ரோஹன் கூறியது போல் மதியவேளையில் அரம்பையர் (apsaras) போல் ஒருத்தி முழங்காலுக்கு சற்று கீழிறங்கிய தொல தொல பழுப்பு நிற கால்சட்டையும், கருப்பையுடனான புனிதபந்தம் கவர்ச்சியாக தெரியும்படி அரக்கு நிற மேல்சட்டையும் அணிந்து குதிகால் பாத அணியுடன் ஒய்யாரமாய் நடந்து வந்தாள்.
நேரே மஹியிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எம்.டி.யை காண வேண்டும் என்றுரைக்க, அவளும் அழைத்துச் சென்றாள். நேர்காணல் இன்றி அவள் தேர்வு செய்யப்பட, மஹி மீண்டும் கடுப்படைந்தாள்.
ஆனால் அவனது அவசரமே மஹி தான். நேற்றிரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு அவளிடம் இருந்து விலகி இருக்க நினைத்தவன், நேரம் காலம் பார்க்காமல் வலைதளங்களில் விளம்பரம் செய்து திறன்பேசியிலேயே சில கேள்விகள் கேட்டு நேர்காணலை முடித்துக் கொண்டான். அதேநேரம் நீத்து தன் பணியை முழுமையாக கற்றுக்கொண்டப்பின் அவளுக்கான வேலை ஊர்ஜித கடிதத்தை தர நினைத்திருந்தான்
இவை எதையும் அறிந்திடாத மஹி, ஶ்ரீநிதாவின் இளமையும், அன்மேரீட் என்ற க்வாலிஃபிகேஷனும் மட்டுமே பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்று நினைத்து ரோஹனின் மேல் மீண்டும் கோபமுற்றாள்.
ஶ்ரீநிதாவின் பெரும்பாலான எண்ணங்கள் மஹியுடன் ஒத்துப்போனாலும் ரோஹன் விஷயத்தில் வெவ்வேறாக இருந்தது. மஹி என்ன தான் மார்டன் பெண்ணாக இருந்தாலும் ஆண்கள் என்றால் ஆறடி தள்ளி நின்று தான் பேசுவாள். நீத்துவோ கண்ணடிப்பதிலும், கட்டிப்பிடிப்பதிலும் கற்பு அழிந்திடப் போவதில்லை என்ற கோட்பாடு உடையவள்…
மஹிக்கு அவளது கூற்றை எதிர்த்து வாதிடத் தோன்றவில்லை என்றாலும் ஆமோதிக்கவும் மனம் இல்லை. தன்னுடைய முதல் காதலும், முதல் அணைப்பும், முதல் முத்தமும் தனக்கே உரியவனுடன் மட்டுமே நிகழ வேண்டும் என்ற கோட்பாடு உடையவள் தான் மஹி… அப்படிபட்ட தன்னையே ரோஹன் மாற்றிவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் முன்னால் ஒரு எழுத்தைச் சேர்த்து அவன் தன்னை ஏமாற்றிவாட்டான் என்று கருதத் தொடங்கியிருந்தாள்.
மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் நீத்துவின் தோழர்கள் இன்டர்வியூ என்று பொய்யுரைத்து மும்பையை சுற்றிப் பார்க்க அந்த வார இறுதியில் வருவதாக இருந்தது. தானும் அவர்களுடன் கொட்டமடிக்க நினைத்தவள் தான் பணிபுரியும் ஹோட்டலிலேயே அறை எடுத்து தங்கும்படி கூறினாள்.
அதற்கு முன்னதாக ரோஹனிடம் அதனை தெரிவிக்க நினைத்து அவனை சந்தித்து பேசினாள். பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் கவர்ச்சிகரமாகப் பேசுவதில் மயங்கிப் போனவள், ரோஹனின் கவனத்தை தன்புறம் முழுவதுமாக திருப்புவதற்காகவே அவனுடன் பல சந்திப்புகளை ஏற்படுத்திக் கொண்டாள்.
அதன்பின் ஏதேனும் சந்தேகம் என்றால் கூட மஹியிடம் கேட்காமல் நேரே ரோஹனை வினவினாள். அவன் அவளை எட்டி வைப்பது போல் நடந்து கொண்டாலும், அவள் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் ரோஹனை நெருங்கினாள்.
அதேது மஹி 'எதில் சந்தேகம்? என்ன? ஏது?' என்று நீத்துவிடம் விசாரித்தால் என்றால், "அதெல்லாம் ஒன்னும் இல்லே… இப்படி ஏதாவது அடிக்கடி கேட்டுப் போனாதான் பாஸ்-ஐ சீக்கிரம் நெருங்க முடியும்" என்பாள்.
அது தவறு, உன் செயல் இங்கே வேலை செய்யும் மற்ற பெண்களின் பெயரையும் சேர்த்து கெடுக்கும் என்று பலமுறை மஹி அறிவுரை வழங்கியும் நீத்து அதனை காதில் கூட வாங்கியதாக இல்லை.
பொறுமையற்ற நீத்து ஒருமுறை "இதெல்லாம் செய்யாமலா மூனே மாசத்துல நீ AGM போஸ்ட் வந்தே! GM சர்-ரோட பி.ஏ வா இருந்த நீ மாசத்துக்கு ஒரு ப்ரொமோஷன் எப்படி வாங்கினேயாம்!!!" என்று மஹியை ஏளனமாகப் பார்த்து வினவினாள்.
நீத்துவின் கெட்ட நேரமோ இல்லை மஹியின் கெட்ட நேரமோ!!! இரண்டும் இன்றி இவை அனைத்தையும் கேட்க நேர்ந்த ரோஹனின் கெட்ட நேரமோ!!! நீத்துவின் கன்னம் பழுத்து ரோஹனின் கைரேகை ஜோதிடம் பார்க்கும் அளவிற்கு தடம் பதிந்திருந்து.
நீத்து அதனை தனக்கு நேர்ந்த பேரவமானமாய் கருதியவள், இருவரையும் அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாமல் தலை குனிந்தபடி அங்கிருந்து சென்றாள்.
"ஒரு பொண்ணை கை நீட்டி அடிக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு? நீ அப்படியே பரிசுத்தமானவன் பாரு… நீ பெரிய ஞானியாட்டமும் அவ மட்டும் தான் தப்பு செய்ததாட்டமும் அவளை அடிக்கிறே!" என்று மஹி வழக்கம் போல் ரோஹனுக்கு எதிரே போர் கொடி தூக்கி நிற்க, ரோஹனின் கோபம் இருமடங்காகியது…
மனமோ 'இவளை தவறாகப் பேசியதை தாங்க முடியாமல் தானே அடித்தேன்… அதைக் கூட புரிந்து கொள்ளாமல்!!! என்ன பெண்ணிவள்! இவளுக்கு ஆரம்பத்தில் இருத்தே என் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது… சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது….' என்று உலைகலமாய் கொதித்தது.
அதில் தான் அவனது பதில் திமிராகவும், வார்த்தைகள் அனைத்தும் கர்வமாகவும் வெளிவந்தது.
"ஆமாடி… உன்னை தவிர மித்த எல்லா பொண்ணுங்ககிட்டேயும் தொட்டு பேசுற அளவுக்கு உரிமையா பழகுற பொறுக்கி தான் நான்… அந்த உரிமைல தான் அவளை அடிச்சேன்… போதுமா!!! அவ ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது..." என்று உறுமினான்.
அவனின் மொத்த கோபத்திற்கும் அர்த்தம் புரிந்ததோ இல்லேயோ கடைசி வரிக்கு நன்றாக பொருள் புரிந்தது அவளுக்கு. தன்னையும் தன் குணத்தையும் உயர்த்திக் கூறுகிறான் ஆனால் அதனை வெளிப்படுத்தும் விதத்தில் தான் எத்தனைக் கோபம்! அதேபோல் ரோஹன் ஒவ்வொரு முறையும் தன்னை தாழ்த்திக் கொண்டு பேசும் போது தான் மஹியின் மனதில் உயர உயரச் சென்றான். அந்த விச்சித்திரத்தை தான் பெண்ணவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மறுபக்கம் அழுதுகொண்டே வெளியேறிய நீத்து, அவர்கள் இருவரும் புரிந்து கொள்ளாத ஒன்றை, புரிந்தும் புரியாதது போல் நாடகமிடும் ஒன்றை கண்டுகொண்டாள். ஆம் மஹிக்கு ரோஹனின் மீதுள்ள காதலை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், ரோஹன் மஹியின் மீதுள்ள காதலை புரிந்தும் ஒவ்வொரு முறையும் தான் என்ற அகம்பாவத்தால் 'அப்படியெல்லாம் ஏதும் இல்லை' என்பது போல் நடித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் அதனை அறிந்து கொள்வதற்கு முன் மஹியை பலி தீர்த்துக் கொள்ள வேண்டும்… இன்று தான் வாங்கிய அடிக்குக் காரணம் அவளே தான். அவளால் தான் அவன் தன்னை அடித்தான். அவளைத் துன்புறுத்தினால் ரோஹன் தன்னால் உடைந்து போவான் என்று கணக்கிட்டவள், தன் நண்பர்களின் வருகையை அதற்காக பயன்படுத்திக் கொள்ளவே காத்திருந்தாள்.
----தீயாய் தொடர்ந்தாள்.