இக்கதையில் வரும் அனைத்தும் என் கற்பனையே...
“கோபுரம் என்பது கதவின் தொடக்கம் மட்டுமே. திறக்காத வரை ரகசியம் தெரியாது” என்று ஒரே வரியில் இருக்க,
அதன் உடன் ஒரு பழமையான ஒரு கோவிலின் கோபுரத்தின் புகைப்படமும் இணைத்தே இருந்தது. அதைத் தவிர வேற பெரிதாக விவரம் இல்லாததால் மேலும் யோசிக்காமல் தூங்கச் சென்றான்.
அடுத்த நாள் அவன் கண்ணில் ஒரு நியூஸ்பேப்பர் ஆர்டிகிள் பட்டது. தலைப்பே அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது, “அழிந்து வரும் கட்டிடக் கலையும் தமிழரின் ரகசியமும்” என்று இருக்க, உடனே அது எந்த இதழ் என்று பார்க்க, ‘தின இதழ்’ என்றும் எழுத்தாளர் ‘கவியா’ என்றதைப் பார்த்ததும் தன் தோழியாக இருக்குமா என்ற சந்தேகம் எழ,
உடனே அந்த அலுவலக எண்ணைக் கண்டு அதற்கு அழைத்தான். அந்த பக்கம் ஏற்றதும் “ஹலோ கேன் ஐ ஸ்பிக் டு மிஸ் கவியா” என
“சாரி சார், இன்றைக்கு அவங்க டே ஆப்” என்றும், “அவங்க பர்சனல் நம்பர் கிடைக்குமா” என்ற கேள்விக்கு,
“அவங்க கான்செண்ட் இல்லாமல் தர முடியாது சார், சாரி” என்றதும்
“ஓகே தேங்க்ஸ்” என்றவன் மூளை ‘நாளைக்கு பார்த்துக்கலாம்’ என்று அவன் வேளையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
அன்று இரவும் அவனுக்கு ஒரு மெயில் வந்தது. அதில் “தொடக்கம் இல்லாமல் முடிவு இல்லை. விண்ணின்று மண்வரை ரகசியமே” என்று இருக்கக் கூடவே அதே கோபுர புகைப்படம்.
இந்த முறை அவனுக்கு எதோ தோன்றியது. ‘யார் இது பெயர் சொல்லாமல் இப்படி நம்மளைக் குழப்பி விடுறாங்க. இந்த விஷயம் உண்மையா இருக்குமா?? இல்லை என்னை ஏமாற்ற ஏதவாது சதியா??
அன்று அவன் தூக்கம் பறிபோனது தான் மிச்சம். குழப்பத்தைப் பகிரக் கூட நண்பர்களோ குடும்பமோ அவனுக்கு இல்லை. ஒரு காலத்தில் பெரிய குடும்பத்துப் பிள்ளை தான் தீபன். யார் செய்த பாவமோ குடும்பமே ஒன்றாகத் திருப்பதி சென்ற நேரம் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்தில் பயணித்த அனைவரும் அக்கணமே அகால மரணம் அடைந்தனர். அன்றைய தினம் அவனுக்கு பரிட்சை இருந்ததால் இவன் மட்டும் எமனிடம் இருந்து தப்பித்துக் கொண்டான்.
‘வந்தே ஒரு நாள் கூட முழுசா முடிக்கல அதுக்குள்ள எவ்வளவு குழப்பம். முதல அந்த கவியா நம்ம பிரென்ட் தானா என்று கண்டு பிடிக்கணும். அப்பத் தான் நம்ம மனசில் இருக்கிறதைப் பகிர ஒரு ஆள் கிடைக்கும்” என்று கிளம்பினான். வேளைக்குச் சேர இன்னும் மூன்று நாட்கள் இருக்க, வந்த போது உடனே சேரத் தான் நினைத்தான் ஆனால் இப்பொது கடைசி நாள் சேர்ந்து கொள்ளலாம் என்று தின இதழ் ஆபீஸ் நோக்கிச் சென்றான்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த அலுவலகம். காரணம் இன்று வெளியான ஒரு செய்தியே இந்த பரபரப்புக்குக் காரணம். ஆளும்கட்சியை எதிர்த்து, ஒரு பதிவு அதுவும் பகிரங்கமாக.
