"தித்திக்கும் தேன்பாவை"
பாகம் 5
ஹாஸ்பிடலுக்கு சென்றான் ஷியாம். அப்போது நர்ஸ் அவனிடம் ஃபோனில் கூறியதையே மறுபடியும் கூறினார்.
" அக்ரஸிவ்வா நடந்துக்கிட்டாளா? என்ன பேசினான்னு சொல்ல முடியுமா சிஸ்டர்? "
என்றான் ஷியாம்.
"யாருடா நீ, யாருன்னு, யாருன்னு கத்தினாங்க பிறகு ஷியாம் ஷியாம் சீக்கிரமா வாடா, என்னை காப்பாத்துன்னு கத்தினாங்க"
ஷியாமிற்கு கண்கள் கலங்கியது.
" நான் உள்ள போய் அவளை ஒரு முறை பார்க்கலாமா? " என்று பரிதாபமாக கேட்டான் ஷியாம்.
அந்த சிஸ்டருக்கு அவனைப் பார்க்க பாவமாக இருக்கவே,
" ஓகே சார் இன்னும் 5 மினிட்ஸ்ல டாக்டர் வருவாங்க. ஜென்ரலா ஐசியூல இருக்க பேஷண்ட பார்க்க அலோ பண்ணக் கூடாது. டூ மினிட்ஸ்ல பார்த்துட்டு வந்துடுறீங்களா? அப்புறம் டாக்டர் பார்த்துட்டாங்கன்னா எனக்கு தான் பிரச்சனையா ஆயிடும் "
" தேங்க் யூ சிஸ்டர், தேங்க் யூ வெரி மச். நான் டூ மினிட்ஸ்ல வந்துடறேன் "
பிறகு தன் தங்கையை பார்க்க ஐ சி யூ வார்டிற்கு
சென்றான் ஷியாம்.
முதலில் யாரோ என்று நினைத்து அடுத்த பெட்டிற்கு சென்றவன் தன் தங்கையின் பெயரை பார்த்துவிட்டு திரும்ப வந்தான்.
இடது கண் மற்றும் இடது பக்க தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. கண் மற்றும் முகம் வீக்கமாக இருந்தது. அழகு தேவதை போல இருந்த தன் தங்கை இன்று இவ்வாறு சீரிழக்கப்பட்டு இருக்கிறாளே என்று நினைத்து மிகவும் வருந்தினான். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான். அவளுக்கு நடந்த இந்த கொடுமையை பற்றி அவனுடைய பெற்றோர்களிடம் கூட சொல்லக் கூடாது என்பதில்.
அவளுடைய தலையை கோதியபடி,
"சாரி ஷிவானி, உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவனை. கண்டன் துண்டமா வெட்டி போட்டு விடுவேன். இது உன் மேல சத்தியம் " என்றான்.
மயக்க கலக்கத்திலும் ஷிவானி.
" ஷியாம், சீக்கிரமா வாடா வந்து என்ன காப்பாத்து " என்று முணகி கொண்டே இருந்தாள் ஷிவானி.
அதைக் கேட்டதும் அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியாமல் அழுகை தொண்டையை வந்து அடைக்க, தன் வாயை மூடிக் கொண்டு வேகமாக வெளியே வந்தான் ஷியாம்.
அவன் அவ்வாறு வெளியே ஓடி வருவதை பார்த்த நர்ஸ்,
" என்னாச்சு சார், உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க தானே? "
கண்கள் கலங்க, தொண்டையை சரி செய்து கொண்டு.
" இல்ல சிஸ்டர், அவளை இந்த நிலைமையில் பார்த்ததுனால நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் "
" சாரி சார்"
" டாக்டர் வந்ததும் கூப்பிடுங்க நான் வெயிட்டிங் ஹால்ல இருக்கிறேன்"
" ஓகே சார்"
வெயிட்டிங் ஹாலுக்கு சென்றதும் நந்தினிக்கு கால் செய்தான்.
" நந்தினி வீட்டுக்கு போயிட்டியா?"
" நான் வந்துட்டேன் ஷியாம். நீயும் ஷிவானியும் இப்ப எங்க போயிகிட்டு இருக்கீங்க? " என்றாள் நந்தினி.
