• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

"தித்திக்கும் தேன்பாவை " பாகம் 8

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
"தித்திக்கும் தேன்பாவை "
பாகம் 8
IMG-20241119-WA0003.jpg


"நேத்து ஈவினிங் வழக்கம் போல நான் கால் பண்ணி ஷிவானி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்." என்றான் ரோஹித்.

"எத்தனை மணிக்கு?"

" டைம் சரியா தெரியல. ஃபர்ஸ்ட் நான் கால் பண்ணும் போது. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடுறேன் டா என்று சொல்லி வச்சுட்டா"

" அப்புறம் மறுபடி எத்தனை மணிக்கு கால் பண்ணா? "

" என்னாச்சு ஷியாம், எதுக்கு இப்படி எல்லாம் கேள்வி கேக்குற? "

" தயவு செஞ்சு நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு"

" என்னவோ பிரச்சனை என்ன பிரச்சனைன்னு சொல்லு நீ ஏதோ கொலைவெறியில் இருக்கேன்னு சொன்ன. எதுக்கு அப்படி சொன்ன? ஷிவானி எங்கே? ஷிவானிக்கு தான் உடம்பு சரியில்லையா அதுக்கு தான் ஹாஸ்பிடல் வந்து இருக்கியா? "

" நான் உன்னை கேள்வி கேட்டேன் முதலில் அதற்கு பதில் சொல்லு அப்பறமா நீ கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்றேன் "

" மறுபடியும் அவ கால் பண்ணி பேசினா. "

"என்ன சொன்னா?"

அவர்கள் இருவரும் பேசியதை அப்படியே கூறினான்.

" பாட்டி இறந்துட்டாங்க டா, அதனால அப்பா அம்மா ஊருக்கு போயிருக்காங்க , நந்தினி சரியான பயந்தாங்கோலில? அதனால ஷியாமை அவ கூட துணைக்கு விட்டுட்டு வந்து இருக்கேன். வீட்ல கொஞ்சம் வேலை இருந்தது அதெல்லாம் முடிச்சுட்டேன். அதனாலதான் நீ முதல்ல கால் பண்ணும் போது நானே கொஞ்ச நேரம் கழிச்சு பண்றேன்னு சொன்னேன் " என்றாள் ஷிவானி.

" அப்ப வேலை எல்லாம் முடிச்சிட்டியா? "

" முடிச்சிட்டேன்டா இப்போ நந்தினி வீட்டுக்கு போக போறேன். நான் போயிட்டு ஷியாமை வீட்டுக்கு அனுப்புவேன். அவன் குளிச்சிட்டு ரெஃப்ரெஷ் ஆயிட்டு அதுக்கு அப்புறமா அங்க வருவான்"

"ஓ, ஓகே. சரி எப்ப தான் நம்மளோட காதல உங்க அண்ணன் கிட்ட சொல்றது?"

" அதுக்கும் ஒரு கால நேரம் வரும். அப்ப சொல்லிக்கலாம். "

"எப்ப வரும்?"

" எனக்கு எப்படிடா தெரியும்? "

" எந்த காலம் வரணும்னு சொல்ற? "

" ஷியாமுக்கும் லவ் வரும் இல்ல? அப்ப நம்மளோட லவ்வை சொன்னா கண்டிப்பா ஏத்துப்பான்."

" ஒருவேளை உங்க அண்ணனுக்கு லவ்வே வரலைன்னா? "

" லவ் வராம எல்லாம் இருக்காது"

" ஒருவேளை "

" நம்ம காலேஜ் முடிச்சிட்டு, லைஃப்ல செட்டில் ஆகுற வரைக்கும் ஷியாமுக்கு லவ் வரலைன்னா
அப்போ நானே நம்ம லவ்வ பத்தி சொல்லிடறேன்"

" உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்ன? "

" சரி, ஃபோனை வைக்கிறேன். பை"

" எனக்குத் தேன் குடிக்கணும் போல இருக்குடி "

_b68e1f6a-99e2-407f-a6ed-71c12ad69809.jpeg


" லயன் பிராண்ட் ஹனி வேணுமா இல்ல டாபர் ஹனி வேணுமா? "

" என்ன கிண்டலா நான் ஹனீனு எதை சொல்லுவேன்னு தெரியாதா? "

" தெரியும் தெரியும் " என்று வெட்கப்பட்டு கொண்டே சிரித்தாள் ஷிவானி.

