அவளின் நல்ல நேரம் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் அவளின் தாயிற்கு அரசு வேலை கிடைக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் குடும்பம் முன்னேற ஆரம்பித்தது. அடுத்த இரண்டு வருடத்தில் அவளும் தன் இளநிலை படிப்பை முடித்து இருந்தாள். அடுத்து அவளின் தங்கை தம்பியைக் கணக்கில் கொண்டு வேளைக்குச் செல்ல நினைத்து அவள் தாயிடம் சொல்ல,
“உனக்கு ஜெர்னலிசம் படிக்கத் தான் ஆசைப்பட்ட ஆனால் அப்ப நம்ம இருந்த நிலைக்கு உன்னால் படிக்க முடியலை. நீ இப்ப அதைப் படிக்கலாம் தானே. அதுக்கு என்ன பண்றதுனு பாரு. காசை பற்றி எல்லாம் கவலைப் படாதே. நான் பார்த்துக்கிறேன். இப்ப தான் என் கிட்ட ஒரு வேலை இருக்கே இதை வெச்சி உனக்குக் கல்விக் கடன் வாங்கலாம்” என்றார். சின்னவள் பள்ளி முடிக்கும் சமயத்தில் தானே இவருக்கு வேலை கிடைத்தது, அதனால் அவளைக் கல்விக் கடனை எடுத்து பெரிய கல்லூரியில் படிக்க வைத்தார்.
இவளை மட்டும் சின்ன கல்லூரியில் சாதாரண டிகிரி படிக்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு.
அடுத்த இரண்டு வருடம், அவள் திடமாகவே படிக்கத் தொடங்கினாள். கல்லூரியில் அனைத்திலும் முதலில் நிற்பாள், இவளைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. வரலாறு படிக்கும் தீபனுக்குக் கூட இவளைப் பற்றித் தெரியும்.
வேளைக்குப் போகும் ஆசையுடன் இருந்த சமயத்தில் அதுவாகவே ஒரு சம்பந்தம் அமைய, நல்ல குடும்பம் என்று கோமதியும் சரி என, கவியா என்ற நடக்கிறது என்று உணர்வதுக்குள் கல்யாணம் முடிவானது.
அடுத்த ஒரு மாதத்தில் செல்வி கவியா, திருமதி ராகேஷ் ஆனாள், பெயரளவில் மட்டுமே. ஆம் பெயரளவில் மட்டும் தான். வேலைக்குப் போகும் ஆசையைக் கூட மறந்து தான் அவள் கல்யாண வாழ்க்கையில் நுழைய முயன்றாள். ஆனால் நினைப்பது எல்லாம் நடக்குமா…
பல எதிர்பார்ப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைய ராகேஷ் “வாங்க… உங்களைப் பற்றி சொல்லுங்க” என்று அவளை பற்றி கேட்டுக்கொண்டும் தன்னை பற்றிச் சொல்லிக் கொண்டும் இருந்தவன் நேரம் ஆனதும் “தூங்குங்க” என்று கட்டிலின் ஒரு முனையில் படுத்துக் கொள்ள,
கவியா மனதில் ‘பரவாயில்லை எனக்கு ஸ்பேஸ் எல்லாம் கொடுக்கிறார், இந்த ஒரு மாசமும் பேசாததில் கொஞ்சம் பயந்து தான் போய் இருந்தேன்’ என்று அவளும் தூங்கிவிட்டாள்.
மாமனார் மாமியார் இரண்டு நாத்தனார் என்று பெரிய குடும்பம் தான். கல்யாணம் முடிந்ததும் ராகேஷ் வேலை செய்யும் மங்களூருகே தனிக்குடித்தனம் வைக்க இருந்தனர்.
அடுத்த நாள் கவியாவின் தாய் மகளை நலம் விசாரிக்க வந்தாள். எல்லா தாயை போலவே அவருக்கும் கவலை பயம் எல்லாம் இருக்கும் தானே. “நல்ல தான் மா இருக்கேன்” என்றவள் நேற்றைய பொழுதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. பாவம் அவளுக்குத் தெரியாதே இது தான் அவளின் பெரிய தவறு என்று. கணவன் மனைவி உறவு படுக்கையறை தாண்டி வெளியே போவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. ஒரு விடயம் இருவருக்குள் இருந்தால் அது மூன்றாவது ஆளிடம் போகக் கூடாது என்று நினைத்தாள்.
அடுத்த மூன்று மாதம், எல்லாம் சரியாகப் போனது. புரியாத மொழி பழகாத மனிதர்கள் எதிர்பாக்காத தனிமை என்று மங்களூர் வாழ்க்கை மிகவும் கடினமாகத் தான் இருந்தது.
புருஷன் பேசினால் அவளுக்குத் தனிமை தெரிந்து இருக்காது, ஆனால் அவனோ ரூம்மேட்ஸ் மாதிரி நடந்து கொள்ள இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து வார்த்தை சேர்ந்தால் போல் பேசியது கூட இல்லை. இவளோ பேசிக்கொண்டே இருப்பவள். எவ்வளவு கஷ்டம் அவள் வாழ்வில் வந்த போதும் ஒரு நாளும் அவள் சோர்ந்ததே இல்லை. அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் தன் நம்பிக்கை அவளுக்கு அதிகம்.
ஒரு நாள் “நம்ம குழந்தை பெத்துக்கலாமா” என்று மொட்டையாகக் கேட்க, இவளுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதே வார்த்தைகள் காதலோடு கேட்டு இருந்தால் அவளும் சம்மதித்து இருப்பாளோ என்னவோ, ஆனால் குரலில் காதலோ ஆசையோ எதுவும் இல்லை, கடமையாக ஒரு அழைப்பு,
“நீங்க முதலில் என் கிட்ட நல்ல பேசுங்க. எனக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க பாருங்க, அதுக்கு அப்பறமா புருஷனா இருக்கலாம். சரியவே பேசாத உங்களை நம்பி எப்படி நான் வாழ்க்கையைத் தொடங்குவேன்.
குழந்தைக்காக எல்லாம் என்னால உங்க கூட வாழ முடியாது. பிடிச்சு வாழனும், உங்களால் ஏன் என் கிட்டச் சரியா பேச முடியலை” என்று இத்தனை மாதங்களாகக் கேட்காமல் பொறுமையாக இருந்தவள், இப்பொழுது தான் கேட்டாள்.
அவளுக்குத் தெரியும் இவர் சரியாகப் பேசவில்லை என்று. ஆனால் அதை அவரின் இயல்பு என்று தான் முதலில் நினைத்தாள், சமீபமாகத் தான் கவனித்தால் இவளிடம் மட்டும் தான் இந்த ஒடுக்கம் எல்லாம். அவன் வீட்டு ஆட்களிடம் தினமும் இரண்டு மணி நேரம் மேல் பேசுவதை.
ஏதோ சரி இல்லை என்று நினைத்தவள், யாரிடமும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாதே சொன்னால் நிம்மதியாக இருக்கும் தாய், தங்கை, தம்பி எல்லாரும் நிம்மதி கெடுமே என்ற எண்ணம். அடுத்த நாள் இரவு அவளுக்குப் பல அழைப்பகள் வந்த வண்ணமே இருந்தது, காரணம் அவள் மேல் அவன் சுமத்திய பழி.
அவள் வாழ முடியாது என்று ஒரு இடத்திலும் சொல்லி இருக்க மாட்டாள். சண்டை போட்டாவது அவனைப் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான். கணவன் தன் மேல் ஆசை கொண்டு நெருங்க வேண்டும் என்று தான் எல்லா பெண்களும் எண்ணுவர், கடமையாக இல்லையே.
‘இவ எனக்கு வெறும் ப்ரெண்டா மட்டும் தான் இருப்பாலாம், என் மேல நம்பிக்கையே இல்லையாம்’ என்று எல்லாருக்கும் அழைத்துச் சொல்லி இருக்க, எல்லோரும் கவியாவை தான் திட்டினார்.
அன்றிலிருந்து அடுத்த மூன்று மாதம் கொடுமையாகத் தான் இருந்தது. ராகேஷ் ஒரு போதும் அவளை நெருங்க மாட்டான். ஆனால் பழியை மொத்தமாகக் கவியா மீது போட்டான்.
அவள் சின்னதாக ஏதாவது சொன்னால் கூட உடனே அதைப் பெரிய சண்டையாக மாற்றி, அவள் தான் சண்டை போட்டாள் என்று எல்லாரையும் நம்ப வைத்தான். ஒரு நாளும் அவள் கேட்பதற்குப் பதில் சொல்ல மாட்டான். ஆனால் மற்றவரிடம் அவளைத் தான் குற்றவாளியாக்கினான். பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் நடப்பதைகே காண யாராலும் முடியவில்லை.
அடுத்து தங்கை இருக்கிறாள் என்றே எண்ணமே அவளைப் பொறுமை காக்க வைத்தது. ஆனால் அந்த பொறுமையும் ஒரு நாள் உடைந்தது, அவள் நடத்தையிலே சந்தேகம் போல் பேச, அடுத்த நிமிடம் தன் வீட்டுக்கு வந்து விட்டாள்.
யாரும் அவளை நம்பவில்லை. அதற்காக அவள் ஒன்றும் தளர்ந்து போகவில்லை. ஒரு மாதம் மிகுந்த மன அழுத்தத்திலிருந்தாள்.
ஒரு நிமிடம் யோசித்தால், தனக்குத் தெரிந்த நண்பனின் மூலம் ராகேஷ் பற்றி விசாரிக்கச் சொன்னாள். அவன் விசாரித்துச் கூறிய செய்தியில் மூளை செயலிழந்து போனது.
உடனே “எனக்கு ஆதாரம் வேண்டும் டா. ஏதாவது பண்ணி ஆதாரம் எடுத்துக் கொடு” என்று இவள் கெஞ்ச,
“சீ.. நீ எதுக்கு கெஞ்சிட்டு இருக்க, உனக்காக இதைக் கூட பண்ண மாட்டேனா. நீ கவலையே படாதே இரண்டே நாளில் ஆதாரம் உன் கையில் இருக்கும்” என்று அவனும் நம்பிக்கையாகப் பேசி வைத்தான்.
இன்று அவள் கையில் அவள் தேடிய ஆதாரம். மனம் நிம்மதியாக இருந்தது காரணம் ஒருத்தரைத் தப்பானவர் என்று காட்டுவதில் இல்லை, தன் மேல் தப்பில்லை என்று சொல்லவதிலும் அல்ல தன் குற்ற உணர்வை போக்கவே.
ஆம் குற்ற உணர்வு தான், பல வார்த்தை கேட்டு விட்டாள். என்ன என்ன வார்த்தைகள் ‘ஒரு பையனை மயக்கத் தெரியலை, தலையணை மந்திரம் தெரியலை, நீ எல்லாம் ஒரு பொண்ணா, உனக்குக் கல்யாணம் தான் ஒரு கேடா’ என்ற வார்த்தை எல்லாம் போய் ‘நீ பொன்னே கிடையாது’ என்று அவளுக்கே அவளின் பெண்மையில் சந்தேகத்தை உருவாக்கினார்.
எவ்வளவு மன அழுத்தம், குற்ற உணர்வு என்று பலதாக பாதிக்கப்பட்டு இருந்தாள். இந்த ஆதாரத்தை இவளை வாய் மேல் பல் போட்டுப் பேசிய அனைவரிடமும் காட்டனாள். இப்பொழுது என்ன பேச முடியும் அவர்களால். ஒரு பெண் அவ்வளவு எளிதில் தன் கணவனை விட்டுக் கொடுக்க மாட்டாள். ஒரு பெண்ணை பூ போல் தங்கினாள், அவள் அவனை ராஜாவாக பார்த்துக் கொள்பவள்..
ஐந்து வயது பெண் குழந்தைக்குத் தந்தை இந்த ராகேஷ். அவனால் ஏமாற்றப்பட்டவள் இவள் தானே. அந்த குழந்தை தான் அனன்யா.
அக்குழந்தைக்காகத் தான் அவள் இப்பொழுது போராடிக் கொண்டு இருக்கிறாள். இன்னும் போராடுவாள், காரணம் அனன்யாவின் தாய் சந்தியா சாகும் தருவாயில் வாங்கிய சத்தியம். ராகேஷ் இருக்க சந்தியா இவளிடம் தன் குழந்தையின் பொறுப்பைக் கொடுக்க காரணம் ராகேஷோ??
காலம் சிறந்த மருந்து, அவளின் காயத்தை முடிந்த வரை ஆற்றி இருந்தது. ஆனாலும் அவள் முழுமையாக அதிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அனன்யா கஸ்டடி இவளுக்குக் கிடைக்க வேண்டும். இந்து வருடங்களாகப் போராடிக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் ரத்த உறவான ராகேஷ் இருக்க, இவளுக்குக் கிடைப்பது கேள்விக் குறியாகத் தான் உள்ளது. அப்படி என்ன நடந்து இருக்கும் இப்படி யாரோ பெற்ற பிள்ளைக்காக இவள் போராட???
தன் வாழ்க்கையை ஒரு நிமிடத்தில் ரேவின்ட் செய்தவள் பின் பக்கத்தில் இருக்கும் தீபனிடம் “நான் வரேன் தீபன்” என்று வெறுமையாகச் சொல்ல,
“நீ கண்டிப்பா வருவ, நான் சொன்னது கன்னி பொண்ணு கவி” என்று புரியாமல் பேசுகிறாள் போல என்று மீண்டும் சொல்ல, “அதைத் தான் நானும் சொல்றேன்” என்றதும் ஒரு நிமிடம் அவன் அதிர்ந்து பார்த்தான்.
அவன் எதோ பேச வர “எதுவும் பேசாதே நம்ம கோபுரத்திற்குப் போகலாம்” என்று அவனை அழைத்துச் சென்றாள்.
பெரிய எதிர்பார்ப்புடன் அவள் அந்த கோபுரத்தில் கால் வைக்கும் போது தான் தன் சந்தேகத்தைக் கேட்டாள் “இரண்டு நாளா நான் இங்க தானே இருக்கேன் அப்பறம் எப்படி கதவு திறக்காமல் இருக்கு, இன்னும் எதாவது நம்ம மிஸ் போன்றோமா” என்று கேட்க,
“அதை தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்” என்று இருவரும் யோசிக்க, அடுத்து நடந்த அதிசயத்தில் இருவருமே மெய் மறந்து நின்றனர். அடுத்து நிகழ இருப்பது என்னவோ??