அவள் அவ்வாறு பேசுவதில் இருந்து யாரோ பக்கத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ஷியாம்,
" ஓகே ஓகே புரியுது, நீ ஃப்ரீ ஆயிட்டு அப்புறமா கால் பண்ணு "
" ஒரு நிமிஷம் ஷியாம், அம்மா பேசணும்னு சொல்றாங்க "
அவன் வேண்டாம் என்று சொல்வதற்குள் ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டாள் நந்தினி.
" என்னப்பா எங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாம ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கீங்க? "
" நீங்களே நிச்சயத் தார்த்த வேலையில பிஸியா இருக்கீங்க ஆன்ட்டி, உங்களை எதுக்கு தொல்லை பண்ண வேண்டும் என்று தான் சொல்லல. அதான் நந்தினி கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டோம் "
" ஷிவானி பக்கத்துல இருக்காளா கொடுப்பா"
" இல்ல ஆண்ட்டி அவ அழுது அழுது இப்பதான் தூங்கினா"
" தூங்குகிறாளா ஓகே ஓகே, சரிப்பா ஜாக்கிரதையா போங்க. போயிட்டு கண்டிப்பா கால் பண்ணனும் சரியா? "
" கண்டிப்பா பண்றேன் ஆன்ட்டி. அர்ஜுன் அண்ணாவுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னேன்னு சொல்லுங்க"
" கண்டிப்பா பா, இரு ஃபோனை நந்து கிட்ட கொடுக்கிறேன். பை"
" ஓகே ஆன்ட்டி, பை "
ஃபோனை வாங்கிக் கொண்டு பேசிக்கொண்டே தன் ரூமிற்கு வந்தாள் நந்தினி.
" ரூமுக்கு வந்துட்டேன் ஷியாம், இப்போ சொல்லு ஷிவானி எப்படி இருக்கா?"
" அவ அப்படியே தான் இருக்கா, மயக்கம் தெளிஞ்சு அழுததா சொன்னாங்க "
" அழுதாளா? என்ன ஆச்சு? யாரு என்னன்னு சொன்னாளா? "
" தெரியல எதுவும் சொல்லல. நான் பார்க்கும்போது மயக்கத்தில் தான் இருந்தா "
" அவளுக்கு மயக்கம் தெளியும் போது உன்கிட்ட சொல்லலையா? "
" அவளுக்கு மயக்கம் தெளியும் போது நான் அங்க இல்லவே இல்ல நான் என்னோட வீட்ல இருந்தேன். "
" ஓ அப்போ வா? "
" ரொம்ப கத்தி கோபப்பட்டா, அதனால பிபி ஏறிடிச்சுன்னு சொன்னாங்க"
" ஓ மை காட்"
" அதான் மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வச்சிருக்காங்க "
" கவலைப்படாதடா சரியாயிடும் "
" என் தங்கச்சிக்கு இந்த நிலைமை வந்ததுக்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்"
" என்னடா பைத்தியக்காரத்தனமா
உளறிக்கிட்டு "
" இல்லடி, ஏதோ ஒரு சபலத்துல உன் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நெனச்சு தான் அவ கால் பண்ணும் போது நான் போகல"
" அவ உன்னை வர சொல்லியாடா நீ போகம இருந்த? அவளே தானே உன்னை வர வேண்டாம், நானே வேலையை முடிச்சுட்டு வரேன்னு சொன்னா? இதுல உன் தப்பு என்னடா இருக்கு? "
" இல்ல நான் போய் இருக்கணும், எனக்கும் தெரியும் போன மாசம் திருடங்க வந்தாங்க எங்க வீடு தனியாக இருக்குன்னு. கத்தி கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்காதுன்னு"
"ஷிவானி என்னை மாதிரி பயந்தாங்கோலி இல்ல தைரியமானவ. அதனால தானே நீயும் அவளை தனியா போக அனுமதிச்ச?"
" இல்ல நந்து, குற்ற உணர்ச்சி என்னை கொல்லுது டி "
" அப்படி பார்த்தால் ஒரு வகையில நானும் தானே குற்றவாளி? "
" இல்ல நந்து, நீ என்ன பண்ண? இன்ஃபேக்ட் எங்களை வெயிட் பண்ணுங்க. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணி வந்த பிறகு உங்க வீட்டுக்கு போகலாம்னு தானே சொன்ன? இதுல உன் தப்பு என்ன இருக்கு? "
"அதையே தான் நானும் சொல்ல வரேன். நான் அப்படி சொல்லும் போது நீ வேண்டாம்னு சொல்லலையே. ஷிவானி தானே வேண்டான்னு சொன்னா? அப்படி இருக்கும் போது எப்படி உன்னையே குற்றவாளியா நீ நெனச்சுப்ப?"
அமைதியாக இருந்தான் ஷியாம்.
" கண்டதைப் போட்டு மனச குழப்பிக்காதடா. நம்ம ஷிவானி உடம்பு சரி ஆகி வரட்டும்."
" சரி நந்து, நீ மறந்து கூட எதையும் பேசிடாத " என்றான் ஷியாம் திணறியபடி.
" எனக்கு தெரியும்டா. நீ கவலைப்படாத, நானும் ஒரு பொண்ணு தான். ஷிவானியோட நிலைமையை என்னால புரிஞ்சுக்க முடியும். நான் ஒன்னு சொல்லவா டா? "
" சொல்லு நந்து, நம்ம மூணு பேரை தவிர இந்த விஷயம் வேற யாருக்குமே தெரிய வேண்டாமே. ஆன்ட்டி அங்கிள் கிட்ட கூட சொல்ல வேண்டாம். நீ என்ன நினைக்கிற? "
தான் நினைத்ததையே அவளும் நிலைத்திருக்கிறாள் என்று தெரிந்ததும் ஷியாமிற்கு வார்த்தைகள் வரவில்லை கண்கள் கலங்கியது.
" என்னாச்சுடா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? "
" இல்ல நந்து, நான் என்ன நினைச்சேனோ அதேதான் நீயும் நெனச்சி இருக்க அதை கேட்டதும் எனக்கு எமோஷனல் ஆயிடுச்சு "
" நம்ம ஷிவானி டா, அவளை ஒரு தெரு நாய் கடிச்சிடிச்சு. நம்ம ஷிவானி சரியாகி வரட்டும். தெரு நாயை அடையாளம் காட்டின அடுத்த நொடி. அதை அடிச்சே கொன்னுடலாம். "
மறுபடியும் அவன் நினைத்ததை அவள் சொன்னது அவன் மனப் புண்ணுக்கு மருந்து போட்டது போல இருந்தது.
" சரி நந்து, பை"
"ஓகே டா, டேக் கேர், பை "
வெகு நேரம் தூக்கம் வராமல் அந்த ஈஸி சேரில் திரும்பத் திரும்ப படுத்தான் ஷியாம்.
இரவு இரண்டு மணி அளவில் தூங்கி விட்டான்.
மூன்று முப்பது மணிக்கு நர்ஸ் ஷியாமிற்கு கால் செய்தார்.
" ஹலோ நீங்கதான் பேஷன்ட் ஷிவானி ஓட அட்டெண்டெரா? "
" ஆமாம் சிஸ்டர்,"
" கொஞ்சம் இம்மீடியட்டா வாங்க "
என்று நர்ஸ் சொன்னதும். பதறி அடித்துக் கொண்டு ஓடிச் சென்றான் ஷியாம்.
"என்னாச்சு சிஸ்டர்? " என்றான் பதபதைப்பாக.
இப்போது அங்கே வேறு ஒரு நர்ஸ் இருந்ததால் இவனை அவருக்கு தெரியவில்லை.
" அவங்க உங்களுக்கு என்ன வேணும்? "
" என்னோட டிவின் சிஸ்டர் "
" ஓகே, அவங்க மயக்கம் தெளிஞ்சு ரொம்ப பதட்டமா இருக்காங்க கத்துறாங்க"
" நான் பார்க்கலாமா? "
" அதான் நாங்க டாக்டர் கிட்ட கேட்டோம். உங்களை உள்ளே போக சொன்னாங்க டாக்டர். உங்களை அவங்க கிட்ட பேச சொன்னாங்க"
" ஓகே சிஸ்டர்"
" இருங்க இருங்க, அது ஐசியூ சார். உங்க செருப்ப அவுத்துட்டு அந்த செருப்ப கவர், கவர் கோட்டு, ஹேர் கேப்பு, கிளௌஸ் எல்லாம் போட்டுக்கிட்டு போங்க"
இரவு உள்ளே சென்ற போதும் அதையெல்லாம் போட்டுக் கொண்டு தான் சென்றான். ஆனால் இப்பொழுது அவள் மயக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் பதட்டத்தில் ஒன்றும் புரியாமல் அப்படியே உள்ள செல்ல இருந்தவனை தடுத்து அவ்வாறு கூறினார் அந்த நர்ஸ்.
அனைத்தையும் போட்டுக் கொண்டு மெதுவாக உள்ளே நடந்து சென்றான்.
ஷிவானி என்ன சொல்லப் போகிறாளோ?
தன் சட்டையைப் பிடித்து ஏண்டா வந்து என்னை காப்பாத்தலன்னு கேட்டா நான் என்ன சொல்ல போறேன்? அவள் முகத்தில் முழிப்பதற்கே சங்கடமாக இருந்தது.
உள்ளே சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
சித்தபிரம்மை பிடித்தது போல் எதையோ புலம்பிக்கொண்டே இருந்தாள் ஷிவானி. மருந்தின் மயக்கமும் மன வலியும் சேர்ந்து அவளை புலம்ப வைத்தது.
தன் சகோதரனைப் பார்த்ததும், ஷிவானியின் புலம்பல் நின்றுவிட்டது. மாறாக கண்களில் இருந்து கண்ணீர் பெருகி ஓடியது. வீக்கமாக இருந்த கண்ணில் இருந்து கண்ணீருடன் ரத்தமும் வந்தது.
அதைப் பார்த்து பதைத்தான் ஷியாம்.
" சிஸ்டர் சிஸ்டர்" என்று கத்தினான்.
டியூட்டி நர்ஸ் வந்து,
" என்னாச்சு"? என்றார்.
" கண்ணுல இருந்து ரத்தம் வருது "
" மேடம் நீங்க அழக்கூடாது. கண்ணுல நல்லா அடிபட்டு இருக்கு. நீங்க அழுத்திங்கனா ரத்தம் வரும். அப்புறம் ரொம்ப வலிக்கும் " என்று சொல்லி அந்த ரத்தத்தை துடைத்து. கண்கள் பக்கத்தில் அடிபட்டிருந்த இடத்தில் மருந்து போட்டுவிட்டு சென்றார்.
"ஷியாம்" என்று அவன் கையை பிடித்தாள் ஷிவானி.
ஒரு கையில் பல்ஸ், ட்ரிப்ஸ், பிபி என்று அனைத்து வயர்களும் மானிட்டரில் கனெக்ட் ஆகி இருந்தது.
" சாரி ஷிவானி" என்று திக்கி திணறி சொன்னான் ஷியாம்.
" நான் தான் ஷியாம் உன்கிட்ட சாரி சொல்லணும் "
ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான் ஷியாம்.
" நான் வேலை எல்லாம் முடிச்சுட்டு நந்தினி வீட்டுக்கு வரும்போது. நீயும் அவளும் கிஸ் பண்ணிக்கிட்டு இருந்ததை பார்த்தேன். உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு மறுபடியும் திரும்ப நம்ம வீட்டுக்கு போனேன் "
தன் இரு கைகளால் அவள் கையைப் பிடித்து தன் நெற்றியில் வைத்து
"சாரி டி, சாரி ஷிவானி" என்று அழுதான் ஷியாம்.
"ஏய், லூசு மாதிரி பேசாத டா. நீ என்ன பண்ணுவ? நான் தான் மறுபடியும் நம்ம வீட்டுக்கு போனேன். நான் தான் தப்பு பண்ணிட்டேன். நான் திரும்ப வீட்டிற்கு போய் இருக்கக் கூடாது " என்று சொல்லி கண்கள் கலங்கினாள் ஷிவானி.
" அச்சோ நீ மறுபடியும் அழாதே. கண்ணுல இருந்து ரத்தம் வரப்போகுது "
"இல்ல ஷியாம், நீ கவலைப்படாத. நேத்தே நிறைய அழுது அழுது என் கண்களில் இருந்து தண்ணி எல்லாம் வத்தி போயிடுச்சு "
" அப்படியெல்லாம் சொல்லாதடி "
" சரி சரி, நீ எமோஷனல் ஆகாத" என்றாள் ஷிவானி.
"அதை விடு, என்னாச்சு சொல்லு? யார் அவன்? அவனை, ஒரு வழிப் பண்ணிடறேன். யாருன்னு சொல்லு ஷிவானி" என்றான் ஷியாம்.
தொடரும்......
தேன் மிட்டாய்.

Attachments
Last edited: