• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 3

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அரபிக்கடல் என்றாளே முதலில் நினைவிற்கு வருவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான்.



அந்த அரபிக்கடலோரம்,

ஓர் அழகைக் கண்டேனே

அந்தக் கன்னித் தென்றல்

ஆடை கலைக்க

கண்கள் கண்டேனே….



அரபிக்கடலில் கால் பதித்து கடற்கரை மணலில் சயனம் செய்திருந்த அந்த சற்று பெரிய அளவிலான பீச் ரெசார்ட் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் என்ற போதும் எப்போதும் பரபரப்புடன் தான் இயங்கிக் கொண்டிருந்தது.

முப்பது ரெசிடன்ஷியல் அப்பார்ட்மெண்ட் அறைகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட லக்சூரியல் அறைகளும், இருநூறு சிங்கள் மற்றும் டபுல் காட் அறைகளும் அது போக காட்டேஜ் மற்றும் குடில்கள் என மொத்தம் ஐநூறு அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல். அது போக பார் வசதி கொண்ட உணவகமும், நீச்சல் குளம், உள்விளையாட்டரங்கம், குழந்தைகளுக்கு இன்டோர் மற்றும் அவுட்டோர் பார்க், குழந்தைகளுக்கான வீடியோ கேம், ரேஸ் கேம்ஸ், உடற்பயிற்சி கூடம், இசை விரும்பிகளுக்கு மெலீலிசையோடு காலை தேநீர் கூடம், இசை கலைஞர்களுக்கு அதன் அருகிலேயே இசைகருவிகள் நிறைந்த தனி அறை என ஹோட்டலுக்குள் பொழுதைக்கழிக்கவே ஒரு முழுநாள் தனியாக செலவிடலாம்..

இவ்வளவு பெரிய ரெசார்ட் வழிநடத்த சரியான தலைமை இல்லாமல் போகவே, சரியான நேரம் பார்த்து கல் வீசி கைப்பற்றி இருந்தான் ரோஹன் ராஜ். அவனது வருகைக்குத் தான் காத்திருக்கிறது மொத்த ஹோட்டலும்.

மகிழுந்தில் வந்து இறங்கின நொடியிலிருந்தே தன் பணியைத் தொடங்கியிருந்தாள் மஹன்யா. அந்த ரெசாட்டின் ஜெனரல் மேனேஜர் ப்ரமோத்தின் PA தான் இவள். அவளின் ஆழுமைத் தோரணையும், தவறிழைத்தது எவரானாலும் தட்டிக் கேட்கும் குணமும், அவள் மேல் தவறு இருக்கும் பட்சத்தில் கடைநிலை ஊழியர் என்றும் கருதாது மன்னிப்பு கேட்கும் குணமும், எப்போதும் அவளது மேனேஜருக்கு பிடித்த குணங்கள் என்பதால் அவருக்கு அவள் எப்போதும் செல்லப்பிள்ளை தான்.

வாசலில் செயற்கை அலங்காரங்களுக்கு இணையாக விருந்தினரைக் கவரும் விதத்தில் வண்ண வண்ண பூக்கள் விதவிதமாக வரிசை கட்டி நின்றிருந்தது. அதை பார்வையிட்டபடி உள்ளே நுழைந்தவள், தோட்டக்கலை நிபுணரை அழைத்து அதில் இடையிடையே தெரிந்த வாடிய இலைகளையும் சருகுகளையும் வெட்டச் சொன்னாள்.

புது முதலாளியை வரவேற்க வரவேற்பறை தடாபுடலாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பெறுமைக்குச் சொந்தக்காரியான ஈவென்ட் மேனேஜராகிய தன் தோழி அதிதி-யை பாராட்டிவிட்டு, மஹியும் ஒரு மலர்கொத்தோடு புது முதலாளியை வரவேற்க தயாராகினாள்.

அதற்கிடையே அடுமனை பிரிவு தலைமை சமையல் கலை நிபுணரை அழைத்து புது முதலாளிக்கான ப்ரத்யேக உணவு தயாரா என வினவவும் மறக்கவில்லை மஹி. அவரும் இனிப்புடன் சேர்த்து சில மும்பை உணவு வகைகளான, பாம்பே சான்ட்விச், கோவாவின் ப்ரத்யேக உணவான சன்னாஸ் என்னும் வித்தியாசமான இட்லியும் மற்றும் கோய்லோரி என்னும் வித்தியாசமான தோசையும் அதனுடன் பட்டர் சிக்கன் மற்றும் பட்டர் நான் என அனைத்தும் தயார் என்று கூறினார்.

இவையனைத்தையும் கண்டுகொண்டிருந்த GM பிரமோத் அவளை வழக்கம் போல் பார்வையாலேயே பாராட்டிவிட்டு, "நீ இருக்குற வரை எனக்கு வேலை சுமை இல்லே மஹி" என்று வாய் திறந்து மனதார இந்தியில் பாராட்டவும் செய்தார்.

"மை ப்ளஷர் சர்" என்று அவருக்கு பதில் கூறினாலும் ஒருமுறை அடுமனை சென்று பார்த்துவிட்டு வந்தால் தேவையில்லை, என்ற எண்ணம் தோன்றிவிட அவளால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. கடகடவென குதிங்கால் பாத அணியுடன் வேக எட்டுகள் வைத்து அடுமனை பிரிவிற்குச் சென்றவள்.

அங்கே ஒருவன் மட்டும் அவளுக்கு முதுகு காண்பித்தபடி தலைக்கு மேல் பெரிய தொப்பி அணிந்து ஏப்ரேனுடன் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தான்.

"எல்லாரும் ரிஷப்ஷன்ல புது எம்.டீ-ய வெல்கம் பண்ண வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க நீ மட்டும் இங்கே என்ன பண்ணுறே?" என்று இந்தியில் வினவினாள்.

"எனக்கு எதுவும் பிடிக்கலே... ஆமா!!! என்னை கேக்குறேயே! நீ ஏன் உன் புது எம்.டீ-யை பார்க்க போலேயா!!! ஆள் பாக்க வைஷ்ணவ் தேஜ் மாதிரி அம்சமா இருப்பான்… சைட் அடிக்க கெடச்ச சான்ஸை மிஸ் பண்ணிடாதே! சீக்கிரம் போ" என்றான் தன் வேலையில் கவனம் செலுத்தியபடி.

ஒரு குக் தன்னை கேள்வியாய் மட்டுமே கேட்க்கும் பட்சத்தில் அவளுக்கு எந்த ஒரு ஈகோவும் இல்லை. நன்கு பழக்கப்பட்ட ஒருவர் ஏன் செல்லவில்லை என்று வினவியிருந்தால் இந்நேரம் அவளும் சகஜமாக பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இவனைப் பார்த்தால் புதிதாக வந்தது போல் தெரிவதோடு அவனது பேச்சும் வேறுமாதிரியாக இருக்கவே தன் அதிகாரத்தை வெளிப்படுத்தினாள்.

"ஏய் மிஸ்டர்... ஆஃப்ட்ரால் ஒரு குக் நீ! அதை நியாபகம் வெச்சு உன் லிமிட் எதுவோ அங்கேயே நின்னு பேசு… உன் திமிரை எல்லாம் ஓரம்கட்டி வெச்சுட்டு ஒழுங்கா ரிஷப்ஷன் போ… உன் புது எம்.டீ-ய வெல்கம் பண்றதுக்கு.." என்று அவனுக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு, தான் வந்த வேலையை கவனித்தாள்.

