தீபன் “நீ நினைக்கிறது நடக்குமா, கொஞ்சம் தப்பானாலும் நம்ம காலி” என்று கயிற்றால் கட்டப்பட்ட கையை பின் இருந்தே மெதுவாக கழற்றிக் கொண்டே சொல்ல,
“நம்ம ஊரில் என்ன வேண்டுமானாலும் தப்பா நடக்கலாம் ஆனால் இந்த மாதிரி விஷயத்தில் நிச்சயமாகத் தப்பா நடக்காது. கொஞ்ச நேரத்தில் பாரு என்ன நடக்கப் போகிறது என்று. எவ்வளவு நேரமா தான் அந்த கயிற்றை கழட்டிட்டு இருப்ப” என
“நான் என்ன இதுக்கு எல்லாம் படிச்சிட்டா வந்தேன். முன்னாடி கையை கட்டி இருந்தால் கூட பரவாயில்லை. அது என்ன உனக்கு மட்டும் கையை முன்ன கட்டிட்டு எனக்குப் பின்னாடி கட்டி இருக்கானுங்க. நீ தான் டி ரொம்ப டேஞ்சர் அது தெரியலை பாரேன்” என்று கை வலி உயிர் போவது போல் இருந்தும் உயிர் முக்கியம் தானே, பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ கழட்டி விட்டான்.
“குட் இப்ப என்னோட கையை பிரீ பண்ணு” என்று கவியா கேட்க, அவனோ அவளை மெலிதாக முறைத்து “இதுலே போன் பேச முடியும், ஆனா கழட்ட மட்டும் முடியாதோ, நான் வலிக்க வலிக்க எடுத்தால் மேடம் ஒண்ணுமே பண்ணாமல் வாய் பேசிட்டே எல்லாத்தையும் சாதிச்சிப்பாங்க” என்று கடுப்பாக அவளைப் பார்த்து முணுமுணுப்பாகச் சொல்லி கொண்டே அவளையும் விடுதலை செய்தான்.
ஜார்ஜ் சரியாக அவனுக்குக் கால் செய்ய, “சொல்லு ஜார்ஜ்” என “நீ சொன்ன எல்லாம் பக்கவா பண்ணிட்டேன். இன்னும் பைவ் மினிட்ஸ் மக்கள் எல்லாரும் அங்க இருப்பாங்க” என
“வெரி குட் ஜார்ஜ், தேங்க்ஸ் போர் திஸ் ஹெல்ப்” என்று போனை வைக்க, “என்ன சொன்னான் உன் பிரென்ட்” என்று மெலிதாக எழுந்த பொறாமையில் கேட்க, “அட, இருடா இப்ப நம்ம சத்தம் போடாமல் மேலே போக போகிறோம், புரிகியுதா” என்று கொஞ்சம் இடைவேளை விட்டு “வெளியே ஆளுங்க வர சொல்லிட்டேன். நீ பேசுகிறதில் தான் இருக்கு, கொஞ்சம் தப்பா பேசினாலும் நம்ம காலி, உனக்கு சொல்லணும்னு இல்ல நம்ம அரசுக்குத் தெரியாமல் தான் இங்க வந்து இருக்கிறோம், அதுக்கு ஏற்ற மாதிரி சொல்லு நான் எல்லாமே பிளான் பண்ணிட்டேன். இங்க இருக்கிற ஆளுங்களை பற்றி கவலைப் படாதே. ஜஸ்ட் வெளி உலகத்திற்கு இந்த கோவிலைப் பற்றி என்ன தெரியணும்னு நீ நினைக்கிறியோ அதை மட்டும் இப்ப சொல்லு மற்றதை எல்லாம் அப்பறமா பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு,
இருவரும் அந்த அடியாட்களைப் பார்க்க, அவர்களோ எல்லா இடத்திலும் எதாவது எழுத்து இருக்கிறதா என்று தேடிக் கொண்டு இருந்தனர். அதை விட புருஷோத் கோவிலின் ஒவ்வொரு இடத்தையும் மூளை முடுக்கிலும் கவனமாகத் தேடினான்.
அவர்கள் யாருக்கும் என்ன தேடுகிறார்கள் என்று தெரியாது. தெரிந்த பொருளைத் தேடுவதே கடினம். இவர்கள் என்ன தேடுகிறார்கள் என்றே தெரியாமல் தேடும் போது எவ்வளவு கடினமாக இருக்கும். எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடுவது தானே மனிதனின் இயல்பு. புகழுக்காக எதையும் செய்யும் நிலையில் தானே இருக்கிறோம். அதுவும் புகழோடு பணமும் சேரும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தோன்றும்.
இருவரும் மேலே வர, சரியாகப் பல காரும் கூடவே ஊர் மக்களும் வந்தனர். இருவரும் மேலே வந்தனர். மேல வந்ததும் உடனே அனைவரும் இருவரையும் சூழ,
அவர்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்க தீபன் “இருங்க நான் எல்லார் கேள்விக்கும் பதில் சொல்றேன். அதுக்கு முதலில் இங்க என்ன நடக்கிறது என்று சொல்றேன்” என்று பெருமூச்சு எடுத்து விட்டு,
“நான் ஒரு தொல்லியல் ஆய்வாளர், இதோ இவங்க என் தோழி கவியா , நான் இவ்வளவு நாளாக வட இந்தியாவில் இருந்தேன். கொஞ்ச நாள் முன்ன தான் சென்னை வந்தேன். இரண்டு பேரும் வெளிய எங்கனா போகலாம்னு யோசிச்சோம். அப்பத் தான் என் சொந்த ஊரான மதுரைக்கு போகலாம்னு முடிவு பண்ணோம். நாங்களே இப்படி ஒரு அதிசயத்தைப் பார்த்து வியந்து இருக்கிறோம்” என்று ஒரு நிமிடம் தன் பேச்சுக்கு இடைவேளை விட,
அந்த இடைவேளை தனக்கு போதும் என்பது போல் ஒரு பத்திரிக்கையாளர் “மதுரைக்கு வந்த நீங்க எதுக்கு வாலன்குடி வந்திங்க, எத்தனை நாளாக இங்க இருக்கீங்க, எப்படி இந்த கோபுரத்தின் கீழே கோவில் இருக்கும்னு கண்டுபிடிச்சீங்க” என்று தொடர் கேள்வியாக அடுக்க,
‘இதுக்கு நான் இப்ப என்ன சொல்றது’ என்று அவன் யோசிக்கும் நேரம், கவியா “சாரி பிரிரெண்ட்ஸ் இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இனி என்ன சொல்கிறதா இருந்தாலும் அரசாங்கம் தான் சொல்லணும். உங்களுக்கே நடைமுறை என்னனு தெரிஞ்சி இருக்குமே” என்று அவர்களிடம் சொல்ல,
பின் பொதுமக்களைப் பார்த்து, “உங்க ஊரில் அதிசயமும் கடவுளின் கருணையும் இவ்வளவு வருசமாக மண்ணில் புதைந்து இருந்து இருக்கு, என்னும் கொஞ்ச நாளில் இந்த கோவில் பயன்பாட்டில் வந்திடும்” என்று அவள் மேலே சொல்லும் முன்னே அந்த அதிசய கோவிலைக் காண மக்கள் சென்று விட்டனர்.
அதற்குள் இந்த தகவலை அறிந்து காவல் துறையினரும் வரத் தொடங்கினர். அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகளைப் போடத் தொடங்கியனர்.
தீபன் மெதுவாகக் கவியா காதில் “என்ன கவிமா இது நம்ம பேசுகிற எதையும் கேட்க மாட்டேன்றாங்க, இப்ப என்ன பண்றது” என்று தவிப்பாகக் கேட்க,
“அட லூசே உனக்குப் புரியலை, ஒரு இடத்தை பாதுகாக்க ஒன்று அது கோவிலா இருக்கனும் இல்ல பேய் பங்களாவா இருக்கணும்” என்று அவனுக்குப் புரியவைக்க, அடுத்த கொஞ்ச நேரத்திலே அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
உள்ளூர் தொலைக்காட்சியிலிருந்து அயல்நாட்டுத் தொலைக்காட்சி வரை ஹாட் டாப்பிக் வாலன்குடி தான்.
அவர்கள் ஆய்வு செய்து அரசுக்கு ரிப்போர்ட் சமர்ப்பித்ததும், இக்கோவில் மனித பயன்பாட்டிற்கு வந்து விடும். நல்ல விசயமாக அந்தக் ஆய்வு குழுவில் தீபனும் இருந்தான்.
அன்று இரவு மதுரை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனியாக இருக்கும் டின்னிங் ரூமில் புருஷோத் மகேஸ்வரி முன்னே அமர்ந்து இருந்தனர் தீபன் மற்றும் கவியா இருவரும்.
மக்கள் அனைவரும் அங்கே சூழ்ந்து விட, அதற்கு மேல் புருஷோத்தால் ஒன்றும் தேட முடியவில்லை. அதன் பின் மொத்த கோவிலையும் அரசாங்கம் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்து மக்களை அப்புறப் படுத்திவிட்டது. இதில் அவரது திட்டம் மொத்தமாக பாழ்யாகி போனது.
தற்பொழுது,
புருஷோத் “நான் நேராக பாயிண்டுக்கு வரேன். எனக்கு அந்த கோவிலின் ரகசியம் வேண்டும். நீங்களே அதை எனக்குத் தேடி கொடுத்துட்டா உங்களை நான் எதுவும் பண்ண மாட்டேன்” என
கவியா “நீங்கப் புரியாமல் பேசறீங்க அந்த கோவிலில் அப்படி எந்த ரகசியமும் இல்லை. சொல்லப் போனால் அது ஒரு சாதாரண கோவில் தான்” என்று அவள் முதலில் சொல்ல,
அவரோ “நான் இவன் கிட்ட தான்த் கேட்டேன். நீங்க இந்த விசயத்தில் தேவையே இல்லாமல் நுழைந்து இருக்கீங்க. எனக்கு இவன் மட்டும் போதும். அதுவும் இல்லாமல் நான் தெரியாமல் எல்லாம் பேசல, இவர் தாத்தா இந்த கோவிலைப் பற்றி எழுதிய புக் இதை வைத்துத் தான் உங்களை ட்ராப் பண்ணேன்” என
தீபன் “என்ன புத்தகம், என் தாத்தா புத்தகம் எல்லாம் எழுத மாட்டாரே” என்று கேள்வியாகக் கேட்க. “ஆமா எழுத்தமாட்டாரு தான், ஆனால் இந்த கோவில் ரகசியத்தைப் பற்றி மட்டும் எழுதி இருக்காரு, இதுல பாவமா விசயம் என்ன தெரியுமா இந்த ஒரு புத்தகத்திற்காக உன் மொத்த குடும்பமும் உயிரையே விட்டுட்டாங்க. ஆனால் பாரேன் அப்படி அவங்க உயிரை விட்டும் இந்த புத்தகம் எனக்குக் கிடைக்கிறதைக் காப்பாற்ற முடியலை. சரி அதை எல்லாம் விடு உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம். பார்த்து இருந்துக்கோ” என்று இருவரையும் விட்டு, வெளியே வந்தவர் தன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
*****
இவன் தாத்தா கிருஷ்ணாசாரி அந்த காலத்திலே பெரிய படிப்பை எல்லாம் படித்து மிகப் பெரிய லாயராக இருந்தார். இருப்பத்தி ஐந்தாவது வயதில் அந்த கோவிலின் ரகசியத்தை அவர் பெற்றோர்கள் கூறினார்கள்.
அதன் பின் அவர் அதைப் பாதுகாக்கத் தொடங்கினார். அவருக்கு அந்தக் கோவில் பற்றிய பழைய புத்தகம் கிடைத்தது. சொல்லப்பட்டிருந்ததை இந்த காலத்திற்கு ஏற்ற மாற்றி புதிதாகப் பதிப்பித்தார்.
அவர் அந்த விசயங்களை தீபனுக்குச் சொல்லும் முன்னே பதிப்பகத்தால் இந்த விஷயம் புருஷோத் மகேஸ்வரிக்குத் தெரிந்தது.
அதன் பின் அவர்கள் குடும்பத்திற்குப் பிரச்சனை ஆரம்பமானது. அந்த ஊரு புத்தகத்தைப் பாதுகாக்க அந்தக் குடும்பமே போராடியது. கடைசியாகத் புத்தகத்தைக் கைப்பற்ற மொத்த குடும்பத்தையும் கொல்ல முடிகிறது விட்டான்.
எல்லோரும் திருப்பதி போவதை அறிந்து, அவர்கள் செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகி அவர்களை மட்டும் அல்ல பேருந்தில் பயணித்த அத்தனை பேரையும் கொன்று விட்டான். அவர் எழுதிய புத்தகத்தைக் கைப்பற்றியவனால் அதற்கு முன் இருந்த புத்தகத்தைப் பற்றி அறிய முடியவில்லை.
***”
தீபன் “இவன் ரொம்ப ஆபத்தானவன் கவி, என் குடும்பத்தை இவன் தான் எதோ பண்ணி இருக்கணும், எதோ புத்தகத்தைப் பற்றி பேசினானே” என்று கேள்வியாகக் கேட்க,
“இது என்னடா புலிவால் பிடிச்ச கதையா இருக்கு, உனக்கு உதவி பண்ண ஒரு இரண்டு நாள் இருக்கலாம்னு வந்தேன். பார்த்தால் இங்க ஒரு அதிசய கோவில் சரி எல்லாம் முடிஞ்சிடுச்சு இனி நீயும் உன் துறையும் இதை பார்த்துப்பிங்கனு கிளம்பின என் ஆஃபீசில் இந்த நியூஸ் கவர் பண்ற பொறுப்பை எனக்கு கொடுத்துட்டாங்க. நான் உன் தோழியாம். நீ என் கிட்ட எல்லாமே சொல்லிடுவனு என்னை இங்க போட்டு இருக்காங்க.
அது கூட பரவால இந்த சயின்டிஸ்ட் ஏன் தான் இப்படி நம்மளைத் தொல்லை பன்றான். அப்படி என்ன தான் வேண்டுமோ” என்று கவியா புரியாமல் அவனைப் பார்க்க,
தீபன் “நம்ம எல்லா கேள்விக்கும் பதில் என் தாத்தாவோட புத்தகத்தில் இருக்குமோ??” என்று அவளைப் பார்க்க,
“அது தான் அவன் கிட்ட இருக்கே, பேசாமல் அவன் ரூம் இந்த ஹோட்டலில் தானே இருக்கு, போய் பார்க்கலாம். நம்ம லக் அந்த புத்தகம் இங்க கூட இருக்கலாம் என்ன சொல்ற” என்று கவியா அவனின் பதிலை எதிர் பார்த்து நிற்க,
“எல்லாம் சரி தான் எப்படி அவன் ரூமிற்கு போகிறது, இது எல்லாம் சாத்தியம் இல்லையே” என்று யோசனையாகச் சொல்ல,
“மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும் என்று சொல்லுவாங்க கேள்விப் பட்டு இருக்கிறியா. போய் எதாவது வழியைத் தேடு” என்று தன் முன்னே இருக்கும் சிக்கன் பீஸ்ஸை எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிட,
“உன்னைச் சொல்லி குத்தம் இல்லை. சரி சொல்லு” என்றான். “சொல்லுனா எதை சொல்றது, முதலில் நான் சொன்னதைச் செய்” என்று அவள் சாப்பிடுவதில் கண்ணாக இருக்க, அவளைப் பார்த்துச் சிரித்தவன் வெளியேறி விட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவள் முன் நின்றான். அவளோ “எவ்வளவு நேரம்.. பாரு மூன்றாவது பிளேட் சிக்கன் பாப்கார்ன் சாப்பிட்டு இருக்கேன்” என்று நிதானமாகச் சொன்னாள்.
அவளே அறியாமல் அவளின் இறுக்கங்கள் தளர்ந்து வருகிறது. ஐந்து வருடங்கள் அவளின் இருபத்தி இரண்டாவது வயதில் வாழ்க்கை மேல் வந்த வெறுப்பு அவளை இறுக்கி இருக்க, இப்பொழுது தீபன் என்ற மனிதனால் மாறிக்கொண்டு இருக்கிறது.
தீபன் அவள் வாழ்வில் வந்த ஒளி தானே. ஒளி என்றும் இருளில் இருக்கும் அழகை, மகிமையை வெளி உலகத்திற்குக் காட்டும். இருளில் முழுகிக் கிடக்கும் அவளின் வாழ்வை மிளிரச் செய்யும் ஒளி இவன்.
அதை அவனும் உணர்ந்து தான் இருந்தான். அதைப் பற்றி எதுவும் பேசாமல் “நமக்கு இன்றைக்கு நைட் நிறைய வேலை இருக்கு” என அவளோ அவனைப் புரியாமல் பார்த்து கொண்டே “என்ன வேலை அதுவும் நைட்”என்று சந்தேகமா பார்க்க,
“அட ச்சீ எண்ணம் போகிறதை பாரு, நான் அந்த புருஷோத் ரூமிற்கு போகிற வழியை கண்டுப்பிடிச்சிட்டேன்” என “இப்ப தான் கண்டு பிடிச்சியா இன்னுமா புக்கை எடுக்கலை. என்ன நீ இவ்வளவு சோம்பேறியாக இருக்க, சரி என்ன வழி” என்று அவனை முடிந்த மட்டும் கடுப்பு ஏற்றி விட்டு வழியைக் கேட்க,
“கொழுப்பு கூடி போச்சு, அதை விடு நான் புருஷோத் ரூமிற்கு பக்கத்தில் இருக்கும் ரூமை எடுத்துட்டேன். நம்ம லக் இரண்டு ரூமிற்கு ஒரு காமன் பால்கனி இருக்கு. அதில் தான் நம்ம அவன் ரூமிற்கு போக போறோம்” என
“இல்ல எனக்குப் புரியலை நம்ம எவ்வளவு சாவகாசமாக இருக்கும் அளவுக்கு அவன் ஆபத்து இல்லையா இல்ல உனக்குப் பொறுப்பு இல்லையா” என்று மேலும் அவனை முறைக்க,
“எனக்கு தெரிஞ்ச ஆளுங்க கிட்ட விசாரிச்சுப் பார்த்தேன். இவருக்கு பணத்தின் மேல் எல்லாம் ஆசை கிடையாது ஆனா நல்லவனும் கிடையாது. கண்டிப்பா இது அவன் கைக்குக் கிடைக்கக் கூடாது. சரி நம்ம என்ன பண்ணலாம்” என்று தீபன் கேட்க,
“அதான் எல்லாமே பிளான் பண்ணிட்டியே, அந்த புருஷோத் எங்க இருக்கிறான் இப்போ” என “அவன் அப்பக் கிளம்பியது தான் இன்னும் வரலை” என்று அவர்கள் தங்கள் அறைக்குச் சென்றனர்.
நள்ளிரவு வேளை நிலவின் வெளிச்சம், தென்றலின் மெல்லிய ஒலியும் இடத்தை ரம்மியமாகக் காட்சி கொடுக்க, தீபன் மட்டும் கவியா இருவரும் முகத்தில் மெல்லிய துணியால் மூடிக் கொண்டு அந்த பால்கனியில் நிற்க,
தீபன் “இப்ப நான் என்ன சொல்றேனா” என்று எதோ சொல்ல வருவதற்குள், “ஏன்டா டேய் ஒரு பத்திரிக்கைக்காரியை இப்படி திருடி மாதிரி மாற்றி வெச்சி இருக்கியே இது எல்லாம் நல்லாவா இருக்கு” என்று கோவத்தில் மெல்லிய குரலில் கத்த,
அவனோ “கவிமா இந்த இருட்டில் அதுவும் நிலவு வெளிச்சத்தில் ஒரு முகம் எல்லாம் பளபள ஜொலிக்கிறது. உன் கன்னத்தை பாரேன் ப்பா….. எவன் டி சொன்னான் பள்ளத்தில் விழுந்தால் தான் எழுந்துக்க முடியாதுனு, இதோ பார் இந்த கன்னக் குழியில் விழுந்த நான் இன்னும் எழுந்துக்க மனசே வரலையே. என்னை உனக்குள் புதைச்சுக்கோயேன்” என்று எதற்கு வந்தோம் என்றே மறந்து, அவளின் முகத்தை, கன்னத்தை மெல்லிய துணியையும் மீறி அவன் கரத்தால் வருடிக் கொண்டு இருந்தான்.
இவளோ அவன் பேச ஆரம்பித்த முதலே சிலையாகிப் போனாள். அவனோ அவள் அமைதியில் மேலும் முன்னேற, அவள் இதழை நெருக்கும் நேரம் தூரத்தில் கேட்ட ஒரு ஒலியில் தன்னை நெருங்கிய தீபனை தள்ளி அவன் தோளில் பலமாக ஒரு அடியைப் போட்டாள்.
தீபன் மனதில் ‘என்னடா தீபன் பண்ணி வெச்சி இருக்க, ஐயோ இப்ப என்ன பண்ணிச் சமாளிக்கப் போகிற’ என்று புலம்பிக் கொண்டே அவளைப் பார்க்க,
“உனக்கு அறிவில்லையா எங்க நிற்கிறோம்னு கூட ஞாபகம் இல்லை, என்ன மாதிரி பிரச்சனையில் இருக்கோம்னு கூட தெரியாமல் பைத்தியம் மாதிரி பெனாத்திட்டு இருக்க, இப்ப எதுவும் பண்ண முடியலை நேரம் வரட்டும் பார்த்துகிறேன்” என்று கத்திவிட்டு மெதுவாகப் பக்கத்து அறையின் பின் பக்க வாசலைப் பார்க்க,
‘அப்பாடா இதோட விட்டா’ என்று அவளை பின் தொடர்ந்தான். இருவரும் அந்த கதவைத் திறக்க முயற்சி செய்ய இருவருக்கும் பெரிய வேலை வைக்காமல் அது தானாகத் திறந்து கொள்ள,
‘என்ன பெரிய சயின்டிஸ்ட் இப்படி கதவைக் கூட ஒழுங்கா லாக் பண்ணலை’ என்று எண்ணிக்கொண்டே இருவரும் உள்ளே நுழைந்து இருக்க, அங்கே இருந்த மேஜையில் இவர்கள் தேடி வந்த புத்தகம் இவர்களைப் பார்த்துச் சிரித்தது. தீபன் “நமக்குக் கஷ்டம் கொடுக்காமல் எல்லாமே ஈசியாக இருக்கு. எல்லாம் சிவ மயம்” என்று கூறினான்.
“ரொம்ப பண்ணாதே நம்ம ரூம் போகலாம் இங்கவே இருந்த மாட்டிப்போம்” என்று இருவரும் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றனர்.
அது கொஞ்சம் பழைய புத்தகம் தான் ஆனால் அவ்வளவு பழையது இல்லை. அவன் தாத்தா இந்த ஒரு புத்தகத்தை மட்டும் பதிப்பித்து இருப்பது ஆச்சரியமாகத் தான் இருந்தது.
அவனுக்கு வந்த அனைத்து மெயில் குறிப்புகளும் இந்த புத்தகத்தில் தான் இருந்தது. ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே இருந்தது. கவியா “தீபன் இந்த பக்கத்தை பாரேன், இதில் ஒரு குறிப்பு இருக்கு, இதில் இருப்பதைப் பார்த்தால் கண்டிப்பா இதுக்கு முன்னாடி வேற எதோ புத்தகம்இருந்து இருக்கு, அதைப் பார்த்துத் தான் இதை எழுதி இருப்பாங்க” என்று அவளின் எண்ணத்தைச் சொல்ல,
“எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது, பேசாமல் என் வீட்டுக்குப் போய் தேடலாம்” என “அடப்பாவி உன் வீடு இங்க தான் இருக்கா” என்று ஆச்சரியமாகக் கேட்க,
“இங்க மதுரையில் தான் இருக்கு, ஆனால் நான் அங்க போய் ரொம்ப நாள் அச்சு, சரி வா போய் தேடலாம்” என்று இருவரும் வாடிப்பட்டியில் இருக்கும் அவனது பூர்விக வீட்டுக்குச் சென்றனர்.
“டேய் இது உன் வீடா செமையா இருக்கே, அப்படியே பழமை மாறாமல் சூப்பரா இருக்கு. என்ன கொஞ்சம் தூசியா இருக்கு. இதை அழகா மெயின்டைன் பண்ணக் கூடாதா” என
“எங்க வந்தாலே என் குடும்பம்ஞாபகம்அதிகமாக வந்துச்சா அதான் இங்க வர மாட்டேன். நிறைய வருஷம் கழித்து இப்ப தான் இங்க வரேன். வா உள்ளே போகலாம்” என்று அழைத்து வந்தான்.
நேரே அவன் தாத்தா அறைக்கு வந்தான். உள்ளே அவன் தாத்தா வோடு கழித்த நாட்கள் கண் முன்னே வர, எப்பொழுதோ அவன் தாத்தா சொன்னது காதில் கேட்கும் உணர்வு.
“நம்ம மரபு எப்பவும் மாறக் கூடாது. நான் இல்லாத நேரத்தில் உனக்கு எதாவது உதவி தேவை என்றால் இந்த மரக்கட்டில் உள்ளே ஒரு ரகசிய பேட்டி இருக்கு அதை எடுத்து பாரு”
தீபன் “என் கூட வா” என்று அவளைப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான். பெட்டை புரட்டிப் போட்டவன் அந்த பெட்டியிலிருந்து மிகவும் பழமையான தமிழ்ப் புத்தகம் கிடைக்க,
“ஹே இது ரொம்ப பழைய தமிழ் எழுத்துகளா இருக்கே எப்படிப் படிக்கிறது” என்று கவியா கேட்க,
“எனக்குக் கொஞ்சம் படிக்கத் தெரியும் அதை வைத்து மேனேஜ் பண்ணலாம்” என்று படிக்கத் தொடங்கினான்.
சிறிது நேரம் அவன் படித்துக் கொண்டு இருந்தான். இவளோ நன்றாகத் தூங்கி விட்டாள். அதிகாலை வேலை புத்தகம் முழுவதையும் படித்துவிட்டுக் கவியாவை எழுப்பினான்.
“என்னடா படிச்சிட்டியா. என்ன சொல்லி இருக்கு” என்று கேட்க,
“நிறைய விஷயம் இருக்கு, ராஜா ஒருத்தர் மிகப் பெரிய சிவன் பக்தர், அவருக்கு மண்ணுக்கு மேலே இருக்கிறதை விடக் கீழே கட்டும் ஆசை, அதை நிறைவேற்றப் பல ஆட்களை எல்லா நாடுகளிலிருந்தும் கடத்திக் கொண்டு வந்து கோவில் கட்ட ஆரம்பித்து இருக்காங்க. எல்லாரும் ராஜாவிற்குப் பயந்து எதுவும் பேசாமல் இருக்க, கோவில் இடத்தில எதோ ஒரு அதிசயம் இருக்கிறதை அங்க இருக்கிற ஒரு ஆள் மட்டும் அதை கண்டுபிடிச்சிட்டு இருக்கிறான். அவனுக்கு பொதுவாகவே அறிவியல் பற்றிய அதிக அறிவு இருந்து இருக்க, அவனுக்கு ஒரு போர்டல் மாதிரி ஒரு இடத்தில் ஒளி தெரிந்து இருக்கு, அது தெரிஞ்சா எதாவது மக்களுக்கு ஆபத்தாக இருக்கலாம்னு அந்த இடத்தில் சிவனை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. ஆனால் அவனுக்கே முழுதாக தெரியலை. எதோ ஒரு சக்தி இருக்குனு தெரிஞ்சு இது மாதிரி பண்ணி இருக்கிறான். கட்டிடம் வேலை முடிய தருவாயில் ஒரு மஹா பூஜை பண்ண எண்ணி வெளியூரில் இருந்து ஒரு புரோகிதரை அழைக்கப் போன ராஜா அங்க போன நேரத்தில் எதோ தகராறு நடக்க அந்த புரோகிதர் குடும்பத்தில் யாரையோ ராஜா கொன்று விட்டார். அதில் கோவம் கொண்டு ராஜாவிற்குச் சாபம் கொடுக்கிறான்” என்று தீபன் நிறுத்த,
கவியா “என்ன சாபம் அந்த கிராம மக்கள் சொன்னதா” என்று ஆர்வமாகக் கேட்க,
“கொஞ்சம் அந்த மாதிரி தான். எந்த கோவிலுக்காக இந்த ராஜா இப்படிப் பாடு படுகிறாரோ அந்த கோவிலைத் திறக்கவே முடியாது. கடைசி வரை உனக்கு அந்த கோவிலில் சிவனைத் தரிசிக்க வாய்ப்பே இல்லனு சொல்ல, அதுக்கு ராஜா முதலில் இதை பெரிதாக கண்டுக்கவே இல்லை. ஆனால் தடங்கல் மேல் தடங்கல் தொடர்ந்து வர, திரும்ப அதே புரோகிதரைக் காண சென்றார்.
அவரிடம் சாப விபோசனம் கேட்க, அவரோ என் தலைமுறையில் கலப்பு மனம் கொண்டு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூலம் இந்த கோவிலுக்கு விபோசனம் கிடைக்கும் என்றார். அதற்கு முன் வேற யாரும் அதில் நுழைய முடியாது. அப்படி யாரேனும் பேராசையோடு பொறாமையோடு வஞ்சகத்தோடு இங்கே வந்தால் மாண்டு போவார்கள்.
பல நூற்றாண்டுகளாக அந்த வம்சத்தில் கலப்பு திருமணம் என்பது நடக்கவே இல்லை. கடைசியாக இந்த நூற்றாண்டில் தான் நடந்தது, அதில் பிறந்தவன் தான் இந்த தீபன், இவனின் வருகைக்காகத் தான் இந்த கோவில் பல ஆண்டுகள் காத்திருந்தது.
இதை எல்லாம் கேட்ட கவியா “நல்ல கதையா இருக்கு, ஆனால் இங்க எப்படி சயின்ஸ் எல்லாம் வந்துச்சு” என்று புரியாமல் கேட்க,
“இருக்கு ஆனால் இந்த காலத்தில் எதுவும் தேவையில்லை. எனக்கு வந்த எல்லா குறிப்பும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து யூஸ் ஆகும். இப்ப எதுவும் தெரியவேண்டாம். உண்மையா அங்க ரகசியம் இருக்கு நமக்கும் வேண்டாம். இந்த புருஷோத் எதுக்கு இப்படி இருக்கிறான், அது அவனுக்கே ஆபத்தாக முடியும். சரி நம்ம ஹோட்டல் போயிடு கிளம்பலாம். அந்த ஆளு எப்ப போன் பண்ணுவான் என்று தெரியலை” எனக் கவியா பல குழப்பத்துடன் கிளம்பினாள். அவளைப் போல் அவனுக்கும் நிறைய இருந்தது. ஆனால் அதில் கடைசியாக ஒரு பத்தி இருந்தது, “இதைப் படித்ததும் மறக்க நினை இதையே நினைத்து வாழ்வை அழித்துக் கொள்ளாதே” என்று இருக்க, அதன் பின் அதை நினைக்காமல் இருக்க முயற்சித்தான்.
சில விஷயங்கள் பெரிதும் யோசிக்காமல் விட்டுவிடுவதே நல்லது. கவியா தான் நிறையக் கேள்வியுடன் ஹோட்டல் வரை யோசித்துக் கொண்டு இருந்தாள்.
கவியா “எனக்குக் கடைசியா ஒரு கேள்வி, நீ சொன்னது எல்லாம் சரி, இனி அந்த கோவில் பற்றி எதுவும் யோசிக்க மாட்டேன். ஆனால் அந்த டெலிபோர்ட்டேஷன் பற்றித் தான் இடிக்குது” என
“அதைத் தான் அப்பவே சொன்னேன் தானே. அதான் எனக்கும் தெரியும். நானும் பிசிக்ஸ் ஸ்டுடென்ட் எல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்” என்று ஹோட்டல் உள்ளே செல்ல அங்கே போலீஸ் கும்பலாக இருந்தது.
கவியா பதறி “டேய் நம்ம ஒரு புக்கை தானே எடுத்தோம் அதுக்கு போலீஸ் எல்லாம் கூப்பிட்டு இருக்காங்க” என அவனோ பதட்டத்தில் “சும்மா இரு டி” என்று ‘என்ன என்று விசாரிக்க’ அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான்.