• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 3

MK24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
28
25
28
Tamil nadu

தீஞ்சுவை 3

மதுரையை அவர்கள் அடையும் போதே கருமேகம் சூழ்ந்து பெரும் மழையோடு தான் தங்களை வரவேற்பேன் என்பதைப் போல் காட்சியளிக்க, கவியா “நம்ம எங்க தங்க போகிறோம்” என்றதும்,

“இதோ காரில் தான்” என்று அவர்கள் பயனித்த காரை காட்ட, ஒரு நிமிடம் பதறி “ஏய் விளையாடுறியா” என

“இல்ல கவி உண்மையாகத் தான் சொல்றேன். என் காரை லாங் டிராவல் பண்றதுக்கு ஏற்ற மாதிரி தான் செட் பண்ணியிருக்கிறேன். இதோ பாரு” என்று காட்ட,

அவன் சொல்லியது போல் அனைத்தும் பக்காவாக தான் இருந்தது. இருந்தாலும் இவள் மனம் சம்மதிக்கவில்லை.

“என்னால இதுல எல்லாம் தங்க முடியாது. மனுஷனா நீ எல்லாம். முன்னாடியே சொல்லி இருந்தால் நான் எதாவது ஏற்பாடு பண்ணி இருப்பேன். ஒரு பெண்ணை கூட்டிட்டு வரோம் என்ற நினைப்பு இருக்கா” என்று திட்டிக் கொண்டே போனை எடுத்தாள்.

‘நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி திட்டுற, காரில் பெட் செட்டப் கூட இருக்கே’ என்று முணுமுணுப்பாகக் கேட்க, நல்ல வேலை இது அவள் காதில் கேட்கவில்லை.

பத்து நிமிடத்தில் இவனிடம் திரும்பியவள் “சொல்லி இருக்கேன். பார்க்கலாம். இங்க இருந்து எப்படிப் போகிறது. நெட் ஒழுங்கா வேலை செய்யலை நீ யார் கிட்டனால் கேட்டு வா. இருட்டிட்டே வருது. அதுக்குள்ள கிராமத்திற்கு போகணும்” என

வானத்தைப் பார்த்தவன் ‘ஆமா எப்ப வேணா மழை வரும் போல’ என்றே அங்க இருந்த ஒருத்தரிடம் “சார் வாலன்குடி எப்படி போகணும்” என

“சாரி தம்பி நானே ஊருக்கு புதுசு. கோவிலுக்கு வந்தேன் நீங்க வேற யார்கிட்டயாவது கேளுங்க” என்று அவரும் சென்று விட, ரோட்டில் ஒருத்தரும் இல்லை.

“நான் என்ன அமேசான் காடுக்கா வந்து இருக்கேன். ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கே” என்று புலம்பிக் கொண்டே கவியாவிடம் வர, ஒருத்தர் எதிர்பார்க்காமல் கண் முன்னே வந்து,

“அழிவைத் தேடிச் செல்ல நினைக்காதே.. சிவன் சொத்து குல நாசம்” என்று இவர்களின் பதிலைக் கூட கேட்காமல் சென்று விட,

தீபன், “யாரு இவர் எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு” என்ற கேள்விக்கு, “தெரியலை ஆனால் நம்ம போகிற கிராமத்தில் எதோ மர்மம் இருக்கு. உனக்கு வேற எதாவது மெயில் வந்துச்சா” என்று விசாரிக்க,

“இப்ப வரை இல்லை” என்று சொல்லும் போதே தீபனின் அலைபேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தவன் அடுத்த நொடியே அவள் விரிந்த கண்களுடன் பார்த்தான்.

“புதைந்தது மண்ணை தாண்டும் முன் கதவை திறவுங்கள்” என்று இருக்க, அத்துடன் கோபுரத்தின் மறுமுனையிலிருந்து எடுத்த புகைப்படம் இணைத்து இருந்தது.

“கவி இங்க பாரு இப்ப தான் வந்து இருக்கு” என்று காட்டியதும்,

“நம்ம இன்றைக்கு அந்த கிராமத்திற்கு போய்டலாம் டா. அங்க ஸ்டே பண்ண எதாவது ஒரு வழி பண்ணிட்டு, நாளையிலிருந்து இங்க வரலாம். என்னால டூ ஆர் த்ரீ டேஸ் தான் இருக்க முடியும். அதுக்கு அபிராம நீ தான் தனியா மேனேஜ் பண்ணிக்கணும்” என

“தனியா மேனேஜ் பண்றத்தில் எல்லாம் எனக்குப் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகவே ஒரு பதட்டம். இதைச் சரியா பண்ணா என் வேளையில் நல்ல நிலைக்குப் போகலாம். இது தான் மனசு மூளை எல்லாம் ஓடிட்டே இருக்கு” என்று மேலும் யாராவது வருகிறார்களா என்று பார்க்க,

சில கிராம மக்கள் வருவது தெரிந்தது. அவரிடம் கேட்க, ஆனால் முந்தைய அனுபவத்தைப் போலவே, “அந்த இடத்துக்கு போகாதீங்க, அது கோபுரம் இல்லை, அது சாபம்” என்று விலகச் சொன்னார்கள்.

“சாபமா? எதனால்?” என்று தீபன் வினவ, அவர்களுள் இருந்த ஒரு முதியவர் “அதோ சிவன் கோவில் கோபுரம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி அதைக் கட்டுபவர்கள் அதையே சாத்தியமானது என நினைத்தாங்க. ஆனா கோபுரத்தின் இடத்துல புதைக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மர்மம். அதனால் தான் அங்க எந்த பராமரிப்பு நடந்தாலும் பாதியில் நின்று போகுது. நீங்க கண்டுபிடிப்பீங்களா அப்பு” என

“பார்க்கலாம் தாத்தா” என்று கவியாவை பார்க்க, அவளோ தீவிர யோசனையில் இருந்தாள்.

“என்ன கவி யோசிக்கிற” என்றதும் “எனக்கு எதோ தப்பா இருக்கிற மாதிரி தோன்றுது. உன்னை மாதிரி இங்க எவ்வளவு ஆய்வாளர் இருக்காங்க ஆனால் எதுக்கு நீ வரை வெயிட் பண்ணி, நீ வந்த அன்றைக்கே மெயில் வரணும். இதுல உன்னைச் சிக்க வைக்கிற பீல் எனக்கு. உனக்கு எதாவது தோன்கிறாதா” என்று தன் சந்தேகமாகக் கேட்க,

“நீயே இப்படி யோசிக்கும் போது நான் யோசிக்கமாட்டேனா. கண்டிப்பா இதுக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு. அதான் இந்த விசயத்தில் உன்னைத் தவிர வேற யார் கிட்டவும் சொல்லல. அந்த மர்மத்தை கண்டுப்பிடிக்கத் தானே வந்து இருக்கிறோம்.. பார்த்துக்கலாம்” என்று கிராமத்தை நோக்கிச் சென்றனர்.

இருள் சூழும் நேரம், கவியாவிற்கு போன் கால் வர, “மேடம் நீ கேட்க மாதிரியே கொஞ்ச நாள் தங்க ஒரு வீடு பார்த்து இருக்கேன். அட்ரஸ் உங்க போனிற்கு அனுப்பிட்டேன். அங்க ஒரு வயசான பாட்டி மட்டும் இருகாங்க” என்றதும் அவள் “தேங்க்ஸ் ஜார்ஜ்” என்று வைத்து விட,

“என்ன விஷயம்” என்று தீபன் கேட்க, “நம்ம தங்க வீடு ரெடி. நேரா அங்க போ. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குப் பார்க்கலாம்” என அவனும் இவ்வளவு தூரம் வண்டி ஒட்டிய களைப்பில் அவனும் சரி என்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் வாலான்குடி அடைந்து இருந்தனர்.

