• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தினம் ஒரு புரோட்டீன் 1(கேராமல் பச்சைப்பயிறு பாயாசம்)

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
Love Food.. Love to Eat.. Love to Eat different taste of Food..😃

"Don't need to skip your favourite food but add little bit of food which you don't like for good health"- Pandiselvi.

"உங்களுக்குப் பிடித்தமான உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, உங்களுக்குப் பிடிக்காத உணவையும் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக"

தினம் ஒரு புரோட்டீன்:


#தினமும் புரத உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் . பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. முளைக்கட்டிய பருப்பு வகைகளில் அதிக புரதம் உள்ளது. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் தினமும் உணவில் முளைக்கட்டிய பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்களுக்கு புரோட்டீன் டயட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

#புரத உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

#வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மை கொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் அதிகமாக உள்ளது. உடல் சோர்ந்து போகும் போது, முளைவிட்ட பயிரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி பிறக்கும்.


கேராமல் முளைகட்டிய பச்சைப்பயிறு பாயாசம்:

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:


பச்சைப்பயிறு (முளைகட்டியது)- 1 கப்

சர்க்கரை - 1 கப்

பால் - 2 கப்

நெய் - 4 (தே.கரண்டி)

ஏலக்காய் பவுடர் (தேவைக்கேற்ப)

முந்திரி, காய்ந்த திராட்சை


செய்முறை:


1. குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முளைக்கட்டிய பச்சைப்பயிறை சேர்த்து ஒரு நிமிடம் வாசனை வரும் வரை வதக்கவும். ( முளைக்கட்டிய பச்சைப் பயிறு இல்லாவிடில் பச்சைப் பயிறை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துக் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்).


2. பச்சைப் பயிறை வாசனை வரும் வரை வறுத்து விட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஊற வைத்து முளைக்கட்டாத பயிறு என்றால் பயிறு வேகும் வரை ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்).


3. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கரைய விடவும். சர்க்கரை முழுதும் கரைந்து பிரவுன் கலராக மாறி கேராமலைஸ்டு ஆனவுடன் இரண்டு கப் பால் எடுத்து அதில் ஊற்றவும்.


4.பால் ஊற்றவும் கேராமலைஸ்டு ஆன சர்க்கரை கட்டி கட்டியாக மாறும். பின் பால் சூடானவுடன் கரைந்து விடும். அது ஒன்றும் பிரச்சனை இல்லை.


5. பால் கொதித்தவுடன் வேகவைத்த பச்சைப்பயிறை எடுத்து அதில் ஊற்றி ஏலக்காய் பவுடர் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் கேராமல் பச்சைப்பயிறு பாயாசம் ரெடி.


குறிப்பு: கேராமல் பாயாசம் என்பதால் சர்க்கரை உபயோகித்திருக்கிறோம். சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகித்துக் கொள்ளலாம்.

தொடரும்.
 

Attachments

  • 1636553126016.jpg
    1636553126016.jpg
    19.1 KB · Views: 46
  • Love
Reactions: Vimala Ashokan