• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை" பாகம் 3

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை"

பாகம் 3

IMG-20241119-WA0003.jpg


உள்ளே நுழைந்த ஷிவானி அங்கே இருந்த ஷியாம் நந்தினியை பார்த்ததும் கண்களை விரித்தாள். இருவரும் இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அடப்பாவிங்களா எனக்கே தெரியல எப்ப இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க. கிஸ் பண்ற அளவுக்கு வந்துட்டாங்க. சரி சரி நம்ம டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று நினைத்தவள் சத்தம் போடாமல் திரும்ப அவளுடைய வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்து கதவை ஏற்கனவே இருந்தது போல சாற்றி விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

IMG-20241126-WA0011~2.jpg


சரி கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம் என்று நினைத்துக் கொண்டு ஃபோனை எடுத்து instagram ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நந்தினியின் வீட்டில்.

ஐந்து நிமிட இதழ் முத்தத்திற்கு பிறகு,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

"எப்படி இருந்துச்சுன்னு நம்ம ஃபர்ஸ்ட் கிஸ் " என்று நந்தினியிடம் கேட்டான் ஷியாம்.

"சீ போடா, எனக்கு வெக்கமா இருக்கு. " என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்றாள் நந்தினி.

பிறகு கண்ணாடியை பார்த்து தன் முகத்தை சரி செய்து கொண்டு வந்து ஹாலில் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

" உள்ள போய் என்ன பண்ணிட்டு வந்த? "

" இல்ல கண்ணாடில போய் பாத்துட்டு வந்தேன் "

" என்ன பார்த்துட்டு வந்த? "

"முத்தம் கொடுத்த இல்ல? உதட்டில் ஏதாவது காயம் இருக்கான்னு? அப்புறம் அதை பார்த்துட்டு ஷிவானி கண்டுபிடிச்சிட்டான்னா?"

" சரி எப்போ நம்ம லவ்வை பத்தி ஷிவானி கிட்ட சொல்லலாம்? "

" நம்ம லவ் பண்ண ஆரம்பித்து ஒரு மாசம் தான ஆகுது? "

"அதான் கிஸ் வரைக்கும் வந்துட்டோம், இல்ல?"

"இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம் "

"அவகிட்ட நம்ம சொல்லலைன்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா நந்து" என்றான் ஷியாம்.

" கஷ்டப்பட மாட்டா, கோபப்படுவா " என்றாள் நந்தினி.

" அதான் தெரியுது இல்ல, அப்புறம் என்ன? எப்ப சொல்லலாம் சொல்லு" என்றான் ஷியாம்.

" எங்க அண்ணனோட கல்யாணம் முடியட்டும் டா அதுக்கு அப்புறமா சொல்லலாம்"

" ஏன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? "

"இல்ல, ஷிவானிக்கு என்னை ஒரு ஃபிரண்டா ரொம்ப பிடிக்கும். அண்ணி ஸ்தானத்துல என்னை வச்சு பார்த்தாளான்னு தெரியல? இப்ப நம்ம ரெண்டு பேரும் திடீர்னு லவ் பண்றோம்னு சொன்னா அவளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியல. அவளுக்கு பிடிக்கலன்னா ரொம்ப கஷ்டமாயிடும். மெதுவா அவகிட்ட ஒருநாள் சொல்லுவேன்"

" சரி சரி நீ ஆச்சு உன் நாத்தனார் ஆச்சு "

" ஆனா ஒன்னு ஷியாம், ஷிவானிக்கு கல்யாணம் ஆன பிறகு தான் நம்ம
கல்யாணம். அதுவும் மூணு பேரும் செட்டில் ஆன பிறகு அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் சரி "

" ஏன் நந்து? "

" நீயும் அவளும் டிவின்ஸ், ஆம்பளையா இருக்க உனக்கு கல்யாணம் ஆயிட்டு பொண்ணுக்கு கல்யாணம் ஆகலனா ஊர்ல எல்லாரும் தப்பா பேசுவாங்க. அதனால அவளுக்கு நம்ம நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணலாம் அதுக்கு அப்புறமா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் "

