"தித்திக்கும் தேன்பாவை "
பாகம் 9
ஹாஸ்பிடலில் இருந்த ஷியாம் தன் தங்கையின் ஃபோனை எடுத்துப் பார்த்தான்.
ரோஹித் சொன்னது உண்மைதான். இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ மற்றும் வாட்ஸ் அப் சேட் இரண்டிலும் தெரிந்தது. முழுமையாக படிக்கவில்லை என்றாலும் மேலோட்டமாக பார்த்தான்.
ரோஹித் ஷியாமிற்கு கால் செய்தான்.
" ஹலோ" என்று ரோஹித் சொல்லும் போது
வழக்கம்போல சொல்லுடா மச்சான் என்று பேச வந்தது ஷியாமிற்கு. ஆனால் அமைதியாக
" சொல்லுடா" என்று மட்டும் சொன்னான்.
" நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
" நான்தான் நாளை காலையில விசிட்டிங் டைம்ல உன்னை வந்து பார்க்க சொன்னேன் இல்ல? அப்புறம் இப்ப என்ன? "
" இல்ல மச்சி, நான் உன்கிட்ட பேசியே ஆகணும்,
நான் அங்க வரவா இல்ல நான் சொல்ற இடத்துக்கு நீ வரியா? "
ஒரு நிமிடம் யோசித்தவன்.
"சரி நானே வரேன்" என்றான்.
" நான் லொகேஷன் அனுப்புறேன் இன்னொரு அரை மணி நேரத்துல வந்துடு "
"எதுக்குடா?" என்று அவன் கேட்பதற்குள் ஃபோனை கட் செய்தான் ரோஹித்.
மிச் என்று சொல்லிக்கொண்டே நந்தினிக்கு கால் செய்தான். தான் வரும் வரை ஹாஸ்பிடலுக்கு வந்து ஷிவானியை பார்த்துக் கொள்வாளா என்று கேட்பதற்காக. ஆனால் அவளுடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
ஃபங்ஷனில் அலைந்ததனால் டயர்ட் ஆகி தூங்கி இருப்பாளோ என்று நினைத்து விட்டு விட்டான்.
பிறகு நர்சி இடமே சென்று,
" சிஸ்டர் ஒரு முக்கியமான வேலையா வெளியே போக வேண்டி இருக்கு. என்னோட தங்கச்சிய கொஞ்சம் பார்துக்கறீங்களா? " என்றான் ஷியாம்.
" சார் டூ ஹவர்ஸ்ல என்னோட டியூட்டி முடிந்துவிடும். அதுக்குள்ள வந்துருவீங்களா? "
" கண்டிப்பா சிஸ்டர் அதுக்குள்ள வந்துடறேன். பேமென்ட் இன்னைக்கு ஒன்னு பண்ணிட்டேன். மெடிசின்ஸ் மட்டும் ஏதாவது வாங்கி தரணும்னா நீங்க வாங்கிட்டு சொன்னீங்கன்னா நான் ஜிபே கூட பண்ணிடறேன்" என்று முந்தைய நாள் கேட்டது போலவே கேட்டான்.
" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார் அப்படி வேணும்னா நாங்க வாங்கி கொடுத்துடுவோம் ஃபைனல் பில்லுல உங்களுக்கு ஆட் பண்ணிடுவோம் "
" ஓகே சிஸ்டர் தேங்க்யூ சோ மச் " என்று பேசிவிட்டு தன் ஃபோனை எடுத்து பார்த்த போது லொகேஷன் அனுப்பி இருந்தான் ரோஹித்.
பத்து நிமிடத்தில் அந்த பார்க்கிற்கு சென்றான் ஷியாம்.
யாரும் இல்லாத இடமாக பார்த்து அங்கே ரோஹித் வெயிட் செய்து கொண்டு இருந்தான்.
" என்ன விஷயம்னு சொல்லு. ஷிவானியை ஹாஸ்பிடல்ல நான் தனியா விட்டுட்டு வந்து இருக்கேன் "
" ஷிவானியை யார் அப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் "
ரோஹித் அப்படி சொன்னதும் ஷியாமின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இருந்தாலும் பொறுமையாக.
