• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாலில் ஒலிக்கும் லதிஷா பனி - 1

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

பனி - 1​

IMG_20241208_024840_943.jpg

வெள்ளைத் தாளின் கீழ் தெரியும் சாம்பல் வண்ணம் போல் ஒரு அடர் குளிர்காலம்.

பனி உறைந்த தால் ஏரியில் ஷிகாரா நகரும் சப்தம் மட்டுமே கேட்டது ( ஷிகாரா என்பது ஒரு பக்கம் அரை படுக்கையும் மறுபுறம் பெஞ்சும் கொண்ட படகு)

உள்ளே கண்களை தவிர மற்ற அங்கங்கள் அனைத்தும் மறைத்த நீளமான பெரான் (கம்பளிஆடை) உடுத்தி இருந்தாள்.

பார்ததுமே தெரிந்துவிடும் காஷ்மிரி பெண் இவள் என்று.

தால் ஏரியின் உட்புறத்தில் உள்ள பனிக்கட்டியை உடைக்க படகோட்டி துடுப்பை எடுத்து உடைக்க துவங்கினான். பனிகட்டிகள் துகள்துகளாய் சிதறி

வெள்ளிஅருவி போல் கரைந்தது வழிந்து வழிகாட்டியது.

மூடுபனியின் முக்காடு வழியாக நகரும்போது ஏரியின் அமைதியான நீரில் சிற்றலைகளை உருவாக்கி, அமைதியாக நகர்ந்து சென்றது ஷிகாரா.

இவர்களது ஷிகாராவிற்கு முன்னே காய்கறிகளை சுமந்து செல்லும் ஒரு தனி ஷிகாரா ஒன்று இவளுக்கு பாதை இட்டது.

அடர்ந்த பைன்மரங்களுக்கிடையே ஷிகாரா தண்ணீரை இரண்டாக பிளந்து,இவளது மிதக்கும் தோட்டத்திற்குள் சென்றது.

லதிஷா ஜல்தி ஆவோ...என்றழைத்தார் இவளது மாமா முல்லா

அங்கே நிறைய ஷிகாராக்கள் வரிசையாக நின்றது.இந்த மிதக்கும் காய்கறித் தோட்டங்கள் தனியார் உரிமையாளர்களுக்கு சொந்தமானது

முகவர்கள், மொத்த வியாபாரிகளுக்கு சில்லரை முறையில் வியாபாரம் நடைபேறும்.பெரும்பாலான வர்த்தகம் காலை 7 மணிக்குள் முடிந்துவிடும்..

உள்நாட்டில் ராட் என்று அழைக்கப்படும் இந்த மினி தோட்டங்கள் மேட்டட் தாவரங்கள் மற்றும் பூமியின் கலவையில் செழித்து வளரும்.இலை கீரைகள், தண்ணீர் கஷ்கொட்டைகள், 'நாட்ரு' (தாமரை தண்டுகள்), வெங்காயம், தக்காளி மற்றும் வெள்ளரிகள் போன்ற சில சிறந்த காய்கறிகளை உற்பத்தி செய்கின்றார்கள் இம் மக்கள்.

காய்கறிகள்

ஏற்றப்பட்ட நிறைய ஷிகாராக்களை ஒவ்வொரு காலையிலும் பார்க்கலாம்.

இன்றைய குளிர்கால கணக்குகளை சரிபார்த்துவிட்டு முல்லாவும், லதிஷாவும் கிளம்பினார்கள்.

லதிஷா தனது பாரம்பரியமான சிறிய மாளிகையை நோக்கி சென்றாள்.

காஷ்மீரில் உள்ள அனைத்து பாரம்பரிய வீடுகளும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை, சாலட் பாணியில் உள்ளன, மேலும் சுவரில் இருந்து சுவரில் தரைவிரிப்புக்கு மேல் மின்சார போர்வைகள் போடப்படும் பொதுவான அறை உள்ளது.உள்ளே காஷ்மீரி தரைவிரிப்புகள் மற்றும் மரத்தாலான சுவர்களில் உள்ள சிற்பங்களை விளக்கும்

சித்திரங்களும்,துருக்கிய விளக்குகளிலிருந்து வரும் மென்மையான ஒளிகற்றைகள் எல்லா திசைகளிலும் ஒளிரும்.

வீட்டில் ஐந்து படுக்கையறைகள் மிகப்பெரியதாகவும், வசதியாகவும் உள்ளன. ஓவ்வொரு அறையிலும் காங்கிரிஸ்-சுடு நிலக்கரியுடன் கூடிய பெரிய காங்கிரி வெப்பம்மூட்டி இருக்கும் இதனால் அறைகள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.

மேலும் வால்நட் மரத்தால் செய்யப்பட்ட விரிவான நான்கு சுவரொட்டி படுக்கையுடன் வருகிறது, கலைநயத்துடன் செதுக்கப்பட்ட காஷ்மீரி வேலைப்பாடுகள் நிறைந்தது.

மரத்தாலான தரையைச் சுற்றிலும் விரிக்கப்பட்ட தரைவிரிப்புகள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சுவர்திரைகள் தொங்கும். இது ஒரு உயர்மட்ட காஷ்மீரி வீட்டின் வசதியான உணர்வைக் கொடுக்கும்.

பழங்கால பொருட்களில் மூன்று டாக்ஸிடெர்மிட் பனிச்சிறுத்தைகள், லதிஷாவின் முன்னோர்களின் வீரதீரத்தை பறைசாற்றும் சான்றுகள்.

லதிஷாவின் கண்கள் அலை பாய்ந்தன, வீட்டின் வரவேற்பறையிலிருந்து, அந்த அழகிய தேன்னிற அறையை நோக்கி ஓடினாள்.

வெப்பகாற்று அறை முழுவதும் கதகதப்பை உணர்த்தியது.தனது பெரான் ஆடையை களைந்துவிட்டு தனது பொக்கிஷத்தை காண தவித்தாள்.

இளம் நீலநிற கொசுவலைகள் சுற்றிய மிகப்பெரிய கட்டிலில் வெண்மையான கோள உருண்டைக்குள் அழகிய வெண்ணைகட்டி ஒன்று உறங்கி கொண்டு இருந்தது.

குளிரில் ஜஸ்கட்டிகள் போல் இருந்த அவளது கன்னங்களும் மூக்கின் நுனியும் பனித்துளிகள் சிந்திய ஆப்பிள் பழங்களை நினைவுபடுத்தின.

காஷ்மீரி ரோஜாவை தூயபாலில் இட்டு அரைத்து வந்த வண்ணத்தில் மேனியின் நிறம். அடர்ந்த கருமையான மிகப்பெரிய நீலநயனங்கள்.

பிறைநெற்றியில் அங்கங்கே சிதறியது சிறிய கார்குழகள்.முழங்கால்களை தொட்டு தடவியது நீளமான கூந்தல். சிப்பியின் இதழ்கள், இதழ்களின் திறவுகளின் உள்ளே முத்துகள் பல.

தந்தநிற கைகள்,நீளமான துலிப்மொட்டுகள் போன்ற விரல்கள் எல்லோராவின் ஓவிய பாவை போல் இருந்தாள் லதிஷா.

அடுத்த அறையில் இருந்து வந்த முல்லாவின் மனைவி(நூரி)

அப்படியே மயங்கி கிறங்கி இருவரையும் பார்த்து நின்றார்.

லதிஷாவை உரித்து வரைந்த வண்ண சித்திரமே இந்த மூன்றே வயதான வெண்ணைக்கட்டி. சற்றே புரண்டு படுத்தது

தித்தா.

நிர்மலமான நித்திரையில் பூர்ணநிலவின்

வடிவம் போல் சின்ன சித்திரமாய், மெல்லிய தளிர் கை, கால் கொண்ட ஷா குடும்பத்தின் இளவரசி.

வந்துட்டியா லலீமா... சாச்சா எங்கே எனறாள் நூரி.

நூரி....

என்ற குரலில் திரும்பியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது, காதழும் வழிந்தது நூரிக்கு.

அறையின் உள்ளே வந்த முல்லாவின்

கண்கள் நூரியை பார்த்தது. ஏன் இந்த கண்ணீர் என்று நினைத்தவர்,

நூரியின் கண்ணசைவில் கட்டிலை பார்த்தார்.இருவரின் எண்ணவோட்டமும், ஒரே நிகழ்வை பிரதிபலித்தது.

பஞ்சுமெத்தையில் லதிஷா துயில் கொள்ளும் தித்தாவை கட்டிக் கொண்டு பரவசப்பட்டாள்,தித்தாவின் உச்சி முதல் பாதம் வரை முத்தமழை பொழிந்து கொண்டிருந்தாள்.

தித்தா சினுங்கியது......பசியால் தாய்பால் வேண்டி குருவியின் வாய் போல் திறந்து திறந்து மூடியது.

லதிஷா குழந்தையை மடியில் கிடத்தி பசியாற்ற தொடங்கினாள். கூடவே அவளை கேட்காமலே கண்களில் மழையும், தாலாட்டும் ஆரம்பித்தது.

இதை பார்த்து பரவசப்பட தனது தமக்கையும், ஷாவும் இல்லையே என்று வருதப்பட்டார் முல்லா.

இருவரும் வெளியே வரவேற்பறையில் உட்கார்ந்தபடி கடந்து போன காயம்பட்ட வருடங்களை அசை போட்டனர்....

மேகங்கள் பிரிந்து, வாரங்களில் சூரியன் தனது முதல் பிரகாசமான கதிர்களை வெளிப்படுத்துகிறது. கடுமையான குளிருக்குப் பிறகு ஒரு பிரகாசமான வசந்தம் நிச்சயம் வரும் என்பதையும் நினைவூட்டுகிறது.

லதிஷாவின் அப்பா ஜரிஷ்ஷா மிகப்பெரிய பழைமையான பரம்பரியமிக்க செல்வந்தர்.இவரது மனைவி நதிரா ஷா

இவர்களுக்கு ஏராளமான மிதக்கும் தோட்டங்களும், தங்கும் விடுதிகளும்,ஸ்ரீ நகரில் உள்ளது.

சிறிது வருடங்களுக்கு பிறகே மழலை செல்வம் கிட்டியது. அதுவும் நதிரா, மொழி இன மத பாகுபாடு இல்லாமல் எல்லா கோவில்களிளும் போக அரம்பித்தார்.

எத்தனை பிரத்தனைகள், வேண்டுதல்கள் பண்ணியும் குழந்தை செல்வம் கிடைக்காமல் சோர்ந்துஇருந்த தருணம்.

ஒரு அந்திசாயும் நேரத்தில்

பக்கத்து மலை கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர் கடவுளின் முன் இனி நான் ஏன் வாழ வேண்டும் கேள்வியுடன் மயங்கி விட்டார்.

அப்போது பூத்தொடுக்கும் முதாட்டி பாடல் ஒன்றை பாடிக் கோண்டிருந்தார்.அந்த பாடல் நதிராவின் பாரத்தை இறக்கியது. அந்த சுரமில்லா சந்தம் இல்லா நாட்டுபுர பாட்டின் பெயர்,

" லதிஷா "

லதிஷா என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உருவான ஒரு கதை வடிவில் சொல்லப்படும் இசை வகையாகும்.

ஒரு மனிதனின் சந்தோஷம் துக்கம் இன்னும் வாழ்கையின் நிகழ்வுகளை தானே வார்த்தைகளை கொண்டு மெட்டிசைத்து பாடும் பாடல் இது.

நதிராவின் வேதனையை புறம்தள்ளிறது லதிஷா. அந்த வருடமே பெண்மகளை ஓவியமாய் பெற்றேடுத்தார். தங்கபெண்ணின் பெயர் லதிஷா...!!

முல்லவும், நூரியும் வந்தனர் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் லதிஷாவை போற்றி பாதுகாத்தனர்.

லதிஷாவின் ஓவ்வொரு விடுமுறையும் நூரியின் பிறந்தகிரமம் ஆன பாபா ரேஷியில் பண்டிகையுடன் கழிப்பார்கள்.பள்ளியின் இறுதிவருட படிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள் குடும்பமாய்.

ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க்கிற்கு போகும் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்வது இயற்கையின் அழகை ஆராதிபவர்களுக்கு ஏகாந்தமான ஒன்று.

குல்மார்க் இமயமலையில் அமைந்துள்ள ஒரு சொர்க்கமாகும்.சிலசமயம் வசந்த காலத்தில் வண்ணமயமான பூக்களால் மூடப்பட்டிருக்கும்.

குளிர்காலத்தில் அழகிய பனி அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும்

இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளிகள், உயர்ந்த மலைகள் மற்றும் பசுமையான வெளிச்ச காடுகளுடன் பயணம் போவது லதிஷாவின் விருப்பமான ஒன்று.

பாபாரோஷி மலைகிராமம் குல்மார்க்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.ஒரு முஸ்லீம் துறவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்புமிக்க பழங்கால மசூதியாகவும், புனித ஆலயம்மாகவும் அறியப்படுகிறது.இது முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவருக்கும் பிரபலமான புனித யாத்திரை தளமாகும்.

சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் குவிமாட கூரையுடன் இந்த மசூதி இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான உதாரணம். மத முக்கியத்துவம் தவிர, பாபா ரேஷி அழகான பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்டுள்ளது, இது ஒரு அமைதியான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையாக வருடம்தோரும் நடைபெரும் பண்டிகையாகும.இது பிரார்த்தனைகள், பாடல்கள் ஓதுதல் மற்றும் நபியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் போததிக்கப்படும்.ஆன்மீக பிரதிபலிப்பு, ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் நேரமாக கருதுவார்கள் இந்த கிரமத்து மக்கள்.

இரண்டுவிதமான காலநிலை மாற்றம் இந்த மக்களுக்கு பழகத்தில் உள்ள ஒன்றே.

நூரிக்கு சொந்தமான ஆப்பிள் பழத்தோட்டமும், பசுமையான பழத்தோட்டங்களைக் கொண்ட பண்ணை பாபாரேஷியில் உள்ளது. ஆப்பிள், பேரிக்காய், பீச் போன்ற பல்வேறு பருவகால பழங்களும் இங்கு பயிரிடப்படுகின்றது.

நூரியின் பண்ணைவீட்டின் முகப்பு காஷ்மிர்

ரோஜா புதர்கள், மேல்புறம் வண்ணமயமான பல்வேறு வண்ண மலர் படுக்கைகளைக் கொண்ட ஒரு சிறிய தோட்டமாகும்.

பார்வை படும்மிடமெல்லாம் பனி மூடிய மலைகள் நடுவில் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வயல்களை ரசிப்பதிலேயே லதிஷாவின் விடுமுறை கழியும்.உல்லாசப் பயணத்திற்கு ஏற்ற இடமாகும்.

அழகிய வெண்மை நிறத்திலான பிஎம்டபிள்யூ கார் வந்தது பண்ணை வீட்டின் முன் நினறது.

நன்கு பாலிஷ் செய்யப்பட்ட ஷூக்கள், நிமிர்ந்து பார்க்க வேண்டிய உருவம். கண்களில் கூலர்.....

யாரிவன் என்று தேடவேண்டும்.

நூரியின் அண்ணன் மகன் அமித்ஷா, ஆப்பிள் போன்ற கன்னம், வலிமையான புஜங்கள், கூர்மையான பார்வை ஆறடிக்கும் மேல் உயரம்,அழகான அழகன்.

இந்த தோட்டங்களையும் பல்வேறு தொழில்களையும் நிர்வாகம் செய்யும் இளமையான தொழில்அதிபர்.

நூரி ( நூரியின் அண்ணன் மகன்)...... என்ற வேகநடையுடன் வரவேற்பறையை அடைந்தான். அவனின் கணீர்குரலில் அமர்ந்திருந்த நூரி

அமி...........என்று முடிக்கும் முன்னே அவள் பாதத்தை தொட்டு நிமிர்ந்து கீழே அமர்ந்தான் அந்த நெடியவன்.

நூரியின் முகத்தில் அமியின் எட்டுமாத மழலை சிரித்து விளையாடியது நினைவுகளில் வந்தது.

ஆனந்த பரவசத்தில்....... ( இருபத்தெட்டு வயது இளைஞன் இருபது வருடங்கள் கடந்த பின்னும் அதே உருவத்தில் சிரித்தான்)

நூரியின் கைகள் தானகவே அவனை ஆசிர்வதித்தது.

அமியும் நூரியும் பல்வேறு விடயங்களை பேசி மகிழ்ந்தனர். அங்கு வந்த நதிராவும், ஷாவும் அமியின் அப்பா, அம்மா தொழில்களை பற்றி பேசிக்கொண்டனர். நூரியின் பண்ணை வீட்டை வடிவமைத்தவன் இந்த கட்டிக்கலை வல்லுநர், கட்டிக்கலை வடிவமைப்பில் முதுகலை படிப்பை லண்டனில் முடித்தவன்.

நதிராவின் யோசனைகள் பல்வேறு விதமாக வந்து போனது.

நூரியுடன் பேசிக் கொண்டே ஜன்னலின் வழியே ரோஜாதோட்த்தை காண்டவனின் பார்வையில் பட்டது ஒரு பனிரோஜா.

நூரி.......,அமியிடம் உனக்கு பிடித்த உணவுபண்டங்களை எல்லாம் நொடியில் செய்துவிடுவேன் நீ சாப்பிவேண்டும் என்றாள்.

நூரியின் தோள்களை கட்டிக்கொண்டு அதற்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்

என் செல்ல...... நூரி என்று கன்னத்தை கிள்ளினான்.

சரி நான் என் வயல்களை பார்த்து வருகிறேன் நூரி என்று கிளம்பினான்.

தன் பிறந்த மண்ணின் வாசனையும், காற்றையும் நுகர்வதற்கு பெரும் வரம் வேண்டும்.

அண்டம் விட்டு அண்டம் தாண்டினாலும், நம்

நாட்டின் சூழல் எங்குமே இல்லை. இந்த தத்துவத்தை வெளிநாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே உணர்ந்த உண்மை. என்பதை நினைத்துக் கொண்டே கால் போன நடந்தான் புன்சிரிப்புடன் அமி.

வயல்வெளிகளை கண்டவன் தன்னிலையை மறந்தான். அப்போது காதில் மயங்க வைக்கும் கானம் ஒன்று கேட்டது...!!

பனி ( தொடரும்)

Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
லதிஷாவோட கணவன் எங்கே? அவனுக்கு என்னாச்சு? 🤔
ஏன் அவ பேபியோட இங்க இருக்கா? 🤔

அமி தான் லதிஷாவோட கணவனா? 🧐

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல் வருமா!

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK24

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அருமையான வர்ணனைகள் ஊரைப்பற்றி, இயற்கையைப் பற்றி... ❤️

இந்த புது கேரக்டர் என்ட்ரியால என்ன நடக்கப்போகுதுன்னு பார்ப்போம் 🤩

அமி ❤️ ஷா விழியில் விழி மோதி பேசிட்டாங்க 😍

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
ஸூப்பர்..
மிகவும் அருமையா போகுது..
வாழ்த்துக்கள்
 
MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai
அருமையான வர்ணனைகள் ஊரைப்பற்றி, இயற்கையைப் பற்றி... ❤️

இந்த புது கேரக்டர் என்ட்ரியால என்ன நடக்கப்போகுதுன்னு பார்ப்போம் 🤩

அமி ❤️ ஷா விழியில் விழி மோதி பேசிட்டாங்க 😍

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
நன்றி 🙏🌹
 
MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu

பனி - 1​

View attachment 1368

காஷ்மீரையே ஒரு சுற்று சுற்றி வந்த உணர்வு. அழகான இயற்கை அழகோடு நாங்களும் பனியில் உறைந்து விட்டோம். கதையின் பெயர் அர்த்தம் புரிந்து விட்டது. தால் என்ற ஏரி எனக்கு புதிது. லதிஷாவுக்கு கணவன் இல்லேயா?. அமிக்கும் அவளுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா?.
 
🙏🌹