• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 4

MK24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
28
25
28
Tamil nadu
தீஞ்சுவை 4

அவனின் எண்ணங்கள் கரையைத் தாண்டி சென்று கொண்டு இருக்க, தடுக்கும் அணையாக ஒரு சத்தம். என்ன என்று திரும்பிப் பார்க்க, கவியா தான் அவனை அதிர்ந்து ஆச்சிரியத்தில் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன கவிமா பார்க்கிற” என்று இவனும் அவள் பார்வை செல்லும் திசையில் பார்வையைச் செலுத்த, ஒரு குறுவாள், அதுவும் துருப்பிடித்து கைப்பிடியின் ஒரு ஓரம் சிதைந்து முழுவதும் மண் சேறு அப்பி இருந்தது.

“ஹே கவி இது எங்க இருந்து எடுத்த” என்று அதனை எடுத்து பார்த்தான். அவளோ அவன் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் “இந்த கோபுரத்தை பாரேன், கொஞ்சம் வித்தியாசமா இருக்கு தானே. எதோ ஒரு கல்லில் தான் கட்டுவாங்க. ஆனா இந்த கல்லை பாரு கலர் வித்தியாசமா இருக்கு தானே. எதோ மண்ணில் செய்த மாதிரி இருக்குல” என்று கேள்வி கேட்க,

“மண்ணாகக் கூட இருக்கலாம் கவிமா. சொல்ல முடியாது, ஏன்னா பல கலவையை நம்ம தமிழர் உபயோகம் செய்து இருக்காங்க. இப்ப ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜி வைத்துக் கட்டும் கட்டிடமே இடிந்து விழும் போது பல லட்சம் ஆண்டுகள் முன்னே கட்டும் நம் கோவில் கோபுரம் எப்படி இப்படி ஸ்ட்ரோங்கா இருக்கு. நம்மை விட அந்த காலத்தில் எப்படி உறுதியா கட்ட முடியுது. எல்லாமே அவங்க திறமை தான்.

வேற எதாவது கல்வெட்டு மாதிரி இருக்கானு பாரு கவிமா” என அவளுக்குச் சொல்லிவிட்டு, அவளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரம் வேகமாகச் சென்றது ஆனால் அவர்களோ எந்த பொருளையோ கல்வெட்டையோ காணவே முடியவில்லை. எப்படி இது சாத்தியம் ஒரு சின்ன கல்வெட்டு கூட இல்லாமல் ஒரு கோவில் இருக்கும்.

ஒரு கட்டத்தில் கோவத்தில் சுவற்றை ஓங்கி அடிக்க, அங்கே இருந்து சிறு மண் துகள்கள் உதிர்ந்து விழுந்ததை இருவரும் கவனிக்கவில்லை.

கவியா ஒரு கட்டத்தில் சோர்ந்து “போகலாமா தீபன். காலையில் வந்தோம் இப்ப சாப்பிடற நேரமே தாண்டி போய்டுச்சு, ரொம்ப பசிக்குது” என

அதில் அதுவரை இருந்த இறுக்கம் மறந்து “சாரி கவி நேரத்தை பார்க்கலை. இப்ப வரை நமக்கு ஒரு கிளு கூட கிடைக்கலை தானே. அந்த கடுப்பில் இருக்கேன். வா சாப்பிட ஊருக்குத் தான் போகணும். சாப்பிட்டு வந்து திரும்பத் தேடலாம்” என

“அப்பக் கூட விடுகிறானா பாரு சாப்பிடு வந்து தேடணும்னு சொல்றான்” என்று நின்று கொண்டு இருந்த இடத்தில் ஓங்கி உதைக்க, சத்தமோ வித்தியாசமாக எழுந்தது.

முதலில் அவள் செய்கையில் சிரித்தவன், அந்த ஒலியில் ஒரு நிமிடம் யோசித்து நின்றான். அவன் முக பாவத்தைப் பார்த்தவள் “என்ன ஆச்சு தீபன். எதாவது கண்டு பிடிச்சியா” என

“நம்ம சாப்பிட்டு வந்து பார்க்கலாம். ஒரு கெஸ் இருக்கு வந்து சொல்றேன்” என்று இருவரும் திரும்பி ஊருக்குள் வந்தனர்.