" என்ன உளர்ற? "
" அவளை யார் ரேப் பண்ணினாங்க என்று எனக்கு தெரியும் என்று சொல்ல வரேன்"
அவனுடைய சட்டையை பிடித்து உளுக்கி
"யார் உனக்கு இதை எல்லாம் சொன்னது"
" யார் என்கிட்ட சொன்னது உனக்கு தெரியனுமா? ஷிவானியை அப்படி பண்ணினது யாருன்னு உனக்கு தெரியனுமா? "
" உன்கிட்ட சொன்னது நந்தினி தான்னு எனக்கு தெரியும். ஏன்னா எங்க மூணு பேரை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஷிவானி சொல்லக்கூடிய நிலைமையில் இல்ல. நான் சொல்லல ஸோ அவ தான் சொல்லிருப்பான்னு எனக்கு தெரியும். அவளுக்கு அப்புறம் இருக்கு.
அவன் யாருன்னு சொல்லுடா? " என்று கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கேட்டான் ஷியாம்.
"நான் சொல்றேன், ஆனா அவனை தண்டிக்கிற உரிமையை நீ எனக்கு தான் தரணும்."
" சரி யாருன்னு சொல்லு? "
"கிஷோர் "
" கிஷோரா?"
" ஆமாம், எந்த கிஷோரோட ஷிவானிக்கு பிரச்சனை இருந்துச்சோ அவனே தான்"
"அவனா? அவன் ஜெயில்ல தான இருக்கான் "
"போன வாரம் தான் ஜெயில்ல இருந்து வந்து இருக்கான்."
" அவன்தான் உனக்கு எப்படி தெரியும்? "
ரோஹித் சொல்ல சொல்ல ஷியாம் அதிர்ச்சியடைந்தான்.
" எங்க இருக்கான் அவன்? அவனை நான் கொன்னுடறேன்" என்று ஆத்திரப்பட்டான் ஷியாம்.
" நான் அவனை பழிவாங்க சரியான ஐடியா வச்சிருக்கேன். இதனால நமக்கு பிரச்சனை வராமல் இருக்கும். ஆனா அதுக்கு முன்னாடி நீ ஒன்னு தெரிஞ்சுக்கணும் "
" என்ன அது, என்ன ஐடியா? "
ரோஹித் சொல்ல சொல்ல ஷியாமின் கண்கள் விரிந்தது.
சரி உன்னோட பிளான் படியே நாளைக்கு அந்த கிஷோர் கதையை முடிச்சிடலாம்.
"ஹாஸ்பிடல்ல யாரு ஷிவானியை பார்த்துப்பாங்க? "
" அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நான் அரேஞ்ச் பண்ணிக்கிறேன் "
" சரி நான் கிளம்புறேன் " என்றான் ரோஹித்.
" சரி டா மச்சான் " என்றான் ஷியாம்.
" இதை நீ வாழ்நாள் முழுவதும் உரிமையோடு கூப்பிடனும்னு நினைக்கிறேன்"
" ஆனா"
" நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் ஷிவானியை இப்பவும் மனசார லவ் பண்றேன். இதுவே கல்யாணத்துக்கு அப்புறம் நடந்திருந்தா நான் அவளை விட்டுட்டு இருப்பேனா என்ன? "
" தேங்க்ஸ் மச்சி" என்ற கண்கள் கலங்க அவனை கட்டிக் கொண்டான் ஷியாம்.
" ஆனா ஒன்னு, நீதான் ஷிவானி கிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும்"
" கண்டிப்பா மச்சி. அவ மனசளவுலேயும் கொஞ்சம் சரியான உடனே நான் பேசுறேன்"
" தேங்க்ஸ் டா நாளைக்கு எங்க வரணும் எப்போ வரணும் என்ன பண்ணனும்னு நான் உனக்கு மெசேஜ் பண்றேன் "
" சரி மச்சி பை " என்று சொல்லிவிட்டு இருவரும் அவர்கள் வழி சென்றனர்.
ஹாஸ்பிடலுக்கு திரும்ப வரும்போது,
கிஷோருடன் ஷிவானிக்கு ஏற்பட்ட பிரச்சனையை நினைத்துப் பார்த்தான் ஷியாம்.
கிஷோர் ஒரு கிட்டாரிஸ்ட். எல்லா வருடமும் காலேஜ் கல்ச்சுரல்ஸ் டேவிலும் அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். நிறைய பேருக்கு தன் வீட்டிலும் கிட்டார் சொல்லி கொடுப்பான்.
கடந்த வருடம் கல்ச்சுரல்ஸ் டே அன்று அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் முடிந்த பிறகு தன்னுடைய நண்பர்களுடன் கடைசி ரோவில் அமர்ந்து தண்ணி அடித்தான்.
அப்போது அந்த வழியே சென்ற சில பெண்களை கிண்டல் செய்தான். நிறைய பேர் திட்டி விட்டு சென்றனர். அப்போது யாருக்கோ கால் செய்து தன் வீட்டில் இருக்கும் வேறு ஒரு கிட்டாரை எடுத்து வரச் சொன்னான்.
பிறகு தன் நண்பர்களிடம் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.
பின் வாசல் வழியாக காலேஜுக்கு வரச் சொல்லி சொல்லியிருந்தான்.
அங்கே வந்து நின்று கொண்டு இருந்தாள் ஒரு சின்ன பெண்.
"சார், இந்தாங்க சார்" என்று கிஷோரிடம் ஒரு கிட்டாரை கொடுத்தாள். அவனிடம் மியூசிக் டியூஷனில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு சின்ன பெண்.
"உன் கிட்ட பேசணும் வா " என்று சொல்லி அவள் தோளில் கையை போட்டு யாரும் இல்லாத பக்கமாக அழைத்துச் செல்லப் பார்த்தான்.
அவன் நிதானமாக இல்லை என்று தெரிந்து கொண்ட அந்த பெண்,
" இல்ல சார், அம்மா வீட்டில் தேடுவாங்க நான் கிளம்பறேன் "
" பத்து நிமிஷத்துல போயிடலாம் வா "
" இல்ல சார் வேண்டாம்" என்று சொல்லி அவன் கையை தன் தோளில் இருந்து எடுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட பார்த்தாள்.
ஆனால் கிஷோர் அவளை பிடித்து அவள் வாயை பொத்தி இருட்டு பக்கமாக இழுத்துச் சென்றான்.
காலேஜ் கல்ச்சுரல்ஸ் சத்தத்தில் அந்தச் சின்ன பெண் அலறியது யாருக்கும் கேட்கவில்லை.
எதேச்சையாக அங்கு பாத்ரூம் செல்ல வந்த ஷிவானிக்கு அந்த சின்ன பெண்ணின் குரல் கேட்டு ஓடிச் சென்று அவனை இரண்டு அடி அடித்து அந்தப் பெண்ணை காப்பாற்றியது மட்டும் இல்லாமல் கிஷோரை போலீசில் பிடித்துக் கொடுத்தாள். அவனுக்கு ஆறு மாதக்காலம் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் காலேஜில் இருந்தும் டிஸ்மிஸ் செய்தனர்.
அந்த வஞ்சத்தில் தான் அவன் ஷிவானியை அப்படி செய்திருக்கிறான்.
நினைக்க நினைக்க ஆத்திரமும் கோபமும் ஷியாமின் கண்களில் தாண்டவம் ஆடியது.
மறுநாள் ரோஹித்தின் காலிற்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் ஷியாம்.
நந்தினிக்கு கால் செய்து,
"நந்து, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?"
" நானே உனக்கு நேத்துல இருந்து கால் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் டா.
அது வந்து"
" அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வர வரைக்கும் நீ ஹாஸ்பிடல் வந்து ஷிவானியை பார்த்துக்கிறியா? "
" இதையெல்லாம் நீ கேட்கணுமாடா. கண்டிப்பா பாத்துக்குறேன் "
" ஓகே தேங்க் யூ நந்து " என்று சொல்லி ஃபோனை வைக்க வந்தவனிடம்.