இன்னுமே முதுகு காண்பித்து நின்றிருந்தவன், இதழ் மூடிய மென்னகையை தன் அதரங்களில் தாங்கியபடி,

"ஓஓஓ ஆஃப்ட்ரால் குக்கா!!! ஒரு குக்கா இருக்கிறது அவ்ளோ கேவலமா என்ன! இப்போ நான் குக்கா இருக்கிறதுனால உன்னைவிட எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்னு நெனைக்கிறே? உன்னேலாம் ஒரே ஒரு நாள் அடுப்புல நிக்கவிடனும்... அப்பறம் தன்னால குறையும் உடம்புல இருக்குற மொத்த கொழுப்பும்" என்று தன் கோபத்தில் பாதியை மட்டுமே வார்த்தைகளில் கலந்து சுடச்சுட பதில் கொடுத்தான்.

"மிஸ்டர்... யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட்… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்று எச்சரித்தாள்.

பதிலுக்கு பதில் அவளுடன் மள்ளுகட்டத் தோன்றினாலும், ஒரு பெண்ணிடம் வரம்பு மீறியே பேசிவிட்டோம் என்றும் தோன்றியது அவனுக்கு. அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் அவன் நினைத்திடவும் இல்லை. இருக்கும் நிலைமையை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க நினைத்து,

"இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறே… ஐம் ஜஸ்ட் கிட்டிங் யூ… லீவ் இட்" என்று சாதாரணமாகக் கூறினான்.

"ஃபஸ்ட் டைம் மீட் பண்ற பர்சன்கிட்ட எப்படி பேசனுங்குற பேசிக் மேனர்ஸ் கூட இல்லாம வாய்க்கு வந்ததை பேசிட்டு, ஜஸ்ட் கிட்டிங்னு சமாளிக்க வேண்டியது… சாரி கேக்குறதுக்கு ஆம்பளங்கற தலைக்கனம் தடுக்குது போல… இவன் கிட்ட எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..." என்று தமிழில் முணுமுணுத்து விட்டு அனைத்தையும் சரி பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.

இப்போது அவனது மென்னகை, புன்முறுவலாக விரிந்திருந்தது. காரணம் இவ்வளவு நேரம் இந்தியில் தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவள் தமிழில் முணுமுணுத்தது புரிந்திடவே ‘இவளை இப்படியே விட்டுவிடுவதா! முடியவே முடியாது இன்னும் கொஞ்சம் சீண்டித் தான் பார்ப்போமே!’ என்று நினைத்து,

"ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேக்குறேயா?…" என்று அவனாகவே அவளிடம் வம்பு வளர்த்தான்.

அதற்கு மஹி எந்த பதிலும் சொல்லாவிட்டாலும் தன் இடையில் கைவைத்து அவனை முறைப்பது, எதிரில் இருந்த வெள்ளை சுவர் பளிங்குக் கல்லில் நன்றாகவே தெரிந்தது அவனுக்கு. அவளது செயலும் பேச்சும், அவனுக்குள் ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்த,

"புது எம்.டீக்கு உன்னைப் போல துடிப்பான பெண்கள்னா ரெம்ப பிடிக்கும்… ஒருவேளை நீ இன்னைக்கு அவர் முன்னாடி போயி நின்னா உன்னோடு போல்ட்னஸ் அவருக்கு பிடிச்சு உனக்காக என்ன வேணுனாலும் செய்யிறதுக்கு வாய்ப்பு இருக்கு… அவருடைய பொன்னான நேரங்களைக் கூட உனக்காக செலவிட்டு பொன்னாக்கி உன்னை ஆராதிக்க கூட நினைக்கலாம்." என்று நமட்டு சிரிப்போடு அவனும் தன் பேச்சை தமிழுக்கு மாற்றியிருந்தான்.

ஆனால் அதனைக் கூட கவனிக்கத் தவறினாள் மஹி. ஆனாலும் அவன் பேச்சில் ஒன்று மட்டும் நன்கு அறிந்து கொண்டாள். இவன் எம்.டியின் பி.ஏ அல்லது அல்லக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்தாள்.

