கண்கள் சிவந்து கிடக்க, இதழோ சந்தோஷத்தில் புன்னகைத்தது. இரவு முழுவதும் பல குறியீட்டை மொழிபெயர்த்தவன் கடைசியாக வார்த்தையாகக் கண்டறிந்து, அதைக் கோர்த்து வாக்கியமாக அமைத்தான்.
புதிதாக முதல் முறை செய்பவருக்கு இது எல்லாம் மலையைப் புரட்டும் வேலையாகத் தான் தெரியும். ஆனால் அதிலே ஊறிக் கரைத்துக் குடித்தவர்களுக்குக் கடினம் தான் ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியதாக தான் இருக்கும்.
காலையில் எழுந்த கவியா, மனதில் என்றும் தோன்றாத ஒரு தடுமாற்றம் ஏன் என்றே தெரியாமல் தோன்றியது.
‘என்ன ஆச்சு மனசு எல்லாம் ஒரு மாதிரி படபடப்பாக இருக்கு. எதோ தப்பா நடக்கிற மாதிரியே ஒரு பீல்’ என்று தோன்றிய அடுத்த நொடி அனன்யாவிற்கு அழைத்தாள்.
“ஹலோ மா” என்ற மழலை குரலில் அவளின் மனம் சாந்தம் அடைய “பாப்பா இன்னும் ஸ்கூல் கிளம்பலையா” என்றதும்,
“இதோ சாப்பிட்டு ஆட்டோ வந்ததும் கிளம்பிடுவேன். நீ எப்ப வருவ. ஐ மிஸ் யூ” என்ற குரலில், “அம்மாவும் மிஸ் யூ பாப்பா. குட்டி சமத்தா இருங்க நான் வரேன். அம்மாவிற்கு வேலை இருக்கு பை டா” என்றதும் “பை மா” என்று அந்த பக்கம் அணைக்கப்பட்டது.
‘பாப்பா நல்லா இருக்கா அப்பறம் நம்மை நம்பி ஒரு ஜீவன் வந்துச்சே அதோட நிலைமை என்னனு பார்க்கணும்” என்று அவனின் அறையை நோக்கிச் செல்ல, அங்கே அவன் இருந்ததற்கு தடையமே இல்லை.
‘இந்த பையன் எங்க போனான்’ என்று வெளியே தேட நினைக்கும் போது தான் ‘எதற்கும் மொட்டை மாடியில் ஒரு முறை பார்க்கலாம்’ என்று மேலே சென்று பார்க்க,
ஒரு ஓரத்தில் பல பேப்பரில் கிறுக்கிக் கசக்கி எறிந்த இருக்க, ஒரு நோட் மட்டும் மூடி வைக்கப்பட்டு இருந்தது. தீபனோ கேட்பாரற்று தரையில் கைகளைக் குறுக்கிக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான்.
‘இவனைப் பார்த்தா இப்ப தான் தூங்கின மாதிரி இருக்கு, அப்படி என்ன கிறுக்கி வைத்து இருக்கிறான்’ என்று யோசித்துக் கொண்டே கசங்கி இருந்த பேப்பரை பிரித்துப் பார்க்க, பல வடிவங்கள் அதிலிருந்தது. பின் அந்த நோட்டை எடுத்துப் பார்க்க,
“மாண் பிறப்பும் மணம் பெற்றும், கன்னிகை நடையின் தொழில், திறவிதல் வாயில்” என்று இருக்க,
“இது என்ன மாண் ஸ்பெல்லிங் தப்போ, இருக்கும் தூக்கத்தில் போட்டு இருப்பான். கன்னிகை னா பொண்ணு, தொழில் னா வேலை, வாயில் னா கதவு, இது எல்லாம் ஓகே அதுக்கு மேல ஒன்றுமே புரியலையே” என்று சத்தமாகப் பேசிக் கொண்டே யோசிக்க, அவளின் சத்தத்தில் தன் கண் மணிகளைப் பிரித்தான்.
