• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 23

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
தீயாய் சுடும் என் நிலவு 23

மிருதி கேப்க்கு கிளம்ப மிஷாவும் தான் வருவதாக அடம் பிடித்தாள்.

"மிஷா குட்டி அம்மா சொன்னா கேட்பல்ல. நீ வீட்ல இருடா." என்றாள்.

"இல்ல. நான் வீட்டுல இருக்க மாட்டேன். உன்கூட தான் வருவேன்" என்றாள் மீண்டும் மிதிஷா.

தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த தீரன், அம்மா மகளின் பேச்சை கேட்டு சிரித்து கொண்டிருந்தான்.

"மிஷாகுட்டி எதுக்கு அம்மாகிட்ட சண்டை போடறிங்க?" என்று மகளுருகில் வந்து மகளை தூக்கி கொண்டான்.

"அப்பா நான் அம்மாகூட போகணும்." என்றாள் மிஷா.

"இங்க பாரு மிஷா. அம்மாக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நீ அங்க வந்தா உன்னை அம்மாவால பார்த்துக்க முடியாது. அதனால நீ உங்கப்பா கூட இரு. அம்மா மதியம் வந்துடுவேன்." என்றாள் மிருதி.

"என்னாச்சு மிரு. உடம்புக்கு என்ன? டாக்டர் கிட்ட போகலாமா?" என்று பதறி அவளிடம் நெருங்கினான்.

"போதும் உங்க அக்கறைக்கு. உங்க அக்கறையை உங்க பொண்ணோட நிறுத்திக்கோங்க எனக்கு வேணாம். இத்தனை நாள் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துக்குறேன்." என்றாள் கோபமாக மிருதி.

"மிரு ப்ளிஸ். நான் பண்ணது தப்பு தான். ஆனா நான் எதுவும் வேணும்னே செய்யலை. அன்னைக்கு இருந்த என்னோட மனநிலைல தான் அப்படி நடந்துருச்சு. அதுக்காக நான் பண்ணது தப்பு இல்லைன்னு சொல்லலை. தப்பு தான். ப்ளிஸ் என்னை மன்னிச்சு எனக்காக ஒரு வாய்ப்பு தரக்கூடாதா?" என்றான் தீரன் உடைந்து கெஞ்சும் குரலில்.

மனம் உருகினாலும், "இப்போ இதை பற்றி குழந்தை முன்னாடி எதுவும் பேச வேண்டாம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும்" என்றாள் மிருதி.

"இன்னைக்கு லீவ் கேட்டா அமுதன் கொடுக்கமாட்டாரா என்ன? லீவ் சொல்லிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல?" என்றான் தீரன்.

"அமுதன்கிட்ட லீவ் கேட்க நான் அவர்கிட்ட வேலை செய்யலை. இது என்னோட கேப் நான் தான் பார்த்துக்கனும்" என்றாள் மிருதி.

சொந்தமாக மிருதி தொழில் செய்கிறாள் என்று தற்பொழுது தான் தெரிவதால் வாயடைத்து போனான்.

"அப்போ சரி. நாங்களும் வரோம்" என்றான் தீரன்.

"இல்ல வேணாம்" என்றாள் மிருதி.

"உனக்கு ரெண்டு சாய்ஸ் தான். ஒன்னு நீ வீட்ல ரெஸ்ட் எடு. இல்ல நாங்களும் வரோம்." என்றான் தீரன்.

எதுவும் செய்யமுடியாதென்ற நிலையில் தன் வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டு. "சரி வாங்க" அவர்களையும் கூட்டி சென்றாள்.

"ஹை ஜாலி போலாம்?" என்று கை தட்டி குதித்தது குழந்தை.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் மிருதி வேலை செய்து கொண்டிருக்க, தீரன் லேப்டாப்பில் தன் வேலையில் மூழ்கியிருக்க, மிஷா அங்கே விளையாடி கொண்டிருந்தாள்.

