• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 8

MK24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
28
25
28
Tamil nadu
தீஞ்சுவை 8

அந்த கோபுரத்தின் எல்லா இடத்திலும் இவள் காலடி பட்டி இருக்கிறது. இருந்தும் இதுவரை ஒரு மாற்றமும் வந்தது இல்லை. “எனக்கு ஒன்றும் புரியலை. நீ சொன்ன மாதிரியே ஒரு பொண்ணுனா, நான் இருக்கேன். இருந்தும் கதவு எதுவும் திறக்கலை. அப்படினா நீ தப்பா கூடச் சொல்லி இருக்கலாம்” என்று எந்த மாற்றமும் நடக்காததால் கேட்க,

“இல்ல கவி எனக்கு நல்லா தெரியும், நான் சரியா தான் தமிழாக்கம் பண்ணேன். ஒரு வேலை அர்த்தம் தப்பா இருக்குமோ” என்று எல்லாம் யோசிக்கும் நேரம்,

கவியா அன்று கிடைத்த குறுவாளை எடுத்து இதில் ஏதாவது இருக்கா என்று பார்க்க, அதைக் கவனித்த தீபன் “அதை என் கிட்டக் கொடு, அதில் எதாவது இருக்கானு பார்க்கலாம்” என்று வாங்க, அவனின் கவனம் அங்கு இல்லாததில் சரியாகப் பற்றாமல் கூர்மையான பகுதியைப் பிடித்து விட,

“அம்மா” என்று அலறலுடன் கையை உடனே இழுக்க, கத்தி அவன் உள்ளங்கையை நன்கு பதம் பார்த்தது. அவன் அந்த கூர்மையான பகுதியைப் பற்றி இருந்தால் கூட இப்படி காயம் ஆகி இருக்காது. கையை இழுக்கிறேன் என்ற பெயரில் இப்படி புண்ணாகிக் கொண்டான். இதைத் தான் நேரம் விதி என்பார்கள்.

“ஹே!!” என்று கவியா கத்த, அவன் வலியில் கையை, உதற இரத்தம் அந்த இடமெங்கும் சிந்தியது. இருவரும் எதிர்பார்க்காத வகையில் இவர்கள் கதவாக இருக்கும் என்று எண்ணிய இடம் இவன் இரத்தம் பட்ட அடுத்த நொடி, ஓளியால் மிளிர்ந்து.

வலியை மறந்து நடக்கும் நிகழ்வைக் கண்டவன் “கவி அது கிட்ட போ” என்று மிளிலும் இடத்திடற்குப் போகச் சொல்ல, அவளும் இந்த நிகழ்வைக் கண்டு பிரமித்து அந்த ஓளி அருகே சென்றாள். அவள் கால் பட்டதுமே அந்த கதவு இரண்டாக விரிந்து உள்ளே இருக்கும் கீழ் நோக்கிச் செல்லும் படிகள் தெரிந்தது.

“தீபன் இங்க பாரேன், படி இருக்கு” என்று ஆச்சரியமாகச் சொல்ல, “இரு வரேன்” என்று கை குட்டையில் இரத்தம் கசியா வண்ணம் இறுகிக் கட்டிவிட்டு அவள் அருகே வந்தவன்.

“நான் கீழே போய் என்ன இருக்கும்னு பார்க்கிறேன். நீ இங்கவே இருக்கியா” என்று அவன் சொல்லும் போதே பெரும் சத்தத்தை எழுப்பி இடி இடிக்க,

அந்த சத்தம் கீழே எதிரொலித்து, இருவருக்கும் ஒரு வித பயத்தைக் கொடுத்தது. பல பல வருடங்களாக மழையே பார்க்காத அந்த இடத்தில் இப்பொழுது பெருமழை அடித்துக் கொட்டத் தொடங்கியது.

தீபன் “கீழே கண்டிப்பாக எதோ அதிசயம் இருக்கு, நான் மட்டும் போகவா” என “இல்ல நானும் வரேன். எனக்கும் தெரியனும்” என்று பார்க்கும் அனைத்தையுமே அவள் கொண்டு வந்த கேமராவில் புகைப் படம் எடுத்தாள். பின்னே இதை அவர்கள் பத்திரிகையில் போடா வேண்டாமா??

இருவரும் அலைபேசியில் இருக்கும் ஓளியின் உதவியால் மெதுவாகக் கீழே இறங்கினர். ஆச்சரியம் மேலே இருக்க வேண்டிய சிவன் கோவில் பல பரப்பில் கீழே அமைக்கப்பட்டு இருந்தது.

அதுவும் பலவகை கலை நயத்துடன், தூண்கள், மாடங்கள், பல கடவுளின் விக்கிரகங்கள், கோடி மரம் போல் சிறிய அமைப்பு என்று அனைத்தும் இருந்தது. பல சிறிய பிரகாரங்கள் மத்தியில் கம்பீரமாக இருந்தது ‘வீரபத்ரேஸ்வ மூர்த்தி’ சன்னதி.

ஆம், பாதாள லோகத்தின் முதன்மை கடவுளான வீரபத்திரர் தான் இங்கே காட்சியளிக்கிறார்.

பல நூற்றாண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாததால் சற்று சிதலம் அடைந்து தான் இருந்தது.

தீபன் “ஆச்சரியமாக இருக்கு கவிமா. கோவில் கட்டி பல நூறு வருடம் இருக்கும். ஆனால் பாரேன், அப்பவே நம்ம தமிழரோட கலைத்திறன் எப்படி இருந்து இருக்குனு. நிலத்தின் மேல் கட்ட வேண்டிய கோவிலைக் கீழே கட்டி இருக்காங்க, என்னால நம்மவே முடியலை” என்று உடம்பு சிலிர்க்க நடந்த விசயத்தை நினைத்துப் பேச,

“இல்ல தீபன் வேற எதோ ஒரு மர்மம் இருக்கு, இவ்வளவு கலை நயத்துடன் இருக்கிற கோவில் நம்ம கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு என்று கூடச் சொல்லலாம், அப்படி இருக்கிற இந்த கோவிலை இப்ப வரை வெளி உலகத்திற்குத் தெரிய கூடாதுனு, கோவிலை யாரோ மறைச்சு வைத்து இருப்பாங்கனு தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிற” என்று அவனின் எண்ணத்தைக் கேட்க,

“பத்திரிகைக்காரி மூளை தானே இப்படி தான் யோசிக்கும், ஆனாலும் நீ சொல்கிறது கரெக்ட் தான். எதுக்கு இந்த கோவிலை மூடனும், இங்க எதோ இருக்கு “ என்று இருவரும் பேசும் போதே காலடி சத்தம் அருகே கேட்க,

“எதோ சத்தம் கேட்கிற மாதிரி இருக்குல” என்று சொல்லிக் கொண்டு திரும்ப, பத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள, எதோ தவறாக நடப்பதாகத் தோன்றியது.

அவர்களுக்கு நடுவே நெடுநெடுவென வளர்ந்த மனிதன் அழுத்தமான காலடி சத்தத்துடன் இவர்களை நெருங்க, தீபன் யார் இது என்று யோசிக்கும் போதே கவியா “புருஷோத் மகேஸ்வரி” என்று முணுமுணுக்க,

அவளின் சத்ததில் திரும்பிய தீபன் “யார் இது” என்றதும் “இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர்” என்றதும்,

“எஸ்… யூ ஆர் கரெக்ட். நான் தான் புருஷோத், தி கிரேட் சயின்டிஸ்ட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, தீபனோ “நீ யாரா வேணா இருக்கு, இங்க எப்படி வந்த” என்று கோபமாகக் கேட்க,

அவனோ சிரித்துக் கொண்டே “நான் வந்தது இருக்கட்டும், நீ இங்க வரக் காரணமே நான் தான். என்ன பார்க்கிற உனக்கு வந்த எல்லா மெயிலும் அனுப்பியது நான் தான், உன்னோட ஒவ்வொரு நடவடிக்கையும் துல்லியமாகக் கவனித்தது எதற்குத் தெரியுமா, இதோ நம்ம நிற்கிற இடத்திற்காக நான்” என

கவியா நிதானமாக “எதற்கு” என்றாள். அவளுக்குப் புரிந்து விட்டு அனைத்திற்கும் பின்னால் பெரிய அரசியலே இருக்கு என்றும் தங்களைக் கட்டம் கட்டி தூக்கி இருக்கிறார்கள், இதோ அவர்களிடம் மாட்டியும் கொண்டோம். இனி நடக்க என்ன பெரிதாக இருக்கப் போகிறது என்ற மனநிலை தான்.

“உலகத்தில் மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை. நோயோடு போராடி மருந்து தயாரிக்கிறோம். இயற்கையோடு போராடி சமநிலை இழக்கிறோம், நிலவு மட்டுமே இல்லாமல் இப்ப சூரியனுக்கே விண்கலம் அனுப்பறோம். சொல்லப் போனால் ஒளியை விட வேகமாகப் போக முயற்சி பண்றோம்.

ஆனால் இன்னும் மனிதனால் முடியாத ஒரு விசயம் இருக்கு, அது தான் டெலிபோர்ட்டேஷன். தெரியும் தானே” என்று இருவரையும் பார்க்க,

கவியா புரியாமல் முழுக்க, தீபனோ “அது எல்லாம் பெயரளவில் தான் சாத்தியம், நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒற்று வராது. பல வளர்ந்த நாடுகளே இதற்காகப் போராடிக்கிட்டு இருக்காங்க. குவாண்டம் பிசிக்ஸ் எப்பவும் கிளாசிக் பிசிக்ஸ் ஆகாது” என்ற அவன் பேசியது கவியாவிற்குப் புரியவில்லை.

“ஹா ஹா ஹா” என்று ன்று இந்த இடமே நிறையச் சிரித்தான். பின் “நான் என்ன வேலை வெட்டி இல்லாம இங்க வந்து நிற்கிறேனு நினைச்சியா. இல்ல சின்ன பையா… இந்தக் கோவிலில் தான் நான் தேடிக்கிட்டு இருக்குறதுக்கான விடை புதைஞ்சு இருக்கு. தமிழர்கள் பற்றி உங்களுக்கே சரியா‌ தெரியலையே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடியே டெலிபோர்ட்டேஷன் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கு அதற்கான வழிமுறையும் கண்டுபிடித்து இருக்காங்க. அது இந்த கோவில் தான் புதைஞ்சி இருக்கு” என தீபன் அவனை அதிர்ந்து பார்த்தான்.

கவியா “அதுக்கு எதுக்கு எங்களை மாட்ட வச்ச” என்று தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்க, புருஷோத் “ஏனா இந்த கோவிலைத் திறக்க இதோ இருக்கானே இவன் வம்சத்தில் இருகிறவங்களால் மட்டும் தான் முடியும். இவங்க தானே வம்சம் வம்சமா இந்த ரகசியத்தைப் பாதுகாத்து வராங்க. இவன் குடும்பம் இவன் கிட்ட இதைப் பற்றிச் சொல்லாதது எனக்கு நல்லதா போச்சு” என்று சிரிக்க,

தீபன் அப்பொழுது தான் நினைத்தான். எப்பொழுதும் அவன் தாத்தா இவனிடம் “வம்சம் தழைக்கக் கோவிலை உயிர் கொடுத்தாவது காப்பாற்றனும்” என்று கூறியதை நினைத்தான். இன்னும் அவனுக்குத் தெரியாத ரகசியம் இருப்பதாகவே தோன்றியது.

புருஷோத் “சரி இரண்டு பேரும் கொஞ்சம் நேரம் பொறுங்க. நான் அந்த குறிப்பேடு எங்க இருக்குனு தேடி எடுத்துட்டு உங்க இரண்டு பெருகும் கைலாசம் போக டிக்கெட் தரேன்” என்று தன் ஆட்களுக்குக் கண்ணை காட்ட,

இருவரையும் அங்கே இருந்த தூணில் கட்டிப் போட்டு விட்டு ஒவ்வொரு இடமாக ஏதாவது கல்வெட்டு, தகடு போன்று ஏதாவது இருக்கா என்று தேடினார்கள்.

கவியா “ஏதாவது பண்ணுடா” என, “நான் என்ன மந்திரவாதியா. உடனே காப்பாற்ற, எனக்கே இங்க என்ன நடக்குதுன்னு புரியலை” என

“உனக்கு தானே… நீயாவது அவன் ஏதோ சொன்னான் என்று பிசிக்ஸ் எல்லாம் பேசன எனக்குத் தான் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரியுது. தேவையே இல்லாமல் நான் உன் கூட வந்து மாட்டிக்கிட்டேன். எதுக்கும் பயப்படாதே என்னை மட்டும் காப்பற்றிடு” என்று அழும் குரலில் கேட்க,

“உனக்குப் புரியும் படி சொல்றேன் கேளு. குவாண்டம் பிசிக்ஸ் அப்படினா நீ பில்டிங் பிளாக்ஸ் வெச்சி விளையாடி இருக்கியா. அதுல வர ஒரு பிளாக் தான் குவாண்டம், மொத்த உருவமாக இருக்கிறது கிளாசிக் பிசிக்ஸ். ஒரு உருவம் பல லட்ச அணுக்களால் தான் உருவாகும். அதில் ஒரே ஒரு அணுவைப் பற்றிப் படிக்கிறது தான் குவாண்டம் பிசிக்ஸ்.

டெலிபோர்ட்டேஷன், அப்படினா ஒரு உருவத்தில் இருக்கிற அணுக்கள் எல்லாம் ஒரு இடத்தில் அழிந்து வேற இடத்தில் உருவாகனும். இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியலை. ஆனால் இப்ப விஞ்ஞானிகள் சின்ன‌ சின்ன பொருட்களில் சோதனை செய்து இருக்காங்க. அதாவது குவாண்டம் அளவில் சாத்தியமான ஒரு விஷயம் கிளாசிக் பிசிக்ஸ் அளவில் கேள்விக் குறியாக இருக்கு.

படத்தில் வருவது போல எல்லாம் ஒரே நொடியில் வேற இடத்திற்குப் போக முடியாது. ஒரு அணு அழிந்து உருவாகவே ரொம்ப நேரம் எடுக்கும், மனித உடம்பில் எவ்வளவு லட்சத்தில் அணுக்கள் இருக்கு, அது எல்லாம் ஒரு இடத்தில் அழிந்து வேற இடத்தில் உருவாகிறது எல்லாம் நடக்குற காரியமா. அதுவும் இல்லாமல் மனித பரிமாணத்தில் அவனால் கட்டுப் படுத்த முடியாத விசயம் நேரம் தான்.

இது எல்லாம் இப்ப இருக்கிற மனிதனுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லனு தானே நம்ம முன்னோர்கள் மறைத்து வைச்சங்க போல. இங்க இருந்து எந்த விஷயமும் யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று தன் கருத்தைச் சொல்ல,

“நீ பேசறதில் எனக்கு ஒன்று தான் புரிஞ்சுது, இங்க இருந்து எதுவும் யாருக்கும் கிடைக்கக் கூடாது அதானே. நான் என்ன பண்றேன் மட்டும் பாரு” என்று தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க, அவனோ “என்ன செய்ற” என்று பதட்டமாகத் திரும்பித் திரும்பி பார்த்து கேட்க,

“அட நீ ஏன் பயப்படுற, அவனுக்கு சைன்ஸ் வர அளவுக்குச் கூட ரௌடிசம் வரலை. என் கிட்ட போன் இருக்கும்னு கூட தெரியாத, இல்லை நான் பத்திரிக்கைக்காரி என்று மறந்துட்டியா” என்று ஒருவருக்குக் கால் செய்ய,

“ஜார்ஜ்…லொகேஷன் அனுப்பி இருக்கேன். ஒரு ஆபத்து நீ என்ன பண்ற” என்று தன் திட்டத்தைச் சொல்ல, தீபனோ வாயைத் திறந்து பார்த்தான். அப்படி அவளின் திட்டம் தான் என்னவோ??

சுவைப்போம்
cocomelom
 
Last edited:
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43

நிறைய சைன்டிபிக் தகவலோடு கதை ஆர்வமாக நகர்கிறது