தாமரை - 69
ஊரையே அழைத்து விருந்து வைத்திருந்தார் செல்வம். உற்றார் உறவினர், சொந்த பந்தம், நண்பர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தனர்.
வீட்டின் பின்புறம் இருந்த இடத்தில் தான் சமையல் நடந்து கொண்டிருக்க, அதன் பக்கவாட்டில் தான் பந்தி நடந்து கொண்டிருந்தது.
மண்டபமே தோற்றுப் போகும் அளவிற்கு ஜமாய்த்திருந்தார் மனிதர். மூன்று வேளையும் விருந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
ஊரார் பேசிய பேச்சுக்களின் எதிர்வினை, அவர்களின் வாயை மூடவும், தன் மகிழ்வை காட்டவும் தான் இதெல்லாம் செய்கிறார் என்று புரிந்தது மகேஸ்வரிக்கு.
கணவரின் மனம் புரிந்து அவர் என்ன செய்தாலும் சரி என்பது போல் அவர் போக்கில் விட்டு விட்டார் மகேஸ்வரி.
மற்றவர்களுக்கும் அவரின் எண்ணம் புரிய, அமைதியாக விழாவிற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
ஐயரும் வந்து விட்டார். குழந்தைகளும் ரெடியாக இருந்தனர். இரண்டு பெண் குழந்தைகளும் மீண்டும் உறக்கத்திற்கே சென்று விட்டனர். அறைக்குள் சென்ற கணவன் மனைவி இருவர் மட்டும் இன்னும் வெளியில் வரவில்லை.
“ஷ்யாமா அம்முவுக்கு கால் பண்ணு..?” என்ற மகேஸ்வரியிடம்,
கையெடுத்து தலைக்கு மேல் கும்பிட்டவன் “ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து இன்னும் முடிக்காம போயிட்டு இருக்கு. இதுல புதுசா ஒன்னை கோர்த்து விடாதீங்க த்த… உங்க பொண்ணை எப்படி சமாளிக்கிறதுன்னு தான் இப்போ எல்லாம் என்னோட யோசனை ஓடுது..” என்றவன், விழித்திருந்த ஆண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல, கணவனின் பேச்சில் வாய்விட்டு சிரித்துவிட்டாள் ப்ரீத்தா.
“ச்சு.. இப்படி சத்தமா சிரிக்காத.. எல்லாரும் உன்னைத்தான் பார்க்குறாங்க. அப்புறம் ஊர் கண்ணே உன் மேலத்தான். இங்க ஒருத்தி கண்ணு மாதிரி ஒருத்தி கண்ணு இருக்காது. எல்லாம் கொல்லிக் கண்ணு, இன்னைக்கு ஃபன்ஷன் முடிஞ்சதும் முதல்ல உனக்கு சுத்தி போடனும்.. சுமதிக்கிட்ட சொல்லி வைக்கனும்..” என்ற ராணியை பார்த்து மென்மையாக புன்னகைத்தாள் ப்ரீத்தா.
கடந்து சென்ற நாட்கள் நொடியில் கண் முன் வந்து போனது பெண்ணுக்கு. தாயின் மறைவு பெரிய இழப்பென்றாலும், அதை நினைத்து கவலைப்படும் அளவிற்கு யாரும் அவளை தனியாக விடவில்லை.
இங்கிருக்கும் வரை வீட்டில் எப்போதும் அவளுடனே வசந்தி இருந்தார். இல்லையென்றால் மகளை கூடவே வைத்திருந்தார் சீனி. ஷ்யாம் சென்னை அழைத்து சென்ற போது அவர்களுடன் துணைக்கு ராணியையும் அனுப்பி விட்டான் இளங்கோ.
ஷ்யாம் ஹாஸ்பிடல் சென்று விட்டால் ப்ரீத்தாவிற்கு துணைக்கு என ராணி இருக்க, அவளை சிறிதளவும் கூட தனிமை தெரியாமல் பார்த்துக் கொண்டார் ராணி.
முதல் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தவள், பின் ஷ்யாமிடம் கேட்டு கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
“உனக்கு ஓக்கே வா டா.. இன்னும் கொஞ்ச நாள் வீட்டுல இருந்துட்டு கூட போ..” என்றான் ஆதரவாக.
“நான் ஓக்கே தான். காலேஜ் போனா, ப்ரண்ட்ஸ் பார்த்தா எல்லாம் சரியாகும்னு தோணுது. வீட்டுலயே இருந்தா ராணிம்மா என்னையே பார்த்துட்டு, எங்கூடவே இருக்காங்க. என்னால அவங்களுக்கும் கஷ்டம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என பெரிதாக கணவனை சமாதானம் செய்து தான் கல்லூரிக்கு கிளம்பினாள்.
காலையில் அவனே கொண்டு விட்டு விடுவான். மாலையில் சில நாள் அவளே வந்து விடுவாள். சில நாள் அவன் சென்று அழைத்து வருவான்.
காதலியாக இருந்தவள் மனைவியாக வந்துவிட்டாள் என்ற நிம்மதி, அவன் முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.
ராணியின் கவனிப்பில் மேலும் மெருகேறி, மனைவி என்ற அங்கீகாரத்தோடு தன் முன் சுற்றுபவள் மீது ஆசை அலையாய் பொங்கினாலும், அவள் படிப்பை மனதில் நிறுத்தி தன் ஆசைகளை அடக்கிக் கொள்வான்.
ஆனால் ப்ரீத்தாவிற்கு அப்படியான எண்ணங்கள் இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான். மனைவி அவனிடம் மிகவும் இயல்பாக பொருந்திப் போனாள்.
மனைவியின் இயல்பான போக்கில் கணவன் தான் குழம்பிப் போய் அலைவான்.
இந்த விழாவிற்காக கிளம்பும் போது கூட, குழந்தைகளுக்கு என்ன என்ன வாங்க வேண்டும் என்று அவனிடம் கேட்டிருந்தாள் ப்ரீத்தா.
அவனுக்கும் ஆசை நிறைய உண்டே.. அவன் அம்முவின் குழந்தைகள். நினைத்ததையெல்லாம் வாங்கி குவிக்க ஆசைதான். ஆனால் இப்போது அப்படி வாங்கலாமா தெரியவில்லை.
குடும்பஸ்தன் போஸ்ட் யோசிக்க வைக்க, சுமதிக்கு கூப்பிட்டு இதை கேட்க, “பரவால்ல டா.. கல்யாணம் ஆனதும் பொறுப்பாகிட்ட..” என மகனைக் கலாய்க்க,
“ம்மா..” என்றவனின் குரலில் வாய்விட்டு சிரித்தார் சுமதி.
“ஷ்யாம்.. செல்வம் அண்ணாவோட பங்காளி சைட் தான் புள்ளைங்களுக்கு தாய் மாமா சீர் செய்வாங்க. நடேஷன் அண்ணனோட பையன் சக்தி தெரியும்ல, அவன்தான் செய்றான். நீ குழந்தைங்களுக்கு சித்தப்பா முறைதான் ஆவ. அதனால நாம என்ன செய்றோமோ அதுதான் சீர். இங்க நானே எல்லாம் வாங்கிட்டேன். நீங்க கிளம்பி வாங்க.. போதும்..” என்று முடிக்க, ஷ்யாமும் சரியென்று கிளம்பிவிட்டான்.
ஆம்.. இளங்கோ முதலிலேயே செல்வத்திடம் சொல்லிவிட்டான். குழந்தைகளுக்கு அனைத்தும் முறையாகத்தான் செய்ய வேண்டும் என்று. அவர் பங்காளி முறையில் இருப்பவரிடம் அவனே சென்று, அன்று பஞ்சாயத்தில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, குழந்தைகளுக்கு மாமன் சீர் செய்ய முறையாக அழைப்பு விடுத்தும் வந்திருந்தான்.
இளங்கோ மன்னிப்பு கேட்டது தாமரைக்கு வருத்தம் தான். ஆனால் அதை அவனிடம் காட்டவில்லை. தந்தையிடம் சொல்லி புலம்ப “அம்மு.. இளாவுக்கு எல்லாரும் வேனும்னு நினைக்கிறான். அதுக்காகத்தான் இவ்வளவு இறங்கி போறான். இனி இங்கதான்னு போது எல்லாரையும் அனுசரிச்சு போறது தான் சரி. நாளைக்கு எனக்குப் பிறகு சக்திதான் எல்லாம் செய்வான். அவங்களை அனுசரிச்சு போறதுல தப்பில்ல அம்மு.. இதெல்லாம் நீ யோசிக்காத. இளாவை அவன் போக்குல விடு..” என்று விட,
வசந்தியும் “விடு தாமரை.. இளாவுக்கு கிடைக்காதது எல்லாம் அவன் புள்ளைங்களுக்கு கிடைக்கனும்னு எதிர்பார்க்கிறான். அவன் எதிர்பார்ப்பு தப்பில்ல தான.. இப்போதான் அவனோட ஏக்கங்கள் எல்லாம் எனக்கு புரியுது. சொந்தங்களுக்காக, முக்கியமா உன் அம்மாவுக்காக, அவன் அத்தைக்காக, எவ்வளவு ஏங்கியிருக்கான். அதெல்லாம் தெரியாம நாயகி பேச்சைக் கேட்டு, நான் இங்க விடாமலே வச்சிருந்திருக்கேன். இனியாச்சும் அவன் ஆசையெல்லாம் நடக்கட்டும், ஏக்கங்கள் எல்லாம் தீரட்டும்..” என்றார் பனித்த விழிகளோடு.
அதன் பிறகு தாமரை எதற்கும் வருந்தவில்லை. கணவனின் ஆசையே முக்கியம் என்பது போல் விட்டு விட்டாள்.
தனக்கு பின்னே மனைவி வருவாள் என்று நினைத்த ஷ்யாம், ப்ரீத்தா வரவில்லை என்றதும் சற்று ஏமாற்றமடைந்தான்.
‘இவளை எப்படித்தான் வழிக்கு கொண்டு வர்ரது’ என புலம்பியபடியே நடந்தவன், ப்ரீத்தா அவனை நோக்கி வருவதை கண்டு மலர்ந்தான்.
“தம்பியை அங்க கேட்குறாங்க..” என்றாள் புன்னகையாக.
“அப்பாடா.. அம்மு வந்துட்டாளா?” என்றவனுக்கும் மனைவியின் புன்னகை தொத்திக் கொண்டது.
“ம்ம் இன்னும் இல்ல.. நீங்க மாமாவுக்கு கால் பண்ணுங்க..” என்றாள் பெண்.
“ரெண்டு பேருல யாருக்கு கால் பண்ணாலும் என்னை அந்த ராட்சசி வச்சி செய்வா.. நீயே உங்க மாமாவுக்கு கால் பண்ணு. உடனே ஓடி வருவான்..” என சிரிக்க,
ப்ரீத்தாவும் உடனே இளங்கோவிற்கு அழைத்தாள். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தவன் “வந்துட்டீங்களா ரீத்து மா.. இதோ வந்துடுறேன்..” என இவள் பேச இடம் கொடுக்காமல், அவனே பேசி வைத்துவிட, இப்போது இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது..
ஷ்யாமின் கையில் அழகாய் பொருந்தியிருந்த குழந்தையை கண்கள் மின்ன பார்த்த ப்ரீத்தா “எனக்கு இதெல்லாம் வராது.. இந்த கேரிங்கெல்லாம் கஷ்டம். என்னையும், நம்ம குழந்தைங்களையும் நீங்க தான் பார்த்துக்கனும், உங்களுக்கு கஷ்டமா இருக்காதா? உங்களால முடியுமா? எங்களை சமாளிக்க முடியுமா?” என்றாள் கணவனின் முகத்தைப் பார்த்து.
“எந்த மடையனாவது பொண்டாட்டி புள்ளைங்கள பார்த்துக்க மாட்டேன்னு சொல்லுவானா? ஹ்ம்ம் அதெல்லாம் கொடுப்பினை குட்டிம்மா.. இப்போ நான் உங்களைப் பார்த்துப்பேன். பின்னாடி நீ எங்களைப் பார்த்துக்கோ.. லைஃப்னா என்ன குட்டிம்மா.. நிறைய காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் திமிர், கொஞ்சம் அனுசரனை, கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட்.. கொஞ்சமே கொஞ்சம் ஈகோ இதுதானே. இதெல்லாம் இல்லைன்னா லைஃப்ல சுவாரஸ்யம் இருக்காது கண்ணம்மா.. இப்படித்தான் வாழனும்னு நாம வாழ முடியாது. அதுக்காக எப்படியும் வாழலாம்னும் கிடையாது. வாழ்க்கை போற போக்குல நாமளும் போய்டனும். எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாம ரொம்ப நல்லா நம்ம வாழ்க்கையை லீட் பண்ணுவோம்..” என்று குழந்தையோடு அவள் நெற்றியில் முட்டி சிரிக்க, ப்ரீத்தாவும் அழகாக புன்னகைத்தாள்.
‘செம்ம ஷாட் ப்ரோ’ என்ற போட்டோ கிராபரின் குரலில் இருவரும் விலக, இளங்கோவும் தாமரையும் சிறு சிரிப்புடன் அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இளன்கோவின் விழிகள் வைரமாய் மினுமினுத்தது. அவனுக்கு ப்ரீத்தாவின் இந்த புன்னகையே அத்தனை நிம்மதியைக் கொடுத்தது.
ஷ்யாம் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று தெரியும். ஆனால் ப்ரீத்தா வளர்ந்த விதம் தான் கவலையைக் கொடுத்தது. அதுதான் அவனுக்கு கவலையே.. இப்போது அந்த கவலையும் காணாமல் போயிருந்தது.
அவர்களின் சிரிப்பில் ப்ரீத்தாவின் முகம் குப்பென சிவக்க, “ச்சூ போங்க மாமா..” என்று வேகமாக ஷ்யாமின் பின் ஒளிந்து கொண்டாள்.
“அடேங்கப்பா என் பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வருது ப்பா..” என்ற சீனியின் குரலில் அனைவரும் சிரித்து விட்டனர்.
அந்த நேரம் செல்வம் வேகமாக வந்து, “மகி.. சீக்கிரம் வா.. சக்தி வந்து அங்க முக்குல நிக்கிறான்..” என மனைவியை அழைக்க,
“அக்கா… சக்து வீட்டுல இருந்து சீர் கொண்டு வர்ராங்க.. நீங்க கொஞ்சம் இதெல்லாம் பாருங்க..” என்று கணவரின் பின் ஓடிவிட்டார் மகேஸ்வரி.
“பாப்பா.. குழந்தைங்களை அவங்ககிட்ட கொடுத்துட்டு சீக்கிரம் வா..” என்று தாமரையை அழைத்தவர் ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து, மஞ்சள் சந்தனம், குங்குமம் எல்லாம் எடுத்து வைத்து வாசலுக்கு சென்றார்.
ஊரே வியக்கும் படிதான் சக்தி சீர் கொண்டு வந்தான். கரகாட்டம், மேளம் என்று வர, அதற்கு முன்னால் வெடி போட்டுக் கொண்டே வந்தனர்.
மூன்று குழந்தைகளுக்கும் மூன்று ஆடுகள்.. பின் நூத்தியொரு தட்டு.. குழந்தைகளின் பொருட்கள் அனைத்தும் வெள்ளியில் தான் வாங்க வேண்டும் என்பதால் அனைத்தும் வெள்ளிப் பொருட்கள் தான் வாங்கியிருந்தான்.
தங்கத்தில் மூவருக்கும் செயின், காப்பும், வெள்ளியில் கொழுசும், இடுப்புக் கொடியும் என சபையே நிறைந்திருந்தது.
சக்தியின் காலை கழுவி, சந்தனம் குங்குமம் வைத்து ஆரத்தி எடுத்து தாமரை அழைக்க, தாய்மாமன் சீரோடு பந்தலுக்குள் நுழைந்தான் சக்தி.
அனைத்தையும் மலர்ந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ. அவனுக்கு இதெல்லாம் அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
இதுதான் அவன் ஊர்.. இங்குதான் அவனின் வேர் இருக்கிறது. இதெல்லாம் தான் அவனின் பாரம்பரிய வழக்கங்கள். இதில் எத்தனை மனிதர்களின் அன்பு இருக்கிறது, எத்தனை மனிதர்களின் பாசமும் நிறைவும் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து வளராத இளங்கோ, இப்போது அனைத்தையும் அத்தனை ரசித்தான்.
எப்படி இதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி தந்தை இருந்தார் என்ற கேள்வியோடே அந்த நிகழ்வை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.