• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 73 (எபிலாக் - 2)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - 73 (எபிலாக் 2)

“என்ன இளா.?” என நொந்து போய் கேட்ட சுமதியிடம்,

“சுமிம்மா.. என்னை எதுவும் கேட்காதீங்க. எல்லாம் அவக்கிட்ட கேளுங்க. என்னை எப்படி ஏமாத்திருக்கா பாருங்க.? நானே செம்ம கடுப்புல இருக்கேன்.” என அவனும் பதிலுக்கு நொந்து போய் சொல்ல, ஷ்யாம் தாமரையை முறைத்துக் கொண்டிருந்தான்.

இது எதையும் கண்டு கொள்ளாமல், அங்கிருந்த பேப்பர் வெய்ட்டை உருட்டிக் கொண்டிருந்தாள் தாமரை.

“அம்மு.. உன்னைப்பத்திதான் பேசிட்டு இருக்கோம். உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கோம்..” என சுமதி அதட்ட,

“அத்த ப்ளீஸ்.. நான் ஏற்கனவே அத்தான்கிட்ட இன்னொரு பேபி பெத்துக்கலாம் சொன்னேன். அவர் கேட்கல.. அதான்..” என இழுக்க,

“ஏற்கனவே மூனு பேர் இருக்காங்க. அவங்களோடவே உனக்கு நேரம் சரியா இருக்கும். இப்போ இன்னொன்னு வேற. இதுவும் சிங்கிள் பேபியா இருக்கும்னு என்ன நிச்சயம். ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்க.” என ஏகத்துக்கும் பேச,

“ம்மா போதும் விடுங்க.. அவளுக்கே பிரச்சினை இல்லன்னும் போது,” என்றவன் இருவரையும் பார்த்து “நீங்க எதுவும் சொல்லாதீங்க..” என்ற ஷ்யாம் “ஸ்கேன் பண்ணலாம்.” என தாமரையை அழைத்துக் கொண்டு ஸ்கேன் அறைக்குச் சென்றுவிட்டான்.

“இவன் தான் எல்லாத்துக்கும் ரீசன் சுமி ம்மா. இந்த குள்ளக் கத்திரிக்கா அழுது அவன்கிட்ட சீன் போட்டுருப்பா, உடனே அவனும் ஏதாவது ப்ளான் போட்டு கொடுத்துருப்பான்..” என இருவரையும் நினைத்துப் பல்லைக் கடித்தான் இளங்கோ.

“சரி விடு இளா.. அதுதான் பசங்களுக்கு நாலு வயசாகிடுச்சே.. இத்தனை பேர் இருக்கோம் பார்த்துக்கலாம்..” என்று சுமதியும் அவனைத்தான் சமாதானம் செய்தார்.

பிள்ளைகளுக்கு மூன்று வயது முடிந்ததுமே ‘இன்னொரு பேபி வேனும்’ என ஆரம்பித்துவிட்டாள் தாமரை.

அவனோ முதலில் வேண்டாம் என மறுத்து, பின் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி என எத்தனையோ முறையில் பேசியும் கேட்கவில்லை பெண்.

மனைவியின் விடாத இந்த பேச்சில், அவனுக்கு அவள் அருகே செல்லவே பயமாக இருக்க, ‘உனக்கு நான் ஈசியா கிடைச்சிட்டேன், அதுதான் என்னை இப்படி ஒதுக்கி வைக்கிற.. என் காதல் உனக்கு குப்பையா போச்சில்லன்னு’ அழுது ஆரப்பாட்டம் செய்ய, அதில் சமதானப் படலத்தில் இறங்கி, அவளில் விழுந்தவன்தான் பின் எழவே இல்லை. எழவும் விடவில்லை தாமரை. இப்போது அதை நினைத்தாலும், ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மற்றொரு பக்கம் அவனுக்கு நிறைவாகத்தான் இருந்தது.

மனைவியின் ஆசை அவனுக்கும் புரியத்தான் செய்தது. என்ன ஏதென்று உணரும் முன்னே குழந்தைகள் உண்டாகி விட்டனர்.

அவனது கோபத்திலும், ஆத்திரத்திலும் நாட்கள் போய்விட, எல்லாம் சரியாகி ஒரு கட்டத்தில் நெருங்கும் போது நாயகியின் பிரச்சினை. அனைத்தையும் சரி செய்து நிமிரும் போது குழந்தைகள் வந்து விட்டார்கள்.

அவர்களின் அந்த இனிமையான நாட்களை இருவருமே அனுபவிக்கவில்லையே. அதற்காகத்தான் குழந்தை வேண்டும் என்று மனைவி ஆசைப்படுகிறாள் என அவனுக்குத் தெரியாமல் இருக்குமா?

“ம்ம் இளா.. வா.. பேபிதான் இருக்கணும்னு சாமியை வேண்டிக்கோ..” என நமுட்டுச் சிரிப்புடன் சுமதி எழுந்து கொள்ள,

“மறுபடியும் மூணா இருந்தாலும் பிரச்சினை இல்ல சுமி ம்மா..” என்று சிரித்தவனிடம்,

“ஜாடிக்கேத்த மூடி தான்..” என்றவர் ஸ்கேன் செய்ய உள்ளே செல்ல, என்னதான் வெளியே கெத்தாக சொல்லிவிட்டாலும், உள்ளுக்குள் அங்கிருந்த நால்வருக்குமே கெதக்கென்று தான் இருந்தது.

சுமதி ஸ்கேனை ஆரம்பிக்க, தாமரை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களிலேயே சுமதி கண்டு கொள்ள, ‘ஷப்பா’ என்று அவர் தன் பெருமூச்சை வெளியிட, பிடித்திருந்த ஆண்களும் மூச்சை ஆசுவாசமாக வெளியிட்டனர்.

“சிங்கிள் ஃபீட்டஸ் தான்..” என்றவர் அடுத்து தன் வேலையை முடிக்க,

“வீட்டுக்கு சொல்லனும்..” என்ற இளங்கோவிடம்,

“வீட்டுக்கு போய் சொல்லிக்கலாம் த்தான்..” என்றுவிட்டாள் தாமரை. அதன் பிறகு நடந்தது எல்லாம் அந்த வீட்டிற்கே உரிய ஆர்ப்பாட்டங்கள் தான்.

சிறியவர்களின் எண்ணம்தான் பெரியவர்களுக்கும். முதலில் பிள்ளை உண்டானதைத் தான் யாராலும் கொண்டாட முடியவில்லை. அப்போதைய சூழலும் அப்படி இருந்தது.

ஆனால் இப்போது அப்படியில்லையே. அனைவருமே கொண்டாடி தீர்த்துவிட்டனர். செல்வத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைப் பிறக்கும் வரை மகளைத் தாங்கு தாங்கென்று தாங்கித் தீர்த்துவிட்டார்.

இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரின் வேண்டுதலும். அவர்களின் வேண்டுதலின் படியே ஆண் குழந்தை பிறக்க, அந்த பெரிய வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக குடியேறிவிட்டது.

“த்தான் இன்னும் என்ன யோசனை.?” என்ற மனைவியின் உலுக்கலில் நிமிர்ந்தவன், நிகழ்காலத்திற்கு வந்து “ம்ம் சூனியமா இருந்த என் வாழ்க்கையை வரமா மாத்தின தேவதையைப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றான் ஆழ்ந்த புன்னகையுடன்.

“ம்ம் உங்களுக்கு பைத்தியம் முத்திடுச்சு…” என்று சிரித்தவள், “அப்பா கூப்பிட்டார், ஷ்யாம் வந்துட்டானாம்..” என்றதும்,

“பாப்பாவுங்க எங்க..?” என்று அவளைச் சுற்றி பார்த்தான் இளங்கோ.

“ம்ம் அவங்க அப்பவே போயாச்சு..” என்று குழந்தையைத் தூக்கிக் கொள்ள வர,

“இரு இரு நான் தூக்கிக்கிறேன்..” என மகனை இளங்கோ தூக்கிக்கொள்ள, தாமரை குழந்தைக்கான பையை எடுத்துக்கொள்ள, இருவரும் கீழ வர, ஷ்யாம் தன் மகளை வைத்துக் கொண்டு வசந்தியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

வசந்தியின் இடுப்பில் ஷ்யாமின் மகன் இருந்தான். ப்ரீத்தாவை தேடி அந்த ஹாலையே வேகமாக இளங்கோவின் பார்வை அலசியது. அவளோ பொற்சுவையை வைத்துக் கொண்டிருந்தாள்.

