• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 1

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
1

மும்பையின் தலைமை காவல் நிலையத்தில் அந்த இருட்டு அறையில் ஒற்றை மேசையும் அதன் மேல், வட்ட வடிவ சோடியம் விளக்கு எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரின் முகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவிற்கு மட்டுமே வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.

ரேமண்ட் மாடலைப் போல் க்ளீன் ஷேவ், ஜெல் கொண்டு நிறுத்திய தலை முடி என இடது கையை நாற்காலியின் பின் பக்கமாக தொங்கவிட்டு, கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தவனிடம் எதிரில் இருந்த இன்ஸ்பெக்டர் உத்தம்சிங் தன் விசாரணையை இந்தியில் தொடங்கி வைத்தார்...

"Mr.ரோஹன் ராஜ் ரெண்டு நாளா எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம இருக்கிங்க... கொஞ்சமாவது எங்களுக்கு கோ-ஆப்ரேட் பண்ணினா தான் உங்களையும் உங்க பிஸ்னஸையும் தக்க வெச்சுக்க முடியும்... புரியுதா உங்களுக்கு?"

"ம்ம்ம்..."

"அந்த பொண்ணு உங்க ஹோட்டல்ல வேலை பாக்குற பொண்ணு தானே! உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்மந்தம்? உங்களோட வர்க்கர் அப்படின்றதைத் தாண்டி உங்களுக்குள்ள என்ன மாதிரியான நெருக்கம் இருந்து தெரிஞ்சுக்கலாமா?"

கடந்த இரண்டு நாட்களை போல் இன்றும் சிறிய தோள் குலுக்கல் தான் அவனிடமிருந்து பதிலாக வந்தது.

"இப்படியே பதில் சொல்லாம இருந்தா அட்டம்ட் ரேப் கேஸ்ல உங்களை ஜெயில்ல போட வேண்டி வரும்"

இதற்கும் சிரித்தானே ஒழிய வாய் திறக்கவில்லை.

"பொண்ணோட அம்மா உங்க மேல கேஸ் போட சொல்லிருக்காங்க... என்ன போடட்டுமா?" என்று மிரட்டினார் இன்ஸ்பெக்டர்.

இப்போது பெருமூச்சு இழுத்துவிட்டுக் கொண்டு முன்னே இருந்த மேசையின் மேல் கைகளை ஊன்றி, "உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ" என்று நக்கலாக உரைத்தான்.

இரண்டு நாள் போராட்டத்தின் பலனாக வாய் திறக்கப் போகிறான் என்று ஆர்வமாக காத்திருத்த இன்ஸ்பெக்டர் அதீத ஏமாற்றத்தில் பின்னால் சாய்ந்து அமர்ந்தார்.

"இதுக்கு மேல நீங்க கோர்ட்ல தான் பேச வாய்ப்பு கிடைக்கும் ரோஹன் ராஜ்... அங்கேயாவது உண்மைய சொல்லுங்க... இல்லே கோர்ட்டை அவமதிச்சதா அதுக்கும் சேர்த்து தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்" என்று கூறி இன்ஸ்பெக்டர் எழுந்து சென்றுவிட்டார்.

இரண்டு காவலர்கள் வந்து ரோஹன் ராஜை அழைத்துச் செல்ல, அதில் ஒருவர் அவனுடன் பேச்சு கொடுத்தார்.

"ஏன் சார்? பாக்க டீஸன்ட்டா இருக்கிங்க... என்ன நடந்ததுனு உண்மைய சொல்லாம்ல சார்..."

அதற்கு மற்றொரு காவலர், "யோவ் கான்ஸ்.... இவனுக்கெல்லாம் என்னய்யா மரியாதை... தனக்கு கீழ வேலை பாக்குற பொண்ணை ரேப் பண்ண ட்ரை பண்ணிருக்கான். தடுக்க வந்த ரெண்டு காலேஜ் பசங்கள்ல்ல ஒருத்தனை கொன்னுட்டான். இன்னொருத்தனை காட்டுத்தனமா அடிச்சிருக்கான்... இவனுக்கு மரியாதை மண்ணாங்கட்டி ஒன்னு தான் குறைச்சல் பாரு... இவனே மாதிரி ஆட்களேலாம் குற்றவாளினு தெரிஞ்ச உடனேயே தூக்குல தொங்கவிடனும்" என்று தானும் ஒரு பெண்ணின் தகப்பனாய் தன்னை உணர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தானார்.