மேலும் 'என்ன பேச்சு பேசுகிறான்… பெண்கள் என்ன இவனுக்கும், இவன் முதலாளிக்கும் பொழுதுபோக்கு பதுமைகளா?' என்ற கோபம் நெருப்பாய் கொலுந்துவிட்டெரிந்தது. அதுவும் தன்னைப் பார்த்து கேட்டவனை கண்களில் கனல் கக்கும் சக்தி இருந்திருந்தால் இந்நேரம் பஸ்பம் ஆக்கியிருப்பாள். அது முடியாமல் போகவே வார்த்தைகளை கனலாய் கக்கினாள்.

"ஹேய் மேன்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…. போற இடத்திலே எல்லாம் உன் எம்.டீக்கு பொண்ணு பிடிச்சு கொடுக்க வேண்டியது தான் உன் வேலையா? நீ என்ன வேலைனாலும் பார்த்துட்டு போ… ஐ நெவர் மைண்ட் இட் அட் ஆல்… பட் இன்னொரு முறை என்கிட்ட இப்படி பேசுற வேலை வெச்சுக்காதே! பீ கேர் ஃபுல்…" என்று அவனிடம் சீறினாள்.

அவளது வார்த்தைகளில் மறைமுகமாக கூறப்பட்ட தனது பணியை நினைத்து ‘எனக்கு நானே இரட்டை 'மா' வேலை செய்து கொள்கிறேனாமா!’ என்ற நக்கலாக நினைத்தவன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, இவளை இவ போக்குல போயி தான் மடக்கனும் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு அவள் புறம் திரும்பி நின்று இரண்டு கைகளையும் சற்றே தலைக்கு மேல் தூக்கி "சரண்டர்" என்றான்.

தன் எதிரே நின்றிருப்பனை எங்கோ பார்த்தது போல் தோன்றிட, சற்று நேரம் உற்று நோக்கினாள். சிறு பொறியாய் மின்னல் வேகத்தில் நினைவில் வந்து சென்றான். இருந்தும் இன்னமும் அவளது பார்வை அவனை வெறிப்பதை நிறுத்தவில்லை. சொல்லப் போனால் முறைத்தது என்றே சொல்லலாம்.

"அதான் சரண்டர் ஆகிட்டேனே! இன்னமும் ஏன் விறைப்பா முறச்சிட்டு நிக்கிறிங்க… கொஞ்சம் சிரிக்கலாமே!" என்றான் சிரித்த முகமாக, அவளது எம்.டி ரோஹன் ராஜ்.

ஆம் அவனே தான்… ரெஸார்ட் கைமாறிய மறுநாளே ஏதோ ஒரு மேகஜினை காண்பித்து அதில் வளரும் தொழிலதிபர்கள் பட்டியலில் அவனது பெயரையும், க்ரூப் போட்டோவில் அவனது முகத்தையும் காண்பித்து மஹிக்கு அறிமுகம் செய்து வைத்தார், அவளது GM பிரமோத்.

தன்னையே முறைப்பவளின் பார்வையைக் கண்டு ரோஹனுக்கே ஒருநொடி சந்தேகம் எழுந்தது. 'நாம தானே இங்கே எம்.டீ…. இவ முறைக்கிறதப் பார்த்தா நான் ஏதோ இவளுக்கு கீழ வேலை பாக்குற மாதிரில இருக்கு… ஒரு வேலை இது என்னோட ரெஸார்ட்டுனு தெரியாதா?' என்று யோசித்தபடி அவனும் அவளது பார்வையை தாங்கி நின்றான்.

ரோஹனின் நெற்றிச் சுருக்கத்தைக் கண்டே அவனது குழப்பத்திற்கு பதில் கூறிடும் விதமாக,

"மேலாண்மை நல்ல முறையில் இருந்தா தான் கடைநிலை ஊழியர்கள் கூட தன் பணியை சரியா செய்வாங்க…. அது மட்டுமில்லாம, கூட வேலை பாக்குறவங்ககிட்ட ஒழுக்கமா நடந்துக்குவாங்க…. தலைவன் சரியில்லேன அது எவ்வளவு பெரிய பலம் வாய்ந்த கூட்டமா இருந்தாலும் தோல்வி நிச்சியம். இது நான் சொல்லலே… திருவள்ளுவர் சொன்னது.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.


