• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை" பாகம் 4

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை"
பாகம் 4

IMG-20241119-WA0003.jpg


"சாரி டூ ஸே திஸ் மிஸ்டர் ஷியாம். யுவர் சிஸ்டர் இஸ் புரூட்டலி ரேப்பிடு, தலையிலும் ஆழமா அடிபட்டு இருக்கு. மத்தபடி வேற எங்கேயும் காயங்கள் இல்ல. சீமென் டிரேஸஸ் எதுவுமே இல்ல, ரேப்பிஸ்ட் பிரொட்டக்ஷன் யூஸ் பண்ணி இருக்கான்." என்றார் டாக்டர்.

"இப், இப்.. என்று திக்கி தொண்டையை சரி செய்து கொண்டு இப்போ எப்படி இருக்கா டாக்டர்? " என்றான் ஷியாம்.

" கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டாங்க. இப்போதைக்கு ஸ்டேபிளா வச்சிருக்கோம். ஆனால் 24 ஹவர்ஸ் கழிச்சு தான், அவங்க எப்படி இருக்காங்கன்னு சொல்ல முடியும்"

"ஓகே டாக்டர் " என்று சொல்லி சேரில் இருந்து எழுந்தவனை.

"ஒன் மினிட் மிஸ்டர் ஷியாம். ஐ எம் சாரி, ஆஸ் பெர் ரூல்ஸ் இந்த மாதிரி கேஸ் வந்தா நாங்க இம்மீடியட்டா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும். நாங்க எக்ஸாமினேஷன் பண்ண உடனே ரேப் என்று தெரிஞ்சதும் உமென் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம். அவங்க வந்து கேட்டா உங்களுக்கு தெரிஞ்சது சொல்லுங்க. உங்க சிஸ்டர் சரியானதுக்கப்புறமா அவங்க என்கொயரி பண்ணிப்பாங்க "

"ஓகே டாக்டர் " என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

விரக்தியாக சேரில் அமர்ந்தான். சத்தம் போடாமல் வேகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான். வேகமாக ஓடிச் சென்று நந்தினி அவனை தடுத்தாள்.

"என்னாச்சுடா, ஏன் இப்படி எல்லாம் பண்ற? நீ பண்றது எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

பக்கத்தில் அமர்ந்து இருந்த நந்தினியின் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதான் ஷியாம்.

"நம்ம ஷிவானியை யாரோ ரேப் பண்ணிட்டாங்க நந்து " என்று மிகவும் மெதுவாக அவள் காதில் மட்டும் கேட்கும்படி சொல்லி அழுதான்.

அதிர்ச்சியில் நந்தினியும் தன் வாயை மூடிக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தினாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.

பிறகு தன் அம்மாவிற்கு கால் செய்தான் ஷியாம் . நாட் ரீச்சபிள் என்று வந்தது. தன் அப்பாவிற்கு கால் செய்தான். அவருக்கும் நாட் ரீச்சபிள் என்று வந்தது. பாட்டி இறந்து விடவே அவர்கள் இருவரும் ஊருக்கு சென்றதால் அங்கே சிக்னல் இல்லை என்று புரிந்து கொண்டான். அப்போதுதான் அவனுடைய அப்பா ஒரு பெரிய ஈமெயில் அனுப்பி இருந்ததை பார்த்தான்.

"ஷியாம், உங்க பாட்டி இறந்துட்டாங்க பா. அதனால நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போறோம். உங்க ரெண்டு பேருக்கும் கால் பண்ணி சொல்ல முடியல. அதான் ஈமெயில் பண்றேன்.

நாங்க வர டூ த்ரீ டேஸ் ஆகும் பா.
ரங்கநாதன் அங்கிள் கிட்ட சொல்லி இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டிலேயே தங்கிக்கோங்க. நம்ம வீட்ல தனியா தங்க வேண்டாம் பா. உனக்கே தெரியும். இரண்டு பக்கத்துலேயும் வீடு இல்லாததால தனியா இருக்கிற மாதிரி இருக்கும் நம்ம வீடு. ஷிவானி ரொம்ப துணிச்சலான பொண்ணு. அதனால நம்ம இங்கேயே தங்கலாம்னு சொல்ல போறா. நீதான் அவகிட்ட சொல்லணும்.

தனியா மட்டும் நம்ம வீட்ல இருக்க வேண்டாம். அதுவும் இரண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம எல்லாரும் கோவிலுக்கு போயிருக்கும் போது நம்ம வீட்ல திருடு போச்சு இல்ல. அதிலிருந்து எனக்கு ரொம்ப பயம். உங்க அம்மாவை மட்டும் கூட நான் தனியா வீட்ல விடுறது இல்ல. நீங்க எல்லாரும் காலையில இருக்கும்போது நான் வாக்கிங் போயிட்டு வந்துடுவேன். மறுபடியும் நீங்க காலேஜ்ல இருந்து வந்த அப்புறமா வெளியே எங்கனா, இல்ல கடைக்கு போகணும்னா போயிட்டு வருவேன்.

இதுவரைக்கும் இதனை யார்கிட்டயும் சொல்லல. இப்ப உங்க ரெண்டு பேரையும் தனியா வீட்ல விட்டுட்டு போறதுனால இதை சொல்றேன். இதுவே உங்களுக்கு செமஸ்டர் எக்ஸாம்ஸ் இல்லன்னா உங்களையும் கூப்பிட்டு போயிருப்பேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா. பை பா, டேக் கேர்" என்று அனுப்பி இருந்தார்.

அதை படித்ததும் ஷியாமின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

பக்கத்தில் இருந்த நந்தினி அவள் தோளை தடவி சமாதானம் செய்தாள். அவனுடன் சேர்ந்து அந்த மெயிலை அவளும் படித்தாள். அவளுக்கும் கண்கள் கலங்கியது.

"ஷியாம், நான் எங்க அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லவா? "

" வேண்டாம், அவங்களே நிச்சயதார்த்த வேலையில பிஸியா இருப்பாங்க. எதுவும் சொல்லாத. அதுவும் இல்லாம இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நந்து ப்ளீஸ். " என்று கெஞ்சினான் ஷியாம்.

"சரிடா, நான் யார்கிட்டயும் சொல்லல "

"நான் உன்னை வீட்டில விட்டுட்டு வந்துடறேன் வா "

" என்ன பேசுற ஷியாம், இந்த நிலைமையில் எப்படி நான் உன்னை தனியா விட்டுட்டு போவேன் " என்று சொல்லி கண்கள் கலங்கினாள் நந்தினி.

" ப்ளீஸ் நந்து, என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு "

அவன் தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்று தெரிந்து கொண்டவள்,

" சரி டா, நானே ஆட்டோ புக் பண்ணி
போகிறேன். நீ இங்கேயே இரு "

" வேண்டாம் நந்து, நானே உன்ன பத்திரமா வீட்ல விடுறேன். உன்னை தனியா அனுப்ப எனக்கு பயமா இருக்கு" சொல்லும்போதே தன் தங்கை அலங்கோலமாய் இருந்த நினைப்பு வந்து அவன் கண்களை குலமாக்கியது.

" என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் நீங்க எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? "

" எனக்கு ஒண்ணுமே புரியல என் மைண்டே பிளாங்கா இருக்கு நந்து."

" சரி நான் ஒரு ஐடியா சொல்லவா அது ஒத்து வருமான்னு சொல்லு?"

"என்ன ஐடியா?"

" எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு நாளைக்கு ஹாஸ்பிடல்ல தான் நீங்க இருந்தாகனும். அதனால நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பி போயிட்டீங்கன்னு சொல்றேன். ஷிவானிக்கு பாட்டியை கடைசியா பாக்கணும் போல இருந்ததுன்னு சொன்னா, அதனால ஊருக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொல்லறேன். ஓகே வா?"

" எப்படி டி, நம்புவாங்களா? "

" நம்ப மாட்டாங்க எனக்கு தெரியும். உனக்கு கால் பண்ணா அதே விஷயத்தை நீயும் சொல்லு. உங்க அப்பா அம்மாவுக்கு அவங்களால கால் பண்ண முடியாது இல்ல? அங்க தான் சிக்னல் இல்லைன்னு சொன்னியே? எங்க அண்ணனோட நிச்சயதார்த்தம் முடிஞ்ச அப்புறமா நான் எங்க அம்மா கிட்ட ஷிவானி படிக்கட்டில் இருந்து விழுந்து அடிபட்டுட்டான்னு நீ உமா ஆண்ட்டி கிட்ட சொன்னா மாதிரி சொல்லிடுறேன்"

" நல்ல ஐடியா தான். ஓகே.
எங்க அப்பா எனக்கு கால் பண்ணாருன்னா நாங்க சேஃப்பா இருக்கோம்னு அவர் கிட்ட நானே சொல்லிடறேன்"

" இப்ப நான் வீட்ல போய் எப்படி தனியா இருப்பேன்? " என்றாள் நந்தினி.

" உங்க அண்ணன் எங்க இருக்காருன்னு கேளு? "

" நாளைக்கு பங்க்ஷன் நடக்கப்போற ஹாலுக்கு டெக்கரேஷன் பாக்குறதுக்காக அங்க போய் இருக்காரு"

" ஓகே குட், கிளம்பு"

"எங்கடா?"

" சொல்றேன் வா" என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு.

அங்கிருந்த நர்சிடம்,

" சிஸ்டர் நான் வீட்டுக்கு போய் கொஞ்சம் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன். ஹாஃப் அனர்ல வந்துடுவேன். அதுக்குள்ள ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க "

" ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல. மருந்து வாங்கி கொடுத்துட்டீங்க இல்ல? அட்மிஷன் பேமெண்ட் கூட முடிஞ்சிடுச்சு. இதுக்கு அப்புறம் பெருசா எதையும் கேட்க மாட்டாங்க நினைக்கிறேன். அப்படியே ஏதாவது மருந்து வாங்க சொன்னா. நான் வாங்கி கொடுக்கிறேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. உங்க சிஸ்டரை நாங்க பாத்துக்குறோம் "

" தேங்க்ஸ் சிஸ்டர் " என்று சொல்லிவிட்டு சங்கர் அங்கிளின் காரில் நந்தினி ஏற்றிக் கொண்டு பார்ட்டி ஹால் வெளியே இறக்கிவிட்டு.

" உள்ளே அர்ஜூன் அண்ணனை பார்த்துட்டு, எனக்கு கால் பண்ணு. அதற்குப் பிறகுதான் நான் கிளம்புவேன் "

" ஓகேடா டேக் கேர் "

"நந்து, ப்ளீஸ்" என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தையிலேயே அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொண்டவள்.

"டோண்ட் ஒரி டா" என்றாள்.

" நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல உங்க அண்ணன் கிட்டயும் அப்பா அம்மா கிட்டயும் அதையே சொல்லு "

" ஓகே பை "

"பை" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள்.

தன் அண்ணனை பார்த்தாள்.

" என்ன நந்து இங்க எப்படி வந்த? ஈவினிங் கூட நான் பேசும்போது வீட்ல மூணு பேரும் ஒண்ணா தான் இருக்கோம்னு சொன்ன? "

ஃபோனை ஆன் செய்து ஷியாம் கேட்கும்படி பேசினாள் நந்தினி .

"அண்ணா, என்னாலேயும் ஷியாமாலேயும் ஷிவானியை கன்சோல் பண்ணவே முடியல. அவ ஒரே அழுகை பாட்டியை போய் பார்த்தே ஆகணும்னு. அதனால அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறாங்க. அவங்க போகும்போது என்னை இங்கே இறக்கி விட்டுட்டு போறாங்க. நான் தான் வீட்ல தனியா இருக்க பயப்படுவேனே அதனால "

" ஓ அப்படியா, சரி சரி. நீ பயந்தாங்கோலின்னு ஊருக்கே தெரியும். அவங்க ரெண்டு பேரும் உன் கிளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆச்சே அவங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? " என்று சொல்லி சிரித்தான் அர்ஜுன்.

"அண்ணா" என்று பொய் கோபம் வந்தது போல பேசினாள் நந்தினி.

"ஓகே ஓகே அதை விடு, டெக்கரேஷன் எப்படி இருக்குன்னு பாரு? "

" நல்லா இருக்கு அண்ணா. அண்ணிக்கு புடிச்சிருந்தா சரி " என்று சொல்லிவிட்டு அங்கே சுற்றி பார்ப்பது போல நடந்து ஃபோனை காதில் வைத்து

"ஓகே வா ஷியாம்?"

"தேங்க்ஸ் நந்து. பை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று சங்கர் அங்கிள் வீட்டில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்று.

" ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். " என்று சொல்லி சாவியை கொடுத்தான்.

" ஷிவானி எப்படி இருக்காப்பா? "

" இப்ப பரவாயில்ல அங்கிள், "

" மயக்கமாவே இருக்காளா இன்னும்? "

" ஆமாம் ஆன்ட்டி தலைல அடிபட்டதனால பெயிண் தெரியாம இருக்கணும்னு டாக்டரே மயக்க மருந்து கொடுத்து இருக்காங்க, மத்தபடி ஸ்டேபிளா தான் இருக்கான்னு டாக்டர் சொன்னாங்க "

" ஓ சரிப்பா சரி "

" ஒரே ஒரு ரெக்குவெஸ்ட் அங்கிள், ஆன்ட்டி"

"என்னப்பா?"

" அப்பா அம்மா ஊருக்கு போயிருக்காங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு"

" ஆமாம் கௌசல்யா சொன்னா "

" அவங்களுக்கு ஷிவானிக்கு அடிபட்டது தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாங்க. ரெண்டு நாள்ல வந்துருவாங்க அதுக்கப்புறம் நான் நேரா பாத்து சொல்லிக்கிறேன்"

" சரிப்பா நாங்க எதுவும் சொல்லல,"

" அது மட்டும் இல்ல ஆன்ட்டி, ரங்கநாதன் அங்கிளுக்கும் கௌசல்யா ஆண்டி கிட்டையும் கூட நான் சொல்லல. நந்தினி கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். நாளைக்கு அர்ஜுன் அண்ணாவுக்கு நிச்சயதார்த்த பங்க்ஷன் வச்சிருக்காங்க. இந்த டைம்ல அவங்களுக்கும் தெரிஞ்சதுன்னா சங்கடப்படுவாங்க. அதனால நாங்களும் ஊருக்கு போயிட்டோம்னு நந்தினி கிட்ட சொல்ல சொல்லிவிட்டேன் "

" இந்த நிலைமையிலும் நீ மத்தவங்களுக்காக யோசிக்கிறியேப்பா. ரொம்ப நல்லது. சரி பா நாளைக்கு நாங்க ஃபங்ஷன்ல அவங்களை பார்த்தாலும் எதுவும் சொல்லலமாட்டோம் ஓகேவா? "

" ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி அங்கிள்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்று ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என்று பார்த்தான்.

அவனுடைய கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. பீரோ பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே வீட்டில் திருடு போனதால் வீட்டில் எந்த நகை பணமும் வைக்க இல்லை. அனைத்தையும் பேங்க் லாக்கரிலேயே வைத்திருந்தனர்.

திருட வந்தவன் பணம் நகை எதுவுமில்லை என்று கடுப்பாகி அப்போது உள்ளே இருந்த தன் தங்கையை கற்பழித்து இருப்பானோ? என்று நினைத்துக் கொண்டான். அந்த பீரோவை மட்டும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். ஷிவானி விழித்து என்ன நடந்தது என்று சொன்னால் மட்டுமே தெரியும் என்று நினைத்தபடி வீட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தான்.

அப்போது கிட்சனில் சிங்க் பக்கத்தில் தரையில் ரத்தம் இருந்தது . ஏற்கனவே பெட்டில் கொஞ்சம் ரத்தக் கரை இருந்தது. இப்போது கிட்சனிலும் அதைப் பார்த்ததும் ஷியாமிற்கு கண்களில் இருந்து கண்ணீருக்கு பதிலாக ரத்தம் வழிவது போல இருந்தது.

முதலில் அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து லாக்கிடு ஃபோல்டரில் வைத்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்தான். ஷிவானியின் பெட் மேல் இருந்த பெட் ஷீட்டில் ரத்தக்கரை போக நன்றாக துவைத்து வீட்டின் பக்கவாட்டில் காயப் போட்டான்.

வீட்டின் பின் கதவின் தாழ்ப்பாள் உடைக்க பட்டிருந்தது. பாட்டி இறந்த டென்ஷனில் ஊருக்கு கிளம்பியதால் டோர் லாக் செய்ய மறந்துவிட்டார்கள் போல நம் பெற்றோர்கள். கதவுடைய தாழ்ப்பாள் மட்டும் போடவே சுலபமாக அதை தட்டி உடைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டான் ஷியாம்.

மேலும் அவனிடம் இருந்த சாவியை வைத்து அந்த கதவை சரியாக அழுத்தி சாத்தி டோர் லாக் செய்தான். தாழ்ப்பாள் உடைந்து இருந்ததால் அதை மட்டும் போட முடியவில்லை.

அந்த பொறுக்கி ராஸ்கல் மட்டும் என் கண் முன்னாடி வந்தான்னா அவனை கண்ட துண்டமா வெட்டி போட்டிடுவேன் என்று நினைத்து கொண்டான்.

அப்போது ஹாஸ்பிடலில் இருக்கும் நர்ஸ் ஷியாமிற்கு கால் செய்தாள்.

"ஹலோ சார்" நான் ஏவி ஹாஸ்பிடலில் இருந்து நர்ஸ் சரஸ்வதி பேசுறேன்.

"சொல்லுங்க சிஸ்டர்" என்றான் ஷியாம்.

அரைமணி நேரத்தில் திரும்ப வருவதாக நர்ஸிடம் சொல்லிவிட்டு வந்தது அப்போது தான் ஞாபகம் வந்தது. ஏற்கனவே நாற்பது நிமிடம் ஆகிவிட்டிருந்தது.

"இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே
இருப்பேன்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல சார், உங்க சிஸ்டர் கண் விழிச்சாங்க. அதை சொல்லத்தான் கால் செஞ்சேன்"

"கண் விழிச்சாங்கன்னா? இப்போ மறுபடியும் மயக்கம் ஆயிட்டாளா?"

"ஆமாம் சார், அவங்க ரொம்ப டென்ஷனாகி அக்ரெஸிவ்வா கத்தினாங்க, பிபி ரொம்ப அதிகமாயிடிச்சு. ஸோ டாக்டர் இன்ஜெக்ஷன் போட சொன்னாங்க, அதனால மறுபடியும் தூங்குறாங்க"

" ஓ, நான் இமீடியட்டா வரேன் சிஸ்டர் "

"ஒன்னும் அவசரமில்ல சார், பொறுமையா வாங்க. அட்டெண்டர் கிட்ட பேஷண்டோட ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணத் தான் கால் பண்ணேன்"

" ஓகே சிஸ்டர் தேங்க்யூ சோ மச்"

" அப்புறம் இன்னொரு விஷயம் சார்"

" என்ன சொல்லுங்க சிஸ்டர்"

" உமென் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்தாங்க. உங்கள கேட்டாங்க நீங்க வீட்டுக்கு போய் இருக்கீங்கன்னு சொன்னோம். உங்களை நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வர
சொன்னாங்க. "

" ஓகே சிஸ்டர் எந்த போலீஸ் ஸ்டேஷன்? "

" டி ஒன் உமன் போலீஸ் ஸ்டேஷன் "

" ஓகே சிஸ்டர் நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்துட்டு அதுக்கப்புறம் ஹாஸ்பிடலுக்கு வந்துடறேன் "

" ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க மெதுவாவே வாங்க "

" ஓகே சிஸ்டர், தேங்க்ஸ் " என்று சொல்லி ஃபோனை வைத்தவன் அதற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல் தன் பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனக்குத் தெரிந்த பதிலை சொல்லிவிட்டு அங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் ஷியாம்.

ஷியாம் கிளம்பி செல்வதை வீட்டிற்கு பின்னால் வெகு தொலைவில் மறைந்து நின்று பார்த்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பின் கதவை சாவி வைத்து திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்து டார்ச் லைட் வைத்து எதையோ தேடினான் "அவன்". பெட்ரூம் ஜன்னலின் கீழே இருந்த தனது பிரேஸ்லெட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


தொடரும்.....
தேன் மிட்டாய்.















 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வீட்டோட சாவியே இருக்குன்னா🧐 யாரா இருப்பான்🤔

தெரிஞ்சவன்னாலும் இப்படி சாவியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே🤔🧐

பர்பஸ்ஃபுல்லாவே இவன் பண்ணியிருப்பான் போல🧐 அதுக்கு தான் சாவி ரெடி பண்ணி வெச்சிருக்கான் 😢
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
வீட்டோட சாவியே இருக்குன்னா🧐 யாரா இருப்பான்🤔

தெரிஞ்சவன்னாலும் இப்படி சாவியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே🤔🧐

பர்பஸ்ஃபுல்லாவே இவன் பண்ணியிருப்பான் போல🧐 அதுக்கு தான் சாவி ரெடி பண்ணி வெச்சிருக்கான் 😢
சூப்பர், கரெக்ட்டா கண்டு பிடிக்கறீங்களே சிஸ்டர், உங்களையே இன்வெஸ்டிகேட்டிங் ஆபீஸரா போட்டு இருக்கலாம் போல😂🤪🙏🏻😊
 

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
அச்சோ யாரோ ராஸ்கல் வன்மத்தை வச்சுக்கிட்டு வேணும்னே பலி வாங்கிருக்கான், யாரா இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔
சீக்கிரமாகத் தெரியும் 😊