• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை"பாகம் 1

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை"

பாகம் 1

IMG-20241119-WA0003.jpg



" தித்திக்கும் தேன்பாகும் தெவிட்டாத தெள்ளமுதம் தீஞ்சுவை ஆகவில்லையே ".... என்று டி எம் எஸ் அவர்களின் குரலில் முருகபெருமானின் பக்தி பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்க டீக்கடையில் அதைக் கேட்டபடி டீ ஆற்றிக் கொண்டிருந்தான் கணேசன்.


" கணேசா ஒரு டீ போடுப்பா " என்று சொல்லி பெஞ்சில் அமர்ந்தார் 58 வயதிலேயே வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய ரயில்வே ஆபிஸர் ரங்கநாதன்.

"சரிங்க சார்" என்று சொன்ன டீக்கடை கணேஷ் சர்க்கரை இல்லாமல் ஏலக்காய் மற்றும் இஞ்சி தட்டி போட்டு சுட சுட டீயை கிளாசில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து ரங்கநாதனிடம் நீட்டினான்.

" கணேசா சர்க்கரை போடல இல்ல அவருக்கு "
என்றார் ரங்கநாதனின் நண்பன் மற்றும் எதிர் வீட்டுக்காரரான சிவஞானம். சிவஞானமும் ரங்கநாதன் ஒன்றாக வேலை செய்தனர். 60 வயது ஆகிவிட சிவஞானம் ரிட்டையர் ஆனார். ஆனால் ரங்கநாதனோ பைபாஸ் ஹார்ட் சர்ஜரி ஆகி ஆறு மாதத்திற்கு பின்னர் வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டார்.

" சார் உங்களை விட அவரை எனக்கு நல்லா தெரியும், அவருக்கு எது எது எவ்வளவு தேவையோ அவ்வளவு போட்டு இருக்கேன். சக்கரை தான் அவரு உடம்புல நிறைய இருக்கே அதனால நான் அதை போடல "

" பத்தியாப்பா ஞானம், கணேசனுக்கு கூட என்னை பாத்தா கிண்டலா இருக்குது " என்றார் ரங்கநாதன் சிவஞானத்தை பார்த்து.

" ஐயோ சார் நான் என்னைக்காவது உங்கள கிண்டல் பண்ணி இருக்கேன்னா? சிவஞானம் சார் உங்களை கிண்டல் பண்ணா கூட நான் தானே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் " என்றான் கணேசன்.

" அப்போ இப்ப நீ சொன்னதை என்னன்னு எடுத்துக்கணும் நாங்க" என்று மேலும் கிளறினார் சிவஞானம்.

" அதானே " என்றார் ரங்கநாதன்.

" ஐயோ நண்பர்கள் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?, எனக்கு வேலை இருக்கு நான் போய் என் வேலையை பார்க்கிறேன் "

" பார்த்தியா ரங்கா, நம்ம ரெண்டு பேரும் ரிட்டயர் ஆயிட்டு வேலை வெட்டி இல்லாம இருக்கோம்னு சொல்லாம சொல்றான் "

" ஐயோ சிவஞானம் சார், இன்னைக்கு நான் போதும் வேற யாராவது மாட்டுவாங்க. அவங்கள பிடிச்சுக்கோங்க என்னை விடுங்க " என்று கணேஷ் சிரித்துக் கொண்டே சொல்ல

" சரி சரி வா பா நம்ம வீட்டுக்கு போகலாம் " என்றார் ரங்கநாதன்.

" என்னப்பா இன்னும் ஒரு ரெண்டு ரவுண்டு வாக்கிங் போக வேண்டாமா? "

" இல்ல ஞானம், இன்னைக்கு என்னமோ போல இருக்குது வீட்டுக்கு போகலாம் வா "

" என்னாச்சுப்பா முடியலையா டாக்டர் கிட்ட போலாமா? எப்போ அடுத்த செக்கப்?"

