொன்னதற்கு சரியென்றுவிட்டான்.
பதினைந்து நாள் கழித்து மருத்துவமனையில் இருந்து குடும்பமாக வந்த மகள் குடும்பத்தை ஊரே திரும்பி பார்க்கும்படி வெடி வெடித்து தான் வீட்டுக்குள் அழைத்தார் செல்வம்.
செல்வத்தின் அந்த செயலே அவர் எந்தளவு மகளை நினைத்தும், அவள் வாழ்க்கையை நினைத்தும் கவலையாக இருந்திருக்கிறார் என்று எல்லோருக்கும் புரிந்தது.
இன்று இருபத்தியெட்டாம் நாள்.. குழந்தைகளுக்கு தொட்டிலிலிட்டு பேர் சூட்டும் விழா ஏற்பாடாகி இருந்தது. மூன்று பேருக்கும் மனைவியைத்தான் பெயர் செலக்ட் செய்ய சொல்லியிருந்தான் இளங்கோ.
ஆனால் அவன் மனைவியோ அதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை. அவளின் இந்த போக்கில் சந்தேகம் வந்து இரண்டு முறை கேட்டும் விட்டான்.
“நானெல்லாம் யோசிக்கல த்தான்.. நீங்களே வைங்க.. எனக்கு அது யோசிக்க எங்க டைம் இருக்கு..” என கடுப்பாக சொல்ல, மனைவியின் கடுப்பில் தான் அவனுக்கு பல்ப் எரிந்தது.
ஊர் வேலையாக அலைந்து கொண்டிருப்பதால், மனைவி குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. அந்த கோபம் தான் இப்படி கடுப்பாக வருகிறது என புரிந்து சிரித்துக் கொண்டான்.
மனைவியின் கோபத்தை போக்கும் வழிதான் அவனுக்கு கை வந்த கலையாச்சே..!
வேகமாக மனைவியின் பின்னே தங்களின் அறைக்குள் நுழைந்தான்.
“அடியே செந்தாமரை..” என சத்தமாக ராகமிழுத்தவன், அவள் திரும்பிய அடுத்த நொடி
“செந்தாமரை அடி என் தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…
அவளை இழுத்து அனைத்து பாட ஆரம்பிக்க, சில நாட்களாக அவன் காதலில் கரைந்து கொண்டிருந்தவள், இப்போது அவன் குரலில் உருகிக் கொண்டிருந்தாள்.
youtube.com

- YouTube
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.