• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 5

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
இன்று

மும்பை
உச்ச நீதிமன்ற வளாகம்

காவலர்களின் பாதுகாப்பில் நடுநாயகமாக நடந்து வந்த ரோஹனின் மேல் அந்த காவலர்களையும் தாண்டி ஆக்ரோஷ பெண்களின் அடிகளும், செருப்பு மழையும், விழுந்திட எதற்கும் விலகியோ, தலை குனிந்தோ நடந்தான் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி முன்னேறினான், தனக்கான தண்டனையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்…

நீதிமன்ற வாயிலை அடைந்ததும் ஒருமுறை திரும்பிப் பார்த்தவன் கண்கள் தனக்கு எதிரே போர்க்கொடி தூக்கிய மக்கள் கூட்டத்தில் தான் எதிர்பார்த்த அந்த முக்கிய நபர் இல்லாமல் போக ஏமாற்றமாக உணர்ந்து தனது ஹோட்டல் GM பிரமோத்தைப் பார்த்தான். அவரது பார்வை 'நாங்க இருக்கோம் சார்… உங்களை நம்புறோம்.' என்று செய்தியை தாங்கி சுவாசக் காற்றில் தூது அனுப்பிட கசந்த புன்னகையோடு அதனை சுவாசித்துவிட்டு நீதிமன்றம் நுழைந்தான்.

ரோஹனுக்கு எதிராக பல குற்றங்கள் முன் வைக்கப்பட்ட போதும், அதனை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாமல் போக, பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கும் பெண், அல்லது பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் வாக்குமூலத்திற்காக காத்திருக்கும்படி கூறி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

ரோஹன் மீண்டும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட, செல்லும் வழியில் இன்ஸ்பெக்டர் உத்தம்சிங் ரோஹனிடம் பேச்சுக் கொடுத்தார்.

"என்ன சொல்லி பொண்ணுங்களை மயக்கி வெச்சிருக்கே! எந்த பொண்ணுமே உனக்கு எதிரா எந்த கம்ப்ளைண்ட்டும் கொடுக்க ஏன் முன் வரலே! உண்மையாவே நீ நல்லவனா? இல்லே நல்லவன் மாதிரி மத்த பொண்ணுங்ககிட்ட நடிக்கிறேயா?"

"எனக்கு எதிரா ஒரு பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்தா இந்த கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும் அப்படித்தானே!" என்று உத்தம்சிங்கிடம் வினவிவிட்டு அவனே பதிலும் கூறினான்.

"என் பி.ஏ கிட்ட கேளுங்க… என்னை பத்தி பக்கம் பக்கமா எழுதுற அளவுக்கு கம்ப்ளைண்ட் கொடுப்பா" என்றான் ரோஹன்.

கண்கள் மூடி அமர்ந்திரந்தவனின் எண்ணங்கள் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றது.

⏪⏪⏪⏪⏪

ஒருநாள் மஹியை தனது அலுவலக அறைக்கு அழைத்தவன், அவளது வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கச் சொன்னான்.

"ஏன் என் வேலைல என்ன குறை? என்னை டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? எனக்கு ப்ராப்பர் ரீசன் வேணும்… என்னை பத்தி என் வேலையில் குறையிருப்பதா யாராவது கம்ப்ளைண்ட் பண்ணிருந்தா அது என்ன கம்ப்ளைண்ட்னு என் கிட்ட விசாரிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு…" என்று அவனுடன் சண்டையிட்டாள்.

கிஞ்சித்தும் அவள் கத்தலை கண்டு கொள்ளாமல், மேசையின் மேல் ஒரு கடிதத்தை எடுத்துப் போட்டான். விறுட்டென அதனை எடுத்து திறந்து பார்த்தவள் மீண்டும் கத்தத் தொடங்கினாள்.

"என்ன இது? எனக்கு போஸ்ட் அப்கிரேட் பண்றதா இருந்தா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன இன்ஃபர்மேஷன் கொடுக்கனும்ல…. அதுவும் இல்லாம நான் இந்த ப்ரொமோஷனை அக்ஸப்ட் பண்றதுக்குள்ள என் போஸ்ட்க்கு எதுக்கு ஆள் தேடுறிங்க? நான் எப்போ உங்க பி.ஏ-வா இருக்குறதுக்கு ஓகே சொன்னேன்!!!" என்று தன் பதவி உயர்வுக்கும் சண்டையிடுபவளை 'இவளை எப்படி தான் சமாளிப்பது!!!' என்பது போல் பார்த்தான்.

சட்டென ஒரு யோசனை தோன்ற "சரி அப்போ எனக்கு PA போஸ்ட்டுக்கு ஆட்(add) கொடு… முக்கியமா அன்மேரீட் வுமேன், ஏஜ் பிலோ டுவெண்டி ஒன், ரெண்டையும் மென்ஷன் பண்ணிடு" என்று கூறி கணினியில் தன் பணியைத் தொடர்ந்தான்.

"ஓ… சாருக்கு மேரிட் பி.ஏ, மேன் பி.ஏ-லாம் செட் ஆகாதோ?" என்றால் ஏகத்துக்கும் எகத்தாலமாய்…

"நீ தான் இங்கே ரெஸார்ட்ல எனக்கும் வெர்க்கர்ஸ்க்கும் நிறையா கன்டிஷன் போட்டிருக்கேயே!… அதை மீறினா மேனேஜ்மெண்ட்க்கு எதிரா போர் கொடி தூக்குவே போல… அதான் இந்த ப்ளான்… பி.ஏ மோஸ்ட் ஆஃப் டைம் என் கூட தான் இருக்கனும்… சோ வெளியே எங்கேயாவது போக வேண்டி வரும். அதனால அன்மேரீட் வுமேன்-ஆ இருந்தா…" என்று அவன் கூறும் போதே காளியாக மாறியிருந்தாள் மஹி… "வெளியிடங்கள்ல கொஞ்சம் அனுசரிச்சு போவாங்க…" என்று அவன் நீட்டி முழக்கி கூறி முடித்தான்.

அலைகடலைப் போல் அகம் முழுதும் பரவிய கோபத்தில் அவனது மேசையில் பொங்கி வரும் அலையில் ஒரு பெண் சர்ஃபிங் விளையாடிக் கொண்டிருப்பது போன்று இருந்த செராமிக் பேப்பர் வெய்ட்டை எடுத்து அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு நெருங்கியவள், அவனது ஒற்றை கண் சிமிட்டலில் "ச்சீ…" என்று கோபமாய் உரைத்துவிட்டு கையிலிருந்த பேப்பர் வெய்ட்டை மீண்டும் டேபிலில் வைத்துவிட்டு வெளியேறினாள்.

மறுநாள் அவன் கூறியது போல் இல்லாமல், அனுபவமுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் வேலை வாய்ப்பு என்று விளம்பரப்பட்டிருக்க, அதனைக் கண்டவன், மீண்டும் அவளை அழைத்து,

"என்னை இப்படி பலிவாங்குறேயே! உனக்கு நான் சந்தோஷமா இருக்குறது பிடிக்கலேயா?" என்றான்.

"இருங்களேன்… தாராளமா சந்தோஷமா இருங்க… வெளியே போன அத்தனை பொண்ணுங்க… நீங்க கொடுக்க வேண்டியதை கொடுத்தா அவங்களும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கப் போறாங்க…" என்று சுள்ளென விழுந்தாள்.

"சரி விடு… நீ ஏதோ டென்ஷன்ல இருக்கே… நெக்ஸ்ட் வீக் இன்ட்ரவியூனு. எல்லாருக்கும் மெய்ல் பண்ணிடு" என்று அவனுக்கு இழப்பில்லை என்பது போல் கூறினான்.

மஹி தான் 'இவன் என்ன ரகம்! இருக்கு ஆனா இல்லே கேட்டகிரியா இருப்பானோ! அப்படியா தான் இருக்கும், நம்ம முன்னாடி ஏமாற்றத்தை காண்பிக்க பிடிக்காம சும்மா கெத்து காட்டுவானா இருக்கும்…' என்று புலம்பித் திரிந்தாள்.

நேர்காணல் அன்று பத்து, பனிரெண்டு நபர்கள் மட்டுமை வந்திருந்தனர். இதற்கு முன் வேலை பார்த்த அனுபவம் இல்லாதவர்கள் கூட நல்ல முறையில் அவனது கேள்விகளுக்கு விடையளித்த போதும், திருமணமானவர்கள் என்ற காரணத்திற்காகவே குறை கண்டுபிடித்து நிராகரித்தான் ரோஹன்.

ஒருவரும் தேரவில்லை என்றவுடன் மஹி தானாகவே ரோஹனைக் காண அவனைத் தேடிச் சென்றாள். அவனது அறையில் அவன் இல்லை என்றவுடன், ரோஹன் எங்கே என்று விசாரிக்க, நீச்சல் குளம் இருக்கும் தளத்தில் இருப்பதாகக் கூறிட, விரைந்து அங்கே சென்றாள்.

மஹி மின்தூக்கி வழியே கடைசி தளத்தை அடைந்து, அவனருகே சென்றதும், "ஏன் சார் இப்படி பண்ணினிங்க?" என்றாள். அவனோ என்ன ஏதென்று தெரியாமல் ஒருநொடி திருதிருவென முழித்திட,

"இன்னைக்கு வந்தவங்கல்ல 4 பேர் டாலண்ட்டடு பெர்ஷன் தான் இருந்தாங்க, உங்க செல்ஃபிஸ்காக எல்லாரையும் அநியாயமா ரிஜெக்ட் பண்ணிட்டிங்கலே!" என்றாள்.

"நீ என் பி.ஏ வா இருக்கேன்னு சொல்லு… அந்த நாலு பேரையுமே வேலைல சேத்துக்கிறேன்… அவங்களுக்காக புதுசா ஒரு போஸ்டிங் கூட நாமலா க்ரியேட் பண்ணிக்கலாம்…" என்றான் காதுவரை வாயை இழித்துக் கொண்டு...

--- தீயாய் தொடர்வாள்...