_9df49e85-7def-49d2-b7b5-3f4f8cc90001.jpeg


" இப்ப நெனச்சா கூட என் வாய் எல்லாம் இனிக்குதடி அன்னைக்கு நம்ம கொடுத்துகிட்ட கிஸ்"

" போதும் போதும், அதுவே ஜஸ்ட் மிஸ். நல்லவேளை நம்மள நந்தினி பார்க்கவில்லை. பார்த்திருந்தா அவ்வளவுதான். என் கூட சண்டை போடுறது மட்டும் இல்லாம. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பா"

" அதுக்கு தான் நீயே சொல்லிடுன்னு சொல்றேன் "

" சரிடா நான் ஃபோனை வைக்கிறேன். அதையெல்லாம் அப்புறம் பேசலாம்"

" இருடி பேசிக்கிட்டே இருக்கேன் அதுக்குள்ள ஏன் வைக்கிற என்னோட "தித்திக்கும் தேன்பாவையே"

" என்னது தித்திக்கும் தேன்பாவை யா?
அப்படின்னா?"

" தமிழ்ல தானடி சொன்னேன். அதுக்கு ஏன் அர்த்தம் கேக்குற? "

" ரொம்ப ஓவரா பண்ணாத சொல்லு"

" இனிமையான தேன் போல சுவையுடைய இதழை பெற்ற என்னுடைய பாவை நீ, எப்படி? "

" போதும் போதும், நான் கிளம்புறேன் நந்தினி வீட்டுக்கு " என்று சொல்லி ஃபோனை வைத்தாலும் மனதிற்குள் ரோஹித்தையே நினைத்துக் கொண்டு வெட்கத்துடன் சிரித்தபடி நந்தினியின் வீட்டிற்கு சென்றாள் ஷிவானி.

அவர்கள் இருவரும் பர்சனலாக பேசியதை தவிர மற்றது அனைத்தையும் ஷியாமிடம் சொல்லி முடித்தான் ரோஹித்.

" மறுபடியும் ஷிவானி உனக்கு ஃபோன் பண்ணலையா? " என்றான் ஷியாம்.

" பண்ணினா, ஃபோனை வச்சிட்டு போன பத்து நிமிஷத்துக்கு எல்லாம் மறுபடியும் பண்ணினா. "

" என்ன சொன்னா? "

" ஹலோ ரோஹித்"

" என்னடி அதுக்குள்ள மறுபடியும் கால் பண்ற? "

" உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா?"

"என்ன?"

" ஷியாமும் நந்தினியும் லவ் பண்றாங்க"

" வாட் இது எப்ப நடந்தது? "

" எனக்குமே அதெல்லாம் ஒன்னும் தெரியல டா. இப்பதான் நான் போய் பார்த்தேன் ரெண்டு பேரும் லிப் டு லிப் கொடுத்து கிட்டு
இருக்காங்க. "

" ஒரு வருஷமா லவ் பண்ற நம்ம ரெண்டு பேருமே போன மாசம் தான் முதல் முறையா கிஸ் பண்ணினோம். ஷியாம் எவ்ளோ ஃபாஸ்டா இருக்கான்னு பாரு, நீயும் இருக்கியே? "

" இரு இரு நீ இப்ப என்ன சொல்ல வர?. "

" நீ உங்க அண்ணா அளவுக்கு ஃபாஸ்ட் இல்லைன்னு சொல்றேன் "

" அடுத்த முறை நான் கொடுக்கும்போது என்னோட திறமையை நீ தெரிஞ்சுப்ப"

" அப்படின்னா நான் இப்பவே வரவா? "

" இல்ல இல்ல, வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு தான் "

" அச்சச்சோ அதுக்கு இன்னும் பத்து நாள் இருக்கே? "

" காத்திரு கண்ணாளா" என்று சொல்லி சிரித்தாள் ஷிவானி.

