• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அடுத்த நிமிடம் எழுந்து சென்று கை கழுவிட, “ரோஹன் சாப்பிடாம எங்கே எழுந்து போற?” என்றபடி அவனுக்கு ஏதும் செய்கிறதோ என்ற ஐயத்தோடு அவனைத் தொடர்ந்தாள்.

கைகளை கழுவிவிட்டு துடைத்தபடியே, “அக்கா வந்திருக்காளா? அக்கா, மாமா மட்டுமா இல்லே அப்பாவுமா? ஏன் இங்கே தங்காம உன் வீட்ல தங்க இருக்காங்க? ஜெயிலுக்கு போனவன் என் பையனே இல்லேனு சொல்லி இங்கே தங்கமாட்டேன்னு சொல்லிட்டாரா என் அப்பா?” என்று வலிகள் நிறைந்த பார்வையோடு அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினான்.

“எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்… அதுக்கு முன்னாடி சாப்பிடு” என்று அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அதனை வாங்க மறுத்து, “அப்போ அது தான் உண்மை இல்லேயா! என் மேல இருக்க கோபத்துல தான் இங்கே அவங்க வரலே! அப்படி தானே!” என்று குரல் உடைய வினவினான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லே… தான் நேர்ல போயி விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வந்தேன். ஃப்ஸ்ட் இங்கே தான் தங்கி இருந்தாங்க…” என்று மஹி உரைத்தப்பின் தான் அவள் நீட்டிய உணவை வாய் திறந்து வாங்கினான்.

“உன் அக்கா, டே அன்ட் நைட் ஒரே அழுகை… உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க… ஆனா நீ தான் யாரும் பார்க்க வர வேண்டாம்னு சொல்லிட்ட… ஜாமினுக்கும் ஆரம்பத்துல விசாரிச்சப்போ இந்த மாதிரி கேஸ்-க்கு ஜாமின் கிடையாதுனு சொன்னாங்க… அப்பறம் நீ ஜாமின் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டதா சொன்னாங்க… உன் அப்பாவும் ரொம்பவே கலங்கிப் போயிட்டார்.
'உங்க பையன் மேல கண்டிப்பா எந்த தப்பும் இருக்காது… கண்டிப்பா ரிலீஸ் ஆகிடுவார் நீங்க கவலைப்படாம தைரியமா இருங்க’னு எத்தனை முறை எடுத்து சொன்னாலும் அவர் தான் ரொம்ப டௌன் ஆகிட்டே போனார்… அதான் இங்கேயே இருந்து உன் நியாபகத்துல அழுதுட்டு இருக்கிறதுக்கு என் ப்ளாட்ல இருக்கட்டும்னு நான் தான் கூட்டிட்டுப் போயிட்டேன்.” என்று கதை கூறுவது போல் கூறிக் கொண்டே பாதி உணவை உண்ண வைத்திருந்தாள்.

ரோஹனுக்கும் இன்ஸ்பெக்டர் உத்தம்சிங் ‘உன் பி.ஏ ஆளையே காணவில்லை’ என்று அவனிடம் ஒருமுறை கூறியது நினைவில் வர, தன் வீட்டாரைத் தேடித் தான் சென்றிருக்கிறாள் என்று இப்போது தெரிந்து கொண்டான்.

“என்ன தான் டி உன் பிரச்சனை? நீ ஏன் என் பேமிலிய தேடிப் போன? அவங்க என்னை தலைமுழுகினா தான் உனக்கென்ன? கேடுகெட்ட எனக்கெல்லாம் குடும்பம்னு ஒன்னு இருந்தா என்ன இல்லாட்டா என்ன? உன்னைப் பொருத்தவரை நான் பொறுக்கி தானே!” என்று கோபம், வேதனை, வெறுப்பு என தன்னுள் எழுந்த கலவை உணர்வுகளுக்கு அவளிடம் ஆதுரம் தேடியபடி மொழிந்தான்.

அவனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தவள், சற்றும் யோசிக்காமல் இடக்கையால் அவனது வலது கன்னத்தில் அறைந்தாள்.

ஒரு நொடி கண்களை மூடித் திறந்தவனின் விழிகளில் விலை மதிப்பில்லா முத்து கோர்த்து நின்றது. “எதுக்கு டீ அடிச்சே? எப்போதும் என்னை அப்படி ஒரு கேவலமான லுக் தானே விடுவே! அதை வார்த்தையா சொன்னா மட்டும் ஏன் உனக்கு கோபம் வருது! என் மேல நம்பிக்கை இல்லாம, நான் ஏன் ராக்கேஷை அடிச்சேன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்த தானே நீ?” என்று மறைந்திருந்த கோபம் சற்றே வெளிவந்தபடி வினவினான்.

மஹி அவனிடம் ஏன் விளக்கம் கேட்கவில்லை என்ற கேள்வியே அவனை இத்தனை நாட்கள் நிலை குலையச் செய்திருந்தது. அவளுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லை என்ற வலியில் தான் உண்மையை உரைக்காமல் போனதும், வக்கீல் மற்றும் போலீஸின் கேள்விகளுக்கு ஒத்துழைக்காமல் போனதும் எல்லாமே இவள் ஒருத்தியால் மட்டும் தான். செந்தில்நாதன் இந்த வழக்கை எடுத்து நடத்தியபோதே ஓரளவிற்கு இது மஹியின் ஏற்பாடாகத் தான் இருக்கும் என்று ஊகித்திருந்தான். அதுபோக வரும் வழி முழுதும் அவளது பேச்சுகள் வேறு அவளது விருப்பத்தை அவனுக்கு பறைசாற்றிட, அவனது மனம் ஓரளவு அமைதியடைந்த போதும் இந்த கேள்வியை மட்டும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“எதுக்கு உன் கிட்ட என்ன நடந்ததுனு கேட்கனும்? உன் மேல தப்பு இருக்காதுனு எனக்கு தான் தெரியுமே… போலீஸ் அன்னைக்கு டைம்-க்கு வரலேனா நீ ராக்கேஷை அப்போவே கொன்றுப்பே… அதுக்காக தான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணினேன். நீ பாட்டுக்க கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குள்ள போய் உக்காந்துகிட்டா நான் என்ன பண்ணுவேனாம்….” என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறிவிட்டு, அவன் கண்களைப் பார்க்க, அதில் இன்னுமே ஒரு சுவாரசியமும், எதிர்பார்ப்பும் தென்பட, சட்டென பேச்சை மாற்றினாள்.

“இங்கே உன் பிஸ்னஸை யார் பார்க்கிறது? பெரிய ரெஸ்டாரென்ட்-க்கு ஓனர் ஆகனுன்ற உன் கனவுக்காக பூர்வீக வீட்டை சேல்ஸ் பண்ணின உன் அப்பாவோட நிலை என்ன? அவரை யார் தேற்றுவது? அவரது வேதனைக்கு யாரால் தான் பதில் சொல்ல முடியும்?” என்று அவன் தந்தையின் மேல் தான் அக்கரை என்பது போல் கூறினாள்.
அவளைப் பற்றி கூறி ஆரம்பித்துவிட்டு, வேறொன்றைக் கூறியதில் ஏமாற்றமடைந்தவன்,

“அப்போ என் அப்பாவுக்காக தான் இதெல்லாம் செய்தே!” என்று இப்போதேனும் உண்மை உரைப்பாளா என்று ஆர்வத்தில் மீண்டும் வினவினான்.

“அவருக்காக மட்டும் இல்லே” என்று ஒரு நொடி நிறுத்தியள், அவனது ஸ்வாரசியம் கண்டு இன்னும் கொஞ்சம் ஏங்கவிடும் ஆசையில்,

“நம்ம… … …”

“நம்ம… ஹோட்டல் வொர்கர்ஸ்-காகவும் தான்”

“ம்ம்ம்… . ஆமா ஆமா அவங்களுக்கும் குடும்பம் இருக்கே! முதலாளி நல்லா இருந்தா தானே வொர்கர்ஸ் ஹாப்பியா இருக்க முடியும்… சோ அவங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான் இல்லேயா?” என்றான் மீண்டும்.

தான் கூறியதை தன்னிடமே கூறுபவனைக் கண்டு அவளுக்கு சிரிக்கத் தோன்றியபோதும், அதனை கட்டுப்படுத்திக் கொண்டு தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தாள்… “ம்ம்ம்”

“என் அப்பாவுக்காகவும், வொர்கர்ஸ்-காகவும்?” என்று மீண்டும் அதையே வினவிட,

“அட ஆமா… இன்னும் எத்தனவாட்டி தான் கேப்பிங்க?”

“வொர்கர்ஸ்-காகவும்… .. உன் மாமனாருக்காவும் மட்டும் தான்… அப்படி தானே?” என்று இம்முறை சற்றே மாற்றி வினவினான்.

“ஓய்… உங்க அப்பா ரொம்ப ஃபீல் பண்ணினாரேனு என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா சைட் கேப்ல என் மாமனாருனு சொல்லுவிங்களா!” என்று மிகத் தெளிவாகவே சண்டைக்கு நின்றாள்.

அவளது இந்த விளையாட்டையும் ரசித்தவன், ‘இவகிட்ட கெஞ்சினாலாம் வேலை நடக்காது, கொஞ்சம் அடாவடியை காட்டினா தான் அடங்குவா' என்று மனதிற்குள் நினைத்தவன், சட்டென அவள் இடை வளைத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி,

“ஏய் ராங்கி, என் கூட குடும்பம் நடத்தி நாலு புள்ளை பெத்து அதுங்களுக்கு பேர் வச்சு, அதுங்களை வளர்கிறது வரை வாய் கிழிய பேசுவே… ஆனா என்னை பிடிச்சிருக்கு, எனக்காகத் தான் செய்தேனு மட்டும் சொல்லமாட்டே இல்லே!” என்றான் அடாவடியாக.
அவன் கேட்ட தோரணையில் முகம் சிவந்து வெட்கம் கொண்டு பேச நா எழாத போதும், “ம்கூம்…” என்று இடவலமாக தலையசைத்து மேலும் கொஞ்சம் சீண்டினாள்.

மிச்சம் மீதி இருந்த இடைவெளியையும் குறைத்து மொத்தமாக அவளை ஆக்கிரமித்து “இப்போ இந்த செகண்ட் நீ சொல்லாமவிட்டதை நானும் லைஃப் லாங் உன்கிட்ட சொல்லப் போறதில்லை. அதே நேரம் நீ என்னை விரும்புறேன்ற உண்மைய நீயே ஒத்துக்கிற வரைக்கும் உன்னை விட்டு வைக்கப் போறதும் இல்லே.” என்றுரைத்து தன் ஒட்டுமொத்த அணைப்பில் உறைந்து நின்றிருந்தவளின் இதழ்களைக் கவ்வி சிறைபிடித்து இதம் பரப்பினான்.

சில நொடிகள் கூட நீடித்திடவில்லை அவர்களது அதரங்களின் காதல் மொழி. அதற்குள் அவனது அலைபேசி அதிர்ந்து தனது தவிப்பையும் காட்டிட, மனமே இல்லாமல் அவளைப் பிரிந்தவன், “டூ மினிட்ஸ் ஹனி… யாரந்த நந்தினு பார்த்துட்டு வரேன்…” என்று உரைத்து மீண்டும் ஒருமுறை அதிரடியாக அவள் இதழ் கொய்துவிட்டு கள்ளச் சிரிப்போடு அவளைப் பிரிந்து சென்றான்.

ஆடவன் விலகிச் சென்ற பின்னும் கூட அவனது வாசம் தன் மேல் வீசிட, இன்னமும் அவன் தன்னை அணைத்த உணர்விலிருந்து வெளிவர முடியாமல் தவித்தாள். அது போதாதென்று இருமுறை இதழ் கொய்துச் சென்றிருந்த அவனது முரட்டு அதரங்கள் தன் இதழோடு ஒட்டி உறவாடுவது போல் தோன்றிட, இதழ் பிரிக்க மறந்து சிலையென நின்று விட்டாள் மாதங்கியவள்.

பெண்ணவளின் நிலை கண்டு மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பை அடக்கி தன் திறன்பேசியை கவனித்தான் ரோஹன். புது எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கவே, திரையைத் தேய்த்து யாரென்று வினவினான்.

“என்ன மேன்? கேஸ் முடிஞ்சு ரிலீஸ் ஆன அடுத்த நிமிஷமே மறந்துட்டேயா?” என்று கணீரென உரைத்தது, செந்தில்நாதனின் குரல்.

“ஹலோ சார்… நீங்களா? என் நம்பர் உங்களுக்கு எப்படி? நீங்க கால் பண்ணுவிங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லே சார்”

“நானும் தான் எதிர்பார்க்கலே மேன்… ஒரு நன்றி கூட இல்லாம காணாமல் போயிடுவேன்னு” என்று வழக்கு முடிந்து அவரை சந்திக்காமல் வந்துவிட்டதை குறிப்பு காட்டிக் கூறினார்.

வேகமாக பரிதவிப்புடன் அதனை மறுத்து “அய்யோ… அப்படிலாம் இல்லே சார். கொஞ்சம் டென்ஷன்… அதான் ரிலாக்ஷேஷனுக்காக வெளியே வந்தேன். அப்பறமும் ஒரு தொல்லையால வீடு வரை வர வேண்டியதாகிடுச்சு.”

“தொல்லையா? யாரை சொல்றே? அந்த மஹி பொண்ணையா?” என்று சரியாக ஊகித்து வினவினார்.

“அவளா!!! தொல்லையா!!!! அவ வெறும் தொல்லை மட்டும் கிடையாது, டெவில், ராட்சசி, ஜந்து, அரக்கி, ராங்கி, என் காதல் பிசாசு….. உலகத்துல இருக்கிற ஒட்டுமொத்த டார்ச்சருக்கும் குயினே அவ தான்…” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

ஒரு நொடி அமைதிக்குப் பிறகு மறுமுனையிலிருந்து மறு கேள்வி வந்தது. “என்ன மேன் சொன்னே! காதல் பிசாசா? அப்போ அந்த பொண்ணு தான் உன் லவ்வரா?”

ரோஹன் சற்றே வழிந்தபடி முப்பத்து இரண்டு பற்களும் தெரியும்படி இழித்துக் கொண்டு காதல் சொட்ட சொட்ட “ஆமா சார்” என்றான்.

அது அலைபேசி வழியாகவே அவருக்குத் தெரிந்ததோ என்னவோ “காதல்!!! ம்ம்ம்?” என்றார் மீண்டும் ஒருமுறை வினவியபடி

“ஆமா சார்… கன்னா பின்னா காதல்… காட்டுத்தனமான காதல்”

“என்ன மேன் டீ.ஆர் மாதிரி பேசுறே! உன்னை அவ்ளோ புலம்ப வெச்சுட்டாளா அந்த பொண்ணு” என்றிட,

ரோஹன் கண்களை உருட்டி, “ரொம்பவே சார். இது எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இருக்கு அவளுக்கு” என்று அப்போதும் காதலாய் மொழிந்தான்.

யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்ப்பதற்காக பால்கனி வந்த மஹியும் கடைசி வார்த்தைகளை மட்டும் கேட்டுவிட்டு நொடியில் அவனை நெருங்கி புஜங்களில் நறுக்கென கிள்ளி வைக்கவும் செய்தாள்.

எறும்பு கடித்தது போல் உதறிவிட்டவனை பல் தடம் பதிய கடித்து வைத்து துடிக்கவிட்டாள் அவனது செல்ல ராட்சசி.

வலியை மறைத்து, தன் அரக்கியை தோளோடு அணைத்தபடி செந்தில்நாதனிடம் தன் பேச்சைத் தொடர்ந்தான் ரோஹன்.

“உங்களுக்கு என்னோட பிக், பிக் தாங்க்ஸ் நிறையவே சொல்ல வேண்டி இருக்கு சார். நாம கண்டிப்பா ஒருநாள் மீட் பண்ணலாம் சார்… நீங்க எப்போ ஃபிரீனு சொல்லுங்க… ஹோட்டல் தாஜ்-ல மீட் பண்ணலாம்!”

“அப்போ நம்ம மீட்டிங்க இன்னைக்கே வெச்சிக்கலாம்… நான் இன்னைக்கு ஃப்ரீ தான் மை பாய்…”

“ஓ… சூப்பர் சார்… டுநைட் டின்னர் மீட் பண்ணலாம்… உங்க ஃபேமிலிய கூட்டிட்டு வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்… உங்க ஃபேமிலிக்கு என்னோட சின்ன நன்றிகள் தெரிவிச்சுகிறேனே!”

“டின்னர்-க்கு இன்னும் சிக்ஸ் ஹவர்ஸ் இருக்கே மேன்!!! அவ்ளோ நேரத்தை ஏன் வேஸ்ட் பண்ணனும்… இப்போவே மீட் பண்ணலாம்”
தன்னவளின் புறம் திரும்பி கேள்வியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “பட் சார்… அது… நான் இன்னும் என் பேமிலிய மீட் பண்ணல… அதான்…” என்று இழுக்க,

“மை டியர் யங் மேன்! இன்னைக்கு நீ உன் வீட்ல இருக்க காரணம் நான் தான்றதையும் கொஞ்சம் மனசுல வெச்சிக்கிட்டா நல்லா இருக்கும்… வேணுனா நீயும் உன் பேமிலிய கூட்டிட்டு வாயேன்” என்று இப்போதே சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ரோஹனும் வேறு வழியில்லாமல் “ஓகே சார்… மீட் பண்ணலாம்…” என்றான்.

“தாட்ஸ் குட்… சீ யூ சூன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தார்.

“யார் கிட்ட பேசிட்டு இருந்தே! வீட்டுக்கு வந்ததும் வராததுமா யாரை மீட் பண்ணப் போற? எங்கேயும் போக வேண்டாம்… ஒழுங்கா வீட்ல இரு” என்று மஹி தன் உரிமையை தானே எடுத்துக் கொள்ள

“ஏய் ராங்கி இப்போவே உன் அதிகாரத்தை ஆரம்பிக்காதே! பாதில விட்டதை கண்டினியூ பண்ண வேண்டி இருக்கு… உள்ளே வா” என்று அவளது அனுமதிக்கு கூட காத்திராமல் அவளை இழுத்துச் சென்றான்.

அவன் எதிரே இருந்த சிங்கப்பெண்ணவளுக்கு நொடியில் கோபம் மூக்கைத் தொட, அவன் பிடித்திருந்த கையை உதறிவிட்டு

“ஓஹோ… நான் அதிகாரம் பண்றேனா! எனக்கு விருப்பமான இல்லேயானு கூட தெரிஞ்சுக்காம உன் விருப்பத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறே! அதுக்கு பேர் என்ன?” என்று இடையில் கை வைத்து அதிகாரமாய் வினவினாள்.

“காதல்…. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு லவ், லவ், லவ் மட்டும் தான் பண்ண போறேன்… எனக்கு தெரிஞ்ச ஸ்டைல்ல” என்று கூறி அவள் கரங்களுக்கு நடுவே, அவளது இடைக்கு மேலே தன் இரு கைகளையும் வைத்து அழுத்தி அதிரடியாக தன் அருகே இழுத்தான்.

ஆடவன் கரம் அத்துமீறிய அதிர்ச்சியிலும் அவன் இழுத்த வேகத்திலும் பெண்ணவள் மொத்தமாக அவன் மேல் சரிய இருவருமாக நீள் சாய்விருக்கையில் சரிந்தனர்.

நவ நாகரிக மங்கையாக இருந்த போதும், உரியவன் கைகளில் கைபாவை பொம்மையாய் இலகி, உருகி, அவன் இழுவைக்கெல்லாம் இழைந்து கொடுத்தாள். தேனூரும் அவளது பூவிதழ்களை அவனது முரட்டு இதழ்கள் வண்டுகளாய் மாறி ரிங்காரமிட, பூவிதழ்கள் தானாகச் சென்று வண்டுகளோடு ஒட்டிக் கொண்டது. தனது அவசரத்தை நினைத்து தானே வெட்கம் கொண்டு முகம் சிவந்து விலக முற்பட வண்டுகள் அதற்கு அனுமதித்தால் தானே! முடிந்த மட்டும் முத்தத்தின் ஆழம் வரை மூழ்கி அவளை தன் வசப்படுத்த நினைத்தவன் அம்முத்தத்தின் முடிவில் அவள் வசமடைந்து அவள் மார்பிலேயே புதைந்து போனான்.

நேரம் கடந்து செல்வதை உணர்ந்து “ரோஹன்” என்று மெல்லிய குரலில் அழைத்தாள் மஹி.

“ம்ம்ம்?” என்றபடி இன்னும் ஆழமாக முகம் புதைத்திட, அவனது மீசை முடிகள் ஏற்படுத்திய குறுகுறுப்பில் பெண்ணவளை வெட்கம் பிடிங்கித் தின்றது ஒருபுறம் என்றால், என்னவன் என்ற கர்வம் ஒருபுறம் எழுந்து அவளை இம்சை செய்தது.

அணங்கவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்திட, அவனது பார்வையில் பெண்ணவள் புதிதாக மீண்டும் நாணம் கொண்டாள்.

மஹன்யாவா இது! என்ற ஆச்சரியத்தை ரோஹனுக்கு ஏற்படுத்தினாலும், அவளது வெட்கத்தை ரசித்தவன், “சொல்லு டி” என்று மீண்டும் தன்னைக் காணச் செய்து வினவினான்.

“வீட்டுக்கு போகலாம்? அக்கா உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள்.

“ம்ம்ம்… போலாம்” என்று இருக்கமாக அணைத்து, அடுத்த நொடியே அவளிடமிருந்து எழுந்து கொண்டான். அந்த அணைப்பே அவனது மனதை உரைத்தது, ‘உன்னை விட்டு வைக்க மனமில்லை’ என்று… விறலியவளும் சிரித்துக் கொண்டு எழுந்து கொள்ள, அவள் கை கோர்த்தபடி அவளது இல்லம் அழைத்துச் சென்றான்.

தீயாய் தொடர்வள் ...
 
Top