“பரவி வரும் போதை காலாச்சாரத்திற்குத் தலைமையே பொறுப்பு ஏற்குமா??” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருக்க, இதோ செய்தி வந்த நாளே மிரட்ட ஆள் வந்து விட்டனரே.
“ஒழுங்கா வியாபாரம் பண்ற எண்ணம் இல்லையா?? இப்படி தான் மேலிடத்தை பகைச்சுக்கணுமா” என்று வந்த ஆள் மிரட்டிக் கொண்டு இருக்க, அவனைச் சுற்றி அவனின் ஆட்கள் ஐந்து ஆறு பேர், பார்க்கவே பக்கா ரவுடி தோரணையில் நிற்க, ஊர்மிளா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். சுற்றியும் அலுவலக ஆட்கள் இருந்தனர். ஆனால் யாரும் நெருங்கி உதவ நினைக்கவில்லை. அவள் தானே அந்த செய்தியைச் சேகரித்தாள்.
“இந்த நியூஸ் போட்டது யாரு” என்று மேலும் கேட்கும் நேரம், “அதை தெரிஞ்சு என்ன பண்றதா உத்தேசம்” என்று அவனுக்குப் பின் இருந்து ஒரு குரல் மிடுக்காகக் கேட்க,
குரல் வந்த திசையில் எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். கவியா தான் வேகமாக உள்ளே நுழைந்து வந்தாள். நேரே அந்த அடியாளுக்கும் ஊர்மிளாகும் இடையே நிற்க,
“என்ன திமிரா.. ஒழுங்கா போட்ட நியூஸ் தப்புனு சொல்ற இல்ல நீயும் இருக்க மாட்ட, இந்த பத்திரிக்கையும் இருக்காது” என்று மேலும் சத்தத்தைக் கூட்டிச் சொல்ல,
“ஹலோ மிஸ்டர், வெளியே போன நல்லா இருக்கும். வேலை நேரத்தில் வந்து மிரட்டிட்டு இருக்காமல் சொன்ன நியூஸ் பொய்னு கேஸ் போடுங்க. வந்துட்டாங்க பெண்ணை மிரட்ட நாலு பேருடன், உங்க மிரட்டல் உருட்டல் எல்லாம் வெளியே வேற யார்கிட்டயாவது வெச்சுக்கோங்க நொவ் கெட் அவுட்” என்று அவனுக்கு மேல் கத்த,
ஒரு பெண் தன்னை திட்டுவதா என்று வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டனர். ஊர்மிளாவிடம், “நீ எதுக்கும் வொர்ரி பண்ணிக்காத போய் வேலையை பாரு” என்று அவளிடம் சொல்லிவிட்டுக் கூடி இருந்த கூட்டத்தை ஒரு கணம் பார்க்க, அவள் பார்வையைப் புரிந்து அனைவரும் தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
அப்பொழுது ஒரு குரல் “இவ இப்படி திமிரா இருக்கிறதால் தான் தனிக்கட்டையா இருக்கா, இந்த மாதிரி ஒரு பொண்ணு கூட எந்த பையன் வாழுவான்” என்று பொறாமையில் விஷத்தை கக்கி இருக்க, அதை எல்லாம் இவள் காதிலே போட்டுக்க மாட்டாள்.
அவர்களை எல்லாம் விடச் சின்ன பெண் அதுவும் அனுபவத்தில் கூட சிறியவள், ஆனால் அவளுக்குக் கொடுக்கப்பட்டும் முக்கியத்துவத்திலும் மரியாதையிலும் பலருக்குப் பொறாமைதான். அது இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் வெளியிடும்.
மரியாதையைச் செய்யும் செயலில் தான் இருக்கிறது என்று பலரும் மறந்து விடுகின்றனர். தமிழகத்தில் நேர்மையான பத்திரிகை என்ன என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தின இதழ் என்று தான் பலரும் கூறுவர் காரணம் அதன் உரிமையாளராக இருந்தாலும் பெரும் பங்கு இவளிதே.
வேகமாக தன் அறையை நோக்கிச் செல்லும் கவியாயை பின் இருந்து “மேடம்” என்ற ஒலி தடுத்து இருக்க,
“வாட் ஜெகன், எனக்கு அவுட்டோர் வொர்க் இருக்கு” என்று நேரத்தை பார்த்துட்டு கொண்டே சொல்ல,
“மேம், நேற்று ஒருத்தர் உங்களைப் பற்றி கேட்டாங்கனு சொன்னாங்களே, அவங்க வந்து இருக்காங்க” என்ற உடன்,
“என்னோட ரூமிற்கு வர சொல்லு” என்று தன் அறைக்குச் சென்று விட்டாள். கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, ஒரு கணம் கண்கள் விரிந்து கொண்டது.
“ஓ மை காட்.. நீயா இருப்பியான்னு ஒரு டவுடில் தான் வந்தேன். எப்படி இருக்கக் கவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… இல்ல நம்ம கடைசியா காலேஜில் பார்த்தது தானே பைவ் ஆர் சிக்ஸ் இயர்ஸ் ஆகி இருக்கும்ல. ஹொவ் ஆர் யூ? லைப் எப்படி போகுது” என்று அவளைப் பார்த்த நொடி முதல் பேசிக்கொண்டே செல்ல,
“தீபன் வெயிட் வெயிட் இந்தாங்க முதலில் தண்ணியை குடிங்க. படபட பட்டாசு மாதிரி பேசிட்டே இருக்கீங்க. நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க உங்க குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு” என்று கேட்க,
அவள் குடும்பம் என்றதும் ஒரு நிமிடம் கசங்கிய முகத்தைச் சரி செய்து கொண்டு “எல்லாம் சூப்பர். சென்னை வந்து இரண்டு நாள் தான் ஆகுது. உன் பெயரை நேற்று பேப்பரில் பார்த்தேன். நீயா இருப்பியான்னு ஒரு சந்தேகம் அதன் பார்க்க வந்தேன்” என
அவள் அதைக் கேட்டு மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். அவள் கண் ஒரு நிமிடம் சுவற்றில் இருந்த கடிகாரத்தில் பதிய, அதைக் கண்டு,
“வொர்கிங் டைமில் டிஸ்டர்ப் பண்றேன். எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும். இங்க யார் கிட்ட நம்பிக்கையா கேட்கிறதுனு தெரியலை. நீ எப்ப பிரீ” என்று அவளைப் பார்த்து கேட்க,
“நினைச்சேன் என்னடா இது காலேஜில் ஒரு முறை கூட பேசாத மனுஷன் இப்ப வந்து பேசறாரே. இப்ப தானே தெரியுது சோழியன் குடும்பி சும்மா ஆடலைனு. எனக்கு இப்ப ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. கிளம்பிடுவேன். ஈவினிங் கால் பண்றேன், நம்பர் கொடுத்துட்டு போ” என்ற அவள் பதிலில் மெலிதாக இளித்து வைத்து அவனின் போன் நம்பரைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
மாலை “தீபன் நீங்க எங்க இருக்கீங்க நொவ் ஐ அம் பிரீ” என்ற கவியா கேள்வியில், “நான் இந்த வாரம் முழுக்க வெட்டி தான். வீட்டில் தான் இருக்கேன் லொகேஷன் சென்ட் பண்றேன் வரியா” என்றான்.
“வீட்டுக்கா” என்று ஒரு நிமிடம் தயங்கினாலும் அடுத்த நொடியே “சரி பத்து நிமிசத்தில் அங்க இருப்பேன்” என்று அவன் அனுப்பிய முகவரியை நோக்கி முன்னேறினாள்.
முன்னேறியது அவள் கால்கள் மட்டுமல்ல, அவள் வாழ்வும் தான் என்று அந்த நொடி அவள் அறியவில்லை.
இன்னும் சரியாக ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் பொருள்கள் இடத்தை பரப்பியே இருந்தது. இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் இவளை இப்படியே தான் வரவேற்றான் தீபன்.
“சாரி கவி இன்னும் கிளீன் பண்ணல. பொறுமையா பண்ணலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒரு மெயில் வந்து என் மொத்த கவனத்தையும் ஈர்த்துடுச்சு” என
“அப்படி என்ன மெயில்” என்று அவள் கேட்டதும், “முதல உள்ள வா இன்னும் வாசல் கிட்டவே இருக்க. நல்ல பையன் மேடம். ஒன்னும் தப்பா எல்லாம் நடந்துக்க மாட்டேன். வாங்க” என்று அவள் உள்ளே வரத் தயங்கும் காரணம் புரிந்து சொல்ல, மெல்லப் புன்னகைத்து உள்ளே வந்தாள்.
“காலேஜ் டைமில் பார்த்த கவிக்கும் இப்ப நான் பார்க்கிற கவிக்கும் நிறைய வித்தியாசம் தெரியுதே. என்ன காரணம்” என்ற கேள்வி அவளின் மனதைத் தாக்கினாலும் முகத்தைத் தாக்காத வண்ணம் சிரித்துக் கொண்டே “டைம் சேஞ்ச் எவரித்திங். அதை விடு உன்னோட பிரச்சனையை சொல்லு. நான் சீக்கிரமா கிளம்பனும்” என்றதும்,
உடனே தன் மடிக்கணினியை அவள் முன்னே வைத்தவன் தனக்கு வந்த இரு மெயிலையும் அவளுக்கு காட்ட,
“இதில் என்ன இருக்கு, எதாவது ஸ்பேம் மெசஜா கூட இருக்கலாம். இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்” என்று கேலியாகச் சிரிக்க,
“பீ சீரியஸ் கவி. எனக்கு எதோ தப்பா படுத்து. யாரோ நேரடியா சொன்ன பிரச்சனை வரும்னு இப்படிச் சொல்லலாம், இல்லை வேற யாருக்குனா தெரிஞ்சா பிரச்சனைன்னு கூட நமக்கு முதலில் தெரியணும் என்று கூட இதைச் சொல்லலாம்” என்று அவன் மனதில் அழுத்தும் விளக்கத்தைச் சொல்ல,
“ஓகே அப்படியே இருந்தாலும் நம்ம கிட்ட ஏன் சொல்லணும்” என்ற அவளின் புரியாத கேள்வியில், “மறைந்து இருக்கிற பொருளை மட்டும் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் வேலை இல்லை. மறைந்து இருக்கும் ஒரு சமூகத்தை வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்துவோம், அழிந்து போன சாம்ராஜ்யம், தொலைந்து போன நாகரிகம், இன்னும் சொல்லணும் என்றா மண்ணுக்குள் இருக்கும் நம் பெருமையை வெளிக்கொண்டு வருகிற பெரிய பொறுப்பு தொல்லியல் துறைக்குத் தான் தெரியுமா” என
“சரி தான். இது என்ன கீழே எதோ ஒரு அட்டாச்மெண்ட்” என “இதுக்குத் தான் உன்னைத் தேடினேன். இது எதோ ஒரு பழமையான, சேதமடைந்த கோவில் கோபுரம். என்னால இதைத் தனியா தேடமுடியதே. உன் கட்டுரையை பேப்பரில் பார்த்தேன். நீ எனக்கு உதவ முடிஞ்சா சீக்கிரமா கண்டுபிடிக்க முடியும்” என்று தன கோரிக்கையை வைக்க,
“ஹ்ம்ம்… இந்த போட்டோவை எனக்கு வாட்ஸாப் பண்ணிட்டு நானும் என் சைட் இருக்கிற ஆளுங்க கிட்டச் சொல்லி விசாரிக்க சொல்றேன். போட்டோ தெளிவா இருந்தா போதும் எந்த காலத்துக் கோவில், எந்த மன்னனால் கட்டப்பட்ட கோவில் எல்லாம் கண்டு பிடிச்சு இருக்கலாம். இது கொஞ்சம் இடிஞ்சு ரொம்ப சேதம் அடங்கி இருக்கு. இருந்தாலும் நான் பார்க்கறேன்” என்று அவனிடம் விடை பெற்றுச் சென்றாள்.
இரண்டு வாரம் வேகமாகச் சென்றது, தீபன் தன் தினசரி வேலையைக் கடமை தவறாமல் செய்து கொண்டு இருக்க, இருந்தும் அவன் மனதில் அந்த கோபுரம் பற்றிய யோசனையே ஓடிக்கொண்டு இருந்தது. அன்று பேசியது கவியாவிடம், அதன் பின் அவன் பேசவே இல்லை.
முக்கியமான சில கோப்புகளை மேற்பார்வை செய்து கொண்டு இருக்க, அப்பொழுது கவியாவின் தாய் கோமதி போன் செய்தார். சலித்துக் கொண்டே எடுத்தவள் “சொல்லுமா இப்ப என்ன” என்று வாய் கேட்டாலும் கை அவள் வேலையைச் செய்ய,
“என்னத்த நான் சொல்றது. உன்னை விடச் சின்ன பொண்ணு உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இப்ப இருக்கு. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறதா எண்ணம். ஒழுங்கா நாள் சொல்றதை கேளு டி” என்று அவரும் பல மாதமாக ஒரே பாட்டை பாட,
“உங்களுக்கு ஒரு முறை சொன்னால் புரியாத. என்னை இப்படியே தனியா விட்டுடுங்க” என்று அவள் கத்தும் போதே செகண்ட் கால் வர,
அதைப் பார்த்ததும் “அம்மா எனக்கு முக்கியமான கால் வருது அப்பறமா பேசுகிறேன்” என்று வைத்து விட,
“நம்ம பேசும் போது தான் முக்கியமான கால் வருமா இல்லை இப்படி சொல்லிட்டு என் கிட்ட இருந்து தப்பிச்சிக்கிறாளா” என்ற யோசனையோடே கோமதி போனை வைத்தார்.
“ஹலோ நான் கேட்ட வேலை என்ன ஆச்சு” என்று இவள் கேட்க, “அதைச் சொல்லத் தான் மேடம் இப்ப கூப்பிட்டேன். நீங்க அனுப்பின போட்டோ வெச்சி நாங்க தேடுனதில் மதுரை பக்கத்துல ஒரு கிராமம் இருக்கு, அங்க இருக்கிற ஒரு கோபுரம் நீங்க அனுப்பிய அதே மாதிரி கொஞ்சம் ஒத்து இருக்கு” என
“அப்படியா ஊர்ப் பெயர் என்ன” என்றதும் அவன் “வாலன்குடி” என
“சரி எனக்கு லொகேஷன் சென்ட் பண்ணுங்க. இந்த விஷயம் யாருக்கும் சொல்லக் கூடாது” என்று மிரட்டல் தொனியில் சொல்ல,
“ஐயோ மேடம் இதை நீங்க சொல்லனுமா நான் யார் கிட்டவும் சொல்ல மாட்டேன். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாத, வேற எதாவது என்றா உடனே சொல்லுங்க மேடம்” என்ற அவனின் குரலில்,
“ஓகே, எனக்கு எதாவது உதவினா கேக்கறேன்” என்று வைத்தவள், அடுத்து அழைத்தது தீபனுக்குத் தான்.
அவனோ ‘அடேய் எனக்கு ஏதாவது வேலை கொடுங்கடா, போர் அடிக்குது’ என்று புலம்பும் நிலையில் தான் இருந்தான். மேலதிகாரி கொஞ்சம் சோம்பேறியாகப் பொறுப்பே இல்லாமல் சுற்ற, இவனோ எதிர்த்துக் கேட்கவும் முடியாமல் அமர்ந்து இருக்க, சரியாக அவனுக்கு அழைப்பு வந்தது.
“கெட் ரெடி நீ வாலன்குடி போகணும்” என்று எடுத்ததும் சொல்ல, “நம்ம எதுக்கு அங்க போகணும்” என்று புரியாமல் கேட்க
“அந்த கோபுரம் அங்க தான் இருக்கிறதா எனக்கு நியூஸ் வந்து இருக்கு” என “வாவ் கண்டுபிடிச்சிட்டியா உன்னைப் பற்றி தெரிஞ்சி தான் உன் கிட்டச் சொன்னேன். நான் இதோ ஆன் டியூட்டினு சொல்லிட்டு வரேன். எங்க வர” என்று அவளிடமே கேட்க,
“யோவ் இது உன் வேலை. என்னை எதுக்கு கேக்கறே. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்ற கவியாவிடம்,
“ப்ளீஸ் கவி… எனக்குத் தனியா போகக் கஷ்டமா இருக்கு. நானே தனியா எல்லாமே தேடணும். என் டிபார்ட்மென்ட் ஆளுங்க இன்னும் என் கூட கிளோஸ் ஆகலை. என்னால யாரும் நம்பக் கூட முடியலை. என் கூட வாயேன்” என்று பாவமாகக் கேட்க,
வேண்டாம் என்று சொல்லத் தான் நினைத்தாள், ஆனால் எதோ ஒரு உந்துதல் அவளை அவன் கூடவே செல்ல தோன்றியது.
“வரேன்” என, அவனும் சந்தோசமாக அவளைக் கூட்டிக் கொண்டு மதுரையை நோக்கிச் சென்றான்.
காரில் செல்லும் நேரம் தீபன் “நீ இன்னும் ஏன் சிங்கிளா இருக்க, எனி ரீசன்” என்று கேட்க,
“இன்னும் சிங்கிளா இருக்க மின்ஸ், பொண்ணுங்க இந்த வயசில் இது தான் பண்ணனும் என்று எதாவது சட்டம் இருக்கா, அதையே நான் திருப்பி கேட்கலாம் தானே. நமக்கு ஒரே வயசு தான் ஞாபகம் இருக்கா. உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறதுனு நான் கேட்டதா எனக்கு ஞாபகம் இல்லை. சோ நீயும் உன் லிமிட்ஸ் கிராஸ் பண்ணாதே” என்று முகத்தை இறுக்கமாக வைத்து சொல்ல,
ஏன்டா கேட்டோம் என்றே தோன்றியது தீபனுக்கு. அதன் பின் ஆறு மணி நேரப் பயணத்தில் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை.
மதுரை இறங்கியதும், வாலன்குடி பற்றி ஒருவரிடம் கேட்க, அவரோ “அழிவைத் தேடிச் செல்ல நினைக்காதே.. சிவன் சொத்து குல நாசம்” என்று இவர்களின் பதிலைக் கூட கேட்காமல் சென்று விட,
தீபன், “யாரு இவர் எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு” என்ற கேள்விக்கு, “தெரியலை ஆனால் நம்ம போகிற கிராமத்தில் எதோ மர்மம் இருக்கு. உனக்கு வேற எதாவது மெயில் வந்துச்சா” என்று விசாரிக்க,
“இப்ப வரை இல்லை” என்று சொல்லும் போதே தீபனின் அலைபேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தவன் அடுத்த நொடியே அவள் விரிந்த கண்களுடன் பார்த்தான். வந்த செய்தி யாதோ??
சுவைப்போம்
cocomelon
தீஞ்சுவை 2

Last edited: