“அவ யார் பெண்ணோ இல்லை. என் பொண்ணு தான்” என்று அவன் கண்ணைப் பார்த்தே நிதானமாகச் சொல்ல, “என்ன” என்று அதிர்ந்தவன் அடுத்து எதுவும் பேசாமல் அங்கே இருந்து நகர்ந்தான்.
அடுத்த நாள் அழகாக மலர்ந்தது. தினமும் கவலை இருந்தாலும் மனிதம் நிம்மதியாக இருக்கக் காரணம் அடுத்த நாள் புதிதாகத் தொடங்குவதில் தானே. தினமும் சந்தோசமாக எழுந்து கொள்ளும் தீபன் இன்று சற்று வேதனை மற்றும் பயம் கலந்த உணர்வில் தான் எழுந்தான்.
வேதனை அவள் மேல எழுந்த காதல், அவனின் முதல் காதல் நிறைவேறாமல் போனதில், எங்கே காதல் சொல்லியதில் கோவப்பட்டு சொல்லாமல் சென்று இருப்பாளோ என்ற பயம், கல்யாணம் ஆனா பெண்ணை காதலித்து காதல் சொல்லியதில் குற்ற உணர்வு என்று எல்லாம் கலந்த நிலையில் வெளியே வர,
“இது தான் நீ பொறுப்பா வர நேரமா, இன்னும் பொறுமையா வா. நேத்தே சொன்னேன் தானே எனக்கு வேலை இருக்கு சீக்கிரமா போகணும்னு. போய் குளிச்சிட்டு வா” என்று கவியா இவனைப் பார்த்துக் கத்திக்கொண்டு இருக்க,
அதை எல்லாம் காதில் வாங்காமல் “நீ கிளம்பலையா” என்று கேட்க, அவனை முறைத்துக் கொண்டே “ஏன் கிளம்பனும்னு ஆசையா இருந்தியா. இடியட் மாதிரி பேசாம கிளம்ப வழியை பாரு. நீ உன் துறை ஆளுங்க யாரையும் நம்பாமல் என் கிட்ட உதவி கேட்டு இருந்த அதை முடிக்காமல் நான் கிளம்ப மாட்டேன்” என்று அவனைக் கிளம்ப சொல்லிவிட்டு அவள் தன் அறையை நோக்கிச் சொல்ல, “கவி” என்று அழைக்க,
அவளும் திரும்பி என்ன என்பதைப் போல் பார்க்க, “உன் பொண்ணு பெயர் என்ன” என்று ஆர்வமாகக் கேட்க,
“அனன்யா” என்றதும் அவனும் சிரித்துக் கொண்டே சென்றான். முகம் பார்க்காமலே அந்த குழந்தையை நேசிக்க, பாசம் வைக்கத் தொடங்கினான். பிடித்தவளின் குழந்தையைப் பார்க்காமலே பிடித்தது விட்டது. காதல் தான் எத்தனை விந்தையானது.
அன்றும் அவர்கள் அங்கே செல்ல, நேரம் சென்றதே தவிர ஒன்றும் கிடைக்கவில்லை. வெறும் கோபுரம் மட்டுமே இருக்க, சுற்றி வெற்று இடம், இரண்டு பக்க சுவற்றில் எதுவும் இல்லை, சலித்துக் கொண்டு திரும்பியவனின் கண்ணில் பட்டது கீழே உதிர்ந்து கிடந்த காய்ந்த மண்.
“கவி இங்க பாரு, இந்த சுவர் முழுக்க மண்ணில் பூசி மொழுவி இருக்காங்க. கண்டிப்பா இதை எடுத்தால் நமக்கு எதாவது குறியீடு கிடைக்கும்” என அவளும் அதைப் பார்த்து தன் கையால் தேய்க்க, அழுத்தித் தேய்த்த பின்னே அது உதிர்ந்தது.