திடீரென்று மயக்கம் வருவதை போல் இருக்க மிருதி ஒரு நொடி சாய்ந்து அமைதியாக கண் மூடினாள்.

தீரன் தன் வேலையில் இருந்தாலும் அவ்வபொழுது அவனின் பார்வை மிருதியின் மேல் இருந்தது.

அவள் உடல்நிலையை பற்றி அமுதன் கூறி இருந்ததால் அவனுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

மிருதியின் முகமாற்றத்தை கண்டவன் உடனே அவளிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து சாய்ந்த நிலையிலேயே விழிகள் மூடிருக்க, கைகள் மட்டும் தானாக தன் வயிற்றை அழுத்தி பிடித்தது.

வேகமாக எழுந்து அவளிடம் ஓடியவன். "மிரு என்னம்மா பண்ணுது?" என்று அவளின் தோளை தொட்டு உலுக்கினான்.

"விடுங்க என்னை" என்று அவன் கைகளை தட்டி விட்டாள்.

சுருக்கென்று தைத்தாலும் கோபமாக, "உன் கோபத்தை காட்ட இது நேரமில்லை" என்று முறைத்தான்.

பெருமூச்சு விட்டவன், "சாரி டா. மிரு நாம வீட்டுக்கு போகலாம்" என்று அவளை கைத்தாங்கலாக கூட்டி சென்றான்.

அவனிடம் மேலும் வாதிட தெம்பு இல்லாததால் மிருதியும் கிளம்பினாள்.ஆனால் வீட்டிற்கு செல்லும் முன்பே வழிலேயே வலியில் துடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

தீரனுக்கு மிகவும் கவலையாக இருக்க மருத்துவமனை செல்லலாம் என்று கூற மிருதி வேண்டாம் வீட்டுக்கு செல்லலாம் என்று ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்தவுடன் அறையில் சென்று மெத்தையில் விழுந்தவள் வலியில் மிகவும் துடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமுதனுக்கு பொன் செய்தான்.

"பயபடாதீங்க. அவளுக்கு மாத்திரை கொடுங்க. வெந்நீர் ஒத்தடம் கொடுங்க நான் வந்துட்டே இருக்கேன்." என்று போனை வைத்துவிட்டான்.

அமுதன் கூறியபடி மாத்திரையை கொடுத்து, வெந்நீர் ஒற்றடம் கொடுத்தான் தீரன். முடியாத நிலையில் அவனின் உதவியை வேண்டாமென்று மிருதியால் மறுக்க நினைத்தாலும் அவனின் கெஞ்சலான பார்வையால் மறுக்க முடியவில்லை.

அரைமணி நேரம் கடந்திருக்க வலி குறைந்து உறங்க, அமுதன் பதட்டத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.

"இப்போ எப்டி இருக்கு? தூங்குறாளா?" என்றான் கவலையாய் அமுதன்.

எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க அமுதனை கட்டிக்கொண்டான் தீரன்.

"தீரன் என்னாச்சு? தி நல்லா இருக்கா இல்ல?" என்றான் நெற்றி சுருக்கி.

"நல்லா இருக்கா அமுதன்." என்று அமுதனின் கைகளை பற்றி கொண்டு "ரொம்ப தாங்க்ஸ் அமுதன். நான் இல்லாத நேரத்துல நீங்க ரெண்டு பேரும் மிருவ பத்திரமா பார்த்துக்கிட்டு இருக்கிங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்று கதறினான்.

"சரி விடுங்க தீரன். அதான் நீங்க வந்துட்டிங்க இல்ல. எல்லாம் சரியாகிடும். அவ மாத்திரை எடுத்துகிட்டு இருக்கா. நிச்சயமா இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க." என்றான் அமுதன்.

"ச்சே... நான் எவ்ளோ மோசமானவன். என்னால தான் அவளுக்கு இப்படி நடந்திருக்கு. எனக்கு இதுக்கு மன்னிப்பே கிடையாது" என்றான் தீரன்.