காலை வெயிலின் மெல்லிய ஒளியில் அவளின் வதனங்களோ பளபளப்பாக இருக்க, “வியா குட்டி என் கனவில் என்ன பண்ணிட்டு இருக்கீங்க. நான் உன் கனவில் வர வாய்ப்பு இல்லைனு தெரிந்து நீயே என் கனவில் வந்துட்டியா. எனக்குத் தெரியும் என் வியா குட்டிக்கு என்னை பிடிக்கும்னு. எங்க மாமாக்கு ஒரு மார்னிங் கிஸ் கொடுத்து எழுப்பு பார்க்கலாம்” என்று கனவில் நடப்பதாக நினைத்து அவள் கையை பற்றி இழுக்க,
அவனை எழுப்பக் குனிந்தவள் சட்டென்று இழுத்ததில் நிலை தடுமாறி அவன் மேலே விழுந்து விட்டாள். இது எல்லாம் அவள் என்ன என்று உணரும் ஒரு நொடியில் நடந்து இருக்க,
தன் மேல் விழுந்த சுகமான சுமையில் கனவிலிருந்து வெளியே வந்தவன், “ஹே கவி என் ரூமில் என்ன பண்ற, ஆமா என் மேல படுத்து என்ன தேடிட்டு இருக்க” என
“ஹ்ம்ம்… இந்த பக்கமா புதையல் இருக்குனு சொன்னாங்க, அதான் பார்க்க வந்தேன். யோவ் கையை எடுய்யா, சூரியன் சுள்ளுனு அடிக்குது இவரு குற்றாலத்தில் இருக்கிற மாதிரி படுத்து இருக்காரு” என்ற போது தான் தன் இரு கரமும் அவளை அனைத்து இருப்பது தெரியப் பதறி எழுந்தான்.
“நீ ஏன் இங்க வந்த” என்று பதட்டமாகக் கேட்க, “மனுஷனா நீ.. நல்ல பையன்னு நினைச்சா கனவில் என்னை எல்லாம் நினைக்கிற” என்று திட்டத் தொடங்கினாள்.
‘இப்படி இவ திட்டுற அளவுக்கு என்ன பண்ணோம்னு தெரியலையே’ என்று எண்ணிக் கொண்டே “சாரி கவி” என,
அதற்கு மேல் கத்த முடியாமல் அவளோ பெருமூச்சுடன் “இது தான் நேற்று கிடைத்த தகவலா. இதை வைத்து எப்படி அந்த கதவைத் திறக்க போறோம்” என்று கையில் அவன் எழுதியதைக் காட்டி கேட்க,
“இது தான் அந்த ரகசியத்தோட ஆரம்பப் புள்ளி. எனக்கு இதுல இருக்கிற இரண்டு மூன்று வார்த்தை புரியலை. பக்கத்தில் லைப்ரரி எங்க இருக்குனு பார்த்து, போயிட்டு வரணும்” என்று அன்று தங்கள் பயணத்தை முதலில் பக்கத்தில் இருக்கும் லைப்ரரி நோக்கி ஆரம்பிக்க,
ஆனால் பலனோ பூஜ்யமாகத் தான் இருந்தது. “எதோ லைப்ரரி வந்தா கிடைக்கும்னு சொன்ன இங்க தமிழ் அகராதி என்ற பெயரில் நமக்குத் தெரிந்த வார்த்தை தான் இருக்கு. இதுக்கு எதுக்கு நம்ம எவ்வளோ தூரம் வரணும்” என்று கவியா கடுப்பாகக் கேட்க,
“நானே செம கடுப்பில் இருக்கேன். நீ வேற பேசியே கொல்லாதே, போனில் போட்டுப் பார்க்கலாம்” என்று பார்க்கத் தொடங்கியும் சரியாக இருவருக்கும் அதன் அர்த்தம் கிடைக்கவில்லை.