“கிளம்பலாம் இளா.. வெயில் ஏறிட்டா கஷ்டம்..” என்ற செல்வத்தின் கூற்றுக்கு அனைவரும் சரியென்று கிளம்பி விட்டனர்.

இளங்கோ தன் பங்காளி அனைவரையும் விழாவிற்கு வர வைத்திருந்தான். அவர்கள் இல்லாமல் அவன் வீட்டில் எந்த விழாவும் இருக்காது.

இந்த ஐந்தாண்டில் அவனைப் பார்த்தவர்கள் பழகியவர்கள் அனைவருக்குமே இளா இன்றியமையாதவனாகிப் போனான். அந்த ஊரில் அவன் செய்த நல்ல செயல்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் அவன் மேல் மிகுந்த மரியாதை வந்துவிட்டது.

வசதியில்லாத பிள்ளைகளைப் படிக்க வைத்து, தன் கம்பெனியிலேயே வேலைக்கும் எடுத்துக் கொண்டான்.

இப்போது தாமரைக்காக பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறான் இளங்கோ. சீனிக்கும் இதில் ஆர்வம் இருக்க, அவரை தன்னோடு வைத்துக்கொண்டான்.

“பெரிப்பா வந்து ரொம்ப நேரமாச்சா?” என்றவன் அங்கிருந்த பெரியவரிடம் வேகமாக செல்ல,

“அதெல்லாம் இல்லைய்யா.. இப்போதான் வந்தேன். உங்க பெரியம்மா ஆளா பறந்துட்டு கிடந்தா புள்ளைங்கள பார்க்கனும்னு..” என்று சிரித்தவனிடம்,

அதுக்குதான் நேரா வீட்டுக்கே வந்துருங்கன்னு சொன்னேன்..” என அந்த பெரியம்மாவை தேட, அவரோ தாமரையின் கையிலிருந்த மகனை வாங்கிக் கொண்டிருந்தார்.

“குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரச் சொல்லாட்டா.. சாப்பிட நேரம் எடுக்கும்..” என்றவனிடம்,
“நம்ம வீட்டாளுங்களுக்கு என்ன உபசரிப்பு கிடக்கு.. நீ வந்தவங்கள பாரு.. நான் போய் பேரனை பார்த்துட்டு வரேன்..” என நகர, இளங்கோவும் சிரித்துக் கொண்டே வேலையைப் பார்த்தான்.

இங்கு வந்த பிறகு அனைவரிடமும் முறையை வைத்து பேசிப் பழகியிருந்தான். முதலில் கஷ்டமாக இருந்தாலும், போக போக பழகிக்கொண்டான்.

“மச்சான் சித்தப்பா கூப்பிடுறார் வாரும்…” என்று சக்தி வந்து அழைக்க, அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் அந்த நாள் ஓடியே போனது.

குலதெய்வத்தை வேண்டி பாரிவேந்தனுக்கு சக்தியின் மடியில் அமர வைத்து, மொட்டையடிக்க, சக்தி வழக்கம்போல ஊரே வியக்கும் படி சீர் செய்துவிட்டான்.

அழுத மகனை மனைவியோடு சேர்ந்து குளிக்க வைத்து, புது உடை மாற்றிக் கோவிலுக்கு வர, அவன் பிள்ளைகள் மூவரும் அவர்களை நோக்கி ஓடிவந்தது.

தாமரையும், பொற்சுவையும் கொற்றவையும் வெயில் உறுத்தாத வான நீலத்தில் பட்டு உடுத்தியிருக்க, இளங்கோவும், மாறனும் பாரியும் அதே கலரில் சட்டையும், வெண்பட்டு வேட்டியும் அணிந்திருந்தனர்.

‘என் கண்ணே பட்டுடும் போல’ என வழக்கம் போல ராணி புலம்பிவிட்டு “மகி இன்னைக்கு என் கால் மண்னை எடுத்து இவங்களுக்கு சுத்தி போடு..” என்றார் வேகமாக.

“க்கா..” என சிரித்த மகியிடம்,

“நிஜமாத்தான் சொல்றேன்.. என் கண்ணு முழுக்க இன்னைக்கு புள்ளைங்க மேலத்தான்..” என்று வேறு சொன்னார்.

உண்மையும் அதுதானே. இன்றைக்கு வந்திருந்த அத்தனை பேரின் கண்களும் இவர்கள் மீதுதானே.

விழா முடிந்து அனைவரும் கிளம்ப லேட்டாகும் என்பதால், பெண்களை மட்டும் முதலில் அனுப்பிவிட்டான் இளங்கோ.

அனைத்தையும் எடுத்து வைத்து, சமையலுக்கு என அனைத்திற்கும் பணம் கொடுத்து வீடு வர, இரவை நெருங்கிவிட்டது.

ஷ்யாமும் இளங்கோவோடு இருந்ததால் ப்ரீத்தா இங்கேதான் இருந்தாள். சுமதியும் அவர் கணவரும் கோவிலுக்கு வந்துவிட்டு அப்படியே சென்றிருந்தனர்.

கலைத்துப் போய் வந்த ஆண்களைப் பார்த்ததும் எதுவும் பேசவில்லை.

“மிச்ச மீதி கணக்கெல்லாம் நாளைக்கு பாருங்க மாமா” என்ற மனைவியின் அதட்டலில் செல்வம் பேத்திகளோடு அறைக்குச் செல்ல, மாறன் மட்டும் மகேஸ்வரியின் பின்னே சுத்திக் கொண்டிருந்தான்.

‘வீட்டுக்கு கிளம்பலாம்’ என்று நினைத்த ஷ்யாமிடம் “மார்னிங்க் போடா.. பாட்டி ப்ரீத்தாவை ரொம்ப மிஸ் பண்றாங்க. இன்னைக்கு இங்க இருந்தா சந்தோசப்படுவாங்க..” என்ற இளங்கோவின் பேச்சுக்கு சரியென்று இருந்துவிட்டது ஷ்யாமின் குடும்பம்.

ப்ரீத்தாவின் இரண்டு பிள்ளைகளும் ராணியோடு ஐக்கியமாகிவிட, ஷ்யாம் மனைவியோடு ஐக்கியமாகிவிட்டான்.

‘எவ்ளோ நாளாச்சு டி.. இப்படி நமக்கு தனியா டைம் கிடைச்சு.” என மனைவியை அனைத்துக் கொண்டவன்,

“ம்ச் புடவை கூட மாத்தல என்ன பண்றீங்க..” என திமிறியவளை

“அதை ஏன் மாத்தி டைம் வேஸ்ட். எப்படியும் அது தேவைப்படாது..” என்று முடிக்கும் முன்னே அவன் வாயை தன் கைக்கொண்டு மூடியவள், கணவனை முறைக்க,

“வெரிகுட்.. இப்படி முறைச்சாத்தான் என் பொண்டாட்டிக்கு மூடு வந்துருக்குன்னு எனக்குத் தெரியும்..” என அவளை மடக்கி, தன்னிதழில் இருந்த விரலுக்கு குட்டி குட்டியாய் விடாமல் முத்தம் பதிக்க, பெண்ணவளும் மெல்ல மெல்ல அந்த முத்தத்திற்கும் கணவனின் அனைப்பிற்கும் மயங்க ஆரம்பித்தாள்.

“த்தான்.. தம்பிக்கு இந்த பனியனை மட்டும் போட்டு விடுங்க.” என்ற மனைவியிடமிருந்து வாங்கி மாட்டியவன், குழந்தையைத் தூக்கி மிக கவனமாக தொட்டிலில் படுக்க வைத்தவன், கட்டிலில் வந்து அப்படியே விழுந்தான்.

கணவனைக் கவனித்தவாறே அருகில் வந்த பெண்ணவள் “த்தான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலயா?” என்றாள்.

“ம்ம்..” என்றவன் அவளை நோக்கி கையை நீட்ட,

நீட்டியக் கையை வேகமாக பிடித்துக் கொண்டவள் “என்னாச்சு.?” என்று பதட்டமாக அவன் அருகில் அமர்ந்து கொள்ள,

“ம்ச்… ஒன்னுமில்லடி.. உடனே பதறாத.” என்றவனோ அப்படியே அவள் மடிக்குத் தன் தலையை மாற்றினான்.

“என்ன த்தான்..” என்றவளுக்கு பதட்டம் குறைந்தாலும், ‘ஏன் இப்படி.?’ என்ற யோசனை குறையவில்லை.

கணவனின் அமைதி வேறு பெண்ணவளுக்கு பயத்தைக் கொடுத்தாலும், அமைதியாக அவன் தலையைக் கோதிக் கொடுக்க, இப்போது மனைவியின் வயிற்றில் அழுத்தமாக முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

கணவனின் வித்தியாசமான செய்கையில் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தவள் வயிற்றில் ஈரம் படுவதை உணர்ந்து தான் அவன் அழுகிறான் என்பதே புரிந்தது.

“த்தான். என்ன என்ன த்தான்.. ஏன் இப்படி.?” என அவன் தலையைத் தூக்கிப் பார்க்க, அவன் கலங்கிய முகம் கண்டவல் தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு “என்ன த்தான் இதெல்லாம்? நீங்க இப்படி ஃபீல் பண்றது தெரிஞ்சா வீட்டுல எல்லாரும் கஷ்டப்படுவாங்க ல்ல.. முக்கியமா உங்க அத்தம்மா..’ என கணவனை சமாதானம் செய்ய, ‘ம்ம் ம்ம்’ என்றவன் அவள் நைட்டிலேயே முகத்தை அழுந்த துடைத்துவிட்டு எழுந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்து மனைவியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“இன்னைக்கு முழுக்க அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தோனிக்கிட்டே இருக்கு. அவங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன் தாரா..” என்றான் கரகத்தக் குரலில்.

‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் சொன்னாலும், பெற்றவர்களின் இழப்பும் அவனின் வலியும் மாறாது தானே. இனி வரும் காலத்தில் குழந்தைகளைப் பார்த்து அதை மறக்க முயற்சி செய்யலாம். உடனே முடியாது என அவளுக்கும் புரிகிறது.

“இன்னைக்கு பெரிய அத்தை தம்பியை கீழயே விடல பார்த்தீங்களா த்தான். பெரிய மாமா அதுக்கும் மேல.. ஹேன்ட் ஃபேன் அவனுக்கு மட்டும் வச்சிட்டு உட்கார்ந்திருக்கார்.” என பேச்சை மாற்ற,

“பெரிப்பாவுக்கு ரொம்ப சந்தோசம்.. அப்பா இப்படி இருக்கனும்னுதான் ஆசைப்பட்டாராம். நான் இங்க வந்தது அவருக்கு அவ்வளவு சந்தோசம்.” என்றவன் “எப்படி அப்பா இதெல்லாம் விட்டுட்டு அங்க போனார்னு தான் தெரியல” என பெருமூச்சுவிட்டான்.

மீண்டும் பெற்றவர்களிடமே வந்து நிற்பதை உணர்ந்தவள், இன்றைய விழாவில் பிள்ளைகளின் சேட்டையை ஒவ்வொன்றாக சொல்லி, அவன் மனதை மெல்ல மெல்ல மாற்ற ஆரம்பித்தாள்.

மனைவியின் நோக்கம் புரிந்த கணவனும் அவள் பேச்சைக் கேட்டபடியே மனைவியின் கூந்தலை வருடியபடியே ‘எவ்ளோ சாஃப்ட்..’ என அவளின் காதோரம் முணுமுணுக்க,

அதில் சிலிர்த்தவள் சாய்ந்திருந்த அவன் மார்பில் அழுத்தமாக முத்தமிட்டு, “அத்தையும் மாமாவும் நம்மக்கிட்ட வந்துட்டாங்கன்னு நம்புங்க அத்தான். அப்போ இந்த கவலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறையும்..” என மீண்டும் முத்தமிட, மனைவியின் இடையை அழுத்தமாக பற்றினான் இளங்கோ.

“ம்ம் த்தான்..” என சினுங்க..

“நான் சிவனேன்னு வந்து படுத்தேன். சும்மா இருந்தவனை உசுப்பேத்திட்டு, இப்போ வந்து சினுங்கினா?” என்றவன், அவளில் தன் வேலையை ஆரம்பிக்க, அந்த அறையே அவர்களின் மெல்லிய சத்தத்தில் நிறைந்து போனது…

அவர்களின் இல்லறம் இனிய இல்லறமாக நிறைந்து போகட்டும்.. அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்..
நன்றி…



 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
392
8
28
Hosur
Super super
Valthukal vani