கவியா “உனக்கு எப்படி இந்த துறை மேல விருப்பம் வந்தது” என்று முதல் முறையாக அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கேட்க,

ஒரு வலி நிறைந்த புன்னகை புரிந்து “எனக்கு தொல்லியல் பற்றித் தெரிய என் தாத்தா தான் காரணம். அவருக்கு இந்த கோவிலில் சிலை மேல எல்லாம் ரொம்ப ஆர்வம் . அவருக்கு எப்படி இது மேல ஆர்வம் என்று எல்லாம் தெரியாது. ஆனா எனக்கு ஆர்வம் வர இவர் தான் காரணம்” என

“ஓ.. சூப்பர் இப்ப எங்க இருக்காங்க” என “அவர் மட்டுமில்ல என் மொத்த குடும்பமே சாமி கிட்டப் பத்திரமாக இருப்பாங்க” என்றான். அவர்கள் சென்ற பயணத்தையும் விபத்து நடந்ததையும் சொல்ல,

“சோ சாரி” என்று கவலையாகச் சொல்ல, “இட்ஸ் ஓகே. நடந்து ரொம்ப வருஷம் ஆச்சு. சொல்லப்போன நான் வேளைக்குப் போகிறதுக்கு முன்னாடியே நடந்துச்சு. ஆனா என் கூடத் தான் எல்லாரும் இருப்பாங்க என்ற நம்பிக்கை என்னைத் தனியா இந்த பரந்த உலகத்தில் வேகமா ஓட வெச்சிட்டு இருக்கு” என

“உலகத்தில் எல்லாருக்கும் ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கு போல. அது அவங்க அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி வித்தியாசமாக இருக்கும். மனக்கஷ்டம் இல்லாத மனுஷனே உலகத்தில் இல்லை தானே” என்று கவலை நிறைந்த குரலில் சொல்ல,

அவளின் குரலில் இருந்த ஒரு பேதம் அவனை ஒரு நிமிடம் தடுமாற வைத்தது. “நீ எந்த அளவுக்கு ஸ்ட்ரோங் வுமன் என்று எனக்கு தெரியும். உன்னையே இப்படி பேச வெச்ச காரணம் என்ன கவிமா” என்று மென்மையாக கேட்க,

அவன் குரலில் என்ன மாயம் இருந்ததோ இது வரை அவள் யாரிடமும் சொல்லாத பகிராத பக்கத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

“தீபன் துரோகம் எப்படி வலிக்கும் தெரியுமா. நம்பிக்கை துரோகம் ரொம்ப கொடுமை, அதோட வலி அனுபவிச்சவனைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. காலேஜில் பார்த்த மாதிரி நான் இல்லாததுக்குக் காரணம் இது தான். ஒரு பெண்ணுக்குப் பெரிய ஆசை எதுவா இருக்கும். அவ சாந்தமாக இருக்கலாம் இல்லை இறுக்கமா இருக்கலாம் இல்லை கோவமா இருக்கலாம் சொல்லப்போன ரொம்ப கொடூரமாகக் கூட இருக்கலாம். ஆனா அவளுக்கும் ஒரு மனசு இருக்கும் அதுக்குள்ள பல ஆசை இருக்கும். காதல், கல்யாணம், மோகம், தாய்மை, பாசம் என்று நிறைய இருக்கும். ஆனால் இது எல்லாம் ஒருத்தரோட சுயநலத்தால் உடைக்க முடிஞ்சா என்ன செய்வா அந்த பொண்ணு. அடிக்க அடிக்க தங்கம் கூட இறுக்கிடுமாம். நான் என்ன தங்கமா வெறும் மனசு இருக்கிற பொண்ணு தானே. இவ்வளோ அடிச்சா இருக்காம என்ன தான் பண்ணுவேன்” என்று பார்வை எங்கோ வெறித்தப்படி சொல்ல,

அதுவரை தோழி என்ற எண்ணத்தில் கூட தொட்டுப் பேசாத தீபன், முதல் முறையாக அவள் கரம் பற்றினான். மென்மையான அவளின் கரத்தை பற்றி அவளின் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், அவளின் கவலையைக் களைய வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனாலும் எதுவும் பேசவில்லை. அவளே இப்பொழுது தான் தன் கவலையைச் சொல்கிறாள், நடுவே பேசி எதாவது நினைத்து நிறுத்தினால், அதனாலே அமைதியாக இருக்க,

“என்னை புரிஞ்சவங்களே என்னை நம்பாத போது எல்லார் மேலையும் ஒரு வெறுப்பு. அதுக்கு அப்பறமா நான் யார்கிட்டவும் பேசறது இல்லை. என் பத்திரிக்கையில் தினமும் ஒரு பிரச்சனை வரும். ஆனால் அதுவரைக்கும் இப்படி எல்லாம் மிரட்டல் வந்தா பயந்து வேற செய்தியைத் தான் போடுவாங்க. ஆனால் நான் அங்க வந்த கொஞ்ச நாளில் என்னை இப்படி மிரட்டனாக, எனக்கு அந்த நேரத்தில் வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் இருந்தது. வந்த எந்த மிரட்டலையும் நான் மதிக்கவே இல்லை. உண்மையை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு பிடிப்பு மட்டும் தான் என் கிட்ட இருந்துச்சு.

