• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை "பாகம் 7

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை "
பாகம் 7

IMG-20241119-WA0003.jpg


வீட்டிற்கு சென்றதும் நந்தினி ஷியாமிற்கு கால் செய்தாள்.

"ஹலோ ஷியாம் "

"சொல்லு நந்து"

"நிறைய மெஸேஜ் அனுப்பினேனே எதையுமே பார்க்கலையா நீ?"

"சாரி நந்து, என்னால எதிலுமே கான்சன்டிரேட் பண்ண முடியல. மைண்டே ஒரே பிளாங்கா இருக்கு"

"நீயே இப்படி தைரியத்தை இழந்தா யாருடா நம்ம ஷிவானிக்கு ஆறுதல் சொல்லுவாங்க?"

"புரியுது நந்து, இருந்தாலும் என்னால பொறுமையா இருக்க முடியல "

"நான் கிளம்பி வரவா?"

"வேண்டாம், வேண்டாம் நீயே ஃபங்கஷன்ல அலைந்து டயர்டா இருப்ப"

"அதெல்லாம் பரவாயில்ல ஷியாம் "

" வேண்டாம் நந்து, சரி ஃபங்ஷன் நல்லா நடந்துச்சா? "

" நல்லா நடந்துச்சு டா. ஒரு நிமிஷம் இரு" என்று
சொல்லிவிட்டு வீட்டின் பின் புறம் சென்று ஃபோனில் பேசினாள் நந்தினி.

"என்னாச்சு?"

"இல்ல, அங்க அம்மா என் ரூம்ல இருந்து என்னவோ எடுத்துக் கொண்டு இருந்தாங்க. அங்க பேச வேண்டாம்னு வீட்டுக்கு பின் பக்கம் வந்திட்டேன்."

"ஏன் என் கிட்ட பேசினா ஆன்டி திட்டுவாங்களா என்ன?"

"அது இல்லடா, ஷிவானி பத்தி பேசலாம்னு தனியா வந்தேன்"

"என்ன?"

"என்னாச்சு ஷியாம், ஷிவானி எதாவது சொன்னாளா? அவளை பலாத்காரம் செஞ்ச அந்த பொறுக்கி யாருன்னு தெரிஞ்சுதா?"
என்று கோபமாகவும் ஆத்திரமாகவும் கேட்டாள்.

"இல்ல நந்து"

"இல்லன்னா? என்ன சொல்ற? அவன் யாருன்னு ஷிவானிக்கு தெரியலையா?"

"ஆமாம்,"

"அதெப்படி?"

"முதல்ல தலையில் அடிச்சானாம்" என்று சொல்லும் போதே அவனுக்கு தொண்டையில் வார்த்தை சிக்கியது.

"பிளீஸ் காம் டவுன் ஷியாம். "

அவனே சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.

" அப்புறம் அவளை......" சொல்ல முடியாமல் அழுதான்.

நந்தினி பேசாமல் அமைதியாக இருந்தாள்.

"அவன் ஃபேஸ் மாஸ்க் போட்டிருந்தானாம். அதனால அவன் யாருன்னு இவளுக்கு தெரியல"
என்று சொல்லி முடித்தான் ஷியாம்.

"என்னது ஃபேஸ் மாஸ்க் போட்டு இருந்தானா? என்ன கொடுமை டா இது, சே" என்று வெறுப்புடன் பேசினாள் நந்தினி.

" நந்து, பிளீஸ் தயவு செய்து இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ"

"கண்டிப்பா ஷியாம். நீ கவலைப்படாத டா"
அவள் பேசி முடித்து விட்டு வீட்டிற்கு உள்ளே சென்றாள் நந்தினி.

_d670d184-3e8f-4ef7-a97d-c0c63ba58f5b.jpeg


பக்கத்து வீட்டு உமா ஆன்ட்டி அனைத்தையும் கேட்டுவிட்டார். வீட்டுக்கு பின்னால் ரெஸ்ட் ரூம் யூஸ் செய்து கொண்டிருந்தார். நந்தினி பேசியது அவருக்கு நன்றாகவே கேட்டது. அதிர்ச்சியில் அவருடைய கண்கள் விரிந்தது. பிறகு வீட்டுக்கு உள்ளே சென்று தன் கணவரிடம் அனைத்தையும் கூறினார்.