"ஷியாம் "
" சொல்லு"
" நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு, அப்பதான் அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் "
"ஹூம்,"
" சரி நான் இப்பவே வரேன் வெயிட் பண்ணு "
"இல்ல நந்து, நீ வா நான் அதுக்குள்ள கிளம்பிடுவேன். நீ வர வரைக்கும் நர்ஸ் பார்த்துக்க சொல்லிட்டு போறேன் "
" அப்படி என்ன முக்கியமான வேலை? "
" அதான் வந்து சொல்றேன்னு சொல்றேன்ல? "
" ஓகேடா டேக் கேர், பை." என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு நந்தினி தன் அம்மாவிடம்.
" அம்மா, ஷிவானியும் ஷியாமும் ஊருக்கு போகல. அவளுக்கு தலையில அடிபட்டுடுச்சு. ஹாஸ்பிடல்ல இருக்கா. நிச்சயதார்த்த வேலையில நம்ம பிஸியா இருக்கும்போது அதை சொல்லி உங்கள டென்ஷன் பண்ண வேண்டாம்னா ஷியாம் என்கிட்ட சொன்னான்"
"என்னடி லூசா நீ, அவன் சொன்னான் என்று நீ என்கிட்ட சொல்லாம விட்டுடுவியா?. நாளைக்கு சிவகாமி அண்ணி வந்து என்கிட்ட கேட்டாங்கன்னா நான் என்ன சொல்றது? இந்த மாதிரி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கே."
" சரி மா உங்க பஞ்சாயத்து எல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க. இப்ப ஷியாமுக்கு எங்கேயோ வெளிய போகனுமாம் அதனால கொஞ்ச நேரம் ஹாஸ்பிடல் வந்து என்னை பார்த்துக்க சொல்லி இருக்கான். நான் போயிட்டு ஈவினிங் வந்துடறேன் "
" ஏய் நில்லுடி, நானும் வரேன் "
"வேண்டாமா, நீங்க வீட்டுக்கு வந்த அப்புறம் பாத்துக்கோங்க. உங்க கிட்ட சொல்லிட்டேன்னு தெரிஞ்சா அவன் கோபப்படுவான். தகவலை அப்பாகிட்ட மட்டும் சொல்லிடுங்க. "
என்ற சொல்லிவிட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி.
நந்தினி ஹாஸ்பிடல் வருவதற்குள்,
அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஷியாம்.
தன் பைக்கை ஹாஸ்பிடலிலேயே வைத்து விட்டு அங்கிருந்து ஆட்டோ புக் செய்து ரோஹித் வீட்டிற்கு சென்றான்.
ஷியாமும் ரோஹித்தும் திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கும் ஜவ்வாது மலைக்கு சென்றனர்.
அங்குதான் கிஷோர் இருப்பதாக ரோஹித்திற்கு தகவல் கிடைத்தது. ஏதோ சாங் கம்போசிங் காக ஆல்பம் தயார் செய்ய அங்கு சென்று இருப்பதாக அவனுடைய ஃபிரண்டுடைய ஃபிரண்டுடைய ஃபிரண்டின் மூலமாக தெரிந்து கொண்டான்.
ரோஹித்தின் பள்ளி நண்பனின் புல்லட் பைக் வாங்கி அதிலேயே இருவரும் சென்றனர். இருவரும் தங்களுடைய ஃபோனை சைலன்டில் போட்டு ரோஹித் தன் வீட்டிலேயும் ஷியாம் ஹாஸ்பிடலில் இருக்கும் தன்னுடைய பைக்கிலும் வைத்துவிட்டு வந்தனர்.
அங்கே இருக்கும் ஹோம் ஸ்டேவில் அவன் தங்கி இருப்பதாக தெரிந்தது.
கிஷோரும் அந்த இடத்திற்கு பைக்கிலேயே வந்திருந்தான்.