கவியா “பரவலைக் கிராமம் என்றதும் எப்படியோ இருக்கும் நினைச்சேன் ஆனால் சூப்பரா இருக்கு. சென்னை பரபரப்புக்கு இந்த அமைதி சாந்தமா இருக்கு. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு” என

அவனும் அவள் சொன்ன முகவரிக்கு வந்து கேட் உள்ளே சென்று கொண்டே “அமைதி பெரும் ஆபத்தை மறைத்து வைத்து இருக்கும் கவி. சொல்ல முடியாது இந்த அமைதிக்குப் பின்னே இருக்கும் காரணம்” என

“வந்த பொழுது பார்த்த தீபன் நீ இல்ல, அப்ப ரொம்ப விளையாட்டு பிள்ளையா இருந்த. இப்ப உன் முகத்தில் ஒரு சீரியஸ்நெஸ் தெரியுது” என்று அவனை அவதானித்துச் சொல்ல,

“வேலைனு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மேடம். எல்லாத்திலும் விளையாட்டா இருக்கலாம் ஆனால் வேளையில் இருக்கக் கூடாது” என்று இறங்க அவளும் இறங்கினாள்.

அந்த பாட்டி வேகமாக வந்து இவர்களை வரவேற்க, “தம்பி போன் பண்ணி சொல்லுச்சு மா. எதோ பரிகாரம் பண்ணனும் சொல்லி இருந்தாங்க. எத்தனை நாள் வேண்டுனாலும் இங்க தங்கிக்கோங்க” என்று இருவரும் உள்ளே அழைக்க,

தீபன் “என்ன பரிகாரம்” என்று புரியாமல் இவளிடம் மெதுவாகக் கேட்க, “கிராமத்தில் எப்படி ஒன்றா தங்க சம்மதிப்பாங்க அதன் இப்படிச் சொல்லி இருப்பான். நீ கண்டுக்காதே” என

“சரி தான்” என்று அவனும் தலையை ஆட்டிக் கொண்டே உள்ளே செல்ல, அந்த பாட்டி முத்தம்மாள் “சரிங்க அப்பு நான் எதோ பக்கத்தில் இருக்கே அங்க தான் இருப்பேன். இரவு சாப்பாடு அங்க மேஜையில் இருக்கு. நான் காலையில் வாரேன்” என்று கிளம்ப, இருவரும் ஒவ்வொரு அறைக்கு தூங்கத் சென்றனர்.

மறுநாள் காலை, கவியா “கிளம்பலாமா” என, கேள்வியில் அதிர்ந்து “கவி இப்ப தான் டைம் எயிட். வெயிட் பண்ணு ரெடி ஆகிட்டு வரேன்” என்று அறையை விட்டு வெளியே வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே சென்று விட்டான்.

பத்து மணி அளவில் இருவரும் அந்த கோபுரத்தை அடைந்தனர். இருவரும் எதிர்பார்க்கவில்லை. அந்த கோபுரத்தைச் சுற்றிப் பல கிலோமீட்டர் அளவுக்கு எந்த வீடும் இல்லை. சொல்லப் போனால் மரம் கூட இல்லை. பாலைவனம் போலே காட்சி அளித்தது.

தீபன் “இந்த இடம் ரொம்ப வித்தியாசமா இருக்குல. நல்லா பசுமையா இருந்த கிராமத்தில் இப்படி ஒரு பாலைவனம் இருக்கு. .ஒரு மாதிரி வித்தியாசமான உணர்வா இருக்கு” என

“இந்த கோபுரம் எதற்குத் தனியா இருக்கு. உள்ளே கோவில் கருவறை எதுவும் இல்லை. இது சிவன் கோவில்னு சொன்னாங்களே. இங்க கோபுரத்தைத் தவிர எதுவுமே இல்லையே” என்று தன் சந்தேகத்தைக் கவி கேட்க,

“எல்லா இடத்திலும் குட்டி மர்மம் இருந்த வாழ்க்கை சுவாரசியமாகத் தானே இருக்கும். உன்னை மாதிரியே” என்று அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே சொல்ல,

அதை கண்டுகொள்ளாமல் இடத்தை ஆராய்ந்தால், அவளின் பார்வையை உணர்ந்து அவனும் மேலே கேட்காமல் கோபுரத்தை உற்று நோக்கினான்.