" அதெல்லாம் அடுத்த மாசம் தான் பா, ஒன்னும் இல்ல எனக்கு, வீட்டுக்கு போகலாம் வா, எக்கச்சக்க வேலை இருக்குது. பையனுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா? "

" உன்னோட உடம்பையும் கொஞ்சம் பாருப்பா "

" அதெல்லாம் நல்லா தான்பா இருக்கேன் "

பிறகு இருவரும் பேசிக்கொண்டே மெதுவாக நடந்து வீட்டிற்கு சென்றனர்.

ரங்கநாதனின் மனைவி கௌசல்யா.

" என்னங்க இன்னைக்கு கூட வா வாக்கிங் போவீங்க"

" டாக்டர் தான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரே வாக்கிங் போயே ஆகணும்னு, நாளைக்கு போகாம இருக்கிறேனா பாரு? "
என்று சொல்லி சிரித்தார் ரங்கநாதன்.

" கிண்டல் எல்லாம் போதும், சரி காபி தரவா? "

" உன்னோட காப்பிய குடிக்க வேணாம்னு தான் கணேசன் கடையில் டீ குடிச்சிட்டு வந்துட்டேனே "

" இனிமேல் நீங்க கேட்டா கூட காபியை தர மாட்டேன் உங்களுக்கு, போங்க"

" கோச்சிக்காத கௌசி"

" எத்தனை முறை சொல்கிறேன் கௌசி ன்னு கூப்பிடாதீங்க கௌசல்யா என்று முழு பெயர் வச்சு கூப்பிடுங்கள் என்று "

" என் பொண்டாட்டியை என் விருப்பப்படி தான் கூப்பிடுவேன் "

" நாளைக்கு நம்ம மருமக ஊர்மிளா வந்தா சிரிப்பா "

" அவளும் நம்ம பொண்ணு நந்தினி மாதிரி தானே, அவ ஏன் சிரிக்க போறா? அப்படியே சிரிச்சாலும் அதுக்காக நான் கவலைப்பட மாட்டேன் "

" நீங்க கவலைப்பட மாட்டீங்க எனக்கு வெக்கமா இருக்கு "

" இதுக்கு ஏண்டி வெக்கப் படுற?" என்ற சொல்லி தன் மனைவியின் தோளில் கையை போட்டு தன் பக்கமாக இழுத்து அணைத்தார் ரங்கநாதன்.

" வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்ல" என்று சொல்லி அவர் கையை தள்ளி விட்டுவிட்டு சோஃபாவில் இருந்து எழுந்து கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.

"அம்மா டிபன் ரெடியா? " என்று கேட்டுக் கொண்டே குளித்துவிட்டு காலேஜுக்கு ரெடி ஆகி மாடியிலிருந்து இறங்கி வந்தாள் நந்தினி.

" லஞ்ச் ரெடி, ஒரு ரெண்டு நிமிஷம் நீ போய் சாமி கும்பிட்டு விட்டு வா அதுக்குள்ள டிபன் எடுத்து டேபிளில் வைக்கிறேன்" என்றார் கௌசல்யா.

" என்ன காலங்காத்தால நீயும் உன் புருஷனும் ஒரே ரொமான்ஸ் போல " என்று சொல்லி தன் அம்மாவின் கன்னங்களைக் கிள்ளினாள் நந்தினி.

" ஏய் பிச்சுப்புடுவேன் பிச்சு, ஓவரா பேசாத" என்று சிரித்துக் கொண்டே பொய் கோபம் கொண்டு நந்தினியின் தோளை தட்டினார் கௌசல்யா.

பூஜை ரூமுக்கு சென்று இரண்டு நிமிடம் சாமி ஸ்லோகம் சொல்லி கும்பிட்டு விட்டு தன் அப்பாவின் பக்கத்தில் வந்த அமர்ந்தாள் நந்தினி.

"அப்பா, குட் மார்னிங் "

" குட் மார்னிங் அம்மு"

"அப்பா, காலேஜ் டூருக்கு காசு கேட்டு இருந்தேனே? "

" அதான பார்த்தேன், என்னடா இது என்னைக்கு இல்லாம இன்னைக்கு குட்மார்னிங் எல்லாம் சொல்றாளே என் பொண்ணுன்னு"

" அப்பா அன்னைக்கு கூட நான் உங்களுக்கு சொன்னேன் இல்ல? "

" என்னைக்கு? போன வாரம் வியாழக்கிழமை தானே? "

" வியாழக்கிழமையா? "

" பாரு உனக்கு கிழமை கூட ஞாபகம் இல்லை "

" அப்பா" என்று கொஞ்சுவது போல பேசினாள் நந்தினி.

"சரி சரி இந்தா டூருக்கு "

" என்னப்பா கரெக்டா அமௌன்ட் தரீங்க? "

" டூருக்கு போற அன்னைக்கு கை செலவுக்கு தரேன் மா"

" அது இல்ல அப்பா, டூர் போறதுக்கு ட்ரெஸ்ஸும் கொஞ்சம் எடுத்துக்கிறேன் அப்பா "

" இப்ப தானடி பொங்கலுக்கு, பர்த்டேக்குன்னு போன மாசம் நாலு செட் டிரெஸ் எடுத்த? "
அதுக்கு முன் மாசம் நியூ இயர் ன்னு இரண்டு டிரஸ் எடுத்த, போன வாரம் கூட உங்க அண்ணனுக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லி டிரஸ் எடுத்த, இன்னும் எதுக்கு உனக்கு டிரஸ்? "
என்றார் அம்மா கௌசல்யா.

" அம்மா தெரியாம பேசாதீங்க, அண்ணா நிச்சயதார்த்தத்துக்கு வாங்குனதெல்லாம் கிராண்ட் ஆனா டிரஸ், அதெல்லாம் போட்டுக்கிட்டு டூர் போக முடியுமா? பொங்கலுக்கு நீங்க என்ன வாங்கி கொடுத்தீங்க? ஒரு பாவாடை தாவணி ஒரு புடவை அதை போட்டு கிட்டு டூர் போக முடியுமா? அப்புறம் பர்த்டேக்கு ரெண்டு டிரஸ் தான் எடுத்தேன். நியூ இயருக்கு ஒன்னு அது ரெண்டு நாளைக்கு போடலாம் மீதி ரெண்டு நாளைக்கு டூர்ல நான் என்ன போடுறதாம்? "


" அந்த ரெண்டு ட்ரெஸ்ஸை தவிர வீட்ல உனக்கு வேற டிரஸ் இல்லையா மா? "

"அம்மா இது எனக்கும் டாடிக்கும், நீங்க இதுல உள்ள வராதீங்க "

" பதில் சொல்ல முடியல, அதனால இப்படி சொல்றியா? "

" கௌசி, நானும் அவளும் தான் பேசிகிட்டு இருக்கோம் இல்ல " என்றார் ரங்கநாதன்.

" மிச்" என்று சொல்லி தன் கணவனை முறைத்தார் கௌசல்யா.

" சரி கௌசல்யா, கௌசி சொல்லல போதுமா? "

"அப்பா ஆகட்டும் பெண்ணாகட்டும்" என்று சொல்லி அங்கிருந்து கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.

" இந்தமா என்று சொல்லி 2000 ரூபாயை கொடுத்தார் "

" தேங்க்ஸ் அப்பா" என்று சொல்லி அவரை ஹக் செய்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு

" பை" என்று சொல்லிக் கிளம்பினாள்.

" டிபன் சாப்பிடாமல், லஞ்ச் எடுத்து கொள்ளாமல் நீ காலேஜூக்கு போனா உங்க அம்மா இன்னும் கடுப்பாயிடுவா "

" ஐயோ அப்பா, நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க." என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் நந்தினி.

தன் மகளைப் பார்த்ததும் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டார் கௌசல்யா.

பிறகு போய் தன் அம்மாவை கட்டிப்பிடித்து,

" அம்மா சாரிமா, ஏன் எல்லாத்துக்கும் என்கிட்ட கோச்சுக்கிறீங்க? "

" நானா கோச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் தான் என்னை திட்டுறீங்க "

" டூருக்கு எல்லாரும் புது டிரஸ் போட்டு வருவாங்கமா, நான் மட்டும் பழைய டிரஸ்ல போனா எல்லாம் கிண்டல் பண்ணியே சாகடிப்பாங்க "

" சரி சரி அதான் ஏதோ ஒரு காரணம் சொல்லி உங்க அப்பா கிட்ட இருந்து காசு வாங்கிகிட்ட இல்ல, போய் டிரஸ் வாங்கிக்கோ. எனக்கு என்ன? "

" என்னைக்குமா நான் ஷாப்பிங் உங்கள விட்டுட்டு போயிருக்கேன்."

" அதுக்கு மட்டும் நான் வேணுமா "

" உண்மைய சொல்லணும்னா, நான் எனக்கு செலக்ட் பண்ற ட்ரெஸ்ஸ விட நீங்க எனக்கு செலக்ட் பண்ற டிரஸ் தான் சூப்பரா இருக்கு"

" இப்படி சொன்னா நான் உடனே ஓகே சொல்லிட்டு உன் கூட ஷாப்பிங் பண்ண வந்துருவேன் என்று நினைக்கிறாயா? "

" நான் ஐஸ் எல்லாம் வைக்கல உண்மையா தான் சொல்றேன். நீங்க வந்து தான் ஆகணும், அண்ணாவோட நிச்சயதார்த்தம் நாளைக்கு முடியட்டும். அடுத்த வீகெண்டுல போய் வாங்கலாம் "

பதில் பேசாமல் அமைதியாக இருந்தார் கௌசல்யா.

" என்னமா இன்னும் கோபமா தான் இருக்கீங்களா? "

" சரி சரி அதை விடு, இந்தா லஞ்ச். டிபன் தரேன் இரு."

" அம்மா என் செல்லம்மா இல்ல? "

" என்ன இன்னைக்கும் டிபன் வேணாம்னு சொல்ல போற அதானே? "

" என்ன பத்தி நல்லா புரிஞ்சு வச்சிக்கிறதுக்கு உங்கள விட்டா வீட்ல ஆளே இல்லமா"

" போதும் போதும், இந்தா இந்த பால குடிச்சிட்டு இந்த பழத்தை சாப்பிட்டுக்கிட்டே போ" என்று சொல்லி இரண்டு வாழைப்பழத்தை கொடுத்தார் கௌசல்யா.

" தேங்க்ஸ் அம்மா, பை" என்ற சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு வாழைப்பழத்தையும் அந்த லஞ்ச் பேக் இன் உள்ளே வைத்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி.

"பை நந்து" என்று ஸ்மைல் செய்தபடி சொன்னார் கௌசல்யா.

நந்தினி கிளம்பியதும் ஹாலில் அமர்ந்திருக்கும் தன் கணவனுக்கு ஒரு தட்டில் டிபன் எடுத்து வந்து அவர் முன்னே வைத்துவிட்டு பதில் பேசாமல் சென்றார் கௌசல்யா.

"கௌசி " என்று கூப்பிட்டார் ரங்கநாதன்.

திரும்பிப் பார்த்து வாயை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுழித்து ஒழுங்கு காட்டினார் கௌசல்யா.

சிரித்தபடி எழுந்து அவர் பக்கத்தில் சென்றார் ரங்கநாதன்.

கௌசல்யாவின் கையைப் பிடித்து,

" என்ன கௌசி, எதுக்கு என் மேல கோபம்? "
என்று ஒன்னும் தெரியாதது போல கேட்டார் ரங்கநாதன்.

" நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்துட்டு தான் என்ன வெறுப்பேத்துனீங்க இல்ல? "

" சரி கௌசி, நம்ம சம்பாதிக்கிறது யாருக்காக?
குழந்தைகளுக்காக தானே? "

" அதுக்காக அவங்க எது கேட்டாலும் என்ன ஏதுன்னு கேட்காம வாங்கி கொடுத்திடுவீங்களா? "

" குழந்தைங்க சந்தோஷம் தானம்மா நமக்கு முக்கியம் "

"என்னமோ போங்க, நான் என்ன சொன்னாலும் நீங்க நினைக்கிறது தான் நடத்துவீங்க "

இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது,

ரங்க நாதனின் ஃபோன் அடித்தது.

ஃபோனை எடுத்தார் ரங்கநாதன்.

என்ன? எப்போ? என்று அதிர்ச்சியாக பேசினார் ரங்கநாதன்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த கௌசல்யாவிற்கு என்ன விஷயம் என்று தெரியாமல் மனது பதைபதைத்தது.



தொடரும்.....
தேன் மிட்டாய்.














 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஆரம்பமே கலகலப்பான டீ கடை பெஞ்ச் ல 😍😍😍கணேஷ் மாதிரி வர்ற customer பத்தி தெரிஞ்சு அவங்களுக்கு பிடித்தமான முறையில் செயல்படுறது தொழிலுக்கு முன்னேற்றம் தான். கவுசல்யாவின் பெயரை கௌசின்னு அழைக்குறதுல ரங்கநாதனின் மனைவியிடம் இருக்கும் அந்யோண்யம் வெளிப்படுத்து ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️நல்ல குடும்பம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
  • Like
Reactions: MK13

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பணிஓய்வு பெற்ற பிறகு நண்பனோடு வாக்கிங், அப்படியே டீக்கடை அரட்டை கலகலப்போடு ஆரம்பமே சூப்பர் 👌

கணவன் மனைவி அன்யோன்யம் அவங்களோட பேச்சுல புரியுது 😍 அப்பா மகள் பாசம் ❤️ அம்மா மகள் புரிதல் ❤️ ஆக மொத்தத்தில் அன்பான குடும்பம் 😍

எபி முடிவுல ஒரு ட்விஸ்ட் வெச்சிட்டீங்க 🧐
இப்ப அது என்ன? யாருக்கு என்னாச்சுன்னு அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK13

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
என்னவாக இருக்கும்? பொண்ணு எப்படி எல்லாம் தாஜா பண்ணுது.😍😍😍
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஆரம்பமே கலகலப்பான டீ கடை பெஞ்ச் ல 😍😍😍கணேஷ் மாதிரி வர்ற customer பத்தி தெரிஞ்சு அவங்களுக்கு பிடித்தமான முறையில் செயல்படுறது தொழிலுக்கு முன்னேற்றம் தான். கவுசல்யாவின் பெயரை கௌசின்னு அழைக்குறதுல ரங்கநாதனின் மனைவியிடம் இருக்கும் அந்யோண்யம் வெளிப்படுத்து ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️நல்ல குடும்பம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you🙏🏻😊
 

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
பணிஓய்வு பெற்ற பிறகு நண்பனோடு வாக்கிங், அப்படியே டீக்கடை அரட்டை கலகலப்போடு ஆரம்பமே சூப்பர் 👌

கணவன் மனைவி அன்யோன்யம் அவங்களோட பேச்சுல புரியுது 😍 அப்பா மகள் பாசம் ❤️ அம்மா மகள் புரிதல் ❤️ ஆக மொத்தத்தில் அன்பான குடும்பம் 😍

எபி முடிவுல ஒரு ட்விஸ்ட் வெச்சிட்டீங்க 🧐
இப்ப அது என்ன? யாருக்கு என்னாச்சுன்னு அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
Thank you so much🙏🏻😊
Aamam 😂🤪
 

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
டீக்கடை பெஞ்சில் நண்பர்களோடு அரட்டை எப்பவுமே சந்தோஷம் தான். கணவன் மனைவி உரையாடல்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. அவர்களின் அன்னோன்யம் அதிலே தெரியிது. இந்தப் பொண்ணுங்களாம் அப்பாக்களை எப்டியாது தாஜா பண்ணிரும்ங்க. அப்படி என்ன சேதி வந்துச்சு போன்ல. மொத எபிலே அதிர்ச்சியா?. நல்ல ஆரம்பம்.
 
  • Like
Reactions: navivij

Radhapalani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
6
5
3
Chennai
கதை அருமயைாக துவங்கி உள்ளது.திரைக்கதை போல லைவாக உள்ளது..வாழ்த்துக்கள்.
 

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
கதை அருமயைாக துவங்கி உள்ளது.திரைக்கதை போல லைவாக உள்ளது..வாழ்த்துக்கள்.
Thank you so much🙏🏻😊