தான் வெளியே செல்வதாகவும். மதியம் தனக்கு லஞ்ச் வேண்டாம் இரவு கோழி சமைத்து வைக்குமாறு அந்த ஹோம் ஸ்டே குக்கிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
தூரமாக நின்று அவனை கண்காணித்து கொண்டிருந்த ஷியாமும் ரோஹித்தும் அவனை ஃபாலோ செய்தனர்.
மலை உச்சி வியூ பாயிண்ட்டில் வண்டியை நிறுத்திவிட்டு தன்னிடம் இருக்கும் கஞ்சாவை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பாறையில் அமர்ந்து சுற்றும் மற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அந்தப் பொடியை தன் மூக்கினுள் சுவாசித்தான்.
வெகு தூரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவன் இருக்கும் இடத்திற்கு மெதுவாக நடந்து வந்தனர் ஷியாம் மற்றும் ரோஹித்.
போதை மயக்கத்தில் இருந்ததால் முதலில் யார் இவர்கள் என்று தெரியாமல்,
"ப்ரோ என்கிட்ட ஒரு பாக்கெட் இருக்கு உங்களுக்கு வேணுமா?" என்று கேட்டான் கிஷோர்.
வேகமாக சென்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் ஷியாம். சற்றே மயக்கம் தெளிந்தவன் இருவரையும் அடையாளம் தெரிந்து கொண்டு அங்கிருந்து ஓட பார்த்தான்.
ரோஹித் அவனைப் பிடித்துக் கொள்ள அவனை சரமாரியாக அடித்தான் ஷியாம்.
" போதும் மச்சி " என்றான் ரோஹித்.
" இவனையெல்லாம் உயிரோடவே விடக்கூடாது "
என்றான் ஷியாம்.
" ஒரு நிமிஷம் இவனை நீ பிடி " என்றான் ரோஹித்.
" என்னடா பண்ணப் போற? நீ அடிக்க போறியா? சொல்லு அப்பதான் நான் பிடிப்பேன். "
" ஆமாண்டா புடி " என்று சொல்லிவிட்டு கீழே இருந்த பெரிய பாறை ஒன்றை எடுத்து அவனுடைய ஆணுறுப்பை சிதைத்தான் ரோஹித்.
வலி தாங்காமல் கத்தினான் கிஷோர்.
" என் ஷிவானி எவ்வளவு துடிச்சிருப்பா? இந்த வலியோடவே சாகு டா " என்றான் ரோஹித்.
ஷியாமிற்கும் ஷிவானியை நினைத்து கண்கள் கலங்கியது.
ரோஹித்தும் ஷியாமும் கையில் கிளவுஸ் போட்டு இருந்ததால் எந்த கைரேகையும் பதியவில்லை. அவர்கள் இருவரும் அவனுடைய பைக்கை பாறை மீது இடித்து ஆக்சிடென்ட் ஆனது போல செய்துவிட்டனர். மேலும் அவன் பாறையில் போய் விழுந்து தலையிலும் அவனுடைய உறுப்பிலும் அடி பட்டது போல செட் செய்தனர்.
" ஒருவேளை இவன் பிழைத்துக்கொண்டால் என்ன பண்றது? " என்றான் ஷியாம்.
" கண்டிப்பா பிழைக்க மாட்டான். எதுக்கும் நம்ம ஒரு 20 நிமிஷம் கழிச்சு போகலாம் "
" அது என்ன 20 நிமிஷம் "
" அவனுடைய நரம்பை நசுக்கி விட்டேன். அதனால் நரம்பு அறுபட்டு ரத்தம் வழிகிறது. அவன் இன்னும் கால் மணி நேரத்தில் துடித்துடிச்சி சாவான் "
பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள் ரோஹித் மற்றும் ஷியாம்.
ரோஹித் சொன்னது போலவே 20 நிமிடத்தில் உயிரிழந்தான் கிஷோர்.
"என் வேலை முடிஞ்சிடுச்சு உன் வேலை தான் பாக்கி இருக்கு" என்றான் ரோஹித்.
" நானும் இன்னைக்கு ராத்திரி குள்ள முடிச்சிருவேன். ஷிவானி கிட்ட நான் பேசுறேன்" என்றான் ஷியாம்.
ஷியாமை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விட்டான் ரோஹித்.
"ஓகே டா பை, உன்னுடைய காலுக்காக காத்திருப்பேன் " என்றான் ரோஹித்.
" சரிடா மச்சான், பை" என்றான் ஷியாம்.
ரோஹித் கிளம்பி சென்றதும், ஷியாம் பப்ளிக் பூத்தில் இருந்து நந்தினிக்கு கால் செய்தான்.
"ஹலோ நந்து,"
" ஷியாம் நீயா? யாருடைய நம்பர் இது? உன்னோட ஃபோன் என்ன ஆச்சு? "
" உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நான் சொல்ற இடத்துக்கு வந்து என்னை பிக்கப் பண்ணிக்கிறியா? "
" கண்டிப்பாடா, எங்கன்னு சொல்லு "
" ரயில்வே ஸ்டேஷன்"
" அங்க என்ன பண்ற நீ? "
" நீ நேரா வா. நீ முதல் முதலில் என்கிட்ட காதலை சொன்ன இல்ல அந்த பெஞ்சுக்கு வா "
" ஓகேடா " என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு நர்ஸிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் நந்தினி.
நந்தினி வருவதற்காக காத்திருந்தான் ஷியாம்.
நந்தினி வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
"நந்தினி ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்ட இல்ல?"
" நான் ஏண்டா கோச்சுக்க போறேன்?,
என்ன சொல்லு?"
" ரொம்ப டென்ஷனா இருக்கு ஒரே ஒரு கிஸ் கொடுக்குறியா? "
" அடப்பாவி அதுக்கு தான் இங்க வர சொன்னியா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் "
" ப்ளீஸ் நந்து"
"சரி இரு தரேன், " என்று சொல்லி அக்கம் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு யாரும் இல்லாமல் தனியாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, சிரித்தபடியே அவனை அணைத்து அவன் இதழில் முத்தம் கொடுத்தாள்.
இரண்டு நிமிட முத்தத்திற்கு பிறகு,
"ஒரு மாசம் இருக்கும் இல்ல நம்ம இங்க வந்து? "
என்றாள் நந்தினி.
அமைதியாக இருந்தான் ஷியாம்.
அவன் அருகில் அமர்ந்து அவனுடைய கை விரல்களுக்குள் தன் கைவிரலகளை கோர்த்துக்கொண்டு
"என்னடா? இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கியா? விடு. அதான் நீ கேட்டபடி நான் கிஸ் பண்ணிட்டேன்ல? எப்படியாவது நம்ம ஷிவானியை சரி பண்ணிடலாம். நீ டென்ஷன் ஆகாத " என்றாள் நந்தினி.
" ஏன் நந்து இப்படி பண்ண? ரோஹித் கிட்ட எதற்கு ஷிவானியை பத்தி சொன்ன? " என்றான் ஷியாம்.
" சாரி ஷியாம், என்னோட வீட்டு கிட்ட வந்து ஷிவானிக்கு என்ன ஆச்சுன்னு சொல்லியே ஆகணும்னு ரோஹித் கேக்கும்போது என்னால சொல்லாம இருக்க முடியல. அதுவும் இல்லாம ரோஹித் ஷிவானியை லவ் பண்றாரு. தெரியுமா உனக்கு?. அவளை அவர் நல்லா பார்த்துக்கனும்னா.
அவளுக்கு என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரிஞ்சே ஆகணும் இல்ல. இல்லன்னா பின்னாடி அவங்களுக்குள்ள பிரச்சனை வரும். அதனாலதான் சொன்னேன். கண்டிப்பா நீ இதுக்கு கோச்சிப்பன்னு எனக்கு தெரியும். ஆனா என்னைப் பொருத்தவரை நான் பண்ணது தப்பு கிடையாது " என்றாள் நந்தினி.
தொடரும்....
தேன் மிட்டாய்.