• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ஒருமுறை The Hotel & Restaurant Approval & Classification Committee (HRACC) லிருந்து ஹோட்டல் மீது புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி என்கொயரி நடத்தப்பட, அதில் இல்லாத பொல்லாத புகார்கள் எல்லாம் ஒப்புக்காக முன் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பத்து நாட்களுக்குள் அவர்கள் கூறிய மாற்றங்களை செய்திருக்க வேண்டும் என்றும் கட்டளை விதித்துக் சென்றது.

ஏற்கனவே பூர்வீக சொத்தை விற்று கடன் வாங்கி, லோனிற்கு லோல் பட்டு வாங்கிய விடுமுறை கொண்டாட்ட விடுதி தான் இது. ரோஹன் தலைமை ஏற்ற சில நாட்களிலேயே பல மாற்றங்கள் கொண்டு வந்திருந்தவன், தற்போது பன்னாட்டு விமான சேவை இயங்க ஆரம்பித்தப்பின் வெளிநாட்டவர் வருகையால் நன்றாகவே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

வளர்ந்து வரும் தொழிலதிபன் என்பதால் ஆரம்பித்திலேயே அடித்தால் தான் மீண்டும் எழுந்து வரமாட்டான் என்று நினைத்து மற்ற உயர்தர விடுதி ஓனர்களின் சதி வேலை தான் இந்த புகாரும், நேர்காணலும், அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கில் அபராதமும்…. அதனை அவனால் நன்கு உணர முடிந்திடவே கூண்டில் அடைபட்ட சிங்கமாய் சீற்றமாய் வெடிக்க காத்திருந்தான்.

அனைத்தும் முடிந்து அதிகாரிகளை வழியனுப்பி வைக்கவே நல்லிரவு ஆகிவிட, அவனது பி.ஏ என்ற முறையில் மஹியும் அவ்வளவு நேரம் அவனுடன் தான் இருந்தாள். நல்லிரவில் கேப் கிடைக்காமல் காத்திருந்தவளின் அருகே வந்து தனது மகிழுந்தை நிறுத்தியவன், அவளை ட்ராப் செய்வதாகக் கூறி தனது வண்டியில் ஏற்றிக் கொண்டான்.

மஹியிடம் ஒருமுறை கூட ஒருநொடி கூட தன் மன இறுக்கத்தை அவன் காண்பித்திடவில்லை. அவளுக்குமே அது பெரிய ஆச்சரியம் தான். ஏனென்றால் இன்று வந்த அதிகாரிகளிடம் பணம் பல இடங்களிலிருந்து வந்து புகுந்து விளையாடி இருக்கிறது என்று அவளுக்குமே நன்றாகவே தான் தெரிந்திருந்தது.

சொல்லப்போனால் அவனது இந்த இறுக்கம் தான் அவளை அச்சுருத்தியது. 'தன்னிடம் அவர்கள் மேல் இருக்கும் கோபத்தை காட்டினால் கூட அவனது மனம் அமைதி அடையுமோ!' என்று அவளையே நினைக்கத் தூண்டும் அளவிற்கு அவனது முகம் கடுகடுவென்று இருந்தது. செல்லும் வழி எங்கும் அவனது முகத்தை திரும்பிப் பார்த்தபடியே தான் வந்தாள். அவனும் அவள் தன்னை கவனிப்பது தெரிந்தாலும், தெரியாதது போல் தான் வந்தான்.

அப்பார்ட்மெண்ட் வரவே கார் பார்க்கிங்கில் வைத்தே அவனை வழியனுப்ப நினைக்க, அவனோ காரிலிருந்து இறங்கி அவளின் அருகே வந்தான். 'ஒருவேளை உள்ளே அழைப்பேன் என்று நினைத்து வந்தானோ! இதற்கு மேல் எப்படி அழைக்காமல் இருக்க முடியும்' என்று நினைத்து மஹியும் வேறு வழியில்லாமல், இல்லம் அழைத்தாள்.

"வீட்டுக்கு வாங்கலேன்… டென் மினிட்ஸ்ல டின்னர் ரெடி பண்ணிடுறேன்… சாப்பிட்டு போகலாம்" என்றிட அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான் ரோஹன். ஆனாலும் அவளுடன் இணைந்து மின்தூக்கியில் ஏறிக்கொண்டான்.

இல்லம் நுழைந்தவள் அவனுக்கு இருக்கை காண்பித்து அமரச் சொல்லிவிட்டு, கடகடவென முகம், கை, கால் கழுவி ரெஃப்ரெஸ் செய்து கொண்டு அடுக்களை நுழைந்தாள். இயந்திர வேகத்தில் தானாக கைகள் தன் வேலையைச் செய்திட, தாலித்த சாதம் ஒரு அடுப்பிலும், பதப்படுத்தப்பட்ட சூரை மீன்னை தொக்கு போல் வைத்து அரை மணி நேரத்தில் சமையலை முடித்திருந்தாள்.

உணவு மேசையில் பதார்த்தங்களை எடுத்து வைத்துவிட்டு, ரோஹனை அழைக்க முன்னறைக்கு வந்தவள் அங்கே கண்டது, கண்கள் மூடி நீள்சாய்விருக்கையில் பின்னால் தலையை சாய்த்து கோபமும், குழப்பமும் படிந்த முகத்துடன் அமர்ந்திருந்த ரோஹனைத் தான். மூடிய விழிகளின் இமையையும் தாண்டி அவனது கண்கள் உருண்டு கொண்டிருந்ததை அவளால் தெளிவாகவே பார்க்க முடிந்தது.

கைகளை விரித்து நடுநாயகமாக அமர்ந்திருந்தவனின் கம்பீரம் அப்போதும் ரசிக்கத் தோன்றினாலும், இதே கம்பீரமும் செருக்கும் கவலை மறந்த நிலையில் பார்க்கக் கிடைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்ற அவளது மனதின் எண்ண ஓட்டத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் அருகே சென்று "ரோஹன்" என்றால் மெல்லிய குரலில்.

முதன்முறையாக தன்னை பெயர் சொல்லி அழைத்ததை நம்ப முடியாமல் சட்டென விழி விரித்துப் பார்த்தவன், 'கனவோ!' என்று நினைக்கும் அளவிற்கு அவளது அமைதி இருந்தது.

"சாப்பிடலாம்" என்று அழைத்திட கைகளை கழுவிக்கொண்டு உணவு மேசை வந்து அமர்ந்தான். மீன் தொக்கின் வாசம் ஆளை சுண்டி இழுக்க, ஆடவனின் மனம் தான் உணவில் லயிக்கவில்லை. சாதத்தை கிண்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் மனநிலை புரிந்த போதும், அதனைக் கலைக்கவே கேள்வியை மாற்றிக் கேட்டாள்.

"சாப்பாடு நல்லா இல்லேயா? உங்களுக்கு பிடிக்கலேயா?"

"ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லே… இப்போதைய என் மனநிலை புரிஞ்சிருந்தும் என் மைண்டை டைவர்ட் பண்ண நினைக்கிற உனக்கு மொதோ தேங்க்ஸ் தான் சொல்லனும்…" என்றான் நானும் உன்னை அறிவேன் என்ற பாணியில்.

"வெளியே கொட்டிட்டா கொஞ்சம் ஃப்ரியா இருக்குமே…"

"ம்ம்ம்… ஆனா கேக்குறதுக்கு தான் ஆள் இல்லே…" என்றவன் கேட்கப்படாத அவளது விழி வினாவிற்கும் விடையளித்தான். "அப்பா மட்டும் தான்… பூர்வீகம் காரைக்கால்… அங்கே பெரிய வீடு கூட இருந்தது. அதை விற்கும் போதே அப்பா பாதி மனுஷனாகிட்டாரு… அம்மா கூட வாழ்ந்த அந்த மகிழ்ச்சி நிறைந்த கோவிலையல்லவா சேல்ஸ் பண்ணிட்டேன்… அதான்… இப்போ அக்கா கூட குஜராத்ல இருக்காரு… என் மேல கோபம்… மாமாவும் காரைகால் தான். டைல் கம்பெனில வேலை பார்த்தவர் இப்போ குஜராத்ல தனியா இம்போர்ட் பிஸ்னஸ் பண்றாரு… இங்கே நான் மட்டும் தனியா தான் இருக்கேன்…"

தயங்கியபடி தட்டைப் பார்த்துக்கொண்டே "என் கிட்ட சொல்லலாமே!!" என்றாள்.

அவளது வார்த்தைகளை நம்ப முடியாமல் பார்த்தவனின் கண்களில் என்ன இருந்ததோ! அதனைப் படித்தவள் மட்டுமே அறிவாள். அரையும் குறையுமாக உண்டு முடித்துவிட்டு கை கழுவிக் கொண்டு மீண்டும் உணவுமேசை வந்தமர்ந்தான்.

அவன் பின்னாலேயே எழுந்து கை கழுவிக்கொண்டு வந்தவள், "என்னை உங்க ஃப்ரெண்டா நெனச்சு சொல்லலாமே! நானும் உங்க வெல்விஷ்ஷர் தான்..." என்றுரைத்து அவசரமாக அதற்கு ஒரு காரணத்தையும் விளக்கினாள். "நீங்க நல்லா இருந்தா தானே உங்களுக்கு கீழ வேலை பாக்குற நாங்க நல்லா இருக்க முடியும்!" என்று அப்போது அவன் நயனங்கள் 'நீ எனக்கு யார்?' என்று கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கூறினாள்.

"அசிங்க அசிங்கமா திட்டுவேன் அந்த பன்னாடைங்கள… பரவாயில்லேயா?" என்றவனின் முகம் இன்னமும் அயர்வாகத் தான் இருந்தது.

'மனபாரத்தை இறக்கி வைக்க நான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டு இப்போது பின் வாங்கிட முடியாதே என்று நினைத்து சம்மதித்தாள்.

"லைஃப்ல ஏதாவது ஒரு வழில உயரத்தை எட்டிடனும், அச்சிவ் பண்ணிடனும்னு நெனச்சு, அதுக்கு படாத கஷ்டம்லாம் பட்டு சீக்கி செதறி சீரழிஞ்சு கடைசில பிடிச்சுக்க ஒரு கயிறு கிடைக்குதேனு அதை புடிச்சு மேல ஏறினா…. நமக்கு முன்னாடி ஏறிப் போன நா@@@@ மேல உக்காந்து கயிறை அறுத்துகிட்டு இருக்கான்.

இவனுங்கள மாதிரி ஆளுங்கல்லாம் @@@ யோசிப்பானுங்க போல… அதான் அவனுங்க ஆக்ட்டிவிட்டீஸும் அப்படி இருக்கு… அதுவும் அந்த ஷையிலேஷ் இருக்கான் பாரேன்…. அவனே ஒரு @@@@@…. அப்பன் காசை கரைக்கிற தண்டச்சோறு... அந்த நாய் அவன் ஹோட்டல்ல பொண்ணுங்களை வெச்சு தப்பான பிஸ்னஸே பண்றான்… இதுல அவன் வெச்சிருக்குறது 7* ஹோட்டல்…. காசு இருக்குற திமிரு… செஞ்ச தப்பை மூடி மறைக்க @@@ நாய்களுக்கு காசை விசுறான்… அவனுங்களும் வாலை ஆட்டிகிட்டு போயிடுறானுங்க…. அந்த @@@@@@@@"

அதன்பிறகு அவன் கூறிய எந்த வார்த்தைகளையும் காது கொடுத்து கேட்க முடியவில்லை அவளால். ஒரு கட்டத்திற்கு மேல் விரல் கொண்டு காதை அடைத்திட அப்போதும் அவன் நிறுத்தியபாடில்லை. பற்றாகுறைக்கு அவனது முகம் அவனது இதழ்கள் மொழிந்த வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் நவரசத்தையும் பிரதிபலித்தது.

ஊமைப்படம் பார்ப்பது போல் பார்த்தால் கூட அவனது பாடி லாங்குவேஜ் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியது அவனது வார்த்தைகளை. தொடர்ந்து அரைமணி நேரமாவது திட்டியிருப்பான்… இன்னும் முடிவில்லை. இது நீடித்தால் அவனுக்குமே ஆபத்து தான். மன அழுத்தம் உண்டாகலாம் என்று சிந்தித்து அவன் வாயை அடைக்க வழி தேடினாள் மஹி. குறுக்கே பேசுவதற்கு வாய் திறந்த போதும் அதையெல்லாம் அவன் கண்டு கொண்டதாகவும் இல்லை காதில் வாங்கியதாகவும் இல்லை.

அவனது கோபத்தீயை அணைக்கும் பனியாக தன்னையே கருதியவள், சட்டென அவன் சட்டையைப் பிடித்து இழுத்து இதழ் கவ்வி அவனது திருவாய் மொழிகளை நிறுத்தினாள்.
---தீயாய் தொடர்வாள்...
 
Top