“மச்.. கையில் பண்ணவேண்டும் பாரு உன் கையே சிவந்து போச்சு” என்று அவள் கையை பற்றிச் சொல்ல, அவனை முறைத்து தன் கரத்தை உருவியவள், “தொடாமலும் பேசலாம்” என
அவனோ ஒரு நிமிடம் குழம்பி பின் “ஹலோ எப்பவும் நீ எனக்கு நல்ல தோழி, அடுத்துத் தான் மத்த எல்லாம்” என
“வெட்டிப் பேச்சு பேசாமல் இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசி, என்ன வேலை செய்தலும் அதில் கவனம் ரொம்ப முக்கியம்” என
“உன்னை வெச்சிட்டு நான் எப்படி மத்த விசயத்தில் கவனமா இருக்கிறது. தப்புனு தெரிஞ்சும் கண்ணு உன்னைத் தான் பார்க்கிறது” என்று சத்தமே இல்லாமல் முணுமுணுக்க,
“என்ன” என்று அவளும் கேட்க, அவன் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியவன், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
அவனிடம் இரண்டு சிறு ப்ருஷ் இருந்தது, அதை அவளிடம் கொடுத்தவன் “இதை யூஸ் பண்ணி மண்ணை எடுக்கலாம்” என்று அவளிடம் கொடுக்க,
“இதை வைத்து இவ்வளவு பெரிய சுவரில் இருக்கிற மண்ணை எடுக்கணுமா…. மனுஷனா நீ இதை எடுக்கவே பல நாள் ஆகும் போல, உடனே இதை எடுக்கக் கேட்டால், நீ இங்கவே செட்டில் ஆகுற ஐடியாவை தர முடியலைடா உன்னோடு” என்று கடுப்பாகச் சொல்ல,
“டேமேஜ் ஆக கூடாதுல தான் சொல்றேன். பொறுமையாகவே எடுக்கலாம். ரொம்ப எல்லாம் கஷ்டமாக இருக்காது” என்று அவன் ஒரு பக்கம் செல்ல, இவளோ தன் விதியை நொந்தப்படி மற்றய பக்கம் சென்று சுவற்றைச் சுரண்ட ஆரம்பித்தாள்.
அதே நேரம் நாட்டின் வட கோடியில் “நம்ம நினைச்ச காரியம் எப்படி போய்ட்டு இருக்கு” என்று ஒரு ஆறடி மனிதன் இருளில் அமர்ந்த படி கேட்க,
“அந்த பையன் கோபுரத்தில் தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறான். நம்ம ஆளுங்க ஆராய்ச்சி பண்ணின அதே இடத்தில் தான் பண்றாங்க. இந்த முறையும் எதுவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை சாரே” என்று அவன் தன் நிலைப்பாட்டைச் சொல்ல,
“எப்படி எதுவும் இல்லாமல் இருக்காது. நிச்சயமாக அங்கே தான் நம் ஆராய்ச்சிக்குத் தேவையான விசயம் கிடைக்கும். அதை மட்டும் நாம் கண்டு கொண்டால் உலகத்தையே ஆளும் அதிகாரம் நமக்கு வரும். அந்த பையனை வாட்ச் பண்ணிட்டே இருங்க. அவன் அதை கண்டுப்பிடித்தும் அவனைக் கொன்றுவிடு” என
“சார் அந்த பையன் கூட ஒரு பெண்ணும் இருக்கு. அவள் தான் அவனுக்கு உதவுகிறதா நம்ம ஆளுங்க சொல்றாங்க. அந்த பெண்ணையும்” என்று இழுக்க,
“அவனைக் கொன்றுவிட்டு அவளை நம்ம இடத்திற்குக் கொண்டு வர சொல்லு” என அவனும் சரி என்று தலையை ஆட்டிக் கொண்டு அங்கவே நிற்க,
“சொல்லு உன் மனசில் என்ன ஓடிட்டு இருக்கு” என்று அவனை அறிந்து கேட்க,
“எப்படி என்ன பொருளைத் தேடி இப்படி தென் கோடியில் தேடிட்டு இருக்கோம். அங்க என்ன இருந்திட போகுது” என்று இவனும் அறியாமல் கேட்க,
“பண்டைய தமிழ் மக்களின் பெருமையைப் பற்றித் தெரியாமல் பேசுகிற, அவர்களே அதன் பெருமை தெரியாமல் இருக்கும் போது நீ கேட்கிறதில் தப்பில்லை. ஒரு நாள் உனக்கே புரியும்” என்று அவனை வெளியேறச் சொல்ல, அவனும் யோசித்துக் கொண்டே சென்றான். யார் இவர்கள்??
மதிய வெயில் மிதமான வெப்பத்தைப் பரப்பிக் கொண்டு இருக்க, ஆனாலும் அந்த இடம் மட்டும் சற்று அதிகமான வெப்பகே காற்றில் நிறைந்திருக்கக் காரணம் அங்கே பாலைவனம் போல் கட்சியளிக்கும் செம்மண் தான்.
“தீபன் எனக்குச் சக்தி எல்லாம் போய்டுச்சு. நீ இதுக்கு மேல பார்த்துக்கோ” என்று சற்று நிழலாக இருந்து இடத்தில் அமர,
கொஞ்ச நேரத்தில் “கவி” என்ற சத்ததில் அவனை நோக்கிச் சென்றாள்.
“எதுக்கு கத்தன” என “இங்க பாரு இதில் குறியீடு இருக்கு, நம்ம சாப்பிட்டு வந்து இந்த பக்கம் இருக்கிற சுவற்றில் மட்டும் பார்க்கலாம்” என
அவளோ “மீண்டும் மீண்டுமா” என்று கலைத்துத் தான் போனாள்.
கொஞ்ச நேரத்தில் அவளுக்கு ஒரு போன் வர, அதைப் பேசியதிலிருந்து சற்று பயந்தது போல் தான் இருந்தாள். அதை உணர்ந்து “என்ன கவி எதாவது பிரச்சினையா.. என் கிட்ட சொல்லு நான் உனக்கு என்னால் முடிந்த உதவியை பண்றேன்” என்றான்.
பெருமூச்சுடன் “கோட்டில் கேஸ் போய்ட்டு இருக்கு. அனன்னியா கஸ்டடி எனக்குக் கிடைக்க வாய்ப்பு ரொம்ப கம்மியாக இருக்கு. அதைத் தான் லாயர் இப்ப சொல்லிட்டு இருந்தார். வேற வழி பார்க்கிறதா சொல்லியிருக்கிறார்” என
அவனோ புரியாமல் அவளைப் பார்த்து “பெண் குழந்தை அம்மா கிட்டத் தானே இருக்கனும். அதானே நம்ம சட்டம் சொல்லுது” என்றவனை வலியோடு பார்த்துச் சிரித்தவள்,
“பார்க்கலாம், இந்த ஈசன் எனக்கு என்ன எழுதி இருக்காருனு” என்று வருத்தத்தோடு சொல்ல,
‘என்னைத் தான்’ என்றவனின் மனநிலையைச் சொல்ல முடியாத அளவுக்கு இன்பம் நிறைந்து இருந்தது.
அவள் ‘தன் பெண்’ என்ற பொழுது மற்றான் மனைவியை நேசிக்க வைத்த கடவுளை மானசீகமாகத் திட்டினான் தான். ஆனால் இப்போது அவள் பேச்சில் புரிந்தது அவள் விவாகரத்து கோரி உள்ளாள் என்பதைத் தானே.
தன் காதல் கலங்கமானது இல்லை என்ற சந்தோஷம் அவன் மனதில்.
மதிய உணவு முடித்து வரும் வழியில் கவியா திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வர,
“என்ன ஆச்சு” என்று அவன் கேட்க, “சம்ஒன் இஸ் ஃபலோஸிங் அஸ்” என்று உறுதியாக சொல்ல,
“எப்படி சொல்ற” என்ற கேள்விக்கு, “நான் பத்திரிகைக்காரி” என்றவள் பின்,
“எதுவும் பேசாதே புரியுதா. முக்கியமாக சத்தமா பேசாதே. எதாவது நமக்கு அங்க கிடைத்தால் கூட ‘ஐயொ ஒன்றுமே கிடைக்கலையேனு தான் நாம சொல்லனும்” என்று அவனுக்கு தந்திரமாக இருக்க சொல்ல தர,
அவனும் அவள் கூறியதைப் புரிந்து கொண்டு “சரி கவிமா” என
“அது என்ன ஒரு முறை கவியானு முழு பெயரைக் கூப்பிடுகிற, ஒரு முறை கவி னு கூப்பிடுகிற சில நேரத்தில் கவிமானு சொல்ற” என்று தன் சந்தேகத்தைக் கேட்க,
“இதை விட வேற ஒரு பெயரில் கூப்பிட ஆசை தான் ஆனால் நீ செருப்பாலே அடிப்ப, காரணம் நீயே தெரிந்துக்கோ. இல்லை நான் அப்பறமா சொல்றேன்” என்று பேசிக்கொண்டே இடத்தை அடைந்தவர்கள்,
“இந்த சுவற்றை மட்டும் சுத்தம் பண்ணலாம்” என்ற முடிவோடு ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்திலே அவர்கள் கண்ணுக்கு நிறைய எழுத்துகள் புலப்பட்டது.
“கவி நிறைய எழுத்து இருக்கும், ஆனால் அதற்குள் தான் இந்த கதவின் சாவிக்கு கிளு மறைந்து இருக்கும். பொறுமையா தேடு” என
“எனக்குக் கல்வெட்டு எழுத்துக்கள் எல்லாம் படிக்கத் தெரியாது. நீ இதை எல்லாம் உன்னோட போனில் போட்டோ எடு. நம்ம இந்த சுவற்றை பழையபடி மாற்ற என்ன பண்றதுனு பார்க்கிறேன்” என்று கீழே உதிர்ந்த மண்ணை எல்லாம் சேகரித்து வைத்தாள்.
போட்டோ எடுத்துக்கொண்டே “இந்த மண்ணை வைத்து என்ன பண்ணப் போகிறாய்” என்று தீபன் கேட்க,
“யோசித்து பாரு, ஒரு ரகசிய கதவுக்குச் சாவி இல்லை. அதற்கான குறியீட்டுக் கூட இப்படிப் பாதுகாப்பான முறையில் வைத்து இருக்காங்கனா உள்ளே எதோ ஒரு ரகசியம் இருக்கு. அதான் இந்த குறியீட்டை மறைக்க முடியுமானு பார்க்கிறேன்” என, அவனும் புகைப்படம் எடுத்து விட்டு மண்ணை சேகரிக்க உதவியவன் வேகமாகத் தான் கொண்டு வந்த பையில் இருக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் சேகரித்த மண்ணில் சிறிதாகத் தெளித்து சுவற்றில் பூச, அதுவோ அழகாகப் பொருந்தி விட்டது.
இருவரும் அதை அதிசயமாகப் பார்க்க, கவியா “பார்த்தியா இதைக் கூட இரண்டாவது முறை யூஸ் பண்ற மாதிரி பண்ணி இறுக்கங்க. சரி வா நம்ம கிளம்பலாம்” என்று இருவரும் தங்கள் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு செல்ல, இவர்களைக் கவனிக்கும் ஆள் இருவரின் முகத்தைப் பார்த்த உடன் யாருக்கோ கால் செய்து “இன்றைக்கும் எதுவும் கிடைக்கல சார்” என்று தகவலைச் சொல்லி விட்டு இருவரும் வீட்டுக்குத் தான் சொல்கிறார்களா என்று பார்த்து விட்டுச் சென்றான்.
அன்று இரவு முழுவதும் அந்த குறியீட்டில் முழுகிப் போனவன் விடியும் வேளையில் தான் அதனைக் கண்டு அறிந்தான்.
“மாண் பிறப்பும் மணம் பெற்றும், கன்னிகை நடையின் தொழில், திறவிதல் வாயில்” என்று இருக்க, அதைப் படித்தவன் கொஞ்சம் புரிந்தும் புரியாதா நிலையில் தான் இருந்தான். குறியீட்டால் நிகழப் போவது யாதோ??