" நான் அப்பவே நெனச்சேன் டி, அந்த பொண்ணுக்கு படிக்கட்டுல விழுந்து தலையில் அடிபட்ட மாதிரி இல்ல. யாரோ தலையில் அடிச்ச மாதிரி தான் இருந்தது."

" சரிங்க அந்த பையன் இந்த நிலைமையிலும் எவ்வளவு பொறுமையா திங்க் பண்ணி. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிறான். அதனால நம்ம இந்த விஷயம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துவிடலாம் "

" நீ சொல்றதும் சரிதான். அந்த பொண்ணும் நம்ம பொண்ணு மாதிரி தானே? "

"ஆமாங்க, நான் ஏதோ மனசு கேட்காம உங்க கிட்ட சொல்லிட்டேன். நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. முக்கியமா அந்த டீக்கடை கிட்ட உட்கார்ந்து பேசுவீங்க இல்ல அப்ப தெரியாமல் கூட யார்கிட்டயும் சொல்லிடாதீங்க "

" நான் ஏண்டி சொல்ல போறேன்? "

" இல்ல ஷிவானிக்கு அடிபட்டது அப்படி இப்படி ஏதாவது உளறிடாதீங்க"

" சரி உமா. நான் எதுவும் யார்கிட்டயும் சொல்லல போதுமா? "

" அந்த பையன் ஷியாம் பாவம் நந்தினியை நம்பி அவ கிட்ட சொல்லி இருக்கான். இந்த பொண்ணு சரியான லூசு போல, வீட்டுக்குள்ள இருக்குற அப்பா அம்மாவுக்கு தெரிய கூடாதுன்னு பின்பக்கம் வந்து பேசுது. நல்லவேளை அந்த பக்கம் வீட்ல யாருமே இல்ல. நான் மட்டும் தான் கேட்டேன். வேற யாராவது கேட்டிருந்தாங்கன்னா என்ன ஆயிருக்கும்? "

" ஆனா அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சு, சட்டத்துக்கு முன்னாடி அவனை நிக்க வச்சு தண்டனை வாங்கி கொடுத்தா நல்லது. "

" அதெல்லாம் சரி தாங்க, அந்த பொண்ணு பேசினத வச்சு பார்த்தா. அந்த ஷிவானிக்கு அவன் யாருன்னு தெரியல. என்னது ஃபேஸ் மாஸ்க் போட்டு இருந்தானான்னு இவ பதில் சொன்னா. அதை வச்சு பார்க்கும்போது ஷிவானிக்கே அவளை பலாத்காரம் பண்ணியவன் யாருன்னு தெரியல போல"

" இதெல்லாம் கொடுமை டி. பாவம் அந்தப் பொண்ணு. இதுக்கு மேல அவளுக்கு லைப் லாங் இந்த கசப்பான சம்பவம் மனசளவுல பாதிச்சிடும். அது அவ கல்யாணம் வாழ்க்கையை கூட பாதிக்கும் "

" அந்த பொண்ணு எல்லாத்திலேயும் இருந்து சீக்கிரமா ரெக்கவர் ஆகி வரணும்னு நம்ம வேண்டிக்கலாமுங்க"

" சரி உமா" என்றார் சங்கர்.

ஹாஸ்பிடலில்,

ஷியாமின் ஃபோன் அடித்தது. அவனுடைய நண்பன் ரோஹித் காலிங் என்று வந்தது. இவன் எதுக்கு இப்போ பண்றான். இவன் கிட்ட என்ன சொல்றது என்று யோசித்தான் ஷியாம்.

முதல் முறை அவன் யோசித்து ஃபோனை எடுப்பதற்குள் ஃபுல்லா ரிங் அடித்து கட் ஆகியது.

சரி திரும்பவும் கால் செய்தால் எடுத்து பேசலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான் ஷியாம்.

சிறிது நேரத்தில் கால் வரவும் அவன் தான் கால் செய்கிறான் என்று நினைத்து எடுத்தான் ஷியாம். ஆனால் சிவஞானம் கால் செய்தார்.

" சொல்லுங்கப்பா, "

"என்னப்பா, நேத்து பேச முடியல அங்க சிக்னல் இல்ல. இப்போ நானும் அம்மாவும் டவுனுக்கு கடைக்கு வந்திருக்கோம் . அதான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டு அப்புறம் போலாம்னு. என்னப்பா பண்றீங்க? ஃபங்ஷன் நல்லா முடிஞ்சுதா? "

" ஃபங்ஷனா என்ன பங்க்ஷன்? "
ஷியாம் டென்ஷனில் இருந்ததால் அர்ஜுன் நிச்சயதார்த்தை பற்றி மறந்தே விட்டான். சிவஞானம் பதில் சொல்வதற்குள்,

"ஓ, அர்ஜுன் அண்ணா நிச்சயதார்த்தத்தை பத்தி சொல்றீங்களா?"

" ஆமாம் வேற என்ன ஃபங்ஷன் நினைச்ச?"

" இல்லப்பா நான் ஃபோன்ல செமஸ்டர் எக்ஸாம்ஸ் போர்ஷன் பார்த்துகிட்டு இருந்தேன் அதனால நீங்க எதை பத்தி கேக்குறீங்கன்னு ஒரு நிமிஷம் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்"

" ஓ சரிப்பா சரி, "

" அம்மாகிட்ட கொடுங்கப்பா"

" ஹலோ ஷிவானி, "

" அம்மா நான் ஷியாம் பேசுறேன் "

" ஓ, சாரி டா கண்ணா, ஷிவானின்னு நெனச்சேன். உங்க அப்பா ரெண்டு பேரையும் வாப்பா, போப்பா, கண்ணான்னு பேசுவாரா அதான். நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்?"

" என்னம்மா நேத்து தானே போனீங்க ரொம்ப நாள் ஆன மாதிரி இப்படி கேள்வி கேக்குறீங்க? "

" உங்க ரெண்டு பேரையும் பாக்காம என்னால இருக்கவே முடியல டா. இதுவே வேற யாராவது இருந்தா உங்க அப்பாவ போக சொல்லிட்டு நான் வீட்டிலேயே நின்னுட்டு இருப்பேன். பாட்டி என்றதால வேற வழி இல்லாம வந்தேன் "

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, நான் நல்லா தான் இருக்கேன். "

" சரிப்பா ஷிவானி கிட்ட ஃபோனை கொடு"

" அவ நந்து வீட்டில் இருக்கா மா. "

" சரி நான் அவளோட ஃபோனுக்கு கால் பண்றேன் "

" இல்ல அம்மா, அவ ஃபோன நம்ம வீட்லயே வச்சிட்டு போயிட்டா "

" நீ மட்டும் ஏன் பா இங்க இருக்க நீயும் அங்கேயே போக வேண்டியது தானே? "

" நைட்ல தான அம்மா தனியா நம்ம வீட்ல தங்க வேண்டாம்னு சொன்னீங்க. பகல்ல நான் என்ன பண்ணுவேன் அங்க போய். நான் ஃபோன்ல படிச்சுக்கிட்டு இருக்கேன் மா செமஸ்டர் எக்ஸாம் வருது இல்ல? "

" சரி சரிப்பா நீ படி நான் அப்புறமா ஷிவானி கிட்ட பேசிக்கிறேன், பை"

"பை" என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்து ஷிவானியின் ஃபோனை எடுத்து அதை ஸ்விட்ச் ஆப் செய்யலாம் என்று நினைத்தான். அப்போது ஷிவானியின் தோழி காவிரி பத்து மிஸ்டு கால் இருந்தது. ஃபோன் சைலன்ட்ல இருந்ததால் ஷியாம் கவனிக்கவில்லை.

மறுபடியும் காவேரி நியூ நம்பர் காலிங் என்று வந்தது.

ஃபோனை எடுத்து காதில் வைத்தான் ஷியாம்.

"ஹலோ" என்று ஆண் குரல் கேட்டது.

"சொல்லு காவேரி" என்று சொல்ல வாய் எடுத்தவன் அந்தப் பக்கத்திலிருந்து ஆண் குரல் ஹலோ என்று கேட்கவும் அமைதியாக இருந்தான்.

" ஹலோ ஷிவானி" என்னாச்சு உனக்கு நேத்துல இருந்து ஃபோன் பண்றேன் ஏன் எடுக்கவே இல்ல? சரி ஷியாமுக்கு கால் பண்ணலாம்னு பார்த்தா அவனும் ஃபோனை எடுக்கல. நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சா என்ன? என்று பதட்டத்தில் யார் பேசுகிறார்கள் என்று கூடத் தெரியாமல் பேசினான் ரோஹித்.