இதெல்லாம் உங்ககிட்ட எதுக்கு சொல்றேன்னா இங்கே ரிஷப்ஷனிஸ்ட், க்ளார்க், அட்டென்டர், ஸ்கேவன்ஜர்ஸ், குக்ஸ்னு பல பெண்கள் வேலை பாக்குறாங்க… அவங்ககிட்ட நீங்க ஒழுக்கமா பேசினா தான் சக ஊழியர்களும் ஒழுக்கமா பேசுவாங்க...

அஃப்கோஸ் லேடீஸ்லேயும் முதாலாளிய மயக்கனு நினைக்கிற சில பெண்கள் கூட்டம் இருக்கத் தான் செய்யிறாங்க… ஆனா அவங்ககிட்டேயும் நீங்க கண்ணியமா நடந்துக்கும் போது இங்கே வேலை பாக்குறவங்களுக்கு நீங்க உண்மையான ஹீரோவா தெரிவிங்க… அது மட்டும் இல்லே, கெஸ்ட்டா வர்றவங்க கூட எங்கிட்டேயும் மரியாதையா நடந்துப்பாங்க… அந்த நம்பிக்கை இங்கே வேலை பாக்குற ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் உங்ககிட்ட இருந்து ஆரம்பிச்சதா, கிடைச்சதா இருந்தா நல்லாயிருக்கும்..." என்று ஒரே மூச்சாக, கூறிய வேண்டியவற்றை தெளிவாகக் கூறினாள்.

'கொஞ்சம் சிடுமூஞ்சி போல… இவளை கொஞ்சம் விட்டுதான் பிடிக்கனும்…’ என்று யோசித்தபடி அவளையே பார்த்திருந்தான்.

அதனையெல்லாம் உணராதவள் "I warmly welcome you to your kingdom." என்று கூறி சிரித்த முகமாக கை நீட்டி வரவேற்றாள்.

அவனும் தன் கையைக் கொடுத்து அவளது வரவேற்பை ஏற்றுக்கொண்ட போதும் அவளை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகப் பார்த்து வைத்தான், ‘இப்போ தான் சிடுமூஞ்சினு நெனச்சேன் அதுக்குள்ள இவ்ளோ அழகா சிரிக்கிறா!’ என்ற ப்ரமிப்போடு….

‘சிரிப்பாலேயே சுண்டி இழுக்கிறவளை சுவைக்காம இருக்க முடியுமா!!’ என்ற அவனது யோசனையை கலைத்தது மஹியின் குரல்.

"எல்லாரும் உங்களுக்காக வெய்ட் பண்றாங்க… போலாமா?"

"ம்ம்ம்" என்று அப்படியே அவளுடன் செல்லத் தயாராக, அவனின் குறுக்கே கையை மறித்தாள் மஹி. 'என்ன?' என்பது போல் அவன் பார்க்க, சுட்டு விரல் நீட்டி அவன் தலையைக் காண்பித்தாள்.

அப்போது தான் தலையில் இருந்த தொப்பி நினைவில் வர, ஏப்ரனை கழற்றிவிட்டு பெண்ணவளின் முன்னால் தன் கையை வயிற்றின் மேல் வைத்து இடைவரை குனிந்திட, அவளும் சிரித்தபடி அவன் தலையில் இருந்த தொப்பியை எடுத்து ஓரமாக வைத்தாள். பின் இருவருமாக இணைந்து வரவேற்பறை வந்தடைய புது மேலாண்மை இயக்குனரை சந்தோஷமாக வரவேற்றனர் அனைவரும்.

--- தீயாய் தொடர்வாள்...
 
  • Like
Reactions: Krithika ravi