அதற்கும் அவன் சிரிக்க மட்டுமே செய்தான்... யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கத் தயாராக இல்லை என்று ஒவ்வொரு முறையும் அந்த சிரிப்பு உணர்த்திட, பத்து நாளில் வழக்கு நீதிமன்றம் எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது.

அன்று மாலை ரோஹன் ராஜ்-ஐ காண அவனது GM வக்கீலோடு வந்திருப்பதாகக் கூற, அவர்களிடமும் அதே மௌனம் தான் பதிலாக வந்தது. ஜாமின் எடுக்கிறேன் என்றதற்கு மட்டும் வாய் திறந்தான்.

"வேண்டாம் பிரமோத்... இனி யாரும் என்னை வந்து பாக்கவும் வேண்டாம்..." என்று விரட்டாத குறையாக விரட்டிவிட்டான்.

பெண்ணின் தாய் ரோஹனின் மேல் வழக்கு தொடுக்க, பல கோணங்களில் வழக்கு விசாரிக்கப்பட்டது... அவனது ஹோட்டலில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்கள் வரை விசாரிக்கப்பட, அனைவரது பதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்தது.

"புது முதலாளி என்பதால் அவரைப் பற்றி எதுவும் தெரியாது... ஆனால் இந்த மூன்று மாதங்களில் எங்களிடம் ஒருநாளும் முறைகேடாக நடந்துகொள்ளவில்லை." என்பது மட்டுமே பலரின் பதிலாகக் கிடைத்தது.

அதன்பின் அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளங்கலை பட்டதாரிகளும், முதுகலை மாணவர்களுமான இரு கல்லூரி மாணவர்களின் பக்கமும் விசாரணை நடத்தப்பட, நன்கு படிக்கக் கூடிய பசங்க தான். சிறு வயதிலிருந்தே விகாஸ், ராக்கேஸ், சந்தன் மூவரும் ஒன்றாகப் படித்தவர்கள்; அவர்களுடன் வந்த பெண் கிறிஸ்டீனா கடந்த இரண்டு வருடங்களாகத் தான் அவர்களுடன் நட்புறவாடுகிறாள்; அத்துடன் மூவருள் ஒருவனான விக்கியுடன் டீனாவிற்கு காதல் என்பது கூடுதல் தகவலாகக் கிடைத்திருந்தது.

சம்பவம் நடந்த அன்று காதல் ஜோடிகள் எங்கே சென்றிருந்தனர்! என்று விசாரிக்கவும் தவறவில்லை காவல் துறை. ஹோட்டலின் இருகே இருந்த மூங்கில் காட்டில் உலாவ சென்றிருந்ததாகக் கூறினர். அவரவர் தரப்பிலிருந்து பல பதில்கள் கிடைத்த போதும் சம்மந்தப்பட்ட மூவர் வாய் திறக்காமல் எந்த உண்மையும் தெரியப்போவதில்லை என்பது இன்ஸ்பெக்டருக்கு தெளிவாகவே புரிந்தது.

பாதிக்கப்பட்டு மூன்று நாட்களாக மயக்க நிலையில் இருக்கும் பெண் ஊழியர், உயிர் தப்பி மருத்துவமனையில் சுயநினைவிற்றி கிடக்கும் ராக்கேஸ், இருவரின் இந்நிலைக்கு காரணமான ரோஹன்... மூவரில் எவரேனும் ஒருவர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்...

இதற்கிடையே மீடியாக்கல் வேறு தங்களது ரேட்டிங்கிற்காக காவல்துறையை அடித்து துவைத்து சலவை செய்து கொண்டிருந்தது. “வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை. பெண்களை கலவிக்காக வேட்டையாடும் மிருகங்களாக முதலாளிகள் வர்க்கம் மாறிக் கொண்டிருக்க, சட்டம் தூங்குகிறதா! இல்லை பெரும்புள்ளிகளுக்கும் இதில் பங்குள்ளதா!” என்று தங்கள் முழக்கத்தைத் தொடங்கினர்.

------தீயாய் தொடர்வாள்
 
பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur

அருமை சகி,