" நான் ஷியாம் பேசுறேன்"

" மச்சான் நீயா? அது வந்து நான். " என்று திக்கி திணறி பேசியவன் இடம்.

" நான் லொகேஷன் அனுப்புறேன் அங்க
வந்துரு " என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் ஷியாம்.

ஃபோனை வைத்த ரோஹித் ஷியாமிடமிருந்து ஏவி ஹாஸ்பிடல் என்று லொகேஷன் வந்ததை பார்த்து என்னாச்சு என்று ஒரு நிமிடம் பயந்தான்.
மறுபடியும் ஷியாமிற்கு கால் பண்ணி கேட்கலாமா என்று நினைத்தான். பிறகு நேராகவே போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவசரமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

" மச்சான் என்ன ஆச்சு? யாருக்கு உடம்பு சரியில்லை எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்கீங்க?" என்றான் ரோஹித்.

" வா உன் கிட்ட தனியா பேசணும்" என்று சொல்லி ரோஹித்தை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கேன்டினுக்கு சென்றான். அங்கே ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தான். ரோஹித் அவனுக்கு எதிரே அமர்ந்தான்.


IMG-20241211-WA0010.jpg


"சொல்லு ரோஹித்"

"என்ன மச்சான் சொல்ல சொல்ற?"

" உண்மையை சொல்லு "

" எனக்கு புரியல"

" என் தங்கச்சியை என்னடா பண்ண? "

" என்னடா சொல்ற ஷிவானிக்கு என்ன ஆச்சு? "

" நடிக்காதடா. நான் கொலைவெறியில் இருக்கேன் தயவு செஞ்சு உண்மைய சொல்லிடு"

" சரி சொல்றேன் கேளு. நானும் ஷிவானியும் ஒரு வருஷமா லவ் பண்றோம் "

"வாட்? என்ன புது கதை சொல்ற?"

" ஷிவானி தான் முதலில் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா. எனக்கும் அவளை பிடிக்கும். முதல்ல இதனால நம்ம பிரண்ட்ஷிப் கட்டாயிடுமேன்னு யோசிச்சேன். ஆனா ஷிவானி பிடிவாதமா இருந்தா. என்னால அவளுக்கு ஓகே சொல்லாமல் இருக்க முடியல. "

" இதையெல்லாம் நான் நம்பனும்னு சொல்றியா? "

" நீ நம்பலனா ஷிவானியே கேளு. காவிரி என்ற பெயரில் என் நம்பரை அவதான் அவளோட ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கா. ஒரு ஒரு முறையும் காவிரிக்கு வீட்டில் போய் ஸ்டடி பண்றேன்னு சொல்லி என் கூட தான் வெளியே வந்து இருக்கா. நாங்க போகாத இடமே கிடையாது. என்கிட்ட போட்டோஸ் இருக்கு காட்டவா? "

ரோஹித் சொல்ல சொல்ல ஒன்றும் புரியாமல் விழித்தான் ஷியாம்.

ஷியாமின் கையைப் பிடித்து,

" சாரி ஷியாம் நான் முதலிலேயே உன்கிட்ட சொல்லி இருக்கணும். ஷிவானி தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு சொன்னா "

என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் ஷியாம்.

" நீ நம்பல இல்ல? எனக்கும் ஷிவானிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் உன்னை பத்தி சொல்லவா? அப்போ நீ என்னை நம்புவ" என்றான் ரோஹித்.

என்ன என்பது போல அவனைப் பார்த்தான் ஷியாம்.

" நேற்று நீயும் நந்துவும் கிஸ் பண்ணிக்கிட்டீங்களா? அதுவும் நந்து ஓட வீட்டுல? "

அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான் ஷியாம்.

"இது எப்படி எனக்கு தெரியும்னு தான நினைக்கிற? ஷிவானி தான் சொன்னா" என்றான் ரோஹித்.

" ரோஹித் நேத்து ஃபோன்ல ஷிவானி உன் கிட்ட என்ன எல்லாம் சொன்னா என்பதை எனக்கு கிளியரா சொல்லு " என்றான் ஷியாம்.



தொடரும்....
தேன் மிட்டாய்.





















 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
குற்றவாளியை நெருங்கியாச்சு போல 🧐

யாரு 🧐 யாரு 🧐 யாரு 🧐

திக் திக் திக் 🤔
 
  • Like
Reactions: MK13