அதைத் தான் பிடிப்பா பிடிச்சு ஓடனேன். கடைசியா பெரிய இடத்துக்கு என்னைக் கொண்டு போச்சு. இப்ப எனக்கு இருக்கிற ஒரு பிடிப்பு அ..” என்று சொல்ல வந்தவள், தூரத்தில் கேட்க, கோவில் மணியில் தன் நிலை அடைந்தவள்,

“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு எடுத்தவள், “விடு தீபன் இப்ப இதை எல்லாம் சொல்லி மட்டும் என்ன நடக்க போகுது. எப்பவும் நடந்ததைக் கடந்து போய்டணும் இல்லனா நிஜத்தில் வாழ முடியாது” என்று அவனின் கையை பிரித்தவள், முன்னே சென்று விட்டாள்.

மதியம் உணவை முடித்து விட்டு, மீண்டும் அவர்கள் அந்த இடத்தை நோக்கி, கவியா “இந்த முறை எதாவது கண்டுப்பிடிச்சிட்டு தான் வெளியே வறோம். புரியுதா எனக்கு இன்னும் இரண்டு நாளில் முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று சாதாரணமாகச் சொல்ல,

அவளின் நிதானமாகப் பேச்சியில் அவனுக்குத் தான் நிம்மதியாக இருந்தது. இதுவரை அவனுக்கு எவ்வளவு கஷ்டம் வந்த போதும் அவனின் மனது இவ்வளவு பதறியது இல்லை. ஆனால் இவளின் சிறு கவலை அவனை மொத்தமாகச் சாய்க்க வைத்தது.

“கண்டிப்பா கண்டு பிடிக்கலாம். அதான் என் கூட நீ இருக்கியே” என அவனின் பேச்சில் ஒரு வித்தியாசம் அவளால் உணர் முடிந்தது. ஆனால் அவள் மனதில் பதியவில்லை.

இந்த முறை ஒவ்வொரு பொருளையும் பொறுமையாகக் கூர்ந்து கவனிக்க, அவனோ “இந்த இடத்தில எதோ இருக்கு” என்று போன முறை அவள் உதைத்த இடத்தில் அவன் காலை வைத்துத் தட்டி சொல்ல,

“அப்படியா” என்று இருவரும் சட்டென்று அந்த இடத்தின் மண்ணை கையை வைத்தே சுத்தம் செய்து பார்க்க, அங்கே கதவு போல் ஒரு இடம் மண்ணுக்கடியில் புதைந்து இருந்தது.

கவியா “எதோ ஒன்னு இதுக்கு கீழே இருக்கு தீபன்” என,

“இதுக்கு அப்பறமா தான் ரொம்ப சுவாரசியமாக இருக்க போது கவிமா” என்று தேட, கதவு மட்டும் தான் இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. திறக்க எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் சில நேரம் தேடியவர்கள், எந்த திறப்பும் கிடைக்காத காரணத்தால், தீபன் “நம்ம கிளம்பலாம் கவி, இருட்ட தொடங்கிடுச்சு இதுக்கு மேல நம்ம இருக்க இருக்கிறது ஆபத்து. நாளைக்கு வந்து மீதியைப் பார்க்கலாம்” என்று சோர்வாகச் சொல்ல,

“எப்பா இப்பையாச்சும் சொன்னியே ரொம்ப நன்றி. கிளம்பலாம்” என்று இருவரும் கிளம்பினார்.

அன்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று போனில் யார் கூடவோ பேசிக்கொண்டு இருந்தாள், கவியா. இதுவரை இது காதல் தானா என்று எல்லாம் யோசித்து கடைசியாக அவளிடமே சொல்லி விடலாம் என்று அவளைத் தேடி வந்தான்.

இவன் வந்தனும் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தவள் கட் செய்து “என்ன தீபன் இந்த நேரத்தில் இங்க வந்திருக்க,

“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் கவி, இதை சொல்றது சரியா தப்பா எல்லாம் தெரியாது. ஆனால் சொல்லணும் தோணுது. எனக்கு நீ கடைசி வரை என் குடும்பமா இருக்கணும்னு ஆசையா இருக்கு. உன்னை நான் ரொம்ப பத்திரமாக பார்த்துகிறேன். உன்னோட கடந்த காலம் என்ன என்று தெரியாது. ஆனால் எனக்கு நீ வேண்டும், கடைசி வரை உன் காயத்துக்கு மருந்தாக இருப்பேன்” என்று பெருமூச்சு விட்டவன் கடைசியாக “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்டு விட்டான்.

அவளோ “நீ வரும் போது நான் ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தே பார்த்தியா” என்று கேட்க “ஆமா எதோ ஒரு குட்டி பொண்ணு தானே” என

“அவ யார் பெண்ணோ இல்லை என் பொண்ணு தான்” என்று அவன் கண்ணைப் பார்த்து மெதுவாக நிதானமாகச் சொல்ல,

“என்ன” என்று அதிர்ந்தவன் அடுத்துப் பேசாமல் அங்கே இருந்து நகர்ந்தான்.

சுவைப்போம்
cocomelon
 
Last edited:
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43

கவியாவுக்கு பொண்ணு இருக்கா 😮.