• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை" பாகம் 6

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை"
பாகம் 6

IMG-20241119-WA0003.jpg


ஷியாம் அந்த கேள்வியை கேட்டவுடன் ஷிவானிக்கு பிபி ஏறியது. உடம்பு தூக்கிப் போட்டது. பயந்து போன ஷியாம்

"சிஸ்டர் சிஸ்டர் " என்று கத்தினான்.

சிஸ்டர் ஓடி வந்தார்.

" சார் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க, " என்று சொல்லி ஷியாமை வெளியே அனுப்ப நினைத்தார். ஆனால் ஷிவானி இறுக்கமாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

பிபி ஏறிக்கொண்டே சென்றது. உடம்பு தூக்கி போடுவதும் அதிகமாக இருந்தது. நர்ஸ் ஷிவானியின் கைகளை விரித்து ஷியாமை வெளியே போக சொன்னார்.

ஏதோ ஒயர் எல்லாம் அட்ஜஸ்ட் செய்து. மூக்கில் ஆக்ஸிஜன் வைத்து ஸ்டேபிள் செய்து விட்டு உடனே டாக்டருக்கு கால் செய்தார் நர்ஸ்.

பதட்டத்துடன் வெளியே வந்து காத்திருந்தாண் ஷியாம்.

அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த நர்ஸ்.

" சார் நீங்க கவலைப்பட வேண்டாம். அவங்க நார்மலா இருக்காங்க. நீங்க வெயிட்டிங் ஹாலுக்கு போயிடுங்க ஏதாவது வேணும்னா நாங்க கூப்பிடறோம் "

" ஒருமுறை பாத்துட்டு போகலாமா சிஸ்டர்? "

" இல்ல அவங்களுக்கு பிபி அதிகமானதுனால டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வைக்க சொல்லி இருக்காரு. அதனால இப்போ அவங்க தூங்கிக்கிட்டு இருக்காங்க. அவங்க கண்விழிச்சாங்கன்னா நாங்களே உங்க கிட்ட சொல்லி அனுப்புவோம் "

" ஓகே சிஸ்டர் தேங்க்யூ" என்று சொல்லிவிட்டு
வெயிட்டிங் ஹாலிற்கு வந்தான்.

அப்போது ஷியாமுடைய ஃபோன் அடித்தது.
இந்த நேரத்தில் யார் கால் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே ஃபோனை எடுத்தான்.

வெளிநாட்டில் இருந்து அவன் உடன் பிறந்த அக்கா ஷைலஜா கால் செய்தாள்.

" ஹலோ ஷியாம் தூங்கி கிட்டு இருந்தியா டா? "

" சொல்லு அக்கா எப்படி இருக்க? மாமா எப்படி இருக்காரு? ஜேசன் எப்படி இருக்கான்? "

" ஆல் குட் டா. என்னாச்சு அம்மா தினமும் கால் பண்ணிடுவாங்க இன்னைக்கு பண்ணல. நான் போட்டாலும் அப்பா அம்மா இரண்டு பேருக்குமே நாட் ரீச்சபிள்னு வருது? "

" ஊர்ல நம்ம பாட்டி இறந்துட்டாங்க அக்கா "

" ஓ எம் ஜி, எப்போ? "

" நேத்து தான் அக்கா, ஊருக்கு போய் இருக்காங்க அப்பாவும் அம்மாவும். "

" சரி சரிடா, சாரி நீ தூங்கிட்டு இருந்தியா? உன்ன வேற நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? "

" அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா, நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் "

" ஏன் டா, என்னாச்சு உனக்கு? "

" எனக்கு ஒன்னும் இல்ல அக்கா. ஷிவானி தான் கீழே விழுந்த தலையில அடிபட்டுகிட்டா"

" அச்சச்சோ எப்படி? இப்போ எப்படி இருக்கா? "

" படிக்கட்டில் தடுக்கி விழுந்திட்டா. ஹாஸ்பிடல் வந்த பிறகு நார்மலா தான் இருக்கா, பயப்பட ஒன்னும் இல்ல. இப்ப தூங்கிக்கிட்டு இருக்கா "

" அப்பா அம்மாவுக்கு தெரியுமா? "

" இல்லக்கா தெரியாது. தெரிஞ்சா ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. அப்பா அங்க டூ த்ரீ டேஸ்க்கு இருக்கணும்னு சொன்னாரு. ஏதோ சாங்கியம் எல்லாம் பண்ணனுமாம். அதனால நான் சொல்லல. உன் கிட்ட பேசினாலும் இப்போதைக்கு சொல்லாத அக்கா. நான் நேரா வந்தப்புறம் சொல்லிக்கிறேன் "

" சரிடா நாளைக்கு காலையில ஷிவானி கண் முழிச்ச அப்புறமா எனக்கு கால் பண்ணு. எனக்கு இங்க மிட் நைட்டா இருந்தாலும் பரவால்ல நான் பேசுறேன்."

