• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 24

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
இரவு சாப்பிட மிருதியை எழுப்ப தூக்கத்திலிருந்து எழுந்தவள் அவனின் கையில் தட்டை பார்த்துவிட்டு "எனக்காக நீங்க இதை செய்ய வேண்டாம். உங்க பொண்ணுகூட டைம் ஸ்பெண்ட் பண்ணதானே வந்திங்க. அதைமட்டும் பாருங்க." என்று மெத்தையில் இருந்து இறங்க போனவளை தடுத்து அமர வைத்தான்.

"எதுக்கு பயபட்ற மிரு?" என்று அவளின் நெற்றியில் இருந்த கற்றை முடியை தன் ஒற்றைவிரலால் தீண்டியபடி ஒதுக்கிவிட மிருதியின் மேனியில் ஒரு தாக்கம் தென்பட்டதை உணர்ந்து மலர்ந்தான்.

"ஹ்ம்ம் நான் எதுக்கு பயப்படப்போறேன்? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

"அப்படியா?" என்று கேட்டவன் தன் ஆட்டகாட்டி விரலால் அவளின் முகத்தில் கோலமிட ஒரு நொடி திணறியவள் அதன்பிறகு, "இல்ல நீங்க எனக்காக வரலை" என்று அவனின் கரத்தை தட்டிவிட்டு முகம் திருப்பினாள் கண்ணீரை அடக்க.

"நான் எதுக்காக வந்துருக்கேன்னு உனக்கு தெரியாது இல்ல?" என்றான் அழுத்தமாய்.

பதில் எதுவும் கூறாமல் மிருதி வேறெங்கோ பார்த்து கொண்டிருக்க.

"உனக்கு எங்க என்கிட்ட உன்னை முழுசா இழந்துடுவியோன்னு பயம் அதான் பயபட்ற?" என்று சிரித்தான்.

மின்னல் தாக்க கட்டுண்டவள் போல் ஒரு நொடி அமைதியாக இருந்தவள். "அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. நீங்களா ஏதாவது ஒரு கற்பனை பண்ணிகாதிங்க" என்று முறைத்தாள்.

"மிரு உனக்கு உண்மையாவே புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி என்னை சோதிக்கிறியா? நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகமா இருக்குடி. எனக்கு பொண்ணு இருக்கான்னு தெரியாமயே உன்னை பார்த்தா போதும்னு ஓடி வந்தேன். எனக்கு மகள் இருக்கான்னு தெரிஞ்சவுடனே என் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் அளவே இல்லை. சந்தோஷம் எனக்கு மகள் மனைவி இருக்காங்கன்னு.. துக்கம் ஒவ்வொரு புருஷனும் ஆசைப்பட்ற மாதிரி என் மக பிறக்கும்போது உன்கூட இல்லாம போனதுக்கு நானே காரணமாகிட்டேனேன்னு. இப்போக்கூட உன்னோட இருக்கலாம்ன்ற ஒரு பேராசைல தான் என் பொண்ணை காரணம் காட்டி உன்னை பார்த்துக்கிட்டே இருந்தாக்கூட போதும்னு வந்து இருக்கேன். நான் என்ன பண்ணா உனக்கு என்மேல கோபம் போகும்?" என்றான் தீரன்.

அவள் எதுவும் பேசாமல் விழிகளில் நீரோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"மிரு பிளீஸ். எனக்கு நீ வேணும். நம்ம பொண்ணு வேணும். உங்கக்கூட நான் கடைசி வரைக்கும் இருக்கணும்." என்றான் தீரன்.

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என்றாள் மிருதி.

"சரி. ஆனா அதுவரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம உன்கூடயே இருக்கேன். பிளீஸ்" என்றான் தீரன்.

"சரி" என்று அமைதியாகினாள்.

"உனக்கு மதியம் சாப்பிட என்ன வேணும்?" என்றான் தீரன்.

"இல்ல தீரன்... " என்று நிறுத்தியவள் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

"இல்ல... நான் ஆபீஸ் போகணும்" என்றாள் மெல்ல சிரித்து.

"ஒரே ஒரு தடவை .." என்று அவளை பார்க்க.

"என்ன ஒரு தடவை?" என்றாள் படபடக்கும் நெஞ்சோடு.

"அது .." என்று இழுத்தவன் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டு உச்கிமுகர்ந்தான்.

"ஐ ஆம் சாரி. நான் பண்ண எல்லாத்துக்குமே" என்றான் கண்கள் மூடி.

இந்த நாள் கனவில் கூட நடக்காது என்று எண்ணி இருந்தவளுக்கு நிஜத்தில் நடக்க ஆனந்தம் தாளவில்லை. இருந்தாலும் தான் பட்ட துயரத்திற்கும் மனா உளைச்சலுக்கு இது போதாது என்று எண்ணினாள்.

தீரன் ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து நின்றிருக்க, அவனை தள்ளிவிட நினைத்தவளின் விழிகளில் தன் மகள் நெருங்குவதை கண்டு அமைதி காத்தாள்.

"அப்பா அம்மா" என்று குரல் கேட்க திடுக்கிட்டு திரும்ப, அங்கே இடையில் கரம் வைத்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள் மிஷா.

"என்னம்மா?" என்றான் தீரன்.

"நானு" என்று தன் கரங்களை விரிக்க புன்னகை தானாக இதழ்களில் மலர்ந்து மிதிஷாவை அள்ளி அணைத்து கொண்டான் தீரன்.

"ஐ ல யு செல்லக்குட்டி." என்று மீஷாவின் நெற்றயில் முத்தம் கொடுத்தான்.

"ஐ லப் யு தூ பா" என்றது தன் மழலை மொழியில் தந்தையை கட்டியணைத்து.

"சோ கியூட்." என்று மிஷாவின் நெற்றியில் செல்லமாய் மோத.

உடனே குழந்தை கண்களை சுருக்கி கலகலவென சிரித்தது.

"அப்பா" என்று கூப்பிடும் மகளிடம் திரும்பியவன்.

"என்னம்மா?" என்றான் வாஞ்சையாய்.

"அப்பா அம்மாக்கு?" என்றது கேள்வியாய்.

நெற்றி சுருக்கி, "என்னது அம்மாக்கு குட்டிமா?" என்றான் தீரன்.

"அது எதக்கு பக் கொதித்திங்க.. அதுபோல அம்மாக்கு கொதுங்க." என்றது குழந்தை.

"என்ன சொல்றா?" என்று ஒன்றும் புரியாமல் மிருதியை தீரன் பார்க்க, தங்கள் மகளின் வார்த்தைகளை கேட்டு உள்ளுக்குள் முகம் சிவந்தவள் எதுவும் பேசாமல், "எனக்கு தெரியலை முடிஞ்சா கண்டுபிடிங்க" என்று நகர்ந்தாள்.

'இவ எதுக்கு இப்படி வெட்கபட்றா? அப்போ மிசா ஏதோ ஏடாகூடமா கேட்ருக்கா போல?' என்று தனக்குள் யோசித்தவன், "என்ன மிரு கேட்குறா பாப்பா?" என்றான் மீண்டும்.

திரு திருவென முழித்து, "அது.. அது... அவளுக்கு வேற வேலை இல்ல. வாங்க போகலாம்" என்றாள் மிருதி.

"ஒண்ணுமில்லாம தான் நீ இவ்ளோ வெட்கபட்றியா?" என்றான் தீரன் விடாமல்.

'மானங்கெட்ட மனமே! நீ இப்போ கோபமா இருக்கணும். ஹம் இவான் கண்டுபிடித்துவிட்டானே?' என்று மனதை நொடித்தவள், "இப்போ வர போறிங்களா இல்லையா?" என்றாள் மிருதி.

"எங்க போக போற?" என்றான் தீரன்.

"வேற எங்க? கடைக்கு தான்" என்றாள் மிருதி.

"என்னது கடைக்கா? அமுதன் இன்னும் நாலு நாளைக்கு நீ கடை பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கார்." என்றான் தீரன்.

தலையிலடித்து கொண்டவள். "இவனுக்கு இதே வேலை. நாம போகலாம்" என்றாள் மிருதி.

அவளின் போன் திடீர்ன்னு அடிக்கவே எடுத்து, "டேய் இதெல்லாம் ஓவரா இல்ல உனக்கு? இன்னைக்கு நல்லா தானே இருக்கேன். அப்புறம் எதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ற? எனக்கு முக்கியமான வேலை இருக்கு அமுதன்?" என்றாள் மிருதி.

"என்ன வேலையாய் இருந்தாலும் பரவால்ல நான் பார்த்துக்குறேன். நீ இங்க வந்த அப்புறம் உன்னை தூக்கிட்டு போய் ரூம்ல அடைச்சிடுவேன்." என்றான் நக்கலாய் சிரித்து.

"எருமை.. எருமை.." என்று திட்டியவள்.

"சரி வரலை. போதுமா?" என்றாள்.

"தாங்க் யு ஸ்வீட் ஹார்ட்" என்றான் அமுதன்.

"வந்தேன் பல்லை கழட்டி கைல கொடுத்திருவேன். ஸ்வீட் ஹார்ட்டுன்னு கூப்பிடேன்னா?" என்றாள் எச்சரிக்கும் தொனியில்.

"ஏன் உங்க மாமா தான் கூப்பிடனுமோ?" என்று அவளை சீண்டினான்.

"போடா எருமை மாடு. குரங்கு" என்று வாய் திட்டினாலும் முகம் குங்குமமாய் மலந்தது மிருதிக்கு.

'இப்போ இவ எதுக்கு வெட்கபட்றா?' என்று யோசித்த தீரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
 
Top