ஆனால் மனமோ சிறிது நேரம் முன் நடந்ததை யோசித்தது. இவர்கள் கிளம்ப நினைத்ததும், தீபன் “நடந்தே போகலாமா, இந்த இடமும் நல்லா குட் பீல் தருது தானே” என

“நானே சொல்லணும் தான் நினைச்சேன்” என்று இருவரும் நடக்க, கவியா முன்னே செல்ல தீபனுக்கு போன் வர அவன் நடை பின் தங்கியது.

ஒரு சிலர் சிரிப்புடன் கடக்க, சில வயதானப் பாட்டி கூட்டம் கவியாவை கடந்து இவனை அடைந்ததும், ஒரு பாட்டி “என்ன அப்பு பொஞ்சாதி முன்ன தனியா போகுது நீங்க இப்படிப் பின் தங்கி .வாரது நல்லவா இருக்கு. போ அப்பு பொஞ்சாதி கூட நட” என்று போற போக்கில் சொல்லிவிட்டுச் செல்ல, ஒரு நிமிடம் அவன் இதயம் நின்று துடித்தது.

காதல் தான் எத்தனை வித்தியாசமானது. பார்த்த முதல் நொடி தோன்றும் காதல், பழகிய சில மாதம் பின் தோன்றும் காதல், கல்யாணத்திற்குப் பின் தோன்றும் காதல், இதை எல்லாம் விடப் பேசி பேசியே வர வைக்கும் காதல்.

ஒன்றாகப் பேசி நண்பர்களும், கடுமையைக் காட்டி பெற்றோர்களும், கிண்டல் செய்யும் சகோதர சகோதிரியும், திட்டும் பொதுமக்களும் என்று போற போக்கில் ஒருவருக்கும் ஒரு எண்ணத்தை விதைத்து விட்டுச் செல்லும் பலர் தான் இங்கே அதிகம்.

தீபனிற்கு அந்த நொடி காதல் வந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் எழ இந்த நிகழு காரணமாக இருந்தது. சிறு தீப் பொறி போதுமே பெரிய காட்டை பற்றி எரிய வைக்க.

அவன் அதே யோசனையில் இருக்க, எதோ சத்தத்தில் திரும்பி கவியாவை பார்க்க, அவளோ எதையோ கண்டு பிடித்த ஆச்சிரியத்தில் இவனைத் தான் பார்த்தாள். கண்டது யாதோ??

சுவைப்போம்
cocomelon
 
Last edited:
  • Like
  • Love
Reactions: MK3 and Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இதுவரை இல்லாத எண்ணம் இப்ப மனசுல விழுந்து கவியாவை வேற பார்வையில பாக்குறான் 😍

என்ன மர்மமா இருக்கும்? 🧐

அந்த ஊர்காரங்களே சொல்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?🙄🤔

கவியா அப்படி என்ன கண்டுபிடிச்சா? 🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK24

MK24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
28
25
28
Tamil nadu
இதுவரை இல்லாத எண்ணம் இப்ப மனசுல விழுந்து கவியாவை வேற பார்வையில பாக்குறான் 😍

என்ன மர்மமா இருக்கும்? 🧐

அந்த ஊர்காரங்களே சொல்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?🙄🤔

கவியா அப்படி என்ன கண்டுபிடிச்சா? 🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
Thanks ka😍😍😍
 
MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106

தீபன் கவியா காதலை பாக்கவா இல்லை அவ பார்த்த ஆச்சிரியத்தை பாக்கவா?. இன்ட்ரெஸ்டிங் எபி.