" ஓகே அக்கா பை "

" பை டா பத்திரம். அவளை நல்லா பாத்துக்கோ. நீயும் உன் உடம்ப பாத்துக்கோ. டேக் கேர். பை"

"ஓகே ஓகே அக்கா " என்ற சொல்லி ஃபோனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டான் ஷியாம்.

கடவுளிடம் ஷிவானியை சீக்கிரமா சரியாக்கு என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.
வெகு நேரமாக தூக்கம் வராமல் அவதிப்பட்டவன் 5 மணிக்கு மேல் கண்ணயர்ந்தான்.

நிச்சயதார்த்த விழாவிற்காக நந்தினி வீட்டிலிருந்து ரெடியாகி பார்ட்டி ஹாலுக்கு செல்லும் முன் ஏழு முப்பது மணி அளவில் ஷியாமிற்கு கால் செய்தாள்.

அசந்து தூங்கி இருந்தவன் ஃபோன் அடித்ததும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்.

"ஹலோ நந்து" என்று அவன் பேசியதிலிருந்தே அவன் பதட்டமாக பேசுகிறான் என்று புரிந்து கொண்டாள் நந்தினி.

" என்னாச்சுடா ஏதாவது பிரச்சனையா? "

" இல்லடி, பயப்படாத ஒன்றும் இல்லை. நான் ரொம்ப லேட்டா தூங்கினேன் அதான் நீ கால் பண்ணதும் அலறி அடிச்சுட்டு எழுந்துட்டேன்"

" அச்சச்சோ நான்தான் உன்னை கால் பண்ணி எழுப்பி விட்டுட்டேனா? சாரி டா"

" சே சே அதெல்லாம் ஒன்னும் இல்ல. நல்லவேளை நீ கால் பண்ணின. இல்லன்னா இன்னும் எவ்வளவு நேரம் தூங்கிருப்பேன்னு தெரியல. இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாரு. நர்ஸ் கூப்பிடுவாங்க"

" ஓகே டா, டாக்டர் வந்து பார்த்துட்டு போனதும் என்னன்னு சொல்லு. அவ எப்படி இருக்கான்னு எனக்கு அப்டேட் பண்ணு "

" ஓகே டி நீ இதையே நினைச்சுட்டு ஃபங்ஷன்ல டல்லா இருக்காத. அப்புறம் எல்லாரும் உன்கிட்ட வந்து என்னாச்சு ஏதுன்னு கேட்பாங்க. நீ நார்மலா இரு"

" ஓகேடா, நைட்டு ஏதாவது சாப்பிட்டியா? "

" இல்ல நந்து, எனக்கு பசிக்கல "

" அவளைப் பார்த்துக்கறதுக்காகவாது நீ தெம்பா இருக்கணும் டா, தயவுசெய்து இப்ப போய் ஏதாவது டிபன் சாப்பிடு. ப்ளீஸ் "

" ஓகே நந்து, நான் பாத்துக்குறேன்."

அதற்குள் மைக்கில்
"ஷிவானி அட்டெண்டர் ப்ளீஸ் கம் டு ரிசப்ஷன் நம்பர் 28 " என்று கூப்பிட்டார்கள்.

" ஓகே நந்து, இங்க கூப்பிடுறாங்க, பை "

"பை டா" என்று சொல்லி ஃபோனை வைத்த போது ரூமுக்குள் வந்த கௌசல்யா.

" என்ன நந்து ரெடியா? இந்த டைம்ல யார் கிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு, கிளம்பு கிளம்பு "

" நான் ரெடியா தான் அம்மா இருக்கேன் வாங்க போகலாம் "

அனைவரும் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றனர்.

அர்ஜுன் மற்றும் ஊர்மிளா இருவரும் பொருத்தமான ஜோடிகள்.

இருவரும் மேட்ச் ஆக ப்ளூ கலர் உடுத்தி இருந்தனர்.

ஊர்மிளாவின் அப்பா ராஜசேகர் மற்றும் அம்மா கனகவல்லி அனைவரையும் வரவேற்று நன்றாக பார்த்துக் கொண்டனர்.

நந்தினி பாவாடை தாவணி போட்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். ஊர்மிளாவின் தம்பி விஷ்வாவிற்கு நந்தினியை பார்த்தவுடன் பிடித்து விட்டது. இரண்டு மூன்று முறை அவளைப் சைட் அடித்தான். அதை நன்றாக புரிந்து கொண்ட நந்தினி அவனுக்கு எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

IMG-20241205-WA0017.jpg


நந்தினியின் தோழிகள் ரம்யா மற்றும் தேவி இருவரும் வந்தனர்.

இருவரையும் வரவேற்று அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் நந்தினி.

கௌசல்யா ரங்கநாதன் இருவரும் தங்கள் உறவினர்களை அழைத்து 51 தட்டுகள் வரிசை வைத்தனர்.

அனைவரும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

10 பவுனில் சரடு போட்டனர். திருமணம் ஆன பிறகு தாலியை அதில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அந்த தாலிச் சங்கிலி ஏதாவது விசேஷத்திற்கு மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். மற்றபடி தினப்படி போட்டுக்கொள்ள 5 சவரன் செயனில் டைமண்ட் மோப்பு வைத்து வாங்கி இருந்தனர்.

ராஜசேகர் தனது மகளுக்கு 100 பவுன் நகையும்.
மாப்பிள்ளைக்கு செயின் வாட்ச் மோதிரம் பிரேஸ்லெட் என்று அனைத்தையும் பிளாட்டினத்தில் வாங்கியிருந்தார்.

நிச்சயதார்த்த விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
இது நிச்சயதார்த்தமா கல்யாணமா என்று சிலர் பேசிக் கொண்டனர். அர்ஜுனும் ஊர்மிளாவும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். விஷ்வா கேக் ஆர்டர் செய்திருந்தான். ஊர்மிளாவும் அர்ஜுனும் அதை வெட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டனர். பிறகு அனைவருக்கும் ஊட்டி விட்டனர். அர்ஜுன் தன் தங்கை நந்தினிக்கு ஊட்ட, ஊர்மிளா தன் தம்பி விஷ்வாவிற்கு ஊட்டி விட்டாள்.

ஃபோட்டோ எடுக்கும் போது நிறைய ஃபோட்டோவில் விஷ்வா நந்தினியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றனர்.

சாப்பிட்டுவிட்டு தேவி மற்றும் ரம்யா இருவரும் கிளம்ப இருந்தார்கள்.

அவர்களை பிடித்து அமர வைத்து அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள் நந்தினி.

அவளுக்கு பக்கத்திலேயே அவனுடைய நண்பர்களுடன் அமர்ந்திருந்தான் விஷ்வா.
அங்கே பேசினாலும் பார்வை மட்டும் அடிக்கடி நந்தினி பக்கம் வந்து சென்றது. மேலும் அவள் அவர்களிடம் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது போல அமர்ந்திருந்தான்.

"டைம் ஆகுதுடி நாங்க கிளம்புறோம் வீட்டுக்கு "
என்றாள் தேவி.

" ஆமாம் டி" என்றாள் ரம்யா.

" இருடி நம்ம மூணு பேரும் ஃபோட்டோவே எடுத்துக்கல" என்றாள் நந்தினி.

" அதான் ஸ்டேஜ்ல நின்னு அர்ஜுன் அண்ணா ஓடவும் உங்க அண்ணியோடவும் எடுத்தோம் இல்ல? "

" நம்ம மூணு பேரு மட்டும் தனியா எடுத்துக்கலைன்னு
சொன்னேன் "

" சரி சரி சீக்கிரம் எடுத்துக்கோ போகணும் "

" என்னடி இவ சுடு தண்ணிய கால்ல கொட்டின மாதிரி இப்படி பறக்கிறா, இரு ஒரு நிமிஷம் " என்று அவர்களிடம் சொல்லிவிட்டு.

"அண்ணா" என்று போட்டோகிராஃபரை பார்த்து கூப்பிட்டாள் நந்தினி.

" சொல்லுங்க மேடம் "

" அண்ணா எங்க மூணு பேரையும் ஒரு போட்டோ எடுக்குறீங்களா? "

" ஓகே நில்லுங்க "

மூவரையும் ஒரு ஃபோட்டோ எடுத்தார் போட்டோகிராஃபர்.

" அண்ணா அண்ணா அப்படியே இதுலயும் ஒன்னு எடுத்து கொடுத்திருங்க" என்று சொல்லி தன் மொபைல் ஃபோனை கொடுத்தாள்.

