• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திண்டுக்கல் உப்புச்சாறு குழம்பு

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
வெயிலுக்கு ஏற்ற திண்டுக்கல் உப்பு சாறு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் ஒரு கப் பீன்ஸ் ஒரு கப் கேரட் ஒரு கப் முருங்கக்காய் ஒரு கப் உருளைக்கிழங்கு ஒரு கப் தயிர் இரண்டு கப் தேங்காய் ஒரு கப் முந்திரி பருப்பு ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் சின்ன சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன் பட்டை ஒன்று இஞ்சி துண்டு ஒன்று பெரிய வெங்காயம் ஒரு கப் தக்காளி ஒரு சிறிய கப் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சுவைக்கு ஏற்ப *தாளிக்க தேவையான பொருட்கள்* தேங்காய் எண்ணெய் கடுகு உளுந்து கறிவேப்பிலை செய்முறை பின்வருமாறு பச்சை மிளகாய் தேங்காய் முந்திரி பருப்பு வெங்காயம் தக்காளி இஞ்சி பட்டை, சோம்பு சிறிய சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் வதக்கியவற்றை நன்கு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும் அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி அலசிவிட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும் காய்கறிகள் நன்கு வேந்தபின் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் நன்றாக உப்பு சேர்ந்த பின் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும் பின் தாளித்து ஓரளவு ஆரிய பின் தயிரை கட்டி இல்லாமல் சேர்த்து கலக்கவும் சுவையான உப்பு சாரு
இந்த திண்டுக்கல் உப்பு சாறு குழம்புக்கு அப்பளமும் இஞ்சி வெங்காயம் மாங்காய் புளி தக்காளி ஆகியவை சேர்த்து அரைக்கப்படும் காரத் துவையலும் மிகச் சிறந்த காம்பினேஷன்
IMG-20230307-WA0005.jpg
 
  • Like
Reactions: anubama Karthik