" ஏய் ஃபோன்லையாவது கொடு டி"

" அதெல்லாம் முடியாது . சரி சரி ஃபோன வை வந்துட்டாங்க போல. வெளிய சத்தம் கேட்குது. "

" ஓகே பை தேனு" என்று சொல்லி ஃபோனை வைத்தான் ரோஹித்.

சிரித்தபடி ஃபோனை வைத்தாள் ஷிவானி.

"இதுதான் நேத்து நடந்தது. இப்போதாவது சொல்லு என்ன ஆச்சு? ஷிவானி எங்கே?" என்றான் ரோஹித். இப்போதும் அவர்கள் பர்சனலாக பேசியதை ஷியாமிடம் சொல்லவில்லை ரோஹித்.

"ஷிவானிக்கு அடிபட்டு இருக்கு "

" எப்படி? என்ன ஆச்சு?"

" அதெல்லாம் என்னை எதுவும் இப்ப கேட்காத "

எதிரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து அவன் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டான்.

IMG-20241211-WA0010.jpg


" ஷியாம் சொல்லு, என்ன நடந்துச்சு என்னோட ஷிவானிக்கு"

அவன் கையைப் பிடித்து உதறித் தள்ளி,

" யாரோ வீட்டுக்குள்ள பூந்து இருக்காங்க, திருட வந்தவங்களான்னு தெரியல. வீட்ல எந்த பணம் நகையும் இல்லாததால கோவத்துல என் தங்கச்சி தலையில அடிச்சிருக்காங்க. இப்ப அவ மயக்கத்துல இருக்கா. மயக்கம் தெளிஞ்சாதான் யாருன்னு தெரியும் "

" மறுபடியும் பொய் சொல்ற ஷியாம். என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லு "

" இதுதான் நடந்துச்சு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் ஷியாம்.

"ஒரு நிமிஷம் ஷியாம்" என்று கத்தினான் ரோஹித்.

திரும்பிப் பார்த்தான் ஷியாம்.

" என்னை ஒரே ஒரு முறை ஷிவானியை பார்க்க அலோ பண்ணு ப்ளீஸ் " என்று கண்கள் கலங்க கேட்டான்.

அவன் கலங்கிய கண்களை பார்த்த உடனே ஷியாமிற்கு நன்றாகவே தெரிந்தது அவன் எந்த அளவிற்கு ஷிவானியை லவ் செய்கிறான் என்று. அவ ஐ சி யூ வில் இருக்கா. இப்போ பார்க்க அலோ பண்ண மாட்டாங்க. இப்போ விசிட்டிங் ஹவர் முடிஞ்சிடுச்சு. நாளை காலையில 11 மணிக்கு விசிட்டிங் ஹவ்வர்ஸ்ல சொல்றேன் அப்போ வந்து பார்த்துட்டு போ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெயிட்டிங் ஹாலிற்கு சென்றான் ஷியாம்.

கலங்கிய கண்களுடன் கிளம்பினான் ரோஹித்.
ஷியாம் தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறான் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டான். அவனுடைய வீட்டிற்கு போகாமல் நேராக நந்தினியை பார்க்க சென்றான்.

ஈவினிங் தன் ஃபோனில் பங்க்ஷனில் எடுத்த சில ஃபோட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

அப்போது ரோஹித் காலிங் என்று வந்தது.

"ரோஹித்தா? இவர் எதுக்கு கால் பண்றாரு" என்று நினைத்தபடி

"ஹலோ சொல்லுங்க ரோஹித் "

" நந்தினி வீட்ல இருக்கீங்களா? "

" நீங்கதான் என்னோட சீனியர் நான் உங்கள மரியாதையோட சொல்லலாம், நான் உங்கள விட ஒன் இயர் ஜூனியர் தானே வா போன்னு சொல்லுங்க ரோஹித் "

" நான் உங்க வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன். இன்ஃபாக்ட் ஷியாம் ஓட வீட்டு பக்கத்துல இருக்கேன்"

" என்னாச்சு என்ன விஷயம்? "

" கொஞ்சம் இங்க வரிங்களா? உங்க கிட்ட பேசணும் "

" ஆனா"

" ப்ளீஸ் நந்தினி"

நந்தினிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே ஷியாமிற்கு கால் செய்தாள். நாட் ரீச்சபிள் என்று வந்தது.
அவன் இதற்கு மேல் தான் வரப்போகிறேன் என்று கால் செய்திருந்தால் எதையாவது யோசித்து வைத்திருப்பாள். ஏற்கனவே வந்து காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதால் என்ன செய்வது என்று புரியாமல்
இதோ வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.