அதிலும் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுத்து விட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றார் ஃபோட்டோகிராபர்.

" அதான் கேமராவிலேயே எடுத்தாச்சு இல்ல? அப்புறம் எதுக்கு தனியா ஃபோன்ல வேற எடுக்க சொன்ன? "

அனைத்தையும் பார்த்து கொண்டும் கேட்டுக் கொண்டிருந்தான் விஷ்வா.

" ஆல்பம் இப்போதைக்கு வராது இல்ல? "

" அதுக்கு இப்ப என்ன அவசரம்? "

" என்னோட ஆளுக்கு அனுப்புவதற்காக "

" ஆமாம் நானே கேட்கணும்னு நினைச்சேன் ஏன் அவன் வரல? "

" அவங்களோட பாட்டி இறந்துட்டாங்க இல்ல?
அதனால அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போய் இருக்காங்க. "

" ஆமாம் ஆமாம் காலேஜ்ல பேசிகிட்டு இருந்தாங்க
சீனியர்ஸ். "

" சீனியர்ஸா? யார் பேசிக் கிட்டு இருந்தாங்க? "என்று கேட்டாள் நந்தினி.

" ரோஹித் , சரத், காவேரி,
அலீஷா எல்லாரும் "

"ஓ, ஷியாம் ஷிவானி டிபார்ட்மெண்ட் ஃபிரெண்ட்ஸை தான் சொல்றியா? சீனியர்ஸ் சொன்ன உடனே ஃபைனல் இயர் படிக்கிறவங்களை சொல்றையோன்னு நினைச்சேன்"

" நம்ம செகண்ட் இயர், அவங்க எல்லாம் தேர்ட் இயர். அப்ப நமக்கு அவங்க சீனியர்ஸ் தானே? "
என்று சொல்லி சிரித்தாள் தேவி.

" அய்யே, இது காமெடியா? அதை சொல்லிட்டு நீயே வேற சிரிச்சுக்குவியா? " என்றாள் நந்தினி.

" உன் ஆளை பார்க்காததால வந்த கோவத்தை எல்லாம் இவ மேல காட்டுறியா? " என்றாள் ரம்யா

" அதெல்லாம் ஒன்னும் இல்லடி. "

" அதான் தெரியுதே உன் முகத்திலேயே. ஷியாமை நீ எவ்வளவு மிஸ் பண்றேன்னு" என்று சொல்லி சிரித்தாள் தேவி.

இவர்கள் பேசுவதை கேட்ட விஷ்வாவிற்கு,
நந்தினி யாரையோ லவ் பண்ணுகிறாள் என்று புரிந்து கொண்டான். அதனால் அங்கிருந்து எழுந்து தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு வேறு இடம் சென்று அமர்ந்தான்.

" சரிடி வேலை முடிஞ்சிடுச்சு நீங்க கிளம்புங்க " என்றாள் நந்தினி.

தேவியும் ரம்யாவும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

" என்ன வேலை டி முடிஞ்சிடுச்சு? "

" அதான் ஃபோட்டோ எடுக்கிற வேலை. டைம் ஆகுது கிளம்பனும்னு சொன்னீங்க இல்ல? கிளம்புங்க கிளம்புங்க, பை." என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தாள்.

" அடிப்பாவி என்னடி இவ?" இன்று இருவரும் பேசி சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.

அர்ஜுனும் ஊர்மிளாவும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

லஞ்ச் சாப்பிட்ட பிறகு அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பினார்கள்.

நந்தினி தனியாக ஒரு சாரில் அமர்ந்து ஷியாமிற்கு மெசேஜ் அனுப்பினாள்.
ஒருவேளை தூங்குவனோ என்று நினைத்து கால் செய்யவில்லை. அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.

அப்போது விஷ்வா நந்தினி இடம் வந்து,

IMG-20241126-WA0024.jpg


"ஹாய், உங்க பேரு நந்தினி தானே? " என்றான்.

என்னடா இவன் இவ்ளோ கிளியரா சொன்னா அப்புறமும் இப்படி வந்து பேசுறானே என்று நினைத்துக் கொண்டே,

" ஆமாம் விஷ்வா "

" என் பெயர் உங்களுக்கு தெரியுமா? "

" என்னோட பெயர் உங்களுக்கு தெரியும் போது உங்களோட பெயர் எனக்கு தெரியாதா? "

" நீங்க ஏதோ என் மேல கோவமா இருக்குற மாதிரி தெரியுது. நான் ஃபிராங்காவே சொல்லிடுறேன்" என்றான் விஷ்வா.

அடக்கடவுளே ஐ லவ் யூ என்று ஏதாவது சொல்லிட போறான். இதனால அண்ணன் அண்ணிக்கு ஏதாவது பிரச்சனை வருமா? கடவுளே கடவுளே கடவுளே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

" நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? "

மனதிற்குள் அப்பாடா இந்த கேள்வியை கேட்டானே ஐ லவ் யூ ன்னு சொல்லாம
என்று நினைத்துக் கொண்டு.

சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,

" ஆமாம் பிரோ, இப்போதைக்கு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க "

" என்னது பிரோவா? "

" அதான் எனக்கு ஆள் இருக்குன்னு சொல்லிட்டேன் இல்ல? அப்புறம் என்ன பிரதர்? "

" உங்களுக்கு ஆள் இருந்தாலும் சரி, கல்யாணமே ஆனாலும் சரி, தயவு செஞ்சு என்னை பிரதர் என்று மட்டும் கூப்பிடாதீங்க. விஷ்வா என்றே கூப்பிடுங்க. எனக்கு ஒரு அக்கா போதும். தங்கச்சி எல்லாம் வேண்டாம், லெட்ஸ் பீ ஃபிரண்ட்ஸ் " என்று சொல்லி கையை நீட்டினான்.

ஸ்மைல் செய்தபடி அவன் கையை குலுக்கி,

" ஓகே விஷ்வா" என்றாள் நந்தினி.

" பங்க்ஷன் நல்லபடியா முடிந்ததற்கு கடவுளுக்கு முதல் நன்றி. இரண்டாவது உங்களுக்கு" என்று ரங்கநாதனிடம் சொன்னார் ஊர்மிளாவின் அப்பா ராஜசேகர்.

"அதை நான் சொல்லணும் சம்பந்தி. ரொம்ப தேங்க்ஸ்" என்றார் ரங்கநாதன்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி விடைபெற்று அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

ஊர்மிளா மற்றும் அர்ஜுன் இருவரும் போட்டோகிராபர் கேட்டுக் கொண்ட படி விதவிதமாக ஸ்டில்ஸுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்.

"அர்ஜுன் நாங்க வீட்டுக்கு போறோம் பா, நீ ஊர்மிளாவை ட்ராப் பண்ணிட்டு அப்புறமா வரியா?" என்றார் ரங்கநாதன்.

" ஓகே பா நீங்க கிளம்புங்க நான்
பாத்துக்குறேன் " என்றான் அர்ஜுன்.

ரங்கநாதன் கவுசல்யா மற்றும் நந்தினி மூவரும் வீட்டிற்கு சென்றனர்.



தொடரும்....

தேன் மிட்டாய்.
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஷிவானி சொன்னா தான் குற்றவாளி யாருன்னே தெரியும் 🙄 அவளை இப்படி பிபி வந்து படுக்க வெச்சிட்டீங்களே 😢

விஷ்வா கேரக்டர் வில்லங்கம் பண்ணுமோ? 🧐
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
ஷிவானி சொன்னா தான் குற்றவாளி யாருன்னே தெரியும் 🙄 அவளை இப்படி பிபி வந்து படுக்க வெச்சிட்டீங்களே 😢

விஷ்வா கேரக்டர் வில்லங்கம் பண்ணுமோ? 🧐
😂😂😂 காத்திருந்தால் தெரியும் 😊😂
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் துக்கம் என்னடா இது வாழ்க்கைனு நினைக்குற மாதிரி ஆகிடுச்சு நந்தினிக்கு 🙄🙄🙄🙄🙄ஷ்யாம் இனிமேல் எப்படி சமாளிப்பானோ 🙄🙄🙄🙄🙄
Senior பையனோட வேலையா இருக்குமோ, நந்தினி friends சொன்னதை ஷ்யாம் கிட்ட சொன்னால் அவன் கண்டுபுடுச்சிருவான் 🤔🤔🤔🤔🤔🤔
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் துக்கம் என்னடா இது வாழ்க்கைனு நினைக்குற மாதிரி ஆகிடுச்சு நந்தினிக்கு 🙄🙄🙄🙄🙄ஷ்யாம் இனிமேல் எப்படி சமாளிப்பானோ 🙄🙄🙄🙄🙄
Senior பையனோட வேலையா இருக்குமோ, நந்தினி friends சொன்னதை ஷ்யாம் கிட்ட சொன்னால் அவன் கண்டுபுடுச்சிருவான் 🤔🤔🤔🤔🤔🤔
Kandupudichiduveenga poliye🫣
😊🙏🏻