" நம்மள மாதிரி அவளும் நம்ம கிட்ட சொல்லாம யாரையாவது லவ் பண்ணி இருந்தா? "

" அவ அப்படி கிடையாது "

" அவளும் உன்னை பத்தி அப்படித்தான் நினைச்சிருப்பா "

" ஏய் எருமை உன் தங்கச்சிக்கு நான் சப்போர்ட் பண்றேன், நீ உன் தங்கச்சியை நம்ப மாட்டியா? "

" எனக்கு என் ஷிவானி பத்தி தெரியும் டி, சும்மா உன்கிட்ட இப்படி சொன்னேன்"

" சரி சரி என்ன இன்னும் காணும் அவளை? "

" ஹாஃப் அன் ஹவருக்கு மேல ஆகும்னு சொன்னா. அவ வர"

" ஏன்? "

" வீடெல்லாம் கிளீன் பண்ணி வச்சுட்டு ஏதோ கொஞ்சம் பாத்திரம் இருக்காம் அதெல்லாம் கழுவி வச்சிட்டு வரேன்னு சொன்னா"

" சரி வா நம்ம போய் ஹெல்ப் பண்ணலாம் "

" அதுவும் கேட்டேன் கொஞ்சம் தான் இருக்கு நானே முடிச்சுட்டு வந்துடுறேன்னு சொன்னா இப்ப வந்துடுவா. "

" சரி அவ வரதுக்குள்ள இன்னும் ஒரே ஒரு" என்று சொல்லி நந்தினி அருகில் சென்றான் ஷியாம்.

" ஒரு நாளைக்கு ஒன்று போதும் ஆல்ரெடி கோட்டா ஓவர்" என்று சொல்லி கண்ணடித்தாள் நந்தினி .

"அப்ப டெய்லி கிடைக்குமா?"

" அச்சச்சோ தெரியாம சொல்லிட்டேன், ஒரு மாசத்துக்கு ஒன்னு"

" ஏய் அதுக்கு ரொம்ப நாள் ஆகும்டி, இரண்டு நாளைக்கு ஒரு முறை "

" நோ நோ, பத்து நாளைக்கு ஒன்னு"

" உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் வாரத்துக்கு ஒன்னு"

"சரி சரி, இன்னைக்கு சனிக்கிழமை. இதோட அடுத்த சனிக்கிழமை. ஓகேவா?"

"ஓகே" என்று சற்று சோகமாகவே சொன்னான் ஷியாம்.

அப்போது நந்தினியின் ஃபோன் அடித்தது.

" சொல்லுங்க அப்பா"

" சரிப்பா, சரி, சரி, அப்பா" என்று பேசி வைத்தாள்.

" என்ன சொல்றாரு என் மாமனார்? "

" ரொம்ப தாண்டா தைரியம் உனக்கு. வர லேட் ஆகும் நீங்க மூணு பேரும் பத்திரமா இருங்கன்னு கால் பண்ணாரு. "

" சரி இரு நான் ஷிவானிக்கு கால் பண்ணி பாக்குறேன்" என்று சொல்லி கால் செய்தான் ஷியாம்.

ஷிவானி ஃபோனை எடுக்கவில்லை. பாத்ரூம் சென்று இருக்கிறாளோ என்று நினைத்து பத்து நிமிடம் கழித்து மறுபடியும் கால் செய்தான்.

அப்போதும் அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"நந்து, ஷிவானி ஃபோனை எடுக்கல நான் என்னன்னு வீடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்"

"என்ன விளையாடுறியா?"

" என்னடி? "

" பின்ன என்ன நான் தான் தனியா இருக்க மாட்டேன்னு தெரியும் இல்ல? நானும் வரேன் இரு." என்று சொல்லி தன் ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

அப்போது நந்தினியின் ஃபோன் அடித்தது.

"ஹலோ சொல்லு அண்ணா " என்று பேசிக்கொண்டே ஷியாம் பின்னாடி நடந்து சென்றாள் நந்தினி.

தன் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினான் ஷியாம். ஷிவானி கதவை திறக்கவில்லை. "ஷிவானி ஷிவானி" என்ற குரல் கொடுத்தான். பதில் இல்லை.

கதவைத் தட்டினான். ஷிவானி கதவை திறக்கவில்லை. வேகமாக தட்டி குரல் கொடுத்தான். அப்படியும் பதில் இல்லை. தன் வண்டி சாவியில் இருக்கும் வீட்டு சாவியை வைத்து கதவை திறந்தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் சற்றே சத்தமாக.

என்னாச்சு இவளுக்கு என்று நினைத்துக் கொண்டே டிவி ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்துவிட்டு
"ஷிவானி" என்று கூப்பிட்டுக் கொண்டே கிச்சனுக்கு சென்றான்.

கிச்சனிலும் அவள் இல்லை. அவளுடைய ரூம் கதவு ஒருக்களித்து இருந்தது.

இரண்டு முறை தட்டிவிட்டு

ஷிவானி என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்தான்.

பெட்டில் ஷிவானி துணிகள் எல்லாம் விலகி அலங்கோலமாய் கிடந்தாள்.

ஷிவானி என்று கத்திக்கொண்டே அவள் அருகில் ஓடினான் ஷியாம்.

தன் அண்ணனிடம் ஃபோன் பேசிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்காமல் அவனை ஃபாலோ செய்து வந்து கொண்டிருந்தாள் நந்தினி.

ஷியாம் கத்தியதை கேட்டு

" அண்ணா நான் அப்புறமா பேசறேன்" என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு ஹாலில் இருந்து ரூமிற்கு ஓடி சென்றாள் நந்தினி.

ஷிவானி நிலையை பார்த்த நந்தினி சத்தமாக கத்தினாள்.

ஷிவானியின் டிரஸ்ஸை சரி செய்தான் ஷியாம்.

ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள் நந்தினி.

போய் யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிடு என்ற நந்தினியை பார்த்து சொன்னான் ஷியாம்.

நந்தினி பயத்தில் அவ்வளவு கத்தியும் அவள் கத்தும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ஏனெனில் சிவஞானத்தினுடைய வீட்டின் இரு பக்கத்திலும் வீடுகள் கிடையாது. எதிர்புறம் இருக்கும் வீடுகள் தான் பக்கத்து பக்கத்தில் இருக்கும். இந்த பக்கம் இருக்கும் வீடுகள் எல்லாம் சற்று தள்ளி இருந்ததால் நந்தினி கத்தியது யாருக்கும் கேட்கவில்லை.

நந்தினிக்கு உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. பயத்தில் கை கால்கள் எல்லாம் உதறியது. கை கால்கள் உதறியபடி வெளியே ஓடி வரும்போது தடுக்கி கீழே விழுந்தாள். கால் சுளுக்கிக் கொண்டது. அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து தாங்கி தாங்கி வெளியே ஓடி வந்தாள்.


பிறகு எதிர்புறம் இருக்கும் அவளுடைய பக்கத்து வீட்டில் இருப்பவர்களை கூப்பிட அவர்களது காலிங் பெல்லை அழுத்தினாள்.

"என்னாச்சும்மா என்ன ஆச்சு?" என்று கேட்டார் உமா.

" ஆன்ட்டி ஆன்ட்டி, என்று பேச முடியாமல் மூச்சு வாங்கினாள்."

" பதட்டப்படாமல் சொல்லுமா என்ன ஆச்சு? "

" சிவஞானத்தின் வீட்டைக் காட்டி தேம்பி தேம்பி அழுதாள் நந்தினி "

உமாவிற்கு பயம் வந்தது. அதனால் வீட்டிற்குள் இருக்கும் தன் கணவர் சங்கருக்கு கால் செய்தார்.

" என்னங்க உடனே நம்ம வீட்டுக்கு வெளியே வாங்க "

" என்னடி என்ன ஆச்சு? "

" சீக்கிரமா வாங்கன்னு சொல்றேன் இல்ல? " என்று பதட்டமாக பேசிவிட்டு ஃபோனை வைத்தார் அந்த ஆன்ட்டி.

உடனே வேகமாக வெளியே வந்தார் அவருடைய கணவர் சங்கர் .

வீட்டு வாசலில் பதட்டமாக நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்துவிட்டு. தன் மனைவியிடம்.

" என்னாச்சு உமா, எதுக்கு இப்படி அவசரமா கூப்பிட்ட? " என்றார்.

" என்னங்க, நந்தினி சிவஞானம் சார் வீட்ட காட்டிட்டு என்னமோ சொல்றா. அவளால பேச முடியல, பயத்துல இருக்கா. வாங்க என்னாச்சு என்று போய் பார்க்கலாம். எனக்கு தனியா போக பயமா இருக்கு "

"சரி வாங்க" என்று சொல்லி சங்கர் முன்னே செல்ல உமாவும் நந்தினியும் அவரைத் தொடர்ந்து சென்றனர். நந்தினிக்கு காலில் அடிபட்டு இருந்ததால் நொண்டி நொண்டி நடந்து சென்றாள்.

உள்ளே சென்றபோது தன் தங்கையை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான் ஷியாம்.

" என்னாச்சுப்பா? " என்று கேட்டார் சங்கர்.

" அங்கிள் துணி எடுத்து கொண்டு படிக்கட்டுல வரும்போது தடுக்கி உருண்டு கீழே விழுந்திட்டிருக்கா, மயக்கமாயிட்டா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். அப்பா அம்மா கார் எடுத்துக்கொண்டு ஊருக்கு போய்ட்டாங்க உங்க கார் கொஞ்சம் தரீங்களா?"

" இருப்பா நான் கார் சாவியை எடுத்துகிட்டு வரேன். ஹாஸ்பிடலுக்கு நானே கூட்டிக்கிட்டு போறேன்"

" இல்ல இல்ல வேண்டாம் அங்கிள். நான் இவளை ஹாஸ்பிடல்ல டிராப் பண்ணிட்டு வந்து உங்க காரை விட்டு விடுகிறேன்"

" அப்படி ஒன்னும் அவசரம் இல்லப்பா. நாளைக்கு காலையில தான் எனக்கு கார் வேண்டும். அதனால நீ பொறுமையாவே எடுத்து வந்து கொடு " என்று அவர் பேசிக் கொண்டிருந்தார்.

கார் தரீங்களா என்று அவன் கேட்ட உடனேயே வீட்டிற்கு வேகமாக சென்று கார் சாவியை எடுத்து வந்து கொடுத்தார் உமா.

"இந்தாப்பா முதல்ல கிளம்பு, தலையில் அடிபட்டு ரத்தம் வருது பாரு " என்றார் உமா.

" தேங்க்ஸ் ஆன்ட்டி" என்று சொல்லிவிட்டு கார் சாவியை நந்தினி இடம் கொடுக்க நந்தினி காரை அவர்கள் வீட்டு பார்க்கிங்கில் இருந்து ஷியாம் வீடு வரை ஓட்டிக்கொண்டு வந்தாள் நந்தினி .

தன் தங்கையை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு,

"நந்து, நீ இறங்கு. நான் காரை ஓட்டுறேன்" என்றான் ஷியாம்.

" இல்ல ஷியாம் நீ டென்ஷனா இருப்ப, நானே ஓட்டிக்கிட்டு வரேன்."

" இல்ல உனக்கு கால்ல அடிபட்டு இருக்கு உன்னால வேகமாக ஓட்ட முடியாது நீ ஷிவானி கூட பின்னாடி உட்கார்ந்துகிட்டு வா "

" ஓகே ஷியாம் " என்று சொல்லிவிட்டு கார் பின் சீட்டில் அமர்ந்து தன் தோழி ஷிவானியை தன் மடிமேல் படுக்க வைத்துக் கொண்டாள் நந்தினி.

" நானும் கூட வரவாப்பா? " என்றார் உமா.

" பரவாயில்லை ஆண்ட்டி, வேண்டாம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்குச் சென்றான் ஷியாம்.

ஹாஸ்பிடலுக்கு சென்றவுடன் அவளை எமர்ஜென்சியில் அட்மிட் செய்தனர்.

சேரில் வந்து அமர்ந்தனர் நந்தினி மற்றும் ஷியாம்.

ஷியாமின் கண்களில் கோபமும் ஆத்திரமும் வருத்தமும் கண்ணீருடன் சேர்ந்து வெளியே வந்தது. நந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தாள்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு நர்ஸ் வந்து

" பேஷன்ட் கூட வந்தது யாரு? " என்றார்.

ஷியாம் மற்றும் நந்தினி இருவரும் எழுந்து நின்றனர்.

" டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுறாங்க "

இருவருக்குமே பயமாக இருந்தது. டாக்டர் என்ன சொல்லப் போகிறார்களோ என்று பயந்தபடி உள்ளே சென்றனர்.

" வாங்க உட்காருங்கள், நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும் " என்றார் டாக்டர்.

"அவளுடைய டிவின் பிரதர்" என்று கண்கள் கலங்கியபடி சொன்னான் ஷியாம்.

"நீங்க?" என்று நந்தினியை பார்த்து கேட்டார்.

" நான் நந்தினி, அவளோட க்ளோஸ்
ஃப்ரெண்ட், "

" ஓகே நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்றீங்களா? "

" இல்ல டாக்டர் என் முன்னாடியே சொல்லுங்க என்ன ஆச்சு என்னோட ஷிவானிக்கு? " என்றாள் நந்தினி.

"சாரி மிஸ் நந்தினி, பேஷண்டோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் கிட்ட தான் பேஷன்ட் பத்தின டீடெயில்ஸ் சொல்ல முடியும். இது ஹாஸ்பிடல் ரூல்ஸ் "

"ஆனா டாக்டர், அவ" என்று நந்தினி பேசும்போது.

"நந்து, வெளியே போய் வெயிட் பண்ணு " என்றான் ஷியாம்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அமைதியாக வெளியே சென்றாள் நந்தினி.

நந்தினி வெளியே சென்ற பிறகு,

"மிஸ்டர் ஷியாம், சாரி டூ ஸே திஸ்" என்றார் டாக்டர்.


தொடரும்.....

தேன் மிட்டாய்.
 

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
வீட்டுக்கு வந்துட்டு போறதுக்குளள் ஷிவானிக்கு என்னாச்சு?. அப்படி என்ன டாக்டர் சொல்லப் போறாரு?. ஒவ்வொரு எபியிலும் ஒரு ட்விஸ்ட்ஆ? கதை நகர்வு அருமை.
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
வீட்டுக்கு வந்துட்டு போறதுக்குளள் ஷிவானிக்கு என்னாச்சு?. அப்படி என்ன டாக்டர் சொல்லப் போறாரு?. ஒவ்வொரு எபியிலும் ஒரு ட்விஸ்ட்ஆ? கதை நகர்வு அருமை.
Thank you so much🙏🏻😊
Aamam 🤪
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஷிவானி திரும்ப வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்துல எப்படி? 🤔🧐

ஒருவேளை நான் நினைக்கிறது சரியோ? 🙄🤔

பார்ப்போம் நான் நினைச்சது தானான்னு 🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
ஷிவானி திரும்ப வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்துல எப்படி? 🤔🧐

ஒருவேளை நான் நினைக்கிறது சரியோ? 🙄🤔

பார்ப்போம் நான் நினைச்சது தானான்னு 🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
சீக்கிரமா தெரியும் 👍🏻
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அட கடவுளே ரெண்டு விழுந்து வாரி புதையல் எடுத்திருக்கும்னு பார்த்தால் முத்தம் கொடுத்துகிட்டு இருக்காங்க ஆனால் அங்க வீட்டுக்குள்ள இருந்த ஷிவாணி கு என்ன ஆச்சு இப்படி அடிப்பட்டிருக்கு 🙄🙄🙄🙄🙄
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
அட கடவுளே ரெண்டு விழுந்து வாரி புதையல் எடுத்திருக்கும்னு பார்த்தால் முத்தம் கொடுத்துகிட்டு இருக்காங்க ஆனால் அங்க வீட்டுக்குள்ள இருந்த ஷிவாணி கு என்ன ஆச்சு இப்படி அடிப்பட்டிருக்கு 🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில தெரிஞ்சிடும்🙄