"அம்மா நான் தோ பக்கத்துல கடைக்கு போயிட்டு வந்துடறேன்" என்றாள் நந்தினி.

" என்னடி வாங்க போற எந்த கடைக்கு இந்த நேரத்தில் போய் போற? " என்றார் கௌசல்யா.

" அம்மா நோட்டு புக்கு, அப்புறம் கொஞ்சம் ஸ்டேஷனரி ஐடெம்ஸ் எல்லாம் வாங்கணும் மா, செமஸ்டர் எக்ஸாம் வருது இல்ல? "

" வண்டியை எடுத்துக் கொண்டு போறியா? "

அவளுடைய அம்மா அப்படி கேட்ட உடன் தான் வண்டி எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. இல்லையென்றால் சந்தேகம் வரும் என்று நினைத்துக் கொண்டு.

" ஆமாம் பின்ன என்ன நடந்தா போக முடியும் ஒரு கிலோமீட்டர்? " , என்ற சொல்லி பைக் சாவியை எடுத்துக்கொண்டு ஹெல்மெட்டையும் எடுத்துக்கொண்டு வண்டியை ஒட்டி பின்பக்க தெரு வழியாக ஷியாம் வீட்டிற்கு வந்தாள்.

யாரும் பார்க்காமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து வந்து

" என்ன ரோஹித் சீக்கிரம் சொல்லுங்க? " என்றாள் நந்தினி.

" என்னோட ஷிவானிக்கு என்ன ஆச்சு? "

" என்ன சொல்றீங்க ரோஹித், எனக்கு ஒண்ணுமே புரியல? உங்க ஷிவானியா? "

" ஆமாம் நானும் ஷிவானியும் ஒரு வருஷமா காதலிக்கிறோம்"

" அப்படியா? எனக்கு தெரியாதே. ஷிவானி என்கிட்ட இதை பத்தி ஒன்னுமே சொன்னது இல்லையே? "

" அதெல்லாம் விடுங்க நந்தினி, ஷிவானிக்கு என்ன ஆச்சு? "

" அது மாடியில் இருந்து துணி எடுத்துட்டு வந்தா போல அப்ப தெரியாமல் தடுக்க கீழே விழுந்துட்டான்னு நினைக்கிறேன் தலையில் அடிபட்டு இருக்கு ஹாஸ்பிடல் இருக்கா. மத்தபடி பயப்படுவதற்கெல்லாம் ஒன்னும் இல்ல. சீக்கிரமா ரெக்கவர் ஆயிடுவான்னு டாக்டர் சொன்னாரு "

பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்.

" என்ன ரோஹித் நான் தான் சொல்ற இல்ல, அவ்வளவுதான். இதுக்கு மேல உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா நீங்க ஷியாமையே கேட்டுக்கோங்க. ஷியாம் உங்க ஃபிரண்டு தானே "

"அவனைப் பார்த்துவிட்டு தான் வரேன். அவளை யாரோ திருட வந்தவன் தலைல அடிச்சிட்டான்னு ஷியாம் சொன்னான். ஆனால் எனக்கு அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லை. எதையோ மறைக்கிறான் என்று மட்டும் புரிகிறது. நீங்களாவது உண்மையை சொல்லுங்க நந்தினி"

"ஷியாமையே கேளுங்க ரோஹித் " என்று திரும்பி செல்ல நினைத்தவளை.

" ஒரு நிமிஷம் நந்தினி " என்றான் ரோஹித்.

திரும்பி நின்றாள் நந்தினி.

" தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க நந்தினி "
என்று கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

_959bec27-b095-41da-8d7a-ba0383a53dee.jpeg


நந்தினிக்கு என்னவோ போல இருந்தது.

" சரி நான் உண்மைய சொல்றேன். நான் சொன்ன அப்புறமும் நீங்க இவ்ளோ நாளா எப்படி ஷிவானி லவ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களோ அதே மாதிரி இதுக்கு மேலயும் லவ் பண்ணுவீங்களா? "

" சத்தியமா, என் உயிர் இருக்கிற வரைக்கும் " என்றான் ரோஹித்.

" இருங்க எதுக்கும் நான் ஒரு முறை ஷியாம் கிட்ட கால் பண்ணி கேட்டுக்குறேன் சொல்லலாமான்னு? அவன் யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்கான் "

அவளிடம் இருந்து ஃபோனை வாங்கிக் கொண்டு,

"ப்ளீஸ் நந்தினி," என்று அவள் காலை பிடிக்காத குறையாக கேட்டான் ரோஹித்.

அதற்கு மேல் மறுக்க முடியாததாலும். வேறு வழி இல்லாமலும் நந்தினி பேச ஆரம்பித்தாள்.

" ரோஹித், இந்த விஷயம் நான் உங்ககிட்ட சொன்னேன்னு யார்கிட்டயும் காட்டிக்காதீங்க.
இப்ப கூட நான் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா.
நீங்க கெஞ்சி கேட்கிறதுனால இல்ல.

நாளைக்கு நீங்க ஷிவானியை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னா இந்த விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரியணும். இல்லனா பின்னாடி உங்க வாழ்க்கையில பிரச்சனை வரும். அதனாலதான் சொல்றேன்.

இதனால எனக்கும் ஷியாமிற்கும் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை ஷிவானி நல்லா இருந்தா போதும் " என்று ஆரம்பித்து அவளும் ஷியாமும் ஷிவானியை பார்த்தது முதல் டாக்டர் கூறியதாக ஷியாம் கூறியதும். ஷிவானியிடம் ஷியாம் பேசியது என்று அனைத்து விஷயங்களையும் கூறி முடித்தாள் நந்தினி.

இதைக் கேட்டதும் ரோஹித்தின் கண்கள் சிவந்தன. பதில் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

"ரோஹித் ரோஹித்" என்று கூப்பிட்டாள் நந்தினி.

அவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
இப்போது ஷியாம் கிட்ட நான் என்ன சொல்றது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் சுற்றம் முற்றும் பார்த்தாள் தான் தனியாக அங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றது புரிந்த அடுத்த நொடி வேகமாக தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேறு பக்கமாக வீட்டை சுற்றி விட்டு தன் வீட்டிற்கு வந்தாள்.

வெறும் கையுடன் வந்த தன் மகளை பார்த்த கௌசல்யா,

" என்னடி என்னென்னமோ வாங்கணும்னு சொல்லிட்டு போன, ஆனா ஒன்னும் வாங்காம திரும்பி வர? "

அப்போது தான் அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றது ஞாபகம் வந்தது.
நாளைக்கு நான் காலேஜ் போகும்போது வாங்கிக்கிறேன் மா.

" இப்ப போனியே ஏன் வாங்காம வந்த? "

ஐயோ இந்த அம்மா விடமாட்டாங்க போல இருக்கே என்று நினைத்துக் கொண்டு

" சண்டே இல்ல கடை மூடி இருக்கு போதுமா? "
என்ற சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றாள் நந்தினி.

"என்னாச்சு இவளுக்கு, ஏன் வாங்கிட்டு வரலன்னு தானே கேட்டோம் அதுக்கு எதுக்கு இவ்ளோ கோபப்படுறா? " என்று நினைத்துக் கொண்டே தன் வேலையை பார்க்க கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.



தொடரும்.....
தேன் மிட்டாய்.











 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சஸ்பென்ஸ்ஸை மெயின்டெயின் பண்றீங்க 🧐
 
  • Like
Reactions: MK13

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
அருமை அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️ரோஹித் எப்படி ஹாண்டில் பண்ணுவானோ 🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில எல்லாமே தெரிஞ்சிடும் சிஸ்டர்.
தேங்க் யூ ஸோ மச்🙏🏻😊