சோர்வோடு தான் வீட்டுக்கு வந்தனர். அந்த நேரம் அவர்களே எதிர்பார்க்கா வண்ணம் அந்த பாட்டி அங்கே இருக்க, “என்ன பாட்டி எதாவது வேண்டுமா” என்று தீபன் கேட்க,
“இல்ல அப்பு காலையில் கோவில் போய் இருந்தேன். பிரசாதம் கொடுக்கலாம்னு வந்தேன்” என
கவியா மனதில் எதோ தோன்ற “பாட்டி நான் ஒரு வாக்கியம் சொல்றேன் அதுக்கு அர்த்தம் சொல்றிங்களா” என “கேளு புள்ள தெரிஞ்சா சொல்றேன்” என்றதும் அவள் அந்த வாக்கியத்தைச் சொல்ல,
“அட இது தானா, இதுக்கு அர்த்தம் ‘கல்யாணம் முடிந்தும் கன்னியாக இருக்கிற பெண்ணோட கால் பட்டா கதவு திறக்குமாம்” என்று இவர்களின் தேடலுக்கு எளிதாகப் பதிலைச் சொல்ல, அவனோ அதிர்ந்து கவியாவை பார்த்தான். சொல்லி விட்டு அந்த பாட்டி சென்று விட பின்,
“எப்படிக் கவி” என “அடிக்கடி நம்ம மறக்கிற விசயம் தான். மனுஷங்க பல புத்தகங்களுக்கு சமமானவங்க தான்” என்று சொல்லி விட்டுச் சிரிக்க,
“சிரிக்கிற நீ. இப்ப நான் இது மாதிரி இருக்கிற ஒரு பொண்ணை எங்க போய் தேடறது என்ற கவலையில் இருக்கேன். இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலே செருப்பால் அடிப்பாங்க” என்று பாவமாகச் சொல்ல,
அவளின் முகமோ அதிர்ந்து அவனைப் பார்த்தது. கண் முன்னே அவள் கடந்த காலம் நிழல் ஆடியது.
நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் பிரமலமான பள்ளி இது. ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் இருவருக்கும் சமமாகப் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி கொடுத்து அனைவரின் திறமையையும் வெளியே கொண்டு வரும் நிர்வாகம்.
முக்கிய சாலையில் அமைத்து இருப்பதால், போக்குவரத்து நெரிசல், மற்றும் வாகனங்களின் சத்தம் நிறைந்தே காணப்படும். வாகனங்களின் சத்தத்தையும் மீறி, மாணவ மாணவிகளின் சத்தம் அந்த பள்ளி மைதானத்தையே நிறைத்து இருக்க, அனைவரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டை தங்கள் நண்பர்களோடு விளையாடிக் கொண்டு இருக்க, ஒரு மாணவி மட்டும், எதிலும் கலந்துகொள்ளாமல் தனியாக முதல் தளத்திலிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்க,
“இன்னும் நீ எதுக்கு உன்னை விட்டுட்டு போனவங்களையே நினைச்சு இப்படி இருக்க போற, வா எங்க கிளாஸுக்கும் இப்ப தான் PET பீரியட். எங்க கூட சேர்த்து விளையாடு” என்று பக்கத்து வகுப்பு மாணவியான ஸ்வாதி அழைக்க,
“ப்ளீஸ் ஸ்வாதி, எனக்கு ஹெல்ப் பண்றேன்னு நினைச்சு இன்னும் என்னைக் கஷ்டப்படுத்தாத, எனக்குத் தெரியும் நான் பண்ணது தப்பு என்று. எல்லாரும் நல்லா இருக்கனும், எனக்கு பிரிரெண்டா இருக்கனும்னு நினைச்சு என் ப்ரிண்ட்ஸை கஷ்டப்படுத்திட்டேன். உன்னையும் தப்பு சொல்ல முடியாது. எல்லாம் என் தப்பு தான். தேங்க்ஸ் எனக்காக யோசிச்சதுக்கு” என்று அவளைக் கிளம்பச் சொல்ல,
ஸ்வாதி மனமே இல்லாமல் தான் சென்றாள். அவள் செய்த முட்டாள் தனம் தான் இங்கே ஒருத்தி தன் தோழிகளையே பிரிந்து உள்ளாள்.
ப்ரியா “ஏன் டி அவளை சும்மா விட்ட, இப்படி உன் பிரிரெண்ட்ஸ் உள்ளே சண்டை வர அவள் தானே காரணம்” என்று வகுப்பில் இருக்கும் மற்றொரு தோழி கேட்க,
கவியா “பெரிய தப்பு பண்ணதே நான் தானே டி. எனக்குத் தெரியலை உண்மையா தெரியலை, புரியலை ஆனால் என் பிரென்ட் என் முகத்தைப் பார்த்து ‘நம்பிக்கைத் துரோகி’ னு சொல்ற வரை தெரியலையே.
உனக்கு தெரியாதுல எங்களுக்குளே எந்த ரகசியமும் கிடையாது டி. அப்படி தான் நாங்க எல்லாம் எல்லாரோட அக்கௌன்ட் பாஸ்வார்ட் ஷேர் பண்ணிப்போம். இதுல எல்லாம் என்ன இருக்குனு தான் நினைச்சேன். ஸ்வாதி என் கிட்ட முதல் முறை ஜனனி அக்கௌன்ட் பாஸ்வேர்ட் கேட்ட பொழுது எனக்கு தெரியாதுன்னு தான் சொன்னேன்.
எப்பவும் ரொம்பக் கவனமாக தான் இருந்தேன். எனக்கு ஸ்வாதியைப் பிடிக்கும் டி. எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் வெறுக்கத் தோன்றாது. ஒரு நாள் நமக்கு எக்ஸாம் அதுவும் காலையில் எட்டு மணிக்கே. வேகா வேகமாக வந்தேன், அந்த நேரத்தில் ஸ்வாதி என்னைப் பார்த்தாள். அப்ப சடனா ஜனனி பாஸ்வேர்ட் கேட்ட, எக்ஸாம் டென்ஷன்ல நான் சொல்லிட்டு போய்ட்டேன்.
சொன்ன ஞாபகம் கூட எனக்கு இல்லை. இரண்டு நாள் கழிச்சு ஜனனி கால் பண்ணி இது மாதிரி ஸ்வாதி நான் யார் கூட எல்லாம் சேட் பண்றேன் னு கரெக்டா சொல்ற அவளுக்கு எப்படி தெரியும்னு கேட்டா, அப்பக் கூட இந்த மரமண்டைக்குப் புரியலை” என்று கண்ணில் வழியும் கண்ணீரை யாரும் காணும் முன் துடைத்துக் கொண்டே சொல்ல,
“சரி விடு டி, இதை நினைச்சு இன்னும் கவலைப்படாதே” என்று ப்ரியா சொல்ல,
“நான் எங்க நான் தான் பாஸ்வேர்ட் கொடுத்தேன்னு தெரிஞ்சா என் கூட பேச மாட்டாங்களா என்ற பயத்தில் பொய் சொல்லிட்டேன். அது தான் நான் பண்ணத் தப்பு. இனி என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் என் வாயிலிருந்து பொய் வரவே வராது. என்னோட ஐந்து தோழிகள் என்னை விட்டு பிரியக் காரணம் நான் சொன்ன பொய்” என்று தூரத்தில் ஐவரும் விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே சொல்ல,
“நீ சாரி சொல்லு டி, அவங்க கண்டிப்பா உன் கிட்ட பேசுவாங்க” என்ற ப்ரியாவிடம்,
“சாரி சொன்ன நான் பண்ணத் தப்பு இல்லைனு ஆகிடுமா இல்லை என் மேல போன நம்பிக்கை தான் திரும்பி வருமா. இதே இடத்தில் நான் இருந்தா சாரி சொன்னதும் பேசி இருப்பேனா, தப்பு யார் பண்ணாலும் தப்பு., தப்பு தான். பார்க்கலாம் காலம் என் தப்பை மறக்க வைக்கிறதா” என்று எண்ணிக் கொண்டே சென்றாள்.
தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வு மதிப்பெண்கள் வர உள்ள நிலையில், “அம்மா நான் கண்டிப்பா நல்ல மார்க்ஸ் தான் எடுப்பேன். என்னை சிஏ படிக்க வைக்கிறிய” என்று கவியா கேட்க,
“கண்டிப்பா கவி” என்ற அவளின் தாய் கோமதி மனதில் இருக்கும் கஷ்டத்தை அவளிடம் சொல்லாமல் மறைக்க,
அவளின் தங்கை மற்றும் தம்பி ரித்திகா, சரவணன் இருவரும் பத்தாவது மற்றும் ஆறாவது படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் படிப்பு என்று அவரை பயம் கொள்ளவே வைத்தது.
“அம்மா அப்பா எங்க… எனக்கு நாளைக்கு ரிசல்ட் வந்திடும். அதுக்கு அப்புறமா நம்ம சிஏ எந்த அகாடமி படிக்கிறதுனு பார்க்கலாமா” என அவளின் தாய் கோமதி “வருவார் மா” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
யாருக்கோ போன் செய்து இவளுக்குக் கேட்காத அளவே பேசி வைத்து விட, இவளுக்கோ சந்தேகமாக இருந்தது. எப்பொழுதும் இருக்கும் சூழலில் வீடு இல்லை. சம்மந்தமே இல்லாமல் மிகவும் அமைதி, சாந்தமே குடி இருக்கும் தாயின் கண்களில் வேதனை. அளவுக்கு ஒன்னும் புரியவில்லை.
கடந்த சில மாதங்களாக நண்பர்களால் மனக்கஷ்டத்தில் இருந்த காரணத்தால் வீட்டில் நடப்பதில் கவனம் பதியவில்லை.
நேரே தன் தாயிடம் சென்றவள் “அம்மா எதோ தப்பா இருக்கிற மாதிரி எனக்கு ஒரு எண்ணம். என்ன ஆச்சு என் கிட்டச் சொல்லுமா” என
“உனக்கு எதுக்குக் குட்டி இது எல்லாம் நான் பார்த்துகிறேன் நீ நல்ல படிச்சா மட்டும் போதும்” என்று அவரும் கூறிவிட்டு உள்ளே சென்று விட, இவளுக்கோ என்ன செய்வது என்றே தெரியாத நிலை தான்,
ஆனால் அன்று இரவு சூழலை அறிந்து கொண்டாள். அவளின் தாய் போன் மூலம் பேசியதைக் கேட்டு,
“நான் என்ன பண்ண போறேனே தெரியலையே மூன்று பிள்ளைங்க வேற, இவ்வளவு நஷ்டம் நான் எங்க போய் இதை எல்லாம் சொல்லுவேன். என் நகை மொத்தமா வெச்சியாச்சு” என்ற அவரின் குரலைக் கேட்டு இவள் ஒரு நிமிடம் பயந்தே விட்டாள்.
அவள் தாய் அழுது அவள் பார்த்ததே இல்லை. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருக்கும் முகத்தில் வேதனை, இனிமையான குரலில் பெரும் வருத்தம்.
அப்பொழுது முடிவு எடுத்தாள், இந்த குரலில் என்றும் சந்தோசம் மட்டுமே இருக்க வேண்டும் அதற்கு என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்று நினைத்தாள்.
பக்கத்திலிருந்த அரசு கல்லூரியில் சேர்ந்தாள். அவளுக்கு தன் படிப்பை விட தன் தங்கை தம்பி படிப்பு பெரிதாகத் தெரிந்தது. அவர்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்தாள்.
அவள் தந்தை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் பல லட்சங்கள் தொட்டு இருக்க, அதைச் சரி செய்யவேண்டியது இருந்தது. கடன் தொல்லையால் மனஅழுத்தம் அதிகரிக்க, கவியா வின் தந்தை கோபாலனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, பல பிரச்சனைக்கு நடுவே குடும்பத்தைத் தவிக்க விட்டு விண்ணுலகம் சென்றார்.
இருக்கும் வீட்டை விற்று தான் கடனை அடைத்து இருந்தனர். தற்பொழுது நடப்பதைக் கண்டு கோமதி என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில் கவியா “அம்மா நான் வேளைக்குப் போய் பார்த்துகிறேன்” என்று படித்துக்கொண்டே வேலைக்கும் சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொண்டாள்.
“பிடித்து படித்தேன் பிடித்தது கிடைக்காமல் போனது விரும்பி சுமந்தேன் பாரம் ஏறிக்கொண்டே போனது கனவு கண்டேன் கனவுகள் நீண்டுகொண்டே போனது
பிறருக்காக வாழ்ந்தேன் என் பிடித்தம் வாழாமல் போனது
எனக்கான வாழும் நேரம் எட்டும் தூரத்திலா???”
“தோழனாக இருக்க வேண்டிய நேரத்தில் அப்பாவை இழந்தேன், தூணாக இருக்க வேண்டிய நேரத்தில் தோழர்களை இழந்தேன், பிடிவாதம் பிடிச்சி அடையவேண்டிய பொருளைச் சூழலால் இழந்தேன், அடம் பண்ணி குழந்தையாக இருக்கவேண்டிய நேரத்தில் குழந்தைத்தனத்தை இழந்தேன், பிடித்ததால் வரும் ஆசையைக் கூட பணக்கஷ்டத்தால் இழந்தேன், இவ்வளவு இழந்தும் தைரியம் மட்டும் இழக்காமல் இருக்கக் காரணம் ஒன்றே. அனைத்தையும் எனக்கு அள்ளி கொடுக்க ஒருவனை நீ தருவாய் என்ற நம்பிக்கையில் தான்” என்றவளின் எண்ணத்தை மட்டுமல்ல சிரிப்பைக் கூட ஒருவன் அழிக்க வந்தான். வந்தவன் யாரோ???