"தீரன் நடந்தது நடந்திருச்சு. அதுக்கு நீங்களும் மூணு வருஷம் உங்க மகளை பார்க்காம இருந்துட்டிங்க. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்" என்றான் அமுதன்.

"நான் அவளுக்கு செஞ்ச கொடுமைக்கு எனக்கு மன்னிப்பு கிடைக்குமான்னு தெரியலை அமுதன்" என்றான் தீரன்.

"கண்டிப்பா... அவ மனசுல நீங்க மட்டும் இருக்கீங்க. சொல்ல போனா நீங்க தான் அவளோட உயிரே... ஆனா, அதை வெளிய சொல்ல மாட்டா. மனசுக்குள்ளயே வச்சி மறைச்சிடுவா. அழுத்தக்காரி." என்றான் அமுதன்.

"அவ என்னை மன்னிக்க என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன்" என்றான் தீரன்.

"முதல்ல பொறுமையா இருங்க. நிச்சயமா வார்த்தையால உங்களை கொல்வா. என்னா அவளோட வலிய அப்படி வெளிபடுத்துவா. நீங்க தான் கூடவே இருக்கணும்" என்றான் அமுதன்.

"அப்பா அம்மா கூப்பிட்றாங்க" என்று மிஷா சொல்ல இருவரும் உள்ளே ஓடினர்.

அவளின் அருகில் சென்ற அமுதன்.

"தி இப்போ எப்படி இருக்கு? ஆர் யு பீல் பெட்டர்?" என்றான் அமுதன் கவலையாய்.

அவன் நிற்க வேண்டிய இடத்தில் அமுதன் இருக்க, சுருக்கென்று கோபம் வந்தது தீரனுக்கு.

'முட்டாள் அவளோட நண்பன் அவன். நீ இல்லாதப்ப கண்ணும் கருத்துமா அவங்க தான் கூட இருந்து கவனிச்சிட்டு இருந்திருக்கான். அப்போ எல்லாம் எங்க போன நீ ?' என்றது.

"இப்போ பரவால்ல அமுதன்." என்றாள் மிருதி.

"நான் அப்போவே இதுக்கு தான் யோசிச்சேன் ஸ்ரீய அனுப்ப வேண்டாம்னு. இரு உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன்" என்று தன் போனை எடுத்தான் அமுதன்.

"டேய் அதெல்லாம் வேணாம். அவளே இப்போ தான் அதிசயமா போய்ருக்கா. அதான் அவர் இருக்கார் இல்ல. அவ இருந்துட்டு வரட்டும்" என்றாள் மிருதி.

அமுதனின் இதழில் புன்னகை மலர்ந்தாலும் உடனே மறைத்து , "யாரு இவரா? மூணு வருசத்துக்கு முன்னாடி உன்னை விட்டுட்டு போனவர் தான? இப்போ திடீர்னு வந்து நின்னா இவரால எல்லாம் உன்னை பார்த்துக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல" என்றான் அமுதன்.

"அமுதன் தேவை இல்லாம் எதுக்கு இப்போ அதை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு. அவர் தான் இருக்கார்ல பார்த்துப்பார்" என்றாள் மிருதி.

"என்னவோ நீ தான் சொல்ற" என்று அறையை விட்டு வெளியேறினான்.

அவன் பின்னே வந்த தீரனை பார்த்து சிரித்தவன்.

"நான் தான் சொன்னேன்ல? அவளால யாருக்கிட்டயும் உங்களை விட்டு தரமுடியாது. பார்த்திங்கல்ல? உங்களை திட்டினதுக்கு எப்படி சப்போர்ட்டுக்கு வரான்னு?' என்றான் அமுதன்.

"இனி அவ மனசுல இருக்கிறதை வெளிய கொண்டு வரது உங்க பொறுப்பு. சரி நான் மிஷாவை கூட்டிட்டு போறேன். எனக்கு நாளைக்கு லீவு தான் நான் பார்த்துக்குறேன். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க" என